ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 5 20 APR, 2023 | 02:31 PM பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கதே' போன்ற வாசகங்கள் …
-
- 7 replies
- 830 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு? ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தருணத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுவதுடன், இந்த இரு நாடுகளும் ஆதரவளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவும் கிடைக்கலாம். ஜெனீவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானத்தை கொண்டு வர முயற்சிகளை …
-
- 7 replies
- 2.6k views
-
-
(இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும். நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி…
-
- 7 replies
- 1.5k views
-
-
இந்திய அம்புலன்ஸ் தெற்கில் ஓட இடமளியோம்! இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ள இந்திய அம்புலன்ஸ் சேவை, சுகாதாரத் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கை எனவும், தென் மாகாணம் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது எனவும் தென் மாகாண சுகாதார பிரிவின் அம்பியுலன்ஸ் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கத்தின் வருடாந்த கூட்டம் காலியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அச்சங்கத்தின் தலைவர் சேனக விஜேநாத் கூறியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையில் இந்த அம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…
-
- 7 replies
- 724 views
-
-
ரோசியின் பேரழகு என்னை மயக்குகிறது. அதனால் அவரால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு வார்த்தைகள் தடுமாறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்;கையிலேயே அமைச்சர் வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார். 'இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கின்றேன். ஏனெனில் எனது 19 வருட அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பேரழகி என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அந்தப் பேரழகிக்கு பதில் அளிக்க நான் கொடுத்து வைத்தவனாக இருக்கின்;றேன். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதில் அளிக்கப் போவதில்லை…
-
- 7 replies
- 4.2k views
-
-
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறு;திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற…
-
- 7 replies
- 644 views
-
-
போகாவத்த இந்திரரத்ன தேரரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாளிகாகந்த சுதத்த தேரர் என்பவர் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். கொல்லப்பட்ட தேரரின் உடல் தொடர்பான இறுதி கிரியைகளை மேற்கொள்ள சென்ற இராவணா சக்தி அமைப்பினர், மலர் சாலைக்கு சென்றிருந்தனர் அப்போது, சடலம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்ற செய்தி அறிந்த அவர்கள் ஆத்திரமடைந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களில் இருந்த மாளிகாந்த சுதத்த தேரர் பெட்ரோல் போத்தல் ஒன்றை கொண்டு வந்து தன் மீது அதனை ஊற்றி தீ குளிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். http://www.…
-
- 7 replies
- 563 views
-
-
சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்! 20 டிசம்பர் 2010 இன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை! 20-12-2010 நாள்: 16-01-2011 ஞாயிறு நேரம்: காலை 10:00 மணி. இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர். தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் …
-
- 7 replies
- 1.1k views
-
-
அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம் 2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இ…
-
- 7 replies
- 916 views
- 1 follower
-
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம்முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் ”நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தாம் தீர்மானித்துள்ளதாகவும், யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்க…
-
- 7 replies
- 442 views
- 1 follower
-
-
கொலையான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் மகள், கலிபோர்னியாவில், கோத்தாவுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்ட கீழ் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட முடிவினை எதிர்த்து மேல்நீதிமன்றில் லசந்த மகள் தொடர்ந்த வழக்கினை விசாரித்து, தள்ளுபடி செய்யப்பட்டதனை தள்ளுபடி செய்து விட்டனர். ஆக, இந்த வழக்கானது மீண்டும் விசாரிக்கப்படக் கூடியதான ஒரு நிலைமையில் உள்ளது. இது குறித்து கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த செய்திக்கு 5 பின்னூடடம் வந்து இருந்தது. கோத்தா அமெரிக்க குடிமகன் இல்லாத படியால் அமெரிக்கா ஒன்றுமே பண்ண முடியாது என்றும் ஒன்றும், அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை வழக்கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
இறந்துபோன உறவுகளை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ள கடமை. அதனை யாரும் மறக்கவும், மறுக்கவும் முடியாது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அதிரடியாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மாநகர சபையில் இன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்ற போது தலைமை உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;. இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில தீயசக…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்ட…
-
- 7 replies
- 657 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்தார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் , விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு கடந்த மகிந்த அரசில் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய அரசு தோன்றியுள்ளது. இந்த நிலையில் தமிழ் அமைப்புக்களின் தடை குறித்து பிரதி அமைச்சரிடம் கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித…
-
- 7 replies
- 863 views
-
-
Published on May 19, 2015-11:24 am · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முள்ளாள் தலைவர் அனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகள் வாழும் ஒரு இல்லத்தில் அவர்களுடன் சேர்ந்து இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தனியே முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி என்ற செய்தியை மட்டுமல்ல எதிர்கால அரசியல் செய்தி ஒன்றையும் சொல்கிறது. எதிர்வரும் பொதுத்தேர…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்! புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் …
-
-
- 7 replies
- 751 views
-
-
தமிழருக்கு உணவு, உடை தவிர வேறெதுவும் தேவையில்லை: ஜாதிக ஹெல உறுமய திகதி: 30.06.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசுஇதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேறவேண்டிவர…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதம் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வெளியிட்ட கருத்து, முஸ்லிம் அரசல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, “சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை, என்றும், அவர்கள் இவ்வாறு தங்களை அந்நியப்படுத்திக் கொள்வதால் தான், பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் கடும்போக்கு நிலை கொண்ட குழுக்கள் உருவாகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வெளியிட்டுள்ள கருத்தை நிராகரித்துள்ள …
-
- 7 replies
- 647 views
-
-
இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு யாழ். மாவட்டமும் தாராகி வருகின்றதனைக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அந்நியர் ஆட்சியின் கீழிலிருந்து விடுபட்டு நாளையுடன் 66 வருடங்கள் ஆகின்றது. அதன்படி இன்றையதினத்தில் இருந்து நாளைய சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான கடைகளில் இலங்கைக்கொடி விற்பனை செய்யப்படுவதுடன் அவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியகொடி எனின் 25 ரூபாவுக்கும் பெரிய கொடி எனின் 100 ரூபா மற்றும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் சாரதிகள் தங்களது வாகனங்களின் முகப்பில் இலங்கைக் கொடியை கட்டியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களிலும் மற்றும் திணைக்களங்களிலும் இன்றைய தினமே இலங்கைக்கொடி பறக்கவிட…
-
- 7 replies
- 907 views
-
-
மகிந்த ராஜபக்ஷேவின் கடந்த வருட October medical check - up and specimen report ஆய்வின்படி அவரது ரத்த அணுக்களில் சில வித்தியாசமான (malignant bizzarres) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..... ஆனால் அது cancer cells தானா என்பதை கண்டுபிடிக்க அதன் வளர்ச்சியைப் பொறுத்து சிலமாத காலம் பொறுத்திருக்க வேண்டியிருந்தது......இன்சுலின் மருந்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதற்காக சில காலம் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்து சில உணவுக்கட்டுப் பாடுகளையும் மேற்கொண்டு வந்தார். இறுதியில் கடந்த வருடம் december மாதமளவில் அது ஒரு (malignANT GLIOMA GRADE I ) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவீனத்துவ cancer சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் செலவிடும் பிரித்தா…
-
- 7 replies
- 2.3k views
-
-
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் - மாவை (ஆர்.ராம்) வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்…
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் - இரா. சம்பந்தன் தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர…
-
- 7 replies
- 945 views
-
-
இடமாறும் யாழ். பேருந்து நிலையம்! யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டத்துக்கான தூர சேவை பேருந்து தரிப்பிடம் யாழ். ரயில் நிலையத்துக்கு அருகில் இடமாற்றப்படவுள்ளது. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்க…
-
- 7 replies
- 711 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரோ" வின் தலைவர், ஆலோக் ஜோசி சந்தித்துள்ளார். இந்திய விருந்தினர் மாளிகையில் வைத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்ததாக எமக்கு கிடைத்த உறிதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை. இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த ஜனாதிபதி, இந்தியாவின் எந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்திருக்காத நிலையிலேயே, 'ரோ" உளவு அமைப்பின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 7 replies
- 1.3k views
-