ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 4 replies
- 735 views
-
-
படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இ…
-
- 4 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போதே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்தது. இந்த நேர்முகத் தேர்வில், குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 44 பேர் தோற்றிய போதிலும் அவர்களில் 37பேர் மாத்திரமே தெரிவானதாக இராணுவம் குறிப்பிட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள், இராணுவத்தின் பொதுச் சேவையணி, இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கமர்த்தப்படவுள்ளனர் என்றும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணு…
-
- 4 replies
- 509 views
-
-
மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்: விடுதலைப் புலிகளின் பதில் கையளிப்பு - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 10:56 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உதயன், சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தமது பதிலை நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளனர். நோர்வே ஊடாக அல்லாமல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தான் இசைவாக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு மகிந்த தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு தமது தரப்பு பதிலை விடுதலைப் புலிகள் உதயன், சுடர்ஒளி ஆசிரியர…
-
- 4 replies
- 1.6k views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்தவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் தெரிவித்தார். இதேவேளை மனித உரிமைகள்…
-
- 4 replies
- 283 views
-
-
(எம்.நியூட்டன்) வடக்கில் போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வட மாகாண விவசாய அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப் பிராணிகளுக்கும் சட்டவிரோதமான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு, பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சைகளால் பெறுமதி மிக்க கால்நடைகள் அதிகளவில் இறந்துள்ளதாக அந்த மாவட்டங்களின் பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்…
-
- 4 replies
- 655 views
- 1 follower
-
-
சுப்பிரமிணிய பாரதியார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பார் - வைகோ சுப்பிரமணிய பாரதியார் இன்று இருந்திருப்பாராயின், ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குக் குரல் கொடுத்திருப்பார் என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.பாரதியாரின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது வைகோ இவ்வாறு கூறினார். கரிசல் காற்றின் கவிதைச்சோலை என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, பாரதியார் தமிழின் மேல் கொண்ட பற்றுதல், எழுச்சிப் பாடல்கள், விடுதலை அமைப்புக்களுக்கு ஆதரவாக எழுதிய ஆக்கங்கள் மற்றும் பெண்களின் விடுதலை குறித்து வெளியிட்ட கருத்துக்களை கூட்டத்தில் பகிர்ந்துகொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை! சம்பந்தன் சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கபூர் அரசாங்கமானது இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சமத்துவம், ஊழல், மோசடியற்ற ஆட்சி, சட்டங்களுக்கு ஏற்ப கடுமையாக நடவடிக்கைகள் என்பனவற்றை கடைப்பிடித்து வருகின்…
-
- 4 replies
- 1k views
-
-
புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும் விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
கடலில் விழப் போகும் மர்மப்பொருள்! - நிலத்தில் சிதறும் பொருட்களை தொடக்கூ்டாது என அறிவுறுத்தல் [Wednesday 2015-11-11 08:00] வரும் வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார். வரும் வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர …
-
- 4 replies
- 1k views
-
-
(இரா.செல்வராஜா) தோட்ட நிர்வாககங்களும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து முதல் முறையாக தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களுக்கு வழமையாக பத்தாயிரம் ரூபாவையே தீபாவளி முற்பணமாக தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வந்தன. இதுவும் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தொழிலாளர்களுக்கு இப்பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தோட்ட உட்கட்டமைப்பு , மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேயிலை சபையிடமிருந்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க அனுமதி அளிக்கப…
-
- 4 replies
- 770 views
-
-
[size=5]முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய[/size] [size=4]காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை ஜாதிக ஹெல உறுமய விமர்சித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 'வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இந்த பயங்கரவாதத்தால் வருந்துகின்றனர். இவர்களால் பள்ளிவாசல்களில் அமைதியாக தொழமுடியாது உள்ளத. இந்த றம்ழான் மாதத்தில்கூட தொழுகைக்காக ஒன்று சேர பயப்படும் நிலைமையை அவர்கள் உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் பேசியிருந்தார். …
-
- 4 replies
- 806 views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் சந்தோசமாக இருந்தால் மட்டுமே சிங்களவர்கள் சந்தோசமாக இருக்க முடியும் - ஜனாதிபதி தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் சிங்கள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து இன சமூகங்களும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/ar…
-
- 4 replies
- 606 views
-
-
சென்னை நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்கள தேசியக் கொடி அகற்றம் Posted by: Mathi Updated: Friday, February 8, 2013, 10:56 [iST] சென்னை: சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் நட்சத்திர ஹோட்டலில் பறந்த சிங்களக் கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. அங்கு இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படங்கள் இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொட…
-
- 4 replies
- 482 views
-
-
இந்தியாவுடனான பிரச்னையை பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் – மஹிந்த நம்பிக்கை 3 Views இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதால் எந்தவொரு பிரச்னையையும் பரஸ்பர பேச்சுக்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய பிரச்னையைக் கூட ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டினருடனோ இணைந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதில்லை என இலங்கை முடிவு செய்த நிலையில் இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு …
-
- 4 replies
- 623 views
-
-
தமிழ்த்தேசிய இனம் கௌரவமும் பாதுகாப்பும் கொண்ட அமைதி வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான அரசியல் போராட்டத்தில் வெற்றி அடைவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பணர்வுடனும், உறுதியோடும் தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். கடந்த மார்கழி மற்றும் தை மாத காலகட்டங்களில் போரின்போக்கு அரசபடைகளுக்கு சாதகமான முறையில் தீர்க்கமாக மாறியிருந்ததிலிருந்து இந்த நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நீண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரியின் தந்தை விடுதலை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்து விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வருட காலமாக குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=148283
-
- 4 replies
- 559 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ச மற்றும் மஹிந்த சிந்தனையை பாதுகாப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து செயற்படப் போவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியையும், மஹிந்த சிந்தனையையும் பாதுகாப்பதற்கு உயிர்த் தியாகம் செய்ய காத்திருக்கின்றனர். உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனாதிபதி தோற்கடித்தார். மனித உரிமைகள் மற்றும் போர்…
-
- 4 replies
- 436 views
-
-
பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர், அண்ணாமலை... யாழ். நல்லூர் கோயிலுக்கு விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை விஜயம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவரை, யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279566
-
- 4 replies
- 398 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச... அனுராதபுரத்திற்கு, விஜயம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது மத வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280672
-
- 4 replies
- 417 views
-
-
தவராசா- என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை இணைந்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படட்டு வருகின்றனர். அந்த நில…
-
- 4 replies
- 898 views
-
-
பிரபாகரன் இருக்கிறாரா என்பது குறித்து காலம் பதில் சொல்லும்-'பிரதமர்' ருத்திரகுமாரன் புதன்கிழமை, அக்டோபர் 13, 2010, 10:44[iST] லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள உருத்திரகுமாரன். பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அளித்துள்ள பேட்டி: ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு …
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும்: சரத் பொன்சேகா [சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 17:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்கள் முற்றாக முறியடிக்கப்பட்டுவிடும் என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளியாகும் வார இறுதி பத்திரிகையான லங்காவுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: அண்மைய தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. http://www.eelampage.com/?cn=28612 எந்த ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எமது படைகளால் தோற்கடிக்க முடியும். அண்மைய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடு…
-
- 4 replies
- 1.4k views
-