ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
இலங்கைளின் வரலாறு ஒப்பீட்டளவில் சில பிரச்சினைகள் உள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெஹிவளை-நெதிமால பௌத்த கலாச்சார மையத்தினால் மகா வம்சத்தின் புதிய பதிப்புவெளியீட்டு நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் இன்று நாட்டின் வரலாறு பற்றி பலருக்கு தவறான கருத்து உள்ளது.எனவேஅவர்கள் வரலாற்றைப் பற்றி தவறாக கதைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மகாவம்சத்தை விட பழைய நூல்கள் இருந்ததாகவும் ஆனால் அவை இன்றுதேடமுடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. இதேவேளை வரலாற்று நூலான மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டிய தேவைஏற்பட்டுள்ளதாகவும்,அதற்காக தேவைப்படும்…
-
- 11 replies
- 1.1k views
-
-
. ஆனந்தசங்கரியுடன் இணையும் சந்திரகாசன்? தந்தை செல்வாவின் மகனும் நீண்ட காலமாக இந்தியாவில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிந்தவருமான திரு சந்திரகாசன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கொழும்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் திரு ஆனந்தசங்கரியுடன் இணைந்து இவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய உளவுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாக இவர் பலராலும் குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்னர் இவரது அரசியல் மீள்பிரவேசம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பொருத்தமானவர்களிடம் தலைமைப் பொறுப்புளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அண்மையில் கூட்டணியின் தலைவர் …
-
- 11 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008 கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது: பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள். இதற்கு முன்பு பிரபாகரனே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும். ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதைப் போர் என்றுகூட நான் கூற மாட்டேன்…
-
- 11 replies
- 3.5k views
-
-
கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள். தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்ப…
-
- 11 replies
- 769 views
-
-
மட்டு. அம்பிளாந்துறையில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு
-
- 11 replies
- 1.9k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசுடன் ஆலோசிப்பதற்காக இந்தியா மூவர் கொண்ட தனது குழு ஒன்றை அனுப்பிவைக்க உள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ் ஆகியோர் அடங்கிய குழுவே விரைவில் கொழும்பு வர உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இந்தியத்தரப்புக் குழுவினர் இவர்கள். இதேபோன்ற இலங்கைக்குழு, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆராய இந்தியா செல்வதற்கான அனுமதியை புதுடில்லி இன்னும் வழங்காத நிலையில் தனது குழுவைக் கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. மீண்டும் சதிகாரரா? தமிழக மக்கள் போராட்டம் செய்து இந்த …
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் பொதுமக்கள் மரணமடைவது சடுதியாக அதிகரித்திருப்பதாகவும் சமாதானத்திற்கான விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் சிறிதளவே வெளிப்படுத்துவதாகவும் ஜெனீவாவிலுள்ள சிறிய ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் ரொபேர்ட் முக்கா தெரிவித்துள்ளார். கனடாவின் 'த ஸ்டார்' பத்திரிகையில் ரொபேர்ட் முக்கா எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் பொதுவான முறைமைகளிலிருந்து வாபஸ்பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பாக …
-
- 11 replies
- 1.9k views
-
-
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்கா விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மெடலீன் அல்பிரிட் தலைமையிலான குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பதற்கான உரிமை என்ற முக்கிய பொறுப்பை சர்வதேச நாடுகள் உதாசீனம் செய்துள்ளதாகக் அல்பிரிட் குற்றம் சுமத்தியுள்ளார். இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான வன்முறைகள் போன்ற விடயங்கள் குறித்து ஆர்2பீ எனப்படும் பாதுகாப்பதற்கான உரிமை அறிக்கை கவனம் செலுத்துவது வழமையானதாகும். ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் ஆயிரக் கணக்கான …
-
- 11 replies
- 1.1k views
-
-
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். …
-
- 11 replies
- 534 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை, விமர்சிப்பதற்கு... சுமந்திரனுக்கு, அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என்றும் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுபினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில…
-
- 11 replies
- 805 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன. போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில…
-
- 11 replies
- 1.7k views
-
-
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …
-
- 11 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கும் – அமெரிக்கா [ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 00:49 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், “இந்தத் தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்…
-
- 11 replies
- 676 views
-
-
யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM - வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் மீன…
-
- 11 replies
- 1.4k views
-
-
16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுல…
-
-
- 11 replies
- 541 views
-
-
எதிரியிடம் பிடிபடாது ஆகுதியாகிய மூன்று போராளிகள் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:15 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை கைது செய்ய முயன்ற போது தற்காப்புத் தாக்குதல் அங்கியை வெடிக்கவைத்து, படைத்தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி, தங்களையும் ஆகுதியாக்கியுள்ளனர் மூன்று போராளிகள் என்று விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இம் மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24.03.07 அன்று யாழ். நாவலர் வீதியால் சென்று கொண்டிருந்த போராளி லெப். அறிவுமகன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரை இராணுவ…
-
- 11 replies
- 2.7k views
-
-
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் …
-
- 11 replies
- 1.6k views
-
-
சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி! முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர் எழுதியவர்பகலவன் ழn ளுநிவநஅடிநச 12இ 2009 பிரிவு: சிறப்புச்செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று சிறிலங்கா நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர்இ அரச தொலைக் காட்சியில்…
-
- 11 replies
- 2.2k views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரச தரப்பினர் பாரிய வியூகங்களை அமைத்து வருகின்றனர். 13ஆவது, 17ஆவது திருத்தச் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது உட்பட பல நிகழ்ச்சி நிரல்கள் மூன்றில் இரண்டில் உள்ளடக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்குலகின் ஊடாக பிறிதொரு நெருக்கடிக்களமொன்று அரசை நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, மந்த கதியில் செயற்பட்ட ஐ.நா. தற்போது சிறப்பு நிபுணர் குழு அமைக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சிங்கள தேசத்தினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்ட பின்னர் மேற்குலக கண்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290529
-
- 11 replies
- 655 views
- 1 follower
-
-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் கனவான சொந்த மண்ணில் எப்போது குடியேறுவார்கள்? யுத்தம் முடிந்து எல்லோரும் சிறப்பாக, வசதியுடன் வாழ்கின்றனர் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் வலி வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் இன்றும் இருக்கின்றன. 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களை சொந்த நிலத்தில் குடியமர்த்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. …
-
- 11 replies
- 753 views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 10, 2011 கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயல…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவ…
-
- 11 replies
- 1.9k views
-