ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இலங்கைத் திருநாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு துரித மற்றும் சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் நிதானத்து டன் பயணித்துவருவதனால், வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களைத் தாய்நாட்டிற்கு திரும்பி வருமாறு அரசாங்கம் வலியுறுத்திக்கேட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கையில் பணியாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் அமைந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றுகையில், இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென அறிவார்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களுக்கு உத…
-
- 6 replies
- 761 views
-
-
உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி? வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு. எப்படியும், என்ன பாடுபட்டும், தலையைக் கீழாக வைத்தேனும் தாம் சுத்தவாளி என்ற நிலைப்பாட்டை ஸ்திரமாக்கி விட இலங்கை அங்கும் இங்கும் என்று ஓடி ஓடி ஆதரவு திரட்டி வருகிறது. இத்தனைக்கும், ஐ.நா.வின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷவுடன் பேச்சுக்கள் நட…
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினரே கூறவேண்டும் தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இல்ஙகை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார். இலங்கையில் சமாதானமும் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரமும் காணப்படுகின்றமையினாலேயே இந்தியா சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன. இலங்கை சீனாவிடம் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த …
-
- 6 replies
- 734 views
-
-
கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன. …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இன்று இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் எதிரோலிக்கின்றன. கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, விடுதலை புல…
-
- 6 replies
- 856 views
-
-
இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடை…
-
- 6 replies
- 547 views
-
-
கடந்த வாரம் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிசை இலங்கை கருதினால் மல்கம் ரன்சித் ஆண்டகை தலமையிலான குழுவினர் சந்தித்ததுடன் அங்கு திருப்பலி ஆராதனையிலும் கலந்து கொண்டர் இதில் இத்தாலி நாட்டில் வசிக்கும் உறவுகள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர் இதில் கல்வி மற்றும் பணி நிமிர்த்தம் இத்தாலியில் தங்கியிருக்கும் வட-கிழக்கின் அருட்தந்தையர்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்ட வேளையில் தமிழ் அருட்தந்தையர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு வடகிழக்கு ஆயர்களை மதிக்காமல் பலர் அச் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் ஆயர்கள் தர்ம சங்கடத்தில் இருப்பதாக அற்யக்கிடைக்கிறது. வடகிழக்கு ஆயர்களை கைது செய்ய தயாராகும் அரசாங்கம் அவ் அரசாங்க பிரதிநிதிகளுடன் இந்தாலியிலுள்ள அருட்தந்தையர்கள் செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
கொழும்பு, ஜூலை 16 நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்து…
-
- 6 replies
- 754 views
-
-
அத்துமீறும் மீனவர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை மீனவர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துமீறும் இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றையதினம் (13) போராட்டத்தினை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரினை கைளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எமது மீனவர்களின் பிரச்சினைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சினை நீண்ட காலமாக நடைபெறுகிறது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையினை மட்டும் நம்பாது நீங்களு…
-
- 6 replies
- 712 views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு பெற்றுக்கொண்ட பெரும் வெற்றியாகும் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன் படிக்கையும் இல்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான உண்மைகளைப் பேசவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்காவில் நடைபெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை எத…
-
- 6 replies
- 648 views
-
-
எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ”மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.madawalaenews.com/2019/02/blog-post_117.html
-
- 6 replies
- 1k views
-
-
வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே – கோத்தாபய – சொல்கிறது கொழும்பு ஊடகம்:- இலங்கையின் வடக்கில், உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் அதிகாரிகள் இது குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர். எனினும் இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் வடக்கில் போன்றே தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவது குறித்து தீர்மானிப்பது, அரச பாதுகாப்புச் சபையே என கூறியுள்ளார். அத்துடன் சுதந்திரமான நாடு என்ற வகையில், இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பில், தீர்மானங்கள…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை! ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடியுள்ளது.கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உற…
-
- 6 replies
- 733 views
- 1 follower
-
-
தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.! இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்." - இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது. நாம் எமது படை வ…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பாரதிஜனதா அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்…
-
- 6 replies
- 1.4k views
-
-
புதிய அமைச்சரவை.. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று காலை பதவியேற்றுள்ளது. 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கடவில்லை இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசே…
-
- 6 replies
- 452 views
- 1 follower
-
-
’உணவு பஞ்சம் ஏற்படாது’ பா.நிரோஸ் அதிகளவான ஹெக்டேயர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார். வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதி…
-
- 6 replies
- 516 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம் இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர். இந்தச் சிறுவர் சிறுமியர் அரச…
-
- 6 replies
- 1.5k views
-
-
அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களைக் கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச படையினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் சிவிலியன்களைப் பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள சிவிலியன்களைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஆனந்தசங்கரி இந்தக் கருத்துகளை முன்வை…
-
- 6 replies
- 2k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், எதிர்பார்த்த காலப்பகுதிக்கு முன்னரே நிறைவடையலாம் என அரசாங்கத்தின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னர் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பாதுகாப்புப் படைத் தரப்பினரின் மனோ நிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே இதனைக் கருத்தில் கொண்டு நிறைவடைந்த மாகாணசபைத் தேர்தல்கள் மூலம் மக்கள் தமது எண்ணத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் தெரிவித்தார். www.tamilwin.com
-
- 6 replies
- 2.3k views
-
-
படையினர் புலிகள் கடும் மோதல் சின்னப்பரந்தன் இராணுவத்தினர் வசம் - இராணுவ பேச்சாளர் [ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2008, 06:35.49 PM GMT +05:30 ] கிளிநொச்சி பரந்தன் மேற்குப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். மோதல்களை அடுத்து பரந்தன் பிரதேசத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது இன்…
-
- 6 replies
- 2.1k views
-
-
(எம்.நியூட்டன்) வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை சர்வமத தலைவர்களிடம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளார்கள். ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் தர்ம சக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வமத தலைவர்களின் வடக்கு மற்றும் தெற்கு மத நல்லிணக்க உரையாடல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக சர்வமதத் தலைவர்களது வடக்கிற்கான விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. இச் சந்திப்பில் அமரபுர,ராமாஞ்சியம் பெளத்த பீடங்களைச் சேர்ந்த பெளத்த மதகுருக்கள், இந்து மத குருக்கள், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மெளலவிகள், கிறிஸ்தவ அருட்தந்தைகள் என சுமார் 40 பேர் கொண்ட தூதுக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
-
- 6 replies
- 736 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பான ஐநா அறிக்கையை செயல்படுத்தக்கோரியும் தமிழாக மீனவர்களை படுகொலைசெய்யும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் தலைமையில் நடைபெற்ற கண்டனப் பேரணி நாள் : 30-04-2011 கண்டனப் பேரணி தொடக்கம் பேரணி - சரஸ்வதி உரை பேரணி - தோழர் தியாகு உரை பேரணி - தோழர் அன்சாரி உரை பேரணி -பா.செயப்பிரகாசம் கவிதை பேரணிப் பயணம் பேரணி -ராஜபக்சேவுக்கு கைவிலங்கு பேரணி -மீனவர்களுக்கு மலரஞ்சலி தோழர் ஓவியா பெரியரியலாளர் தோழர் ஏழுமலை பெ.தி.க நாம் தமிழர் தோழர் கவிதாயினி தாமரை தோழர் சீதையின் மைந்தன் புதிய தமிழகம் தோழர…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஐவர் காயம்! - டயலொக் குறுந்தொலைநகல் செய்தி
-
- 6 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும…
-
- 6 replies
- 3k views
- 1 follower
-