கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பதிவுகள் பத்திரமாய் பேணுங்கள் ......... தமிழ் ஈழத்தாயின் ,விடுதலை நோக்கிய தியாக பாதையின் சுவடுகளை ,பத்திரமாய் பதிவுப் பெட்டகத்தில் பாது காத்து வையுங்கள் நான் இறந்தால் என் மகனும் அவன் இறந்தால் அவன் மகனும் முழு தமிழ் ஈழ சந்ததியும் . படித்து மகிழவேண்டும் ,ஈழவிடுதலை வலியை எம் தலைவனின் ,வழி காட்டலை ,வீரத்தை பார் போற்றும் உத்தமனை ,கலங்காத நெஞ்சனை கருமமே கண் ஆனவனை ,ஒரு வழிக்காட்டியை என் குடும்பம் ,தப்பி வந்தது தன் சந்ததியை காக்க எனக்கு என்ன உரிமை என் தமிழ் ஈழத்தில் என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுவதாலா காட்டிலும் மேட்டிலும் கந்தக புகையிலும் கொட்டும் மழையிலும், கூடார நிழலிலும் என் சனம் துன்பப்பட ,ஓடி வந்த எனக்கு என்ன சொந்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
தீயின் வம்சமடா நாம் தீமை கண்டால் தீது செய்தால் தீக்கிரையாக்கிடுவோம் விழிகள் திறந்தே உறங்கிக்கொள்வோம் விடியல் வரும் நாள் கண்ணயர்ந்து கொள்வோம் உரசிப்பார் பற்றிக்கொள்வோம் பிரிதல் ஒன்றும் பிரியப்போவதில்லை இணைவோம் எம் லட்சியம் ஈடேறும்போது அரசியல் ஆட்டம் காண எம் ஆட்சி பீடம் ஏற இணைவோம் புரியும் அன்று பிரிவு ஏன் - எம்முள் பிளவு ஏன் ? கிழக்கில் தோன்றும் இருளெல்லாம் - ஓர்நாள் வடக்கில் வெளிச்த்திற்கு அஸ்த்திவாரம் ஓட ஓட விரட்டி எம்மை கொன்றொழித்த ஓர் காலம் ஓடுஓடுவென அரசை கொன்றொழிப்போம் எம் காலம் கருநாகம் படையெடுத்தால் கலங்கிப்போகாதே - அதன் கடிவாளம் எம்மிடத்தே கவலை கொள்ளாதே வீசும் காற்றும் வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
நோய் எதிப்பு சக்தி குறைகிறது விலை விண்ணை தொடுகிறது மஞ்சள் ......................... வியக்க வைக்கும் சிகிக்சைகள் மார்புதட்டி பெருமைபேசும் மருத்துவ ர் சிரிக்கிறது கொரோனா .......................... மறந்த வாழ்வியல் முறை தண்டனை கொடுத்து வருகிறது கொரோனா .......................... உயிர் கொல்லி நோய் சற்று நம்பிக்கை தருகிறது மிளகு ரசம் @ கவிப்புயல் இனியவன்
-
- 7 replies
- 972 views
-
-
எதிரலை எங்கோ ஒர் கரையின் மடியில் - நமக்கான நாற்காலிகள் காத்திருக்கின்றன எதோ ஒர் கடலின் அலைகள் - நம் வருகை எதிர் நோக்கி நிலம் தொடுகிறது தனக்கான வேக விளிம்பைத்தாண்டி- நம் சந்திப்பின் காலம் நோக்கி - விரைகின்றன கடிகார முட்கள் இனி எப்போதுமே நாம் சந்திக்க - போவதில்லையெனும் உண்மையறியாமல்
-
- 7 replies
- 1.7k views
-
-
மடிசாய வரம் தா... ஆண்டைந்து சென்றாலும் அகலாத நினைவோடு கண்ணுக்குள் கலையாத கனவானாய் நிலையாக எம் அன்புத் தாய் நீயே எமக்கெல்லாம் வரம் நீயே உயிரோடு உறவாடும் உலகெல்லாம் நீதானே மனசெல்லாம் நிறைந்திட்ட பிரியாத வரம் நீயே உடலாலே பிரிந்தாலும் உணர்வோடு இணைந்தாயே இணைகின்ற உறவெல்லாம் இருந்தாலும் தாயே உன் இதயத்திற் கிணையான உணர்வாக முடியாதே நிழலாக நீ நின்றாய் சிறகின்றித் தவிக்கின்றோம் பரிவோடு வருடும் உன் பாசத்தை நினைக்கின்றோம் இல்லாமை இருந்தாலும் இயல்பாக எமைத்தாங்கி சுகமாக அணைக்கின்ற சுமைதாங்கி நீ அம்மா எமதன்புத் தாய் இன்றி இதயத்துள் அழுகின்றோம் விழிநீரைத் துடைக்கின்ற விரலின்றித் தவிக்கின்றோம் அழுதாலும் தொழுதாலும்…
-
- 7 replies
- 1.1k views
-
-
என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
ONE OF MY OLD POEM 1985 முதற் காதல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் ப…
-
- 7 replies
- 852 views
-
-
திசை தெரியாத் தேசமொன்றில் அடைபட்ட அந்நியர் போல் அடிமைச் சாசனம் எழுதியபின் எஜமானர்களின் கல்லா நிரப்பி மீளும் பெரும் பணிச் சுமையுடன் போயிருந்த அவர்கள் - இன்று எம்முடன் இல்லை தெருநாய்கள் இயங்கும் தெருவில் துப்பாக்கி குண்டுகளால் தொளையிடப்பட்டு தூக்கி வீசப்பட்டனர் இன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத அயல் மண்ணில் கருப்பு இரவுகளின் தனிமை தணிவதற்குள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது வன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர் கண்ணீர்த் துளிகளை மட்டுமே எமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள் நாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற ஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி மரணத்தை மட…
-
- 7 replies
- 896 views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்
-
- 7 replies
- 1.3k views
-
-
காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ
-
- 7 replies
- 1k views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Thursday, May 10, 2012 04.2000...., ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம் அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது அது உனது ஆழுமையின் வெளி.... பெயருக்கு ஏற்றாற்போல் உனது எண்ணங்களும் பிரகாசமாக மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்.... பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின் நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ..... பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம் குற்றப்பட்ட உனது திறனை சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ.... சமாதான காலக்கதவுகள் திறக்க ஊர்காணப்போவதாய் விடைபெற்று போராளியாய் ஆனவன்.... போ…
-
- 7 replies
- 1.7k views
-
-
அம்மா உன் கருவறை மீண்டும் தருவியா... நல்ல சயனம் அங்குதானே மீண்டும் தாங்கவருவியா.. இந்த பூமி ரொம்ப இரைச்சல்.. அதுதானே என்னிதய எரிச்சல்.. நட்பு என்பதை நம்பி நான் மோசம் போனேன் தம்பி அன்பு என்ற அம்பு என்னைத்துளைகள் செய்தது நம்பு இது மனிதம் இறந்த காலம் புவி திரும்பச் சுழலக்கூடும்.. ஒழுக்கம்தானே உயர்வு பண்புதானே வாழ்வு நல்லதென்றும் யோசி -நன் மெய் அதையே பேசி.. தந்தை சொன்ன மந்திரம்-இன்று தவிக்கும் தனயன் மாத்திரம்
-
- 7 replies
- 1.3k views
-
-
புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நன்னாள் சிங்கள இனவெறி அரசின் கோரத்தாண்டவத்தால் எங்கள் தமிழினம் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட பொல்லாத காலமதில் புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நந்நாள் நவம்பர் இருபத்தியாறு தவித்த தமிழினம் இனித் தலைநிமிர்ந்தே வாழவேண்டுமென இதயத்தில் உறுதிபூண்டு போராடப் புறப்பட்ட தமிழர்தலைவன் ப+மிக்கு வந்த புனிதநாள் நவம்பர் இருபத்தியாறு அடக்குமுறைக்குள் அவதியுற்று ஆழ்மனதுள் துயரை அடக்கவைத்து விடிவே இல்லை என வெதும்பிய பெண்ணினத்தை புதுமைப்பெண்ணாக, படைநகர்த்தும் திறனில் வல்லமை மிக்கவராக, அவனிக்கு அறியவைத்த தமிழப்பெண்ணின் ஆற்றல்கண்டு தரணியைத் திகைக்கவைத்த, புரட்சிவிஞ்ஞானி பிறந்தபொன்னாள் நவம்பர் இருபத்தியாறு ‘ஆணும் பெண்ணும் இணைந்தே அடிமைப்பூட்டை உடை…
-
- 7 replies
- 968 views
-
-
எங்கள் தலைவிதியை நாமே சிங்கமும் கருநாகங்களும் குள்ளநரிகளும் ஒருபுறம், பொல்லாத மலைப்பாம்புகளுடன் இன்னுமொரு சிங்கம் மறுபுறம், என்ன செய்வோம் நாம்? எங்கள் குரல்வளையை நெரிக்க, எங்கள் விழிகளை குத்திக்கிழிக்க, எங்கள் வாழ்விடங்களை பறித்தெடுக்க இந்த கொடிய மிருகங்களில் ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். தெரிவு செய்ய நாங்கள் செல்லாவிடில் எமக்காக அதையும் அந்த குரூர விலங்குகளே செய்துவிடும். இந்த அவலத்திலிருந்து மீட்க, எவருமே எமக்காக இல்லை. எங்கள் விதியை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த உள்நாட்டு விலங்குகளும் வெளிஉலக வல்லூறுகளும் ஓநாய்க் கூட்டங்களும்; தான் எங்கள் வாழ்வை பற்றி தீர்மானம் எடுப்பார்களாம் அப்படியானால் நாம் யார்? எமக்காக பேச எவருமில்லையென்றால் எங்களை…
-
- 7 replies
- 710 views
-
-
தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…
-
- 7 replies
- 14.8k views
-
-
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான் அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான் அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான் அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா -------------------------------------------------------------------------------- கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான் துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது -------------------------------------------------------------------------------- ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார் கோவிலுக்கு போனால் நீ …
-
- 7 replies
- 1.9k views
-
-
2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! (கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்) வாழ்நாள் முழுவதும் கொசுக்களோடு போராடியவன் கொசுக்கடியால் நோயுற்று செத்தே போனான். சுருள்கள், வில்லைகள், திரவங்கள், மின்மட்டைகள் என்று கொசுவுக்கு எதிராக அவன் பிரயோகித்த ஆயுதங்கள் முடிவுறாத அவனது போராட்டத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவன் மரணத்தை தொலைக்காட்சியில் விவாதித்தவன் சொன்னான், கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில் அவன் சட்டை அணிந்திருந்தால் கொசு கடித்திருக்காதாம்! (பரு…
-
- 7 replies
- 2.1k views
-
-
வீரம் வெல்லும் வேளையிது ஈழம் பெறும் காலமிது சுற்றப் பகை நாமழித்து முடிசூடும் நேரமிது (வீரம்) வெற்றிதரப் பிறந்து வரும் புத்தாண்டடா வெல்லும் வழி சொல்லுகின்ற தமிழ் ஆண்டடா (வேறு) அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம் வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம் வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை போரென்றால் இது போருமில்லை வாழ்வும் சாவும் எமக்கொன்றே மானம் தானெங்கள் வரலாறே வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே போரென்றால் புலிவீரம் பேசும் பேச்சென்றால் தமிழ் மானம் பேசும் ஏய்த்து மாய்த்த காலம் போச்சே எங்கள் தலைவரின் காலம் ஆச்சே அண்ணன் இடுவான் ஆணையொன்றே ஆணை முடிப்போம் பகையை வென்றே சுவ…
-
- 7 replies
- 17.2k views
-
-
அன்பே ஆருயிரே_என் ஆன்மாவின் ஆத்ம ஜீவனே.. கண்ணே மணியே_என் கண்ணுக்கு கண்ணாயிருக்கும் கார்குழலே.. முத்தே என் முத்தழகே மூன்றாம்பிறை பெண்ணழகே.. விண்ணே மண்ணே விண்ணில் தோன்றும் நிலவே இப்படி எத்தனை பூச்சுத்தல்கள்... கழுதையின் குரலைக் கூட குயிலின் குரல் போல் என்பர்.. கண்டது நிண்டதெற்கெல்லாம் காதலி புராணம் பாடுவர்.. காமத்துப் பாலில் வருவதை விட காதலி உடலை வர்ணிப்பர்.. கவிஞர்கள் கூட தோற்றுவிடுவர் காதலர்களின் கவி வர்ணனையில்.. காதல் ஹோர்மோன்களின் கலகமே காதல் கடவுளுமல்ல புனிதமுமல்ல.. நீயின்றி நானில்லை_உன் நிழலைக்கூட நேசிப்பேன்.. நீயில்லாத உலகில் நின்மதியில்லை நீ தான் என் வாழ்வும் சாவும்.. எல்லாம் ஏமா(ற்)றும் வரைக்கும் தான் ம…
-
- 7 replies
- 1.1k views
-
-
குருதிப்பெருவழியே வந்த என்னின் பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை விட இனிது. என் சிரிப்பில்,முறைப்பில்,களிப்ப
-
- 7 replies
- 2.6k views
-
-
உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…
-
- 7 replies
- 4.2k views
-
-
மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட காலையில் கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...
-
- 7 replies
- 1.3k views
-
-
நான் ஒர் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு மார்க்ஸ் எனது மானசீக குரு மாவோ சித்தாந்தம் மானிடத்தின் சிறப்பு பெடல் கஸ்ரோ பெருந்தலைவன் நவயுகத்தின் செகுவாரா புரட்சியின் செந்தணல் அம்பேத்கார் தலித்களின் அழியாச் சுடர் நான் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு கவிக்கோர் கண்ணதாசன் கதைக்கோர் சுஜாதா கலைக்கோர் கமல் கடவுளுகோர் பாபா புலிகளின் தோல்விக்கு காரணம் தனிமனித வழிபாடு
-
- 7 replies
- 2.3k views
-