Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகாவலி – தீபச்செல்வன்… உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும் புத்தனையும் யுத்த டாங்கிகளையும் அள்ளி வரும் நதி எம் தலைநகரிலிருந்து ஒரு வார்த்தையேனும் எடுத்துச் சென்றதில்லை எம்மீது நதியின் ஒரு துளியும் பட்டதில்லை பீரங்கியிலிருந்து பாயும் குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே சிவந்த கண்களுடனிருக்கும் மாவிலாறு போலொரு சிறுவனும் முகம் மறைக்கப்பட்…

  2. முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.

  3. Started by putthan,

    என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்

  4. Started by Mayuran,

    அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா!!! 2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை. http://inuvaijurmayu...rch/label/கவிதை http://www.poems.lan...567&pidp=202577

    • 22 replies
    • 1.5k views
  5. போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம். நீயில்லாது போய் இன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து போகிறது. எல்லாமுமாய் நீ வாழ்ந்த எங்கள் தேசத்திலொரு நினைவுக்கல் நாட்டியுன்னை நினைவு கூரவோ நெஞ்சழுத்தும் துயர் கரைய ஊர்கூடி அழுது துயர் போக்கவோ யாதுமற்றுப் போன விதியை மட்டுமே நொந்து சாகும் விதி பெற்றோம். பிரகாசமாய் ஒரு பெயரும் எழிலாயொரு பெயரும் உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள் ஆயிரம் கதைகளும் அழியாத நினைவுகளும்....! அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய் நம்பும் உனது குழந்தைகள் அப்பாவைத் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும் அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு கட்டளையிடுகின்றனர்.…

  6. தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்

  7. மீண்டும்....எப்போ...? ****************************** அன்பே... தேடுகிறேன் உன்னை-இன்று நீ தந்த பொருழதனை திருப்பி நான் தருவதற்கு... என்னவென்று கேட்கிறியா...? அன்றொருனாள்.... நாமணைத்துக் கொள்கையிலே உன் தலையின் பேனொன்று... எந்தலையே தஞ்சமென்று.. என் தலையில் புகுந்ததுவே... அதை நீ அறியாயோ...? ஓ........ நீ அறிய நியாயமில்லை அன்றோ....... நாமறியும் நிலையிலில்லை.. இன்றதனை உணருகின்றேன்.. கடிக்கையிலே.. கதறுகின்றேன்... கொன்றிடவே எண்ணுகின்றேன் உன் தலையின் பேனதால் மனமேனோ வரவில்லை.... so அன்பே... நீ வந்திடுவாய்... அதை நீயே பெற்றிடுவாய்......

    • 7 replies
    • 1.5k views
  8. எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....? ------------------- பகீரதன் தாழம் பூவோடும் தாமரைத் தட்டோடும் நாகதீபம் வரை வந்து போகிறீர்கள் . வெள்ளை உடுப்புடுத்தி நீங்கள் வரும்போது வெள்ளைக் கொடியோடு வெண் புறாக்கள் போன கதை வந்து வந்து போகுது. . எதோ கொண்டு வருகிறீர்கள் கொடுத்ததும் பார்க்கிறீர்கள். இனி இவர்கள் மறந்து போவார்கள் மாண்ட தமிழர்களை மறைத்த உறவுகளை. . எப்படி மறப்பது இந்த மே 18 ஐ..... ? - இது கொன்ற தினத்தை கொண்டாடிய நாள் அல்லவா! . மேனி கருகி மேடாய் தெரிந்த நாள் கூட்டாய் கொன்று குவித்ததை கூகிளில் பார்த்து கூக்குரல் இட்ட நாள். குழிவெட்டி எம் குஞ்சுகளை குடும்பத்தோடு புதைத்த…

  9. மெல்லென மாருதம் சில்லென வீச மெல்லிடை மேனியாள் கருவறை கூச வல்வையில் காந்தள் மலர்களும் விரிய வில்லென வீரத் திருமகன் உதித்தனன் நடந்த தின் நிகழ்வு ஐம்பத்தி நான்கினில் எழுநதது வீரமாய் எழுபத்தி ஐந்தினில் மலர்ந்தது புலிகளாய் எழுபத்தி யாறினில் பிளந்தது கண்ணியாய் எண்பத்தி மூன்றினில் மெல்லிய மாருதம் சூ றா வளி யாகிட வல்வைத் திருமகன் வனத்திடை புகுந்திட சொல்லிடக் காரணம் வையகம் மறுத்திட எல்லைகள் தாண்டின மெல்லிளங் குஞ்சுகள் அயலவன் நாட்டினில் பாசறை அமைத்தனர் சயனமும் துறந் தவர் சன்னத்தம் பயின்றனர் உயரிய நோக்குடன் இணைந்தனர் தோழர்கள் பயமறியா தமிழ் புலிப்படை அமைத்தனர் மதிமுக நங்கை பாசறை புகுந்தனள் மதியுரைத்தவரின் சொற்படி நடந்தனள் கதிர்க் கரன் க…

  10. 7ம் ஆண்டு வகுப்பறை மேசையில் முதல் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன் இன்றும் கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் கண்ணில்படும் கரும்பலகையிலும் விளம்பர சுவர்களிலும் பேருந்து இருக்கையிலும் பிடித்த மரங்களிலும் ரசித்த உலக அதிசயங்களிலும் கிடைக்கும் வெற்றுக் காகிதங்களிலும் உன் பெயரோடு என் பெயரை எனினும் இன்றுவரை என் பெயர் கிறுக்கலாகத்தான் தெரிகிறது நான் கவிஞனான பிறகும் ஆனாலும் உன் பெயரே எனக்கு பிடித்த கவிதையாகவே இன்றும் இருக்கிறது -யாழ்_அகத்தியன்

  11. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் பணமும் உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம் பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால் இது ஒரு குட்டி லண்டன் அல்லது டொரன்டோ(வேறேதாவது வெள…

    • 0 replies
    • 1.5k views
  12. Started by வர்ணன்,

    என் முகம் தீய்ந்து போனாலும் மோசமில்லை - மோட்சமே உழைக்காமல் வரும் ஊதியமே சொர்க்கம் என்று ஆனாயேடா மொக்கா மொக்கா! என்ன சொல்ல ........... எரியும் சிதையினிடையே கைவிட்டு ..தகனம் கொள் பிணத்திடையிருந்து தங்கம் உருவ நினைக்குது மானிடம்! காலை எழுந்தவுடன் தேநீர் வேண்டும் கை கால் அமுக்கவும்.. அவளே வேண்டும்.. அடடா அடடா கை கால் அலம்பியதும் துடைக்க துண்டும் தந்து நீ கலையாத அழகு கொள்ள சுருங்கா ஆடையும் தந்து... நீ கல்யாணம் கொள்கையில் காலில் விழவும் செய்து... யோசி ... யோசி மலரை கசக்கி எறிய மடி நிறைய .. பொருள் கேட்குது..மானிடம்!! அடுப்படியில் ஒருத்தியை குந்த வைக்க... முற்பணமாய்- ஐம்பது இலட்சம் கேட்பது …

    • 3 replies
    • 1.5k views
  13. [size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…

  14. பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது? தீபச்செல்வன் மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது? என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை வரலாற்றில் பரப்பிச் செல்லும் பாலியாறு என்ன தவறிழைத்தது? நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை யாருடைய கால்த்தடங்களுமில்லாத பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன. குருதியை நிலத…

    • 5 replies
    • 1.5k views
  15. Started by Thamilthangai,

    இனி!! பதுங்குது பதுங்குது புலி! பாயும் காலம் இனி! தமிழரைக் கொண்ட கலி! இனி பகைவன் மண்ணில் தானே கிலி!. மெளனத்தின் பலத்தை மறந்து தோற்றதாய் எம்மை நினைத்து எங்கள் மண்ணைப்பறித்து! கொண்டாடினீர் வெற்றி களித்து! அண்ணனின் ஆணைக்குப் பணிந்து! வருவோம் பகையே துணிந்து! வருமே காலம் கனிந்து! ஈழம் மலரும் வேளையே எம் விருந்து!. நன்றி..!

  16. Started by vanni mainthan,

    ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...

  17. Started by kavi_ruban,

    http://kaviyarankam.blogspot.com/

    • 3 replies
    • 1.5k views
  18. தேநீர் கவிதை: ரசாயன அடிமைகள் பின் தொடர்ந்து வருகிறார்கள் குடிநோயாளியை ஒரு தாயோ தங்கையோ மனைவியோ மகளோ அடிப்பதற்கு விரட்டுகிறான் ஞானமற்ற பாதகன். சுவர் முட்டி நிற்கிறான் குடிநோயாளி குடத்துக்குள் தலை மாட்டிய நாய். தப்பிக்க நினைத்து ஓடுபவனை விரட்டி களைத்து விட்டு விடுகிறது மதுமிருகம். வாழ்க்கையிடம் கற்றுக்கொள்பவன் குடிநோயாளி... …

  19. இன்னும் உயிரோடிருக்கிறேன்! ஏதோ ஒன்றை உணர்த்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது காலம்! இனி மீதமென்ன இருக்கிறது என்று நிகழ்காலத்தை துகிலுரிந்த படியே துச்சாதனர்கள்! தொடரும் ஏமாற்றங்களால் பிடித்தவர்கள் கூட அந்நியமாகிவிடும் அபாயத்தில் உறவுகள்! படித்ததும் பார்த்ததும் ஒரே தளத்தில் ஆனாலும் 'உண்மையா"? என்று துழாவும் தொலைபேசி அழைப்புக்கள் இன்னும் விட்டுப்போகாமல் கண் சிமிட்டியபடி இருக்கிறது நம்பிக்கை! " அதனால் இன்னும் நான் உயிரோடிருக்கிறேன்"!

  20. முகமரியா தேசத்தில் நம் தேசம் - தொலைத்து தூர தேசசம் வந்தும் . . ஆறறிவை தொலைத்து - சிலர் நிர்வாணமாய் திரிகின்றார்கள்...... அகதி முத்திரையோடு அகங்காரமாய் ஆயுதங்களுடன் அதிகாரமாய் உறவாடும் கால் முளைத்த.. பிசாசுக்களாய்..... அரியாலை மன்னார் வல்வெட்டித்துரை - இன்னும் எத்தனையோ...எத்தனையோ.... தாய் மண்ணில்தான் ஊர் சண்டையென்றால்.. வற்த இடத்திலுமா - தங்கள் கசாப்புக்கடை .. தத்துவங்கள்....... தம்முடைய புதைக்குழியை தாமே வெட்டுமளவுக்கு இரத்த தாகம் கொண்டலையும்...காட்டேறிகளாய்.... உயிர்க்கும் பிழைப்புக்கும் இடம் தேடி வந்தவர்கள் வந்த இடத்தில் - பிழைப்போ உயிர் வதைப்பு.... உலக நாடுகளில் மரண தண்டனையை சட்ட யாப்புகளிலிருந்த…

  21. 1969ல் எழுதிய என் முதல் கவிதையும் 1970ல் எழுதிய எனது இரண்டாவது கவிதையும் வன்னி பற்றியது.அப்போதெல்லாம் இணைப்பாட்ட்சி அடிப்படையிலான பொது உடமையை வென்றெடுக்க புரட்சி வரப்போகிறது என்கிற நம்பிக்கையோடு செயல்ப்பட்டோம். புரட்ச்சி வன்னியில் மையம்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் நமது இராணுவப்புவியியலை கற்க்கவென்று அந்த சின்ன வயசுகளில் காடு காடுகளாக அலைந்தேன். இதோ கவிதைகள் http://noolaham.net/project/01/10/10.txt 1. பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம்…

    • 1 reply
    • 1.5k views
  22. Started by இளங்கவி,

    எதுவரை...... கவிதை - இளங்கவி குளிர் நிலவை கைகளில் ஏந்தி.... கோடி மின்மினியை வானத்தில் காட்டி.... அப்பா வந்தால் அடித்திடுவார் சாப்பிடடி என் செல்லம் என்பாள்.... சோறுடன் சேர்த்து தமிழையும் ஊட்டிடுவாள்..... இது ஈழத்து மண் கண்ட இனிய பொழுதுகள்..... இன்று கனவுகளில் மட்டும் நாம் காணும் நினைவுகள்..... வாழ்ந்த நிலங்களெல்லாம் எரி நிலமாய் மாறிவிட..... எமை வாழவைத்த வயல்களெல்லாம் கந்தகத்தில் புதைந்து விட... நம் பிணக்குவியல் மேலே புத்த விகாரைகள் எழுகிறது.... எம்மை அடைத்து வைத்த சிறைகள் பூட்டியே இருக்கிறது.... அன்று உணவூட்ட நட்சத்திரம் அழைத்தாள்..... அருகில் இருத்திட நிலவையும் அழைத்தாள்.... இன்று முகாமில் நட்ச…

  23. Started by putthan,

    இந்து நான் இந்தியா புனிதம் எனகென்றாய் கிறிஸ்தவன் நான் ஜெருசலம் புனிதம் எனகென்றாய் முஸ்லிம் நான் மக்கா புனிதம் எனகென்றாய் வடக்கு கிழக்கின் பூர்விக குடிமகன் என்பதற்காக என்ன ஆதாரம் காட்டினார் நீ புத்தன் ஆசிர்வதித்த சிறிலங்கா அவனது பூர்வீகம் உரிமை கூறுகிறான் சிங்கள பேரினவாதி- இப்படி சிறிலங்கா அவனுக்கு புனிதமாம்

    • 6 replies
    • 1.5k views
  24. 10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சமக் குறியீடு நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன் நடந்துவரும் என்னை அழைக்கும்முன் நீ சற்று யோசித்திருக்க வேண்டும். விசிலூதி என்னை உண்ண அழைத்தது உன் தவறுதான். பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது என் தவறுதான் பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான். இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து, நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு என்னை வெளியேற அனுமதி அய்யனே. -சேயோன் யாழ்வேந்தன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.