ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
12 JUL, 2025 | 01:04 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் சங்கீதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யாழ்…
-
-
- 10 replies
- 666 views
- 1 follower
-
-
வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது. துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/23043.ht…
-
- 10 replies
- 661 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருமலை வேட்பாளர் மீது கத்திக்குத்து திருமலை நிருபர் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2010 “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமைகொண்ட தேசம்” என்ற கொள்கை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளரான பிலிப்பையா ஜோன்சன் மீது இனம் தெரியாத நபர்கள் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) உவர்மலையிலுள்ள தனது வீட்டிற்கு உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த உந்துருளிக் கவசம் அணிந்த மூவர், அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், கத்தியால் பல தடவைகள் குத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், ஜோன்சனும் எதிர்த்துப் போராடி…
-
- 10 replies
- 901 views
-
-
இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலைப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்திற்குள் இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக…
-
- 10 replies
- 1.9k views
-
-
இனரீதியில் நாடு பிளவுபடுமானால் "சிங்களப் பிரபாகரன்' தோன்றுவார் சென்னையில் ஜே.வி.பியின் சந்திரசேகரன் சென்னை,மே15 இனரீதியில் நாட்டைப் பிரிக்காத நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே ஜே.வி.பி. விரும்பு கின்றது. அவ்வாறான பிரிவினையானது தமிழருக்கு ஆபத் தாகவே முடியும். இலங்கை பிளவுபடுமானால் "சிங்களப் பிரபாகரன்' ஒருவர் தோன்றுவதற்கும் அது வழிவகுக்கும். ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.சந்திரசேகரன் சென்னை யில் "இந்து' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைநாடு சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று ஜே.வி.பி. நம்புகின்றது. பல இனங்களையும் பல கலாசாரங்களையும் கொண்…
-
- 10 replies
- 2.8k views
-
-
ஈரானுடன் சிறிலங்கா உறவுகளை வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடும் கவலை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடமே, இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஈரானிடம் இருந்து, தமது நாடு கடுமையான பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்ற பீரிசுக்கு, ஈரானுடனான நட்புறவைச் சுட்டிக்காட்டி நெதன்யாகு கண்டித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜெரூசலேம் செல்வதற்கு முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், …
-
- 10 replies
- 940 views
-
-
சிங்கள ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவு. தமிழர் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்கள ஜனாதிபதியை தேர்வு செய்ய என்றும் போரின் பின்னர் ஜனநாயகம் மலரச் செய்யப்படுகிறது என்ற உலக நாடுகளின் ஆர்ப்பரிப்போடும் திணிக்கப்பட்ட தேர்தலில் வெறும் 20% இற்கும் குறைவான மக்களே வாக்களித்துள்ளனர். சிறீலங்காவின் இதர பகுதிகளில் 70 சதவீதமான வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணி வாக்கில் நிறைவுக்கு வந்துள்ளது. வவுனியா யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடந்த கைக்குண்டு வீச்சுக்களைத் தவிர தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்ததாக தேர்தல் தொடர்பான செய்திகள் கூறுகின…
-
- 10 replies
- 1.4k views
-
-
அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.குருநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதவிச் செயலாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார்,தென்மராட்சி அமைப்பாளர் கந்தர் ஆறுமுகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்க…
-
- 10 replies
- 792 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இன்று 24 நாடுகளுக்கும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்பதியளிக்கிறது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 …
-
- 10 replies
- 2.4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது. எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன. …
-
-
- 10 replies
- 917 views
-
-
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி [28 - April - 2008] இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்…
-
- 10 replies
- 2k views
-
-
சட்டவிரோத ஆயுத முகவர்களின் மூலம் அதி நவீனரக ஆயுதங்களை புலிகள் சீனாவிலிருந்து அண்மையில் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, இறுதிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்ரேய்னிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்குமாறு புலிகளின் தலைமைத்துவம் உக்ரேய்னில் உள்ள ஆயுத முகவர் நிறுவனமொன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரேய்ன் சட்டவிரோத ஆயுத சந்தையில் மிகவும் குறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது. ரி-56 துப்பாக்கியொன்று 4000 முதல் 5000 ரூபாவிற்…
-
- 10 replies
- 2.5k views
-
-
தமிழீழப்பகுதியில் சிங்களப்பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான நாளாந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மார்ச் 1 ந்தேதி மதியம் 11 .00 மணியிலிருந்து 2 .30 மணிவரை Bellamy / Ellesmere சந்திப்பில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மிகுந்த குளிர் நிலையிலும் அங்கு கூடிய மக்கள் தமிழரின் தேசியக் கொடிகளைத் தாங்கியபடி, சிறிலங்காவே இனப்படுகொலைகள…
-
- 10 replies
- 1.5k views
-
-
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/12710…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர். 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106708/language/ta-IN/article.aspx
-
- 10 replies
- 1.6k views
-
-
பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!! சிங்கள படைகள் முன்னெடுத்து வரும் வலிந்து தாக்;குதலை முறியடிக்க தற்காப்பு சமரை நடத்தி வரும் புலிகள் எத்தனை காலத்திற்க்கு இதனை செய்யப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.... மூதுரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில் இருந்து இது வரை 125 போரளிகளை வீடுதலைப்புலிகள் இழந்துள்ளார்கள் இத்தனை போராளிகளையும் பலி கொடுத்து அவர்கள் சும்மாய் இருக்க போவதில்லை.... மாறாக அவர்களும் தமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிருபிக்க வேண்டிய இக்கெட்டான நிலைக்குள் சிக்கியிருக்கிறார்கள். பலம் இழந்தார்கள் புலிகள் என பறை சாற்றும் சிங்கள பேரினவாத படைகளிற்க்கு பெரும் அடி கொடுக்க புலிகள் நிச்சயம் முனைவார்கள். …
-
- 10 replies
- 2.9k views
-
-
தமிழீழத்தைப் போலவே பாக்கிஸ்த்தானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு தேசம்தான் பாலுச்சிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானுடன் இராணுவ ஆக்கிரமிப்பொன்றின் மூலம் பலாத்காரமாக இணைக்கப்பட்ட இந்த நாட்டின் தேசிய இனமான பாலுச்சிஸ்த்துக்கள் இன்றுவரை தமது தாய்நாட்டிற்கெதிரான ஆக்கிரமிற்கெதிராக ஆயுதப் போராட்டமொன்றினை நடத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தானின் பெரும் கனியவளச் செறிவுடைய மாநிலமாகக் கருதப்படும் பாலுச்சிஸ்த்தான் மாநிலத்தினை எப்பாடுபட்டாவது தன்னுடன் இணைத்து வைத்திருக்க பாக்கிஸ்த்தான் அரசுகளும் இராணுவ நிர்வாகங்களும் முயன்று வருகின்றன. சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுப் போராடும் அத்தேசத்து மக்களை கடுமையான …
-
- 10 replies
- 1.8k views
-
-
தமிழர்களைக் கொன்றொளித்த சிங்கள இனவாத அரசாங்கத்தின் அரக்கத்தனங்களை மறைக்க அல்லும் பகலும் உழைக்கும் சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான போராட்டத்துக்கு சிட்னித் தமிழர்களை அணிதிரளுமாறு அறைகூவல் விடப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ந்திகதி (03-01-2013) சிட்னியில் நடைபெற உள்ள மூன்றாவது* டெஸ்ட்டின் தொடக்க நாளில் காலை 9.30 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பும் Refugee Action Coalition அமைப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்களைக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இடம் :சிட்னி கிரிக்கட் மைதானம் gate 6 க்கு அருகாமை காலம்: 03-01-2013 காலை 9.30 http://www.tamilleader.com/prathanaalias/8406-2013-01-01-12-1…
-
- 10 replies
- 937 views
-
-
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து விட்டீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம், பொது மகன் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவில் பயங்கரவாதத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை இடம்பெற்ற போது நடு வீதியில் வைத்து அங்கு வந்த இளைஞரொருவர் இவ்வாறு சுமந்திரனிடம் கேள்வியெழுப்பி தடுமாற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடிக்கவில்லை என இதன்போது சுமந்திரன் தெரிவித்துள்ளமை க…
-
- 10 replies
- 987 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2015, 02:23.22 AM GMT ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற…
-
- 10 replies
- 572 views
-
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 23 Dec, 2025 | 10:07 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் …
-
-
- 10 replies
- 648 views
- 1 follower
-
-
எனது மொபைலில் கிளிக்கியவை..
-
- 10 replies
- 767 views
-
-
"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது." என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகா…
-
- 10 replies
- 782 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம் Bharati May 23, 2020 யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்2020-05-23T07:48:26+00:00Breaking news, உள்ளூர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று நடைப…
-
- 10 replies
- 1.3k views
-
-
கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரைநிகழ்த்துகையில், இந்திய கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள், உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய தமிழர்கள் தாக்கப்படும் போது இலங்கைத் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களும் கர்நாடக தமிழர்களும் பண்பாடு மற்றும் தொப்புள்கொடி உறவுகள். இவ்வாறான உறவுகள் …
-
- 10 replies
- 1.5k views
-