ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு [ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 01:42.03 PM GMT +05:30 ] இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகம…
-
- 10 replies
- 2.7k views
- 1 follower
-
-
திங்கள் 16-04-2007 17:58 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்சவின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு 59 வீதமான சிங்கள மக்கள் ஆதரவு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படும் யுத்தத முனைப்புகளுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 59 % வீதமான பெரும்பாண்மை சிங்களவர்கள் யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண விரும்பம் தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என 48% வீதமான சிங்கள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலேயே இக் கருத்துக்கணிப்…
-
- 10 replies
- 2k views
-
-
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுJUL 20, 2015 | 5:17by கார்வண்ணன்in செய்திகள் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளுனர் தரப்பில் இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது. எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உரு…
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்! சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிங்களுக்கு ஆதரவானவர்கள் போன்று காட்டிக்கொள்ளும் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சி…
-
- 10 replies
- 801 views
-
-
அமெரிக்க அதிபரின் உயர் விருது வென்ற ஈழத்து விஞ்ஞானி சிவானந்தன் யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு! [Wednesday, 2014-04-16 07:23:46] யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நேற்று நடந்த யாழ்.றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்விலும், அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த இந்துவின் பழைய மாணவனும், அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் விழா ஏற்பாட்டாளர்களினால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…
-
- 10 replies
- 1.3k views
-
-
சம்பந்தன் கருத்தை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார். இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். ஆகவே நாம் அதனை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 10 replies
- 767 views
-
-
கடாபிக்கு எதிரான போர் வியூகம் எப்படி நகர்கிறது.. கடாபிக்கு எதிரான போர் ஈழத் தமிழ் தலைவர்களின் கடந்தகால மதி நுட்பங்களிலும் கேள்வி எழுப்பப் போகிறது. கடாபிக்கு எதிரான போர் சர்வதேச கூட்டுப்படையினருக்கு புதியதோர் அனுபவமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக நயவஞ்சகமும், சர்வாதிகாரமும் நிறைந்த ஒருவராக வாழ்ந்தவர் கடாபி. தனது அதிகாரத்தை தக்கவைப்பதைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாத ஒருவராகவும் இருந்தவர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வந்ததும் தனது நண்பரான சாதாம் உசேனை அப்படியே கைவிட்டு பிரிட்டனோடு உறவாடி தனது அதிகாரத்தை காப்பாற்றியவர். எனவே உலகம் முன்னேறிய வேகம் போலவே தனது அதிகாரத்தை காப்பாற்றும் வேகத்திலும் அவர் முன்னேறியிருக்கிறார். அவருடைய போர் …
-
- 10 replies
- 1.8k views
-
-
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி. 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனவும், சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சுதந்திரமாக இ…
-
-
- 10 replies
- 857 views
- 1 follower
-
-
கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. …
-
- 10 replies
- 3.8k views
-
-
வன்னியில் விடுவிக்கப்படாத பகுதிகளில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னிடம் சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த மக்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தான் நீண்டகாலம் இருந்ததால் அங்குள்ள குடிசனப் பரம்பல் பற்றித் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, வன்னிமாவட்டத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தியபோ
-
- 10 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து முகப்புத்தகத்தினூடாகவும் பல்வேறு இணையத்தளங்களுடாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழர்கள் விடிவு பெற்று வாழ வேண்டும் என்ற வேணவா கொண்ட பலர் கூட இந்த விமர்சனத் தாக்குதலில் குதித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குறித்த பல விமர்சனங்கள் பலருக்கும் இருக்கின்ற போதிலும் தேர்தல் நேரத்தில் இத்தகைய விமர்னங்களை முன்வைப்பதன் மூலம் என்ன பலனை அடைடய முடியும்? தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கெதிரான கருத்துக்களை விதைப்பதன் மூலம் அதன் எதிராளிகளான அரசு+ஒ. குழுக்களுக்கு ஆதரவான வகையில் காய் நகர்த்தப்படுவதை விடுத்து வேறென்ன …
-
- 10 replies
- 864 views
-
-
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப் பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு சொந்தமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி மீதான இன அழிப்புப் போரினை அடுத்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வழிபாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. மிக நீண்ட கால தொன்மை வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாக வற்றாப்பளை அம்மன் ஆலயம் விளங்கி வருகின்றது. ஆலயம் தோன்றிய காலத்தில் இருந்து 2008ம் ஆண்டு வரை வைகாசி மாதத்தில் விசாக பௌணமியை அண்மித்து வரும் திங்கட்கிழமைகளில் வைகாசி பொங்கல் நடைபெற்றுவருவது வழக்கம். ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஆலயத்தின் வழிபாடுகளை இடைநிறுத்த வெள்ளையர்கள் மேற…
-
- 10 replies
- 994 views
-
-
6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன் இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார். ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங…
-
- 10 replies
- 541 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால், "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை! பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்…
-
- 10 replies
- 402 views
-
-
இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை: எமது பேரன்புக்கும் பாசத்துக்;குமுரிய தமிழக மக்களே! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் ஆகியோர் கொண்ட அணியினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சென்றனர். அங்கு எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, திருமதி சந்திரிகா குமாரதுங்கா ,பொதுவேட்பாளர் திரு மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளனர். கூட்டமைப்பின் குழுவினர் திரு ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை தொடக்கினர், அதற்கு அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் திருமதி சந்திரிக்காதான் பொறுப்பு என்றார். அதற்கு திருமதி சந்திரிக்கா, என்னிடம் எந்த அதிகாரமும் இல்ல எனக்கு …
-
- 10 replies
- 1.2k views
-
-
ஊவா முதல்வர் சஷீந்திர ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்! – தப்பியோடத் தொடங்கினர் ராஜபக்ஷக்கள் [Monday 2015-01-05 19:00] ஊவா மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருமான சஷீந்திர ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 11.35 மணியளவில் ஸ்ரீலங்கன் விமானம் யூஎல்-846 மூலம் அவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். எனினும் அவர் எங்கே புறப்பட்டுச் சென்றார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் விசாலமான பயணப் பொதிகளை எடுத்துச் சென்றதாகவும், விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வாயில் ஊடாக இவர்கள் விமானத்திற்குள் பிரவேசித்ததாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் 8ம் திகதி ஜ…
-
- 10 replies
- 763 views
-
-
மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு -சண்முகம் தவசீலன் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள…
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து , தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர். அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் …
-
- 10 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. வீரகேசரி
-
- 10 replies
- 1.8k views
-
-
வட தமிழீழத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோதல் ஒன்றில் 10 ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிற்கு எதிராக தாக்குதல் நடத்திய படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே 10ற்கும் அதிகமான படயினர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடபகுதி முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்போது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து படையினர் நடத்திய பதில் எறிகணைத் தாக்குதலில் 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டசின் ச…
-
- 10 replies
- 4.3k views
-
-
வவுனியாவில் ஆட்லறிதளம் புலிகளால் தகர்ப்பு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22352
-
- 10 replies
- 2.2k views
-
-
20 JUL, 2025 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நா…
-
-
- 10 replies
- 528 views
- 2 followers
-
-
தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருள்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை (07) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்புப் பற்றி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன: கொரோனா வைரஸ் நாட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன. வடமேற்கு லண்டன் விபரம்: 1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி 2) டிலக்ஷன் மொரிஸ் 3) பாலாம்பிகை முருகதாஸ் 4) லலிதசொரூபினி பிரித்திராஜ் 5) ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார். வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்: 1) ஆர்த்தி ஆறுமுகம் 2) சசிதர் மகேஸ்வரன் 3) கவிராஜ் ஷண்முகநாதன் 4) செல்வராஜா செல்லத்துரை 5) கரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ர…
-
- 10 replies
- 1.2k views
-