ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை, விமர்சிப்பதற்கு... சுமந்திரனுக்கு, அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என்றும் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுபினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில…
-
- 11 replies
- 814 views
-
-
சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன. போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில…
-
- 11 replies
- 1.7k views
-
-
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …
-
- 11 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கும் – அமெரிக்கா [ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 00:49 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள புதிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், “இந்தத் தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்…
-
- 11 replies
- 681 views
-
-
யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM - வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் மீன…
-
- 11 replies
- 1.4k views
-
-
16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுல…
-
-
- 11 replies
- 607 views
-
-
எதிரியிடம் பிடிபடாது ஆகுதியாகிய மூன்று போராளிகள் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:15 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை கைது செய்ய முயன்ற போது தற்காப்புத் தாக்குதல் அங்கியை வெடிக்கவைத்து, படைத்தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி, தங்களையும் ஆகுதியாக்கியுள்ளனர் மூன்று போராளிகள் என்று விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இம் மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24.03.07 அன்று யாழ். நாவலர் வீதியால் சென்று கொண்டிருந்த போராளி லெப். அறிவுமகன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரை இராணுவ…
-
- 11 replies
- 2.7k views
-
-
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தனது பெயரிலிருந்து ஈழம் என்ற பதத்தை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கோட்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பழமையான தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயரில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இரண்டு பிரிவுகளளாக இயங்குகின்றன. இதில் ஒரு பிரிவினரான பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழம் என்ற பதத்தை நீக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சமூக ஜனநாயக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் …
-
- 11 replies
- 1.6k views
-
-
சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி! முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர் எழுதியவர்பகலவன் ழn ளுநிவநஅடிநச 12இ 2009 பிரிவு: சிறப்புச்செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று சிறிலங்கா நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர்இ அரச தொலைக் காட்சியில்…
-
- 11 replies
- 2.2k views
-
-
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரச தரப்பினர் பாரிய வியூகங்களை அமைத்து வருகின்றனர். 13ஆவது, 17ஆவது திருத்தச் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது உட்பட பல நிகழ்ச்சி நிரல்கள் மூன்றில் இரண்டில் உள்ளடக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்குலகின் ஊடாக பிறிதொரு நெருக்கடிக்களமொன்று அரசை நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம். முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, மந்த கதியில் செயற்பட்ட ஐ.நா. தற்போது சிறப்பு நிபுணர் குழு அமைக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சிங்கள தேசத்தினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்ட பின்னர் மேற்குலக கண்க…
-
- 11 replies
- 1.1k views
-
-
13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290529
-
- 11 replies
- 660 views
- 1 follower
-
-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் கனவான சொந்த மண்ணில் எப்போது குடியேறுவார்கள்? யுத்தம் முடிந்து எல்லோரும் சிறப்பாக, வசதியுடன் வாழ்கின்றனர் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் வலி வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் இன்றும் இருக்கின்றன. 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களை சொந்த நிலத்தில் குடியமர்த்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. …
-
- 11 replies
- 759 views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 10, 2011 கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும். உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக பிரதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் செல்வி ஜெயல…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவ…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் காலமானார். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவந்த சந்திரசேகரம் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார். இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றையநாள் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள, அவருடைய இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று, பின்னர் கொக்குத்தொடுவாய் இந்துமயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது. http…
-
- 11 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் விலகிக்கொண்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது பற்றிய எமது உண்மை நிலையை கொழும்பு வாழ் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருப்பதாக உணர்கின்றோம். கொழும்பு மாவட்டத்தில் வாழும் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்கும் தலைமைப் பீடத்திற்கும் கடந்த சில மாதங்களாகவே விடுக்கப்பட்டு வந்தன. இது குறி…
-
- 11 replies
- 863 views
-
-
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (23) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதகர அதிகாரி வி.மகாலிங்கம் தெரிவித்தார். இந்தியன் வங்கியில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ். விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றவுள்ளார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என யாழ். இந்திய துணைத்தூதுவர் மேலும் தெரிவித்தார். http://www.saritham.com/?p=48365
-
- 11 replies
- 1.1k views
-
-
யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு யாழ் பல்கலைகழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது, பல்கலைகழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள்காணப்பட்டவேளை காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்தே முறுகல் நிலை உருவானது. மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இராணுவத்தினரும்அப்பகுதிக்கு விரைந்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது. யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத…
-
- 11 replies
- 1.8k views
-
-
வேளாங்கண்ணிக்கு சென்ற இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர் செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013 09:22 0 COMMENTS இந்தியாவில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்வதற்காக வந்த இலங்கையர்களைக் கொண்ட குழு ஒன்றை திருவாரூர் மாவட்ட பொலிஸார் இடைவழியில் இடைமறித்துள்ளனர். மேலும், பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக திரும்பிச்செல்லுமாறும் இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59578-2013-02-26-03-52-42.html
-
- 11 replies
- 935 views
-
-
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத பயங்கரவாத படைகளுக்கு வான் வழி உதவி வழங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறீலங்கா வான்படை உலங்குவானூர்திகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தரை - வான் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வீசித் தாக்கினர் என்றும் இருந்தும் விமானிகள் இரண்டு உலங்குவானூர்திகளையும் பத்திரமாக சேர்ப்பிடத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் என்றும் சிறீலங்கா வான் படை செய்தி வெளியிட்டுள்ளது. Two helicopters narrowly miss LTTE fire - SLAF The Air Force claimed that LTTE cadres had fired anti-aircraft missiles at two of its helicopters from inside the 'No Fire Zone'. The copters which were engaged in evacuating injured soldiers narro…
-
- 11 replies
- 3.2k views
-
-
மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது. இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான். இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்…
-
- 11 replies
- 3k views
-
-
தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம் சுதந்திர தினத்தின் போது தெற்கில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திரதினத்தில் கலந்து கொண்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதி கர்னல் ரத்னப்பிரிய பந்து தலைமையில் நடைபெற்றது. இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பங்கேற…
-
- 11 replies
- 817 views
-
-
பிரச்சினைகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டில் இருந்து வருகின்ற போதும் உலகப் பிரச்சினைகள் குறித்த எந்தவிதமான கருத்துப் பரிமாறல்களும் இல்லையென்றே கூற வேண்டும். அமெரிக்க வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரி செய்வதற்காக இன்னமும் அமெரிக்காவுக்கு சாத்தியப்படவில்லை. அமெரிக்கா உலகின் மிகச் சக்தி வாய்ந்த நாடொன்றாக இருப்பதன் காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய நாடுகளும் இதனால் பாதிப்புற்றன. இப்போது ஐரோப்பாவும் பொருளாதார சரிவிற்குட்பட்ட ஒரு வலயமாகக் கருதப்படுகின்றது. இந்நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நலன்புரிச் சேவைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந் நிலை, ஏற்கனவே துன்பப்பட…
-
- 11 replies
- 1.7k views
-