வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்! தனக்கென எந்த சிறப்புத் திறமைகளும் இல்லாமல், தன்னுடைய சராசரி குணத்தைப் பற்றித் தாழ்வாக நினைத்துக்கொண்டு வாழும் ஒருவனுக்கு, தற்செயலாக ஒரு பாராட்டுக் கிடைக்கிறது. அப்படி தன்னைப் பாராட்டிய அந்த +2 மாணவியின் மீது காதல்கொண்டு, அவள் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்து, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். இவனை, கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனென்றும், ‘சாதித்துவிட்டு வா, அப்புறம் என்னன்னு பாக்கலாம்’ என்று வழியனுப்பிவைக்கிறாள் காதலி. சோர்ந்துபோய் தற்கொலைக்கு முயல்கிறவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள், குறுக்குவழியில் அவனுக்குக் கிடைக்கும் புகழ்வெளிச்சத்தின் உண்மை நிலவரம் என்னவெ…
-
- 1 reply
- 357 views
-
-
பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். http…
-
- 1 reply
- 747 views
-
-
இலங்கையில் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டு இருக்கும் பிரிட்டன் நடிகர் கிங்ஸ்லி! ஒஸ்கார் விருது பெற்ற பிரித்தானிய நடிகர் சேர் பென் கிங்ஸ்லி இலங்கையில் பயங்கரவாதி ஆக்கப்பட்டு உள்ளார். இயக்குனர் சந்திரன் இரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி உள்ளது த கொமன் மான் என்கிற ஹொலிவூட் படம். இதில் கிங்ஸ்லி பயங்கரவாதியாக காட்டப்பட்டு உள்ளார். ஆனையிறவு, கொழும்பு உட்பட பல இடங்களிலும் படப்பிடிப்பு இடம்பெற்று உள்ளது. பட்த்தின்படி கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டு வைக்கின்றார் கிங்ஸ்லி. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=amwmxceN49g இலங்கையில் ஒரு பறக்கும் மீன்! பறக்கும் மீன் என்பது உண்மையில் யதார்த்தத்துக்கு புறம்பான…
-
- 1 reply
- 1.1k views
-
-
எந்தக்கதையில் உள்ளே நுழைத்தாலும் கச்சிதமாக பொருந்திக் கொள்கிற ஜெல்லி பீன் மிட்டாய் மாதிரி நம்ம கார்த்தி சிவகுமார்! கார்த்தியின் ஏரியா காமெடியும், காதலும் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது சகுனி! சாக்லேட் முகத்தொடு அரசியல் மைதானத்தில் கிங் மேக்கராக சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் கார்த்தி! கடமை, காதல், காமெடி, அடிதடி முக்கியமாக அரசியல் ஆட்டத்தில் காய்களை அசால்ட்டாக வெட்டும் புத்திசாலி என கார்த்தி ஆடியிருப்பது ஒரு மாஸ் மசாலா ஐ.பி.எல்! மொத்த படத்திற்கும் தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது! கார்த்தியும் பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளிலோ மின்னல் வெட்டுகிறது! நல்ல வேலையாக கார்த்தி வந்த வேலையை மு…
-
- 1 reply
- 6.3k views
-
-
12-வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விழா கனடாவின் டோரண்டோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மை நேம் கான் படத்துக்காக ஷாருக்கானுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது அனுஷ்கா ஷர்மாவுக்கு பந்த் பாஜா பாராத் படத்துக்காக கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பந்த் பாஜா பாராத் படத்துக்காக ரண்வீர் சிங்குக்கு கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தபாங்க் படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவுக்கு கிடைத்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்காக வி.ஸ்ரீனிவாஸ் மோகனுக்கும்…
-
- 1 reply
- 880 views
-
-
தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர் நாராயணசாமி இயக்குநர் மாரிராஜ் விருது வழங்க உள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525029
-
- 1 reply
- 1k views
-
-
படம் பூராவும் 'பலான சீன்'... இந்தப் படத்துக்கு அனுமதி கொடுத்த சென்சார்! படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது, ஆபாசம் இருக்கிறது என்று கூறி பல படங்களுக்கு சர்டிபிகேட் தராமல் சென்சார் போர்டு கேட் போட்டு வரும் நிலையில், ஆபாசக் காட்சிகள் ஏகத்துக்கும் நிரம்பிய ஒரு படத்துக்கு அனுமதி அளித்துள்ளது சென்சார் போர்டு. "கள்ளப் பருந்து" என்பது இப்படத்தின் பெயர். இதயன் என்பவர் டைரக்ட் செய்துள்ளார். புதுமுகங்கள் நிறையப் பேர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதையே விகாரமானது. அதாவது ஒரு பணக்காரருக்கு மனைவி, 3 மகள்கள். இவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார் அந்த கோடீஸ்வரன். இந்த நிலையில் வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வருகிறார் ஒரு டிரைவர்.…
-
- 1 reply
- 11.9k views
-
-
மணிரத்னம் டைரக்ஷனில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் "கடல்" படத்தின் மூலம் ஹீரோவா என்ட்ரி ஆனார். கடல் படத்திற்கு முன்னரே பல டைரக்டர் பார்வையில் பட்டுவிட்டதால், பல முன்னனி டைரக்ர்கள் அவரை இயக்க தயராக இருந்தனர். இந்நிலையில், கௌதம் கார்த்திக் அடுத்து ‘மைனா மற்றும் கும்கி’ புகழ் பிரபுசாலமன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'சுந்தரபாண்டியன்' பட ஹிட்டுக்குப் பிறகு, டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன், உதயநிதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு, டைட்டில் வைக்காம இருந்தார். இப்ப இந்த படத்துக்கு "கதிர்வேலின் காதலி"னு டைட்டில் வைச்சிருக்காங்க. ஹாரிஸ் ஜெயாராஜ் …
-
- 1 reply
- 498 views
-
-
செல்லாநோட்டு, அவிழும் வேட்டி - இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் 1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். MTV India அதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதா…
-
- 1 reply
- 492 views
-
-
நாணயம் - எனது பார்வையில் சமீபகாலமாக ஆகிலப்படங்களை சுட்டு படமாக தரும் வேலை தமிழ் சினிமாவில் "கனஜோராக" நடந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான THE BANK JOB என்ற படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்தப்படம். Roger Donaldson இயக்கத்தில் Jason Statham அட்டகாசமான நடிப்பில் வெளியான இந்தப்படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கி வடிவமைக்கப்பட்டது,ஆமாம்,1971 ஆம் ஆண்டில் மத்திய லண்டனில் உள்ள ஒரு வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.வசூலில் சக்கை போடுபோட்ட இந்தப்படம் கடந்த 2009 ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான Edgar விருதினையும் வாங்கியது. ஏற்கனவே எடுத்த தமிழ் படங்களிளிருந்தே காட்சிகளை சுட்டு படமாக வரும் படங…
-
- 1 reply
- 783 views
-
-
விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவரது படங்களுக்கு நாளை ரெட் கார்டு போட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அங்காடித் தெரு தவிர சமீபத்தில் வெளியான எந்தத் தமிழ்ப் படமும் வெற்றியைப் பெறவில்லை என்று விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் புலம்பி வருகின்றனர். விஜய்யின் குருவி, வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய படங்கள் தொடர்ச்சியான தோல்வியைத் தழுவி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படையான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நஷ்டத்தை விஜய்தான் ஈடு செய்ய வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எப்படி ஈடு செய்ய வேண்ட…
-
- 1 reply
- 822 views
-
-
பட மூலாதாரம்,@ACTORVIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 04:24 GMT “இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எ…
-
- 1 reply
- 479 views
- 1 follower
-
-
நயன்தாரா படத்தில் ஸ்ரேயா முன்னணி நடிகைகளின் நட்புக்கும், இந்தியா - பாகிஸ்தான் உறவுக்கும் அதிக வித்தியாசமில்லை. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தாலும், அண்டர்கிரவுண்டில் போர் நடந்து கொண்டேயிருக்கும். இவர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பதென்பது யானையை கட்டி மாரடிப்பது போல. ஆனாலும், இந்திய கிரிக்கெட் அணியின் உலககோப்பை வெற்றி மாதிரி அவ்வப்போது அதிசயங்கள் நிகழும். 'துளசி' என்றொரு படம். வெங்கடேஷ் ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா. இதே பெயரை வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்திருந்தது தெரியவர, 'துளசிராம்' என பெயரை மாற்றினர். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ராமை எடுத்துவிட்டு மீண்டும் 'துளசி'யாக்கியிருக்கிறார்கள். பெயரிலேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தில் குத்து பாட…
-
- 1 reply
- 951 views
-
-
வறுமையில் வாடும் பிரபல இசையமைப்பாளர் கோவர்தனனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பிரபல தமிழ் திரப்பட இசையமைப்பாளர் கோவர்தன் தற்போது தனது மனைவியுடன் சேலத்தில் வசித்து வருகிறார்.88 வயதான இவர் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமைச்சூழலில் வாழ்ந்து வருவதாகவும், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி தங்களைக் காப்பாற்றுமாறும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். கோவர்தனின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா புரட்சித்தலைவர் டாக்டர் …
-
- 1 reply
- 431 views
-
-
கொண்டாட்டத்துக்கானதுதானா கிருஷ்ணா நடித்த ‘பண்டிகை’? - பண்டிகை விமர்சனம் வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனிக்கு (சரவணன்) நிறைய நிறைய பணம் தேவைப்படுகிறது. கிருஷ்ணாவின் சண்டைத் திறனைப் பார்க்கும் சரவணன், அவரைப் ‘பண்டிகை’யில் கலந்து கொள்ள வைத்து பணம் பார்க்க நினைக்கிறார். திறமையான சண்டைக்காரர்கள் இருவரை மோதவிட்டு, யார் ஜெயிப்பார் என பந்தயம் கட்டி விளையாடும் "ஃபைட் க்ளப்" ஆட்டமே பண்டிகை. இழந்ததை மீட்க நினைத்து இருப்பதையும் இழந்து போகும் சரவணன், மீண்டும் ஒரு திட்டமிடுகிறார். அது என்ன திட்டம், பணம் கிடைக்கிறதா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க காட்ட…
-
- 1 reply
- 763 views
-
-
http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0 http://www.youtube.com/watch?v=uBdz8YPWuC8&feature=related
-
- 1 reply
- 1.4k views
-
-
நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத…
-
- 1 reply
- 623 views
-
-
Friends Goto Google Translator and type 1. Do not see idiots movie 2. Idiots movie and Translate each into tamil and see what ur getting Its really bad.. who is suggesting like this to google... we should not encourage like this ! Say what shall we do friends? மூலம் முகநூல்
-
- 1 reply
- 656 views
-
-
சொன்னது போலவே சனிக்கிழமை காலையே விற்பனைக்கு வந்துவிட்டது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் இசைத் தட்டுகள். இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் கடைகளில் கிடைத்தது எந்திரன் ஆடியோ சிடிக்கள். சர்வதேச அளவில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பாடல் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கும் என திங்க் மியூசிக் அறிவித்துள்ளது. சென்னையில் ரேடியோ மார்க்கெட் எனப்படும் ரிச்சி தெரு, பர்மா பஜார், தி நகர் மற்றும் வட பழனி பகுதிகளில் பெரும் வரவேற்புக்கிடையே எந்திரன் ஆடியோ சிடி விற்பனை துவங்கியது. புற நகர் பகுதிகளில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எந்திரன் ஆடியோ சிடிக்களை வாங்கிச் சென்றனர். திங்க் மியூசிக் வெளியிட்டு இந்த சிடியின் விலை ரூ. 125. மொத்தம் 7 பாடல்கள். பாடல்கல் அனைத்துமே …
-
- 1 reply
- 903 views
-
-
அசின் மற்றும் விவேக் ஓபராய் படங்களுக்கு செருப்பு மாலை! புதன், 25 ஆகஸ்ட் 2010 19:49 அண்மையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. தமிழ் மக்களை இலங்கை அரசு நடத்தும் விதம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்ததனால் இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் அவ்விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வறு தரப்புக்களில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் ம…
-
- 1 reply
- 743 views
-
-
சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், ஒரு வாரம் கழித்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார். http://ulavan.net/?p=5012
-
- 1 reply
- 749 views
-
-
OLI CHITHRAM ( For the people part 2 )
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
நடிகர் விஜய் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான். நடிகர் விஜய்க்கு பெருகும் ஆதரவு 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கெனவே இறக்குமதி வரி செலுத்திவிட்ட நிலையில், காருக்கான நுழைவு வரி கட்டுவதி…
-
- 1 reply
- 760 views
-