ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான ம…
-
- 18 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெர…
-
-
- 18 replies
- 1.2k views
-
-
நாளை ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமார், மாலை ஆறு மணி முதல், புலம்பெயர் எம்மவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிகிறது. நாடுகடந்த அரசு பற்றிய விமர்சனங்கள், கேள்விகளை ஐபிசி தமிழுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி ஒலிபரப்புகிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஆதங்கங்களை கண்டிப்பாக அவரின் கவனத்துக்கு கொணரலாம். தமிழ் மக்களின் ஸ்தம்பித்திப் போயுள்ள அரசியல் அபிலாசைகளை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தப் போகிறார்கள் என்பதை அறிய நாமும் ஆவலுடன் உள்ளோம். பி.கு: நம்மளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ அல்ல, அப்படி இருப்பினும் அதற்காக இக்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று தாயகத்தில் …
-
- 18 replies
- 2.7k views
-
-
ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம் சிறப்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:56 by in செய்திகள் வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார். யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார். உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது…
-
- 18 replies
- 3.4k views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 18, செப்டம்பர் 2009 (11:20 IST) இலங்கை அரசுக்கு கலைஞர் கண்டனம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று முன் தின இரவு கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்து பயந்த மீனவர்கள் படகை கரைக்கு திருப்பினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மீன்பிடி சாதனங்களை தூக்கி எறிந்து விட்டு 21 மீனவர்களை சிறைப் பிடித்து சென்றனர். அங்க…
-
- 18 replies
- 1.3k views
-
-
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.thinamurasam.com/
-
- 18 replies
- 2.5k views
-
-
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் அன்று மாலை பிரதமர் மகிந்தவுடன் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் மீண்டும் தனிமையில் சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது பேசப்பட்டது என்ன? கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன? வடக்கு கிழக்கில் கொரோனா தொற்றின் நிலவரம் என்ன? இராணுவத்தின் பிரசன்னம் எந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் இருக்கின்றன. இதுபோன்ற பல தகவல்களை ஐபிசி இணையத்தளத்தோடு பக…
-
- 18 replies
- 1.6k views
-
-
வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்துவதாக கூறப்படுவது விந்தையான விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்நிலையில் மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்ற…
-
- 18 replies
- 1.3k views
-
-
நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்ற கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் பிரிட்டனில் நடத்திய ரகசிய சந்திப்பு தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள அப்பட்டமான துரோகமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார். ஜெர்மனில் பேர்கொவ் பவுண்டேசன் ஏற்பாட்டினில் நடைபெற்ற கூட்டத்தினில் நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் பொதுசன வாக்கெடுப்பு தேவையில்லையென்ற நிலைப்பாட்டையும் கடைப்பிடித்திருந்த கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் இன்று வரை அதனையே கடைப்பிடிக்கின்றனர்.அத்தகைய தரப்பினர் நடத்திய இரகசிய சந்திப்பு எத்தகையதாக இருக்குமென்பது பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார். வீடமைப…
-
- 18 replies
- 1k views
-
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு! பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன…
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13 வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கவும், வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கோரும் விக்னேஸ்வரன் என்ற கொழும்பு வாழ் தமிழரும் மறுபுறத்தில் பிரித்தானியா வாழ் தவராஜாவும் தேர்தல் நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். தவராஜா நேரடியாக இலங்கை அரசின் அடியாளாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதே வேளை வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும், இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்புகு…
-
- 18 replies
- 1.6k views
-
-
குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/19056
-
- 18 replies
- 2.7k views
-
-
கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ரெலோ கட்சியின் எம்பியான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிடுமாறு மஹிந்தவினால் பல கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டெலோ கட்சியின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதே நேரம் இந்தியாவும்கூட்டமைப்பினரை தனியாக கேட்டால் நல்லது என ஆலோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும் தனி வேட்பாளரை நிறுத்துவதில் மஹிந்த முனைப்பாக இருப்பது பெரும் சூழ்ச்சி திட்டங்களின் அடிப்படையிலேயே என பலர் கூறினர். அதாவது தனித்து ஜனாதிபதி தேர்தலில்…
-
- 18 replies
- 2.1k views
-
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் …
-
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழில் இவ்வருடம் "பியர் "பாவனையில் குறைவு யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த 6 மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு 27% ஆல் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும…
-
- 18 replies
- 2.2k views
-
-
emergency debate at canadian parliment....
-
- 18 replies
- 3.3k views
-
-
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது. பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிக…
-
- 18 replies
- 5.4k views
-
-
லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும்…
-
- 18 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…
-
- 18 replies
- 2.7k views
-
-
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் இன்று மார்ச் 18இல் காலமானார். மேலதிக விபரங்களுக்கு: https://www.ilakku.org/?p=44947&
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
விஷமிகளால் தீ வைத்து அழிக்கப்பட்ட லண்டன் முத்துமாரியின் சித்திரத் தேர் Saturday, November 19, 2011, 11:28 லண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவிலின் சித்திரத் தோர் கடந்த 16 ஆம் திகதி இரவு 11 மணிக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ஆலயம் கடந்த 15 வருட காலமாக லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருவதுடன், மேற்படி சம்பவத்தை சிவயோகம் அறங்காவலர் அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, ச…
-
- 18 replies
- 2k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 18 replies
- 4.2k views
-
-
உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். 1939 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ப.இராமசாமி 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்…
-
- 18 replies
- 1k views
-
-
சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்! தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பி…
-
- 18 replies
- 1.1k views
-