ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
…………….வன்னியிலிருந்து ஆதவன் இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை. சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறை…
-
- 5 replies
- 769 views
-
-
எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது. மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் …
-
- 5 replies
- 1.4k views
-
-
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
March 9th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்றுமில்லாத எதிர்பார்ப்பை சிறீலங்கா தொடர்பாக இம்முறை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்கத் தவறிய நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் முன்னால் தன்னையே தீயாக எரித்து முருகதாசன் அதன் கண்களைத் திறக்க முயன்றான். ஆனாலும், பாராமுகமாகவே இருந்த ஐ.நா. மனித உரிமைகள் அவை, அதன் பின்னர் டப்ளின் தீர்ப்பாயமும், ஐ.நா. நிபுணர் குழுவும் ஆதாரபூர்வமாக சிறீலங்காவின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நிரூபித்துவிட்ட நிலையிலும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவ…
-
- 5 replies
- 1.8k views
- 1 follower
-
-
கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக, மிகப் பிரமாண்டமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரகலய போராட்டத்தில் புலம்பெயர் புலிகளின் தலையீடு இருந்ததாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்துவருகின்றனர். அரகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே அவர் போட்டியிட்டார…
-
-
- 5 replies
- 719 views
-
-
சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது. வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர். இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்ட…
-
- 5 replies
- 2.5k views
-
-
ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென…
-
- 5 replies
- 494 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் : கடும் நிபந்தனையை விதித்த இந்தியா ! இலங்கை அரசாங்கம் கோரிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்து செய்யப்பட…
-
- 5 replies
- 540 views
-
-
ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்! [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:18.25 PM GMT ] லங்காசிறி யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்பட்டதாம் 23 ஜூன் 2011 திவயின கூறுகிறது http://youtu.be/BuKfXwP0pGk http://youtu.be/qQ7ga6q9Er8 http://youtu.be/TM0gwe6botA வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் செனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோ படத்தை திரையிட்டு, இலங்கை இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டது என உறுதிப்படுத்துவதற்காக மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு என்பனவும் கொலைக்களம் வீடியோ படத்தை தயாரித்த இயக்குனர் கெல்லம் மெக்ரே ஆகிய தரப்பினர் மேற்கொண்ட முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையின் போர் சூழ்நிலை குறித்து நத்தார் செய்தியில் பாப்பரசர் கவலை வீரகேசரி நாளேடு வத்திக்கான் நகர், பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய் நத்தார் தின செய்தியில் இலங்கையின் போர்ச் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.சூடானிலிரு
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா! அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது. சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடி…
-
- 5 replies
- 1.2k views
-
-
யட்டியாந்தொட்டை கனேபொல தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டைகனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 5 replies
- 1.2k views
-
-
2007ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி கிழக்கில் குடி அமைப்பு தமிழர் 40.39% முஸ்லிம் 37.64% சிங்களவர் 21.64% என அமைந்துள்ளது. 37 அங்கத்தவர் கொண்ட மாகாணசபையில் தனித்து போட்டியிட்டு தமிழ் கூட்டமைப்போ முஸ்லிம்காங்கிரசோ தலைக்கு 10 ஆசனங்களுக்கு மேல் பெறும் வாய்ப்பில்லை. கிழக்கில் சிங்கள வாக்கும் கணிசமான தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் பெறும் வகையில் ஆழும் UPA வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். கிழக்கு மக்கள் உரிமைக்காக தமிழர் கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். ஆமால் மாகாணசபைத்தேர்தல் தமிழ் முதல் அமைச்ரா முஸ்லிம் முதலமைச்சரா என்கிற கேழ்விதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்னுள்ல பெரிய கேழ்வீயாகும். இதன் ஆதாயம் சிங்கள முஸ்லிம் வாக்குகளையும் பெறக்கூடியதாக ஆழும் …
-
- 5 replies
- 1k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைநாள் தலைவரும், இலங்கையின் முதலாவது பிரதமருமாயிருந்த காலம் சென்ற டி.எஸ்.சேனநாயக்காவின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்கவின் தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டாக உடைந்துள்ளது. புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக காமினி அபயரட்ண நியமிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய சார்பான நிலைப்பாடே இந்த கட்சி உடைவுக்கு மூல காரணம் என அறியப்படுகிறது. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.orunews.com/
-
- 5 replies
- 1.9k views
-
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அட்டனில் இன்று (16.04.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கொரோனா வருவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது…
-
- 5 replies
- 786 views
-
-
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல் 11 Feb, 2026 | 03:30 PM “நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார். “இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள்…
-
-
- 5 replies
- 327 views
- 1 follower
-
-
25 வயதுக்கு குறைந்தவர்கள் பணிபெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லத் தடை 25 வயதுக்கும் குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு பணிபெண்களாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயது குறைந்தபட்டசம் 25க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அறிவிவித்துள்ளது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் எனவும் உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள…
-
- 5 replies
- 578 views
-
-
இலங்கையிலும் கனமழை: இதுவரை 6 பேர் பலி 8 நவம்பர் 2021 பட மூலாதாரம்,KRISHANTHAN இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4…
-
- 5 replies
- 485 views
- 1 follower
-
-
இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடத்தப்படும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அங்கு சென்றிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர். இதேசமயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நா…
-
- 5 replies
- 914 views
-
-
'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை' முடியப்பு பியசேன இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக…
-
- 5 replies
- 878 views
-
-
பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சண்டை – படைச் சிப்பாய் பலி [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:01 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வவுனியா பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சமிந்த பண்டார என்ற சிறிலங்கா படைச்சிப்பாயே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் தங்கியுள்ள பம்பை மடு இராணுவ முகாமில் இரண்டு படையினருக்கு இடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தர்க்கமே துப்பாக்கிச் சண்டையாக வெடித்துள்ளது. இந்தச் சண்டையில் சமிந்த பண்டார என்ற படைச் சிப்பாய் கொல்லப்பட்டார். இவருடன் துப்பாக்கிச்…
-
- 5 replies
- 906 views
-