கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
மலர்ந்தது புத்தாண்டு !! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை! ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு! ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை "ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்! மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம் மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!... வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ் வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு! தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!…
-
- 6 replies
- 2.7k views
-
-
இழந்தேன் என்னவனை என் நெஞ்சில் நிறைந்தவனே என்றோ ஒரு நாள் எனைத் தேடி வருவாயென ஏங்கியே காத்திருந்தேன் கண்ணில் நீருடன் கவிகள் பல வரைந்தேனடா உனக்காக. என் மனதை உன்னிடத்தில் பறி கொடுத்தேன் இரவு பகல் கண் விழித்துத் தவித்திருந்தேன் என்னவனே நீ வருவாயென ஆனால் காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி உனக்கு கல்யாணம் என்று உடைந்ததடா என் இதயம் இருண்டதடா என் வாழ்வும் என் வாழ்வின் வெளிச்ச விளக்காய் உனை நினைத்தேன் இருண்ட வாழ்வை ஏனடா எனக்களித்தாய் என் இனியவனே ஏனோ உனக்கிந்த இரக்கமற்ற இதயமடா இனியவனே உனை இழக்க என் மனதில் சக்தியில்லை இருப்பாய் நீ என்றைக்குமே என் இதயமெனும் கோயிலிலே!!!
-
- 13 replies
- 2k views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …
-
- 17 replies
- 3k views
-
-
நிலாமுற்றம் பால்பொங்கும் மணலின் மேல் நம் நீண்ட இரவுகள்.. மாமரக்கிளையின் காற்றும்.. வேப்பிலை சலசலப்புக்களும்..... பாட்டி கதையும்... அம்மாவின் குழையல் சோறும்... நிலாவை முகில் மறைக்கும் நேரம்.. தங்கையை.. நான்.. வெருட்ட அவள் அழுவதும்... மீண்டும் நிலாக் கண்டு எல்லோரும் சிரிப்பதும்.. சுருட்டோடு கடக்கும்.. அப்பாவுக்காக மட்டும்.. ஒலி தாழ்ந்து இறங்கும் அரட்டையும்.... பாட்டி மடியில் தலையும்.. அம்மா மடியில் கால்களும்.. ஜொலிக்கும் மின்மினிகள்.... வியந்த வியந்து எண்ணுவதும்.... எல்லோரும் ஒன்றாய் மீண்டும் அந்த நிலாமுற்றம் என் வாழ்வில் வருமா..... எப்படி வரும்....? மெய் தொலைத்த அப்பா பாட்டி... மணமாகி... …
-
- 32 replies
- 5k views
-
-
கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????
-
- 3 replies
- 1.3k views
-
-
நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
பார்த்தீபன் அன்று பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! அவன் தேசப் பசி போக்க கண் திறந்து நீ அன்றுபார்த்திருந்தால்..., தனை வருத்தும் எவருக்கும் நீயருள்வாய் என்றவர்கள் உணர்ந்திருப்பர். குண்டுமழை பொழிகையில் குடியிருந்த வீடுவிட்டு எஞ்சிய உயிர் காக்க ஏதிலியாய் அவர் தன்னிலம் நீங்கி உன்னையும் தான் விட்டு ஓடோடிப்போகையிலும் கந்தனே நீயுமோ எம்மை கைவிட்டாய் என்றுதான் கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர் அன்று அசுரனை அழித்த உன் ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்..., கூப்பிட்ட குரலுக்கும் குவித்த கரங்களுக்கும் செவிசாய்த்து நீ அவர் துயர் துடைப்பாய் என்றவர்கள் நம்பியிருப்பர். ஈற்றில் முள்ளிவாய்க்கால் தன்னில் முடிவற்று செத்தொழ…
-
- 0 replies
- 750 views
-
-
ஆலன் என்ற சிரியா அகதிக் குழந்தை ஒன்றை ஒரு நாள் அலை கடல் தின்றது தெரியுமோ. ஏன் அவன் இங்கு வந்தான் என்றும் எதற்காக அவன் பிறந்த நாட்டில் வாழ முடியவில்லை என்றும் எவன் தான் கதைத்தான். எவன் தான் இவர்களை கடலினில் தேடினான். ஆனால் பணம் படைத்தவர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ ஏதும் துன்பம் நடந்தால் உடனே முழு ஊடகங்களும் அதனோடு முழு உலகமும் பேசும். எத்தனை பாகுபாடுகளைக் கொண்ட சமத்துவமும் நீதியும் இல்லாத உலகம் இது. நாங்க மனுசங்க தான்ரா-பா.உதயன் எங்கள் தலையிலும் குண்டுகள் விழுந்தன எத்தனை மனிதர்கள் இறந்தனர் தெரியுமோ உங்கள் கடலிலும் அகதிகள் இறந்தனர் எத்தனை அகதிகள் இறந்தனர் தெரியுமோ ஏழைகள் இறந்தனர் எவருக்கும் தெரியுமோ எத்தனை குழ…
-
- 4 replies
- 384 views
-
-
மனதை வருடும் ஹைக்கூ....... காலடிப்பதிவை கவிதையாக்கிச் செல்லும் கொலுசுச் சிணுங்கல்... என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்...... - எல்.இளங்கோ. நிமிர்ந்து நின்றது புல் வளைத்துக் காட்டியது ஒரேஒரு மழைத்துளி -ப.ஆனந்தன் குப்பை பொறுக்கும் சிறுமியின் கையில் ஃபிளாப்பி டிஸ்க். அப்பாவுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகம் இல்லை. ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள். -கபிலன் (வைரமுத்துவின் மகன்) பறவை சிறகை மீறின ஆகாயத்தை அளந்து ஓய்ந்து அலகை மீறின வனத்தை உண்ண அமர்ந்தது. -எம்.யுவன் எந்தப் ப…
-
- 4 replies
- 7k views
-
-
கனவுகளின் தொலைவு எனும் வலைப்பதிவில் தாயகத்து அனுபவங்களை கதை, கவிதைகளாக படைத்துவரும் அகிலனின் வலைப்பதிவில் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவு கவிதையா? கதையா? அல்லது ஒலிசித்திரமா? எதுவாக இருந்தாலும் அவர் பேசும் பொருள், அவரது குரல்வளம்.... உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது. பகிர்ந்துகொள்கிறேன். http://agiilankanavu.blogspot.com/2007/06/blog-post_28.html
-
- 3 replies
- 1.4k views
-
-
விழித்தெழு தமிழா விழித்தெழு- நீ விடியலின் எல்லையில் விழித்தெழு... பகையவர் கோட்டைகள் சரித்திடுவோம்- புலியென ஆகியே புறப்படுவாய்... இது வரை இருந்தாய் இது போதும் இனியும் எழுவாய் புயலென நீயும்... பதுங்கும் புலியது பாய்வது முறையே படுக்கைக்கு போகுமா பாருக்கு உரைப்பாய்... கிளி பிள்ளை வந்தின்று கிண்டல்கள் பொழியுது பார்த்தே சிரித்து புலியது பதுங்குது... அர்த்தங்கள் புரிவாய் அணியாய் திரள்வாய் பறையது அடித்து பட்டாசு கொளுத்து.. பொய்யா பகையதின் பொய்யதை எறிவாய்... உன் தமிழ் வெல்லும் உரித்துடன் ஏற்ப்பாய்...
-
- 12 replies
- 2.3k views
-
-
"அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை" "அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை அகிலத்தில் அவளைப்போல் வேறெவரும் இல்லை? துன்பங்கள் தாங்குமவள் தியாகமோ பெருவியப்பு தூயபெரும் இறைவனுக்கோ உலகிலிவள் மறுபதிப்பு!" "சுமையென நமையொரு கணமும் நினையாதாள்; சூழும் இடர்கள்நோவு துயரங்கள் பொறுப்பாள்; குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்; குழவி, மடி தவழ்கையிலோ கொண்டதுன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையிலே நாடிவந்தே அணைப்பாள்; நமதவறுகள் மறந்தே மன்னித்தன்பால் பிணைப்பாள்; கடையனென்று பிறர்சொலினும் கைதடுத்துக் காத்திடுவாள்; கருமத்தில் வெல்ல மெல்ல நெஞ்சில் துணிவேற்றிடுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்த…
-
- 0 replies
- 437 views
-
-
கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…
-
- 1 reply
- 1k views
-
-
கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291
-
- 0 replies
- 525 views
-
-
பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும் நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும் கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்.. விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்.. அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது.. பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும் பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்.. மயிலற்றை ஆடு நல்ல விலையாம…
-
- 24 replies
- 2.9k views
-
-
......::::::: கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள். என்றும் அன்புடன் - இதயநிலா
-
- 25 replies
- 3.6k views
-
-
விடியல் விரியும் உன் தோழமைப் பேச்சு இவ்வளவு விரைவில் சுருங்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை..! உன் அரிமா மூச்சு இத்தனை முந்தி அடங்குமென்று எள்முனை அளவும் நம்பவில்லை..! செங்கொடியில் ஆடிய உன் உயிர்க்கொடி நின்று போனது கடைசி நொடி..! தத்துவ நூல்களைப் படி..படி..எனத் தரமான நூல்களை தந்தாய் தொடர்ந்தபடி..! உன் தடம் பார்த்து நாங்கள் இனி நடப்பதுதான்...எப்படி..? இரும்பை உருக்கிய எக்கு நெஞ்சம் தோழமை உறவுகளைத் தூக்கிச் சுமந்த மார்பு..! சிவா...சிவா...! எல்லோருக்குமே சிவா போல...ஆக அவா...! எப்படி மறப்போம் தோழனே..! முறுக்கேறிய முரட்டுக் காளை நீ...! இருட்டைப் போர்த்திய …
-
- 4 replies
- 607 views
-
-
ஈழத்தமிழருக்காக பிரளயனின் கலைக் குரல். -வ.ஐ.ச.ஜெயபாலன் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என்னால் எழுத முடியவில்லை. பண்டிச்சேரி பல்கலைக் களக நடபகத்துறையினர் தயாரிப்பில் பிரளயன் இயக்கிய பாரி படுகளம் நாடகத்தின் தாக்கத்துள் இருந்து இன்னும் வெளிவர இயலவில்லை என்பதுதான் அதற்க்குக் காரணம். மூவேந்தர்களால் சுற்றி வழைக்கப் பட்ட பரம்பும் கூலிக்குப் போராட வந்த மூவேந்தர் படையும் மண்ணையும் மக்களையும் மீட்க்கப் போராடும் பெண்களும் ஆண்களும். மாவீரர் தின நடுகல் வழிபாடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தமிழால் ஒன்றுபடுவோம் என்றும் எழும் வானதிரும் கோசங்களும். சுவடிக்குள் உட்சுவடியாக ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு கலைத்துவமாக வெளிப்பட்டு மனசு கனக்க நிறைந்தது. மாவீரர் நடுகல் வழிபாட்டில் போர…
-
- 0 replies
- 780 views
-
-
உன் நினைவால் வாடுகிறேன்...... கவிதை.... காலையிலே எழுவதற்கு மறுக்கும் கண்கள்... சில நாளாய் அதிகாலை விழிக்கிறது.... மனதெல்லாம் லேசாகி பஞ்சாகப் பறக்கிறது.... இந்த மாற்றம் என் மனதில் சில நாள்தான்.... என் மனதை வாடகைக்கு எடுத்துக்கொண்ட வஞ்சிமகள் நினைவால்தான்.... வாடகை தராதே நிரந்தரமாய் வந்துவிடு... சொல்ல நினைக்கிறேன் முடியவில்லை; காரணம் நான் அவளின் முகமின்னும் பார்க்கவில்லை.... என் காதலை சொல்வதா விடுவதா...? அவளின் கண்பார்த்தால் தெரிந்துவிடும்... இல்லையேல் அவள் கதை கேட்டால் புரிந்துவிடும்... அவளின் கண்ணும் பார்க்கவில்லை... அவள் பேச்சும் கேட்கவில்லை... ஆனாலும் அவளின் கண்ணாடி உருவம…
-
- 0 replies
- 791 views
-
-
அதிகாலை வேளை அந்தக் கோடை நடுவிலும் நனி குளிர் நடுக்கம்..! வந்த அழைப்பை... போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஆசை முந்திக் கொள்ள அழைப்பு மிஸ்ஸானது. மீண்டும் சிணுங்கும் அந்தத் தொலைபேசி சினந்து எழுப்ப... "என்ன ரெடியோ வெண்புறா நிகழ்வு இருக்கு போகலாம்" மறுமுனைக் குரல் அழுத்த.. முடிவு... "காட்டாயம் அவைக்காகப் போகனும்.." மனது உறுதியானது. தமிழன் பரம்பரை பரம்பரையாய் நாற்று நட்ட வயல்கள் நடுவே சிங்களம் விதைத்த கண்ணிவெடிகள் கால் பிடுங்கி அழித்தது எம் மக்கள் வாழ்வு..!! அது கண்டு நெஞ்சுருகித் துணிவு கொண்டு புறப்பட்ட புறாக்களே இந்த வெண்புறாக்கள்..! சம்பிரதாயத்திற்கு ஒலிவ் கிளை ஒன்றை நுனிச் சொண்டில் உயரக் காவி வித்தை காட்டி.. வேட்டையாளர் வேடம் கலை…
-
- 5 replies
- 724 views
-
-
மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சி…
-
- 9 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஆயிரம் கனவுகளுடனும் விழிமூடா தூக்கத்துடனும் உன்னோடு தினமும் வாழவிடும் இரவுகளும், அற்புத சுகமடி அர்த்த ஜாமத்தில் உன்னருகில் வந்து முத்தமிடும் சத்தங்களும், கட்டி அணைத்தபடியே யுத்தம் கொள்ளும் ஈருடலும் ஒவ்வோர் நாழிகையாய் வேரூன்றி கொள்வதுவாய், காலை எழுந்தவுடன் கண்ணை கசக்கிகொண்டும் உன்னை நினைத்துக்கொண்டும் மீண்டும் அந்த இரவுகளை தேடி..
-
- 11 replies
- 1.2k views
-
-
தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே! எனக்கும் என் குடியிருப்புப் பகுதியின் பறவைகளுக்கும் பல ஆண்டுகளாகவே பகை நிலவுகிறது! மின் தடையால் ஊர் இருண்ட ஒரு முன் இரவு நேரத்தில் நெருப்பு விளக்கேந்தி - நான் தெருப் பக்கம் வந்தபோது குபீரெனப் பறந்த - என் வாசல் மரத்துப் பறவைகள், அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனைய பறவைகளையும் எனக்கெதிராகத் தூண்டி வருகின்றன! அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே - நான் ஓடிவரும் நேரங்…
-
- 0 replies
- 739 views
-
-
மணமற்ற மலர்கள் மரமற்ற வெளிகள் மனிதரற்ற மனைகள் மகிழ்ச்சியற்ற மனங்கள் ஒளியற்ற கண்கள் ஒலியற்ற ஓலம் மட்டற்ற துயரம் பற்றற்ற உலகம் திலகமற்ற நுதல்கள் திங்களற்ற வானம் நிழலற்ற பகல்கள் நீரற்ற ஊற்று உயிரற்ற உடல்கள் உணர்வற்ற உறவுகள் அருளற்ற இறைவன் இருளுற்ற வாழ்வு
-
- 19 replies
- 1.2k views
-