ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார். கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார். இவர் யுஎன்டிபியின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவில் பிறந்த கன்னி விக்ன…
-
- 4 replies
- 782 views
-
-
பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்தோர் தாக்கப்படும் போது காவல் துறை உறக்கத்தில்! Wednesday, 14 May 2008 கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிவுற்ற தேர்தலில் பிள்ளையானுக்கு எதிராக வாக்களித்த கல்லாறு மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் புகுந்த பிள்ளையான் குழுவினர் மக்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். இத் தாக்குதல்களை டீஎம்வீபீயின் காரியாலய பொறுப்பாளரான சின்தூரன் தலைமை ஏற்று நடத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இத் தாக்குதல் பேயாட்டம் கடந்த 11ம் திகதி முதல் இன்று வரை தொடர்வதாகவும் போலீஸில் புகார் செய்தால் கொலை செய்யப்படுவதாக பிள்ளையான் குழுவினர் எச்சரிப்பதால் பீதியில் மக்கள் போலீஸில் புகார் தொடுக்காமல் இருக்கின்றனர். குகநாதன் எனு…
-
- 0 replies
- 756 views
-
-
[size=3] [size=4]பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் கும்பலொன்று அங்கிருந்த பெண்களை ஆயுத முனையில் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.[/size] [size=4]இன்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் குப்பிழான் தெற்கில் பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டின் சுவாமி அறையைக் காட்டுமாறு கோரி அங்கிருந்த மூன்று இலட்சம் ருபா…
-
- 0 replies
- 371 views
-
-
"வெசாக்' தின சிந்தனை 19.05.2008 இன்று வைகாசி விசாகம். வெசாக் பண்டிகையை அனுஷ்டிக்கும் தினம். இலங்கைத்தீவின் இரு பெரும் மதங்களான பௌத்தத்துக்கும், இந்து சமயத்துக்கும் போற்றுதற்குரிய மிக உயரிய திருநாள் இது. பௌத்த சீலத்தை உலகுக்குப் போதித்த கௌதம புத்தர் அவதரித்ததும், அரச மரத்தடியில் ஞானோதயம் பெற்றதும், அன்பு மார்க்கத்தைப் போதித்து பரிநிர்வாணம் அடைந்ததும் இந்த வைகாசிப் பௌர்ணமி நாளில்தான். சித்தார்த்த கௌதமரின் சிந்தனையில் இத்தினத்தில் சிறு ஒளிப்பொறியாக்கப்பட்டுத் தெறித்துத் தெளிந்த ஞானோதயம் உலகெங்கையும் ஆட்கொண்டது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த அறிவியல் அதிர்வு இன்று வரை உலகை வளப்படுத்தி, வழிப்படுத்தி, வலுப்படுத்தும் ஓர் உயரிய…
-
- 0 replies
- 867 views
-
-
சர்ச்சைகளுக்கு மத்தியில் சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது Published by MD.Lucias on 2016-02-03 07:54:25 இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரை…
-
- 7 replies
- 813 views
-
-
25 Mar, 2025 | 12:36 PM போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் ஸ்ர…
-
-
- 7 replies
- 522 views
-
-
நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
முடிந்தால் குற்றங்களை நிரூபித்துக் காட்டுங்கள்; சவால் விடுக்கும் கோத்தா பணத்தைக் கொள்ளையிட்டு, பாரியளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது, முடிந்தால் அந்த குற்றங்களை நிரூபித்துக் காட்டுங்கள் என கோத்தபாய ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். நம்மைக் கொலை செய்தாலும் கூட ராஜபக்சவினரை அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட முடியாது. ராஜபக்சவினர் கடந்த 80 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறனவர்களை அரசியல் ரீதியில் அழித்துவிட முடியாது . மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, பாரியளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிப…
-
- 0 replies
- 352 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களிலும் கடந்த 10 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி, வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், உயிர்நீத்த தாய்மார்கள், உறவினர்கள் 58 பேருக்கான ஆத்த சாந்தி வேண்டி அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இந்த அஞ்சலி நிகழ்வு, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில், தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டத்துக்கு முன்பாக நேற்று (17) நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தம்பிலுவில் சந்தைக் கட்டடத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக ப…
-
- 0 replies
- 354 views
-
-
12 Apr, 2025 | 04:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க பல …
-
-
- 5 replies
- 290 views
-
-
தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பாராமுகமாகவும் இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுவதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படும் - IMF 21 ஜூலை 2012 இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படஉள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எட்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக் கட்ட தவனைக் கடன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.49 பில்லியன் அமெரிக்கடொலர்களை கடனாக வழங்கியுள்ளது. இலங்கையின் N;பரினப் பொருளாதாரக் கொள்கை திருப்தி அளிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நயோக்கிசின்ஹோரா தெரிவித்துள்ளார். இதேவேளை, மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப்பெற்றுக் கொள்வது…
-
- 2 replies
- 395 views
-
-
தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்! தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 18 replies
- 904 views
-
-
எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் எங்களது உறவு இருக்க மாட்டாது செய்திகள் ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி இங்கு களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ள…
-
- 0 replies
- 118 views
-
-
[size=5]வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்![/size] [size=4]வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன. அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உ…
-
- 11 replies
- 853 views
-
-
உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே! நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கா…
-
- 0 replies
- 429 views
-
-
மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களைக் கோரும் போலிசார் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் நடைமுறையிலிருந்தது போன்ற இந்தப் பதிவு முறை காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது. வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸார…
-
- 0 replies
- 265 views
-
-
யாழில் பெருந்தொகை பணம் மோசடி! யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை வித…
-
- 0 replies
- 206 views
-
-
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரி…
-
- 1 reply
- 1k views
-
-
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்படி அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் இது குறித்து இளைஞர்களின் மன்ற பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிப்படுத்தும் வகையில் பலன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். …
-
- 0 replies
- 398 views
-
-
[size=4]தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்பு அமைச்சராக. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்கை அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய சந்தித்துப் பேசியுள்ளார். வொசிங்டனில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. [/size] [size=4] [/size] [size=4]அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுவாக கட்டியெழுப்புவதற்கு உகந்த தருணம் இதுவே என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இந்தச் சந்தி…
-
- 5 replies
- 732 views
-
-
அம்பாறை- பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் குறித்து அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் நிராகரித்துள்ளார். கடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து …
-
- 0 replies
- 228 views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=2][/size] [size=3](ஒலிந்தி ஜயசுந்தர)[/size] [size=2][size=4]750 மில்லியன் ரூபா செலவில் எட்டு உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அமைக்கவுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு உள்ளூர் விமான நிலையங்கள் உகந்த போக்குவரத்து கட்டமைப்பாக விளங்கும் எனவும் அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விமான நிலையங்கள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் நாட்டில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான திட்ட அறிக்கையொன்றை திறைசேரி கோரியுள்ளதாக அமைச்சு அதிகாரிகள் கூறினர்.…
-
- 3 replies
- 565 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 759 views
-