ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வடக்கு தேர்தல்: அரச கூட்டணியில் முன்னாள் புலிகள் இல்லை இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் இல்லை என்று அக்கட்சி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தது. வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் ஆளும் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமிழோசையிடம் சற்று முன்னர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/07/130728_slfpnorth.shtml
-
- 5 replies
- 741 views
-
-
'தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை எட்டுதல் தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் ஒன்றுகூடலில் விவாதிக்கப்பட்ட போது, தற்போது இந்த நிலை வேறுபட்டுள்ளது என்பதை ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார். "ஈழம் என்பது மிகக் கிட்டிய தூரத்தில் உள்ளது. தற்போது பங்களாதேஸ் சுதந்திர நாடாக மாறிவிட்டது. இதேபோன்று வடசூடான் மற்றும் தென்சூடான் ஆகியனவும் தற்போது சுதந்திரமடைந்துவிட்டன" என ஜஸ்வந்த் சிங் தனது விவாதத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார். தனது உரையின் போது, கச்சதீவை இந்தியா …
-
- 5 replies
- 816 views
-
-
14ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதர…
-
- 5 replies
- 429 views
-
-
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்தின் போது பாதிரியார்கள் சிலர் தாக்கப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் சில அடாவடி கும்பல்களின் தாக்குதலால் இன்றைய தினம் யுத்தக் களமானது. பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் என தெரிவித்துக் கொண்ட கும்பல் சிலர் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து அடித்து உடைத்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில பாதிக்கப்பட்ட 23இற்கும் அதிகமானோர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க…
-
- 5 replies
- 784 views
-
-
யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதில் யாழ்ப்…
-
- 5 replies
- 1.5k views
-
-
கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் சுமந்திரனின் பேச்சு
-
- 5 replies
- 649 views
-
-
சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம், இல 153/3.யூனியன் பிளேஸ், கொழும்பு-02. Operation Office, Hindu Federation Of Srilanka, …
-
- 5 replies
- 1.5k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் கடும் தண்டனை வழங்க நேரிடும் என்று ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையைக் காட்டி தூபி சின்னத்தை சுட்டிக்காட்டி, அந்த திணைக்களம் பௌத்த மதத்திற்காக மாத்திரமா செயற்படுகிறது என்று வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த சரத் வீரசேகர, தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூல…
-
- 5 replies
- 462 views
- 1 follower
-
-
Published on May 29, 2011-10:43 am செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள். ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்? அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா? செ…
-
- 5 replies
- 1.2k views
-
-
October 30, 2018 1 Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இல…
-
- 5 replies
- 951 views
-
-
இதனை கிளிக் செய்யுங்கள் முதலாவதிற்கு புள்ளடி போடுங்கள் பிளீஸ் பிளீஸ் Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? முதலாவது விடைக்கு புள்ளடி போடுங்கள்
-
- 5 replies
- 2.3k views
-
-
ரஜீவ் காந்தி கொலையில் எமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை - விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பீடம் எனும் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையில் 1991 ரஜீவ் கொலைக்கும் தமக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கோரியிருக்கிறார்கள். அரசியத் துறையின் பொறுப்பாளர் குருபரன் குருஸ்வாமி மற்றும் சட்டத்துறை பொறுப்பாளர் லதன் சந்திரலிங்கம் ஆகியோர் இந்த அறிக்கையில் ஒப்பமிட்டிருக்கிறார்கள். மக்களால், மக்களுக்கு மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட தமது அமைப்பு ஒருபோதுமே ரஜீவ் கொலையில் சம்பந்தப்படிருக்கவில்லை என்பதை பலமுறை தகுந்த சாட்சியங்களூடு நிரூபித்திருந்தாலும்கூட, தம்மேலான அவப்பெயர் இன்னும் மறையவில்லை என்று இவ்வறிக்கை ஆ…
-
- 5 replies
- 885 views
-
-
சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு ஒருபோதும் விலகாது! - சுமந்திரன்[Sunday 2015-08-30 09:00] இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது. எனினும் தேசியக்கட்சிகள், தேசியப்பட்டியலில் பெண்களுக்கு இடங்களை வழங்கவில்லை. தற்போதைய தேசிய அரசாங்கம் என்ற விடயம், இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டமையாகும்…
-
- 5 replies
- 609 views
-
-
ஐ.நா சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா தப்பிவிடும்! - கூட்டமைப்பு அறிக்கை!! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் இலகுவாகத் தப்பிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜெனிவாவில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய் என்றும், அவரின் இத்தகைய கூற்றுக்கள் சர்வதேச ச5கத்தைப் தவறாக வழி நடத்துக்கிறது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவாவில் ஆற்றிய உரை தொடர்பில் தமது நிலைப்பாட…
-
- 5 replies
- 792 views
-
-
விடுதலைப் புலிகளின் பெண் கடற்புலிகளின் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசு அல்லது மீலர், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார் 02-03-2015ம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சந்தேக நபரான பகிரதி முருகேசுவிற்…
-
- 5 replies
- 771 views
-
-
ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 05:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம் கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது. இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதனையடுத்து, அங்கு கடமையில் இர…
-
- 5 replies
- 653 views
-
-
இந்தியாவின் சிங்களத்தை நம்பி செயற்படும் முயற்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும் உபகண்ட துணை ஆசிரியர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 21, 2010 INDO CHINA சீனாவுக்கு போட்டியாக இலங்கைக்கு எவ்வளவை கொடுத்தாலும் இந்தியாவினால் அவர்களது இலக்கினை அடைய முடியாது. சீனாவின் இலங்கை மீதான அபிவிருத்தி , முதலீடு ஆகியவற்றின் ஊடான செல்வாக்கினை முறியடிக்க இந்தியாவும் அதே பாணியில் அபிவிருத்தி, முதலீடு, வியாபாரம் என நிதியினை கொட்டி வருகின்றது. இது சிங்களவர்களுக்கு இராஜபோகம் தான். ஏனெனில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு இலங்கைக்கு உதவிகளை செய்து வந்தார்களோ அவ்வாறே இப்போது அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கைக்கு இரு நாடுகளும் அள்ளி கொட்டிக்கொண்டு இருக்கின்றன. இந்த போட்டிய…
-
- 5 replies
- 466 views
-
-
எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசில் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்…
-
- 5 replies
- 757 views
-
-
ராஜாங்கனை குளத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட 44 பேர் கைது குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம காவல்துறை சந்தியில் காவல்துறையினர் மீது; கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்கனை குளத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை; தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமைக் கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசயதாகவும் இதனால் 4 காவல்துறையினர…
-
- 5 replies
- 486 views
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு முயற்சித்த சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் மட்டக்களப்பு படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் எறிகணை சூட்டாதரவை வழங்க, துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனையடுத்து துணை இராணுவக்குழுவினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சிதறி ஓடினர். வடமுனை காட்ப்பகுதிக்குள் சிதறி ஓடிய அவர்கள் தற்போது விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். விடுதல…
-
- 5 replies
- 3k views
-
-
பராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளபோதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை அடுத்த ஆட்சியிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் நிலையான அரசு நாட்டில் அமைக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சம்பந்தன் அந்த அரசில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது நிச்சயம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தீவில் நெடுங்காலமாக நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக சம்…
-
- 5 replies
- 605 views
-
-
Published By: DIGITAL DESK 7 08 APR, 2024 | 01:50 PM வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 2 பேரும், மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 6 பேரும், வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 5 பேரும், முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 8 பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். "நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எ…
-
-
- 5 replies
- 488 views
- 1 follower
-
-
ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்…
-
- 5 replies
- 958 views
-
-
வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான ஆளுநர் நியமனங்கள் இழுபறியாகவே உள்ளன. ஆளுநர்கள் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகள். தேவைப்படின் மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையே கையில் எடுத்துக் கொள்ளக்கூடிய தற்றுணிவு அதிகாரம் அவர்களுக்கு உண்டு. எனவே ஜனாதிபதிக்கு மிக வேண்டிய, விசுவாசமான – நெருக்கமானவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுவது வழமை. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆளுநர் நியமனம் என்பது ஏனைய மாகாணங்களைப் போன்றது அல்ல. அவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான நெருக்கம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். இது ஏன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பதவியைப் பொறுப்பேற்ற கையுடனேயே தென்னிலங்கையின் 6 மாகாணங்களுக்கு உடனடியாக ஆளுநர்களை நியமித்து விட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஆனால், வடக…
-
- 5 replies
- 1.2k views
-