ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
இலங்கையின் வான் வெளிப் பாதுகாப்புத் திறனை மேலும் அதிகரிக்கக் கூடிய 'ராடர்' சதாதனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பொன்சேகாவும், பேகாட்டபயவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தற்போதைய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்படத்தக்கது. பொன்சேகா தனது இந்திய விஜயத்தின் போது இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு குறித்தே அதிக கவனம் செலுத்துவார் எனப் புதுடில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய இராணுவத்தளபதி, பாதுகப்பு அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் அவரது ஒருவார கால விஜயத்தின் போது பேச்சுகளை மேற்கொள்ளவுள்ள பொன்சேகா இராணுவ ஒத்துழைப்பிற்கான சாதியக்கூறுகள் குறித்து ஆராய்வார்கள் என இந்தியப…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 03:20.41 PM GMT ] அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார். காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது. குறித்த சாட்சியத்தில…
-
- 6 replies
- 884 views
-
-
துரோகிகளே! இன்று சிங்களம், கரும்புலிகளின் பாசறைகளை தாக்கி அழித்ததாக கூறிய இலக்கை, இதோ உங்கள் கண் முன்னே காண்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்த பச்சிளம் பாலகனின் அலறல். இன்று சிங்களத்துடன் நீங்கள் சேர்ந்து நடாத்தும் தமிழின படுகொலைக்கு நீங்களே பலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிங்களம் உங்கள் உடல்;களையும் குதறி, இரத்தங்களை ருசிக்கும் நாட்களை நீங்களே எண்ணத்தொடங்குங்கள் http://www.neruppu.org/
-
- 6 replies
- 2.7k views
-
-
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர். சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும். என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால் சற்றுமுன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், தான் தற்போது குறித்த அலுவலகத்தில் இல்லை எனவும் அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107850-2014-04-23-07-16-45.html
-
- 6 replies
- 523 views
-
-
ஆக 24, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புதிய பத்திரிகை தொடங்கி தமிழ் மக்களைக் குழப்ப கே.பி .திட்டம் சிறீலங்கா அரச கட்டுப்பாட்டிலுள்ள கே.பி எனப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் புதிய தமிழ் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக, சிங்களவர்களால் இயக்கப்படும் ஆங்கில இணையத்ததளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக விடுதலைப் புலிகளுக்கு எதிராகவம், தமிழ் விரோதக் கருத்துக்களையும் வெளியிட்டுவரும் கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ். ஜெயராஜை (D.B.S. Jeyaraj) நியமிக்க கே.பி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், புதினம், மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற பத்திரிகை மற்றும் இணையத்தளங்களுக்கு வன்னியில் இருந்து பணியாற்றி…
-
- 6 replies
- 1.1k views
-
-
நானுஓயா விபத்தில் இறந்தவர்களின் விபரம் வெளியானது: காயமடைந்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு By Nanthini 21 Jan, 2023 | 11:52 AM நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்ச…
-
- 6 replies
- 366 views
-
-
யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற…
-
- 6 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா, 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை, பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலை என்பதுடன், தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் குறித்த மாணவியை சாதனையைப் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டியுள்ளனர். https://newuthayan.com/story/15/முல்லைத்தீவு-மாணவி-வரலாற்றுச்-சாதனை.html
-
- 6 replies
- 833 views
-
-
05 JUL, 2024 | 05:58 PM புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் ச…
-
-
- 6 replies
- 595 views
- 1 follower
-
-
சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…
-
- 6 replies
- 2.2k views
-
-
கருத்துச்சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் மட்டுப்பாடுகள் அதிகார இருப்பை தக்கவைக்க முன்படுவதை காண்பிக்கிறது - கரு By T. SARANYA 09 SEP, 2022 | 11:05 PM (நா.தனுஜா) சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும். அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய ச…
-
- 6 replies
- 335 views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்ற மற்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். அவர்களினால் சுய நிர்ணய உரிமையையோ சுயாட்சியையோ கோர முடியாது. ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அந்நாட்டில் தேசிய இனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அல…
-
- 6 replies
- 1.9k views
-
-
அமைச்சர் விமல் வீரவன்சவினால் நடாத்தப்படும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தியால் ஆத்திரமடைந்த கோத்தபாய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லேரியாவில் துமிந்த – பாரத லக்ஷ்மனுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நாடாளுமன்ற தேர்தலின் போது விருப்பு வாக்குகினால் ஏற்பட்ட தகராறு என வீரவன்சவின் ஊடகம் கருத்து வெளியிட்டுயிருந்தது. இதனை மறுக்கும் கோத்தபாய, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை சம்பந்தமாக மக்களை குழப்பக் கூடிய வகையில் எந்த கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என தெரிவித்துள்ள கோத்தபாய இந்த மோதல்கள் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
31 MAR, 2024 | 02:05 PM தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (31) காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவரது சதுக்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கட்சியின் உப செயலாளர் குலநாயகம் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180063
-
-
- 6 replies
- 792 views
- 1 follower
-
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார் October 2, 2024 ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். “தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவ…
-
-
- 6 replies
- 680 views
-
-
இணைய இணைப்பு: http://www.sencholai.org/?p=2739
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள் : சபா நாவலன் இனச்சுத்திகரிப்பு வன்னியில் கொத்துக்கொத்தாக் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்துபார்த்து இரசித்துக்கொண்டிருந்தன. ஆயிரமாயிமாக அல்ல, லட்சம் லட்சமாக புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய அமரிக்க நாடுகளின் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் என்று யாரும் விதிவிலக்கின்றி ஐரோப்பிய வீதிகள் நிரம்பின. இதனால் எல்லாம் இலங்கை அரசுக்கு யாரும் அழுத்தங்களை வழங்கவில்லை. இலங்கை அரசோடு பேரம் பேசி தமக்கு வேண்டியதை ஏகபோகங்கள் பெற்றுகொண்டன. இலங்கை அரசு தான் திட்டமிட்ட அனைத்தையும் நிகழ்த்தி முடித்தது. இன அழிப்பிற்குக் கிடைத…
-
- 6 replies
- 1k views
-
-
மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..! நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வ…
-
- 6 replies
- 972 views
-
-
– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முஸ்லிம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் சுயநலமாகவே செயற்படுகின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள உலமாகட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தமிழ் முஸ்லிம் மக்களினால் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்த பேரணியில் சிலரால் முஸ்லிம்களுக…
-
- 6 replies
- 760 views
-
-
யாழ். பொது நூலகத்திற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருகை தந்தபோது, வரவேற்பதற்காக அங்கு இடப்பட்டிருந்த கோலம் அவரது காலால் தவறுதலாக கலைந்துவிட்டது. இதனையடுத்து அந்தக் கோலத்தை அதேபோன்று அவர் வடிவமைத்தார். (படங்கள்:எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா) http://tamil.dailymirror.lk/--main/80415-2013-08-27-07-41-37.html
-
- 6 replies
- 717 views
-
-
இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கையளிக்க வேண்டியிருப்பதால், எமது தொழில் முயற்சிகள் எதுவும் வளங்களைச் சூறையாடுவதாக அமைந்துவிடக்கூடாது. அதனால் எமக்குவரும் தொழில்முதலீட்டு விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது என வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பளையில் அமைக்கப்பட்டுவரும் காற்றுமின் ஆலையின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்றயதினம் சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலீட்டாளர்களுடனும் பணியாளர்களுடனும் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குமாகாணசபை ஆரம்பமாகிய பின்னர் தென்பகுதியில் இருந்தும் …
-
- 6 replies
- 855 views
-
-
புலிகளுக்காக இராணுவ சீருடைகளை பாகிஸ்தானியர் கொண்டுவந்ததாக சந்தேகம் [26 - January - 2007] [Font Size - A - A - A] பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்தினர் அணிவது போன்ற இராணுவச் சீருடைகளுடன் பாகிஸ்தானியர் ஒருவரை புறக்கோட்டையிலுள்ள விடுதியொன்றில் வைத்து புறக்கோட்டைப் பொலிஸார் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு குறித்த பாகிஸ்தானியர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அந்த இராணுவச் சீருடைகளை எடுத்து வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் கிளப்பப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு அவர் அந்தப் பெருந்தொகையான இராணுவச் சீருடைகளையும் புலிகளுக்காகத்தான் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வந்தாரா என்பது பற்றி புலன் விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாக புறக்கோட்டை பொலிஸ…
-
- 6 replies
- 2.4k views
-
-
கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு! இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்டார். இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும்…
-
- 6 replies
- 504 views
- 1 follower
-
-
கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.6k views
-