Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கவிதை,

    "நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!

  2. வலசைப் பறவைகாள் (Immigrant birt) வலசைப் பறவைகாள் தென்திசை நோக்கி போர்விமான அணிவகுபெனெ நீர் குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்? வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில் எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய் தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர். என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்? தரை இறங்குங்கள் அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள். இது கிட்லருக்கு தலைபணியாத கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’ அதுவும் ஈழமண் காக்க களபலியான எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள். வழிய உங்கள் மாவீரர்கள். உஙகளைப்போல நாம் அகதிகளல்ல. நாம் வலசைப் பறவைகள். வெண்பனி விழமுன் சூரியன் தேடி உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம். உங்க உறவுகளிடம் நாம் எ…

  3. இன்றைய நாள், ஈழத் தமிழர்களின் வரலாற்று பாதையில் கால(க்) கடவுளர்களை நினைவு கூரும் கண்ணீர் கலந்த நாள்! எங்கே அவர்கள் என ஏன் தேடுகின்றீர்கள்? அட கல்லறைகள் எங்கே எனவுமா தேடுகின்றீர்கள்? எங்கள் உள்ள(க்) கோயிலினுள் உறவுகள் வாழ்வதற்காய் உயிர் கொடுத்த உத்தமர்கள் தூங்குவதை அறியாது தேடுவது மடமை அல்லவா? நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் அவர் தம் நினைவுகள் பறந்து வந்து மேனியில் ஒட்டி சிலிர்ப்பை தருகின்றதே! நீங்கள் உணரவில்லையா? உங்கள் கண்களை ஒரு கணம் மூடி மீண்டும் திறவுங்கள்! இதோ கல்லறைகள் சிகப்பு மஞ்சள் கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்டு கண்ணீரால் கழுவப்படுகின்ற காட்சியினை(க்) காண்பீர்களே! சற்று(த்) …

  4. Started by சண்டமாருதன்,

    இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…

  5. பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…

  6. மாவீரர்கள் இவர்கள் மரணித்தவர்கள் அல்லர் மரணத்தை மரணிக்க வைத்தவர்கள் தெய்வங்களுக்கும் தெய்வங்கள் இவர்கள் இவர்கள் வீரம் சாகாது, தியாகம் மறையாது தமிழீழம் மலரும் வரை இவர் விதைகுழிகளும் உலராது. இவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத் தமிழீழம் வெல்லும் வரை இவர்களுக்காக நாம் சுவாசிப்போமென்று இந்நாளில் உறுதி பூணுவோம் இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் 2008ல் அண்ணன் இட்ட ஆணையை இவர்கள் மேல் நாம் இடும் ஆணையாக்கி முன்னகர்வோம் உலகத் தமிழா எழுந்து வா!!!....

  7. அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…

  8. Started by அறிவிலி,

    இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …

  9. தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  10. கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்.... மெல்லக்கடந்து போகும் கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில் எழுந்து அடங்கிப்போகின்றன மாவீரர்களின் ஞாபகங்கள் சூரியத்துளிகளில் ஒளிரும் போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய் பாரமாய்க்கனக்கின்றன இந்த மாலைப்பொழுதுகள் இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும் கல்லறைகளின் நடுவே பூத்திருக்கும் புற்களின் இடையே பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில் சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள் வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட தோழர்தோழியரின் ஞாபகங்களில் தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து ஆவியாகின்றன பல கதைகள் பறவைகளின் சிறகுகளில் இருந்து உதிர்ந்துவிழும் இறகுகள…

  11. கண்ணிமைக் கதவுகளில் கண்ணீர்த்துளிகள்.... இளங்கவி - மாவிரர் நினைவுக்காய்... உணர்வுகள் முகைவெடித்து கண்ணீராய் உருவெடுத்து கண்ணிமைக் கதவுகளில் காத்திருக்கும் கார்த்திகை இருபத்தியேழுக்காய்...... இது ஒரு நாளில் உருவெடுத்த உணர்வுப் பிரவாகமல்ல...... ஒவ்வொரு வருடமும் சேர்த்துவைத்துக் கத்தும் எங்கள் உயிர்மூச்சின் சத்தம்..... எங்கள் மண்ணுடன் கலந்து நிலமாகிப் போனீர்..... எங்கள் கடலுடன் கலந்து நீராகிப் போனீர்..... எங்கள் வானிலே கலந்து வான்வெளியாகியும் போனீர்.... ஆதலால் தமிழர் மனங்களில் கலந்து அவர் நினைவாகிப் போனீர்..... உங்கள் சரித்திரம் சொல்லா எங்கள் சரித்திரத்தில் பக்கமில்லை.... உங்கள் சாவுகளை எண்ணா எங்கள் போரிலும் வ…

  12. இயல்பினைக் கடந்த திடத்துடன், இயற்கையை வென்றவர்கள்...! எப்பொழுதும் இறப்பதில்லை!!! அறத்தினை மீறிய உலகிற்கு, வீரமறவர் எனத் தமைக் காட்டியோர்...! தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்!!! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள், புலத்தினில் புதிதாய் கதைகள்...! உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்??? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும், எம் பரம்பரை உம்மைத் தொடரும்...! உம் இலட்சியம்............. அடையும் வரை!!! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்! on Saturday, 27 November 2010 at 02:57 [ 2010 இல் எழுதியது ]

  13. மாவீரர் தோழனுக்காய்.. கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும்‍‍‍ _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோ…

  14. Started by akootha,

    • 3 replies
    • 1.1k views
  15. Started by Ahasthiyan,

    வாழ்க்கையை மண்ணின் விடுதலைக்கும் மரணத்தை அஞ்சாத தியாகத்தாலும் எம் விடுதலைக்கு வித்தாகிய மாவீர செல்வங்களே! நியாயத்தின் செவிகளில் உமது கர்ச்சனை வரலாற்றின் நெற்றியில் உமது திருப்பெயர் இந்த மானுட பிறப்பின் நல்ல உள்ளங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம் கமழும் நாளை பிறக்கும் ஈழத்தில் உமது உயிரின் சூடும் கலந்து இருக்கும் இந்த நாளை எமக்காக மரணித்த உமக்காக எம் மக்களுக்காக நாம் ஓரணியில் நின்று சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்

  16. குறிப்பு இப்பாடலின் முதல் நான்கு வரிகளும் ஓர் கிறீஸ்தவ துதிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை. உன் நாமம் சொல்லச் சொல்ல என்னுள்ளம் மகிழுமையா என் வாழ்வில் மெல்ல மெல்ல பேரின்பம் பெருகுமையா - உன் மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா? உலகமே வந்தாலும் உணர்வுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா (2) -உன் நாாம்.. தமிழ் மானம் தமிழ் வீரம் தமிழனுக்குத் தமிழீழம் என்றது நீதானையா தரணியிலே தமிழீழம் தலை நிமிர்ந்த வரலாறும் படைத்தது நீதானையா (2) தரை வழியாய் க்டல் வழியாய் வான் வழியாய் படை நடத்தி சரித் திரம் படைத்தாயையா தாரணியின் வரை படத்தில் தமிழீழ வரை படைத்தை நிலைக்க நீ வைத்தாயையா -உன் நாமம்... நீ கொண்ட மெளனத்தால் நித்திலமே இன்றெம்மை எள்ளி நகை யாடு தையா …

  17. நிலைத்தாயே வாழ்க! -------------------------- வாழ்த்தும் வயதுமில்லை வார்த்தைகளும் வரவில்லை வாழும் காலத்தில் வாழும் வரம் பெற்றதனால் மானமுடைத் தமிழினமாய் இப் பூமியிலே நாம்! எங்கள் தலை நிமிர சோதனையும் வேதனையும் தாங்கிய வேந்தனே காலப் பெருவெளியில் கலையாத பெருமொளியே நீலவானத்தின் ஒளித்திரளே நினைத் திங்களென முடியாது தேயாத தெளிந்த நிலை ஓயாத உழைப்பு நிலை காயாத பொன் வதனம் மாறாத புன் சிரிப்பு மறுவற்ற உபசரிப்பு நீயே நிலைத்தாயே எம்மினத்தின் மாறாத பெரும் குறியீடாய்! தமிழினத்தின் வரலாற்றில் வாராது வந்துதித்து வரலாறாய் வாழ்பவரே ஒருநாளும் மறையாது நிலைத்துவிட்ட மாமணியே வாழ்க! வாழ்க! வாழ்க! 26.11.2011

  18. தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்…

  19. மெல்லென மாருதம் சில்லென வீச மெல்லிடை மேனியாள் கருவறை கூச வல்வையில் காந்தள் மலர்களும் விரிய வில்லென வீரத் திருமகன் உதித்தனன் நடந்த தின் நிகழ்வு ஐம்பத்தி நான்கினில் எழுநதது வீரமாய் எழுபத்தி ஐந்தினில் மலர்ந்தது புலிகளாய் எழுபத்தி யாறினில் பிளந்தது கண்ணியாய் எண்பத்தி மூன்றினில் மெல்லிய மாருதம் சூ றா வளி யாகிட வல்வைத் திருமகன் வனத்திடை புகுந்திட சொல்லிடக் காரணம் வையகம் மறுத்திட எல்லைகள் தாண்டின மெல்லிளங் குஞ்சுகள் அயலவன் நாட்டினில் பாசறை அமைத்தனர் சயனமும் துறந் தவர் சன்னத்தம் பயின்றனர் உயரிய நோக்குடன் இணைந்தனர் தோழர்கள் பயமறியா தமிழ் புலிப்படை அமைத்தனர் மதிமுக நங்கை பாசறை புகுந்தனள் மதியுரைத்தவரின் சொற்படி நடந்தனள் கதிர்க் கரன் க…

  20. வீரவணக்கம் மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் …

  21. நீ இல்லை என்று தான் எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள் நானும் இல்லை என்றே சொன்னேன் உன்னையல்ல அவர்கள் சொன்ன சொல்லை இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது இத்தனை நாளாய் தேடியும்...???? உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது. இந்த மண் - உன்னை விழுங்கிய நாளை மறந்திருக்கும் ஏனென்றால் அது உன்னை மட்டும் விழுங்கலியே. ********************************* ஊரறிந்த ஒரு நாளில் ஒரு தீபமேற்ற வழியில்லை தெருவில் சிலர் உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன் பார்த்து நிற்கிறார்கள். நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன் “அம்மா பெரியறை விளக்கை நானே வைக்கிறேன்” யாரோ என்றோ கண்டதாய் சொன்ன கடவுளுக்கு என்றும் தீபம் வைக…

  22. மணலிலும் காற்றிலும் கடலிலும் ஒன்றாக சங்கமித்து இன்றும் விடுதலைக்காக காத்திருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று விடுதலைக்காக காத்திருப்பதை சிந்திக்காமல் அவர் நினைவு கொண்டாடுவதில் பிரித்து போராடுபவர்களை நினைத்தால் என் நெஞ்சு வெடிக்கிறது நீங்கள் எழுங்கள் ஏனெனில் உங்கள் நினைவுகள் கொண்டாடுவதில் போட்டீ போட்டு உங்கள் நினைவுகளை அழிப்பவர்கள் ஏன் உங்கள் இலடச்சியங்களை சிதைக்காமல் இருப்பார்களா! ஆகையினால் எழுந்து விரைவாக வாருங்கள் உங்கள் நினைவு தினத்தை வைத்து சொத்து சேர்ப்போரும் ஒரு தொகுதியினர் இன்னொரு தொகுதியினர் பணத்திற்க்காக உங்கள் நினைவுகளை சிதைப்பவர்களும் அதுதான் அவர்கள் நோக்கமெனில் கைவிடுங்கள் நிலையற்ற வெறும் மாயைக்கு…

  23. கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? தூயவர்ளே நீங்கள் துயின்ற துயிலும் இல்லங்கள் இல்லையே...!!! எங்கே போனீர்கள்? எங்கள் மனங்களில் நிம்மதி இல்லையே...!!! அட யார் அழுவது அங்கே?..... எங்கள் பிள்ளைகள் கண்மூடி துயின்றது தாய்மண்ணின் மடியில் அவர்கள் எப்போதும் வாழ்வது எங்களின் இதயங்களின் அடியில்.....!!! கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும். அவர்களின் கனவும் இருக்கும். கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? விதையாய் விதைத்தோம் …

  24. அன்னை மண் மீட்க அவதரித்த புத்திரரே! தாயைப் பிரிந்து தந்தையையும் விட்டகன்று பாசப் பிறப்புகளையும் பகலிரவாய் பாராது தேசத்தின் கடமைதனை சிந்தைமேற் கொண்டீரே! எம் மண் மீட்பதற்கு எதிரியுடன் போரிட்டு புண்பட்டு வந்தாலும் புலிப்படைக்கு பேர் சேர்த்த்Pர். இடிபோல் துன்பங்கள் எத்தனைதான் ஏற்படினும்; மலைபோல் நிமிர்ந்து நின்று தமிழர் மானம் காத்தீரே! உங்கள் வீரத்தால் - தமிழர் உலகெங்கும் புகழ் பெற்றார். தோளை நிமர்த்தி நின்று கோழை நாமும் தமிழரென்றோம். நீங்கள் இடியாய் மின்னலாய் கந்தகமாய் நெருப்பாய் எதிரியின் பாசறைக்குள் ஏவுகணையாய்; புகுந்தீர்கள். நிலத்திலே வீழ்ந்தாலும் இரத்தத்தால் ஈரமாக்கி சதையை உரமாக்கி எம் சந்ததிக்கே வளமானீர்! …

  25. அன்றைய காலத்தில் அனைவரிற்கும் தம்பி அடுத்து வந்தவர்களிற்கெல்லாம் அண்ணன். அன்பான கணவன் அற்புதமான தந்தை அலையாய் எழுந்த தமிழினத்திற்கு தலைவன். தன்மானத்தை விற்றவர்களின் தலை வலி எதிரிக்கு எட்டாத சூரியன் சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு புகழ்பாடும் கடவுள். தமிழினத்தின் குறியீடு தலைவணங்குகிறேன் அண்ணை

    • 29 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.