ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற…
-
- 26 replies
- 2.5k views
- 1 follower
-
-
புகலிட படைப்பாளி ரமேஸ் சிவருபன் பிரான்சில் தாக்கப்பட்டு மரணம் அதிர்ச்சியில் தமிழச்சமூகம். பின்னணி என்ன? பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரமேஸ் சிவருபன் மேற்படி சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் வாய்த்தர்க்கம் முற்றி வன்முறையாகி ரமேஸ் சிவருபன் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது. திட்டமிட்டே கூட்டிச்சென்று தாக்கினார்களா அல்லது தற்செயலான தாக்குதலில் மரணமடைந்தாரா என்பது குறித்தும் மற்றும் இக…
-
- 26 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மா…
-
- 26 replies
- 2.3k views
-
-
மோடியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது – கெஹலிய இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி இலங்கைக்கு முக்கியமானது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயமாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஓர் மத்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வலுவான ஆட்சி நிறுவப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/107094/Default.a…
-
- 26 replies
- 2.6k views
-
-
நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 3k views
-
-
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் மக்களை.கூட்டமைப்பின் காவடி தூக்கிகலின் இன்னொரு பொய்ப் பிரச்சாராம்.இவர்களுக்கு பொய்களைப் புனைவதைத் தவிர வேறு வழியில்லை.இல்லாத மக்கள் ஆதரவை இருபதகாக் காட்ட படாத பாடு படுகிறார்கள்.உதயன் சுடரொளி பதிரிகைகளும் அவர்கள் நடாத்தும் தமிழ்வின் போன்ற இணையத் தளங்களுமே இவ்வாறான பொய்களைப் பரப்பி கீழ்த் தரமான அரசியலை நாடாதுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன்…
-
- 26 replies
- 1.8k views
-
-
கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது. இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கணிகையர் இல்லங்கள் (விபசார விடுதிகள்) அறிமு…
-
- 26 replies
- 2.2k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம…
-
- 26 replies
- 3.8k views
-
-
யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவுப்பகுதியில் இலங்கை அரசு ஜந்து நட்சத்திர விடுதியொன்றினை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதம் யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கூடிய விகிதாசாரப்படி தனக்கு தமிழ் மக்களது வாக்கு நெடுந்தீவிலேயே வீழ்ந்திருந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அடிக்கடி கூறிவருவது அனைவரும் அறிந்ததே. தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைய விட நெடுந்தீவிலேயே கூடிய அளவில் விகிதாசாரப்படி வாக்குகள் வீழ்ந்ததென அவர் கூறிவருகின்றார். இந்நிலையில் நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக்கப் போவதாகவும் பேசியும் வருகின்றார். சீன நிதி உதவியுடன் நெடுந்தீவில் கார்ப்…
-
- 26 replies
- 1.7k views
-
-
இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.! 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், த…
-
- 26 replies
- 3k views
-
-
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார். அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என சஜித் பதிவேற்றியுள்ளார். இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்…
-
- 26 replies
- 2.1k views
-
-
[size=4] [/size] [size=4] [/size] [size=4]விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...[/size] [size=4]'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலி…
-
- 26 replies
- 2.4k views
-
-
பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் சுட்டுக் கொல்லும் காட்சிகளை வெளியிட்ட சனல் - 4! நவ 30, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சரணடைந்த போராளிகள் மற்றும் பெண்போராளிகளை கொல்லும் காட்சிகள் அடங்கிய புதிய காணொளி ஒன்றினை லண்டனின் பிரபல தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்டுள்ளது. http://www.sangathie.com/news/11055/64/4/d,fullart.aspx http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims
-
- 26 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம் April 29, 2024 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பின…
-
-
- 26 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோம். ஆனால் அது போர்குற்றம் என்றார்கள். இன்று போர்குற்றம் என்ற சொல்லையே காணவில்லை. வெறும் மனிதஉரிமை மீறல் என்று வந்து நிற்கின்றது. அடுத்த ஆண்டு சிறீலங்கா என்ற சொல்லை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறிலங்கா என்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு நாட்டின் பெயரை போட்டுப்பாருங்கள். இது அநேகமான அனைத்து நாடுகளிற்கும் பொருந்தும் தீர்மானம். இந்த இலங்கையை பாராட்டி வழங்கப்படும் இந்த சான்றிதழை வரவேற்கும் எம்மவர்களை என்னவென்றுசொல்வது? இதில் நீர்த்துப்போக என்ன உள்ளது? ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியா கொண்டு வந்த 13வது சட்டத்திருத்தத்துடன் தீர்வென்றால் அதனை தலைவர் எப்பொழுது வாங்கித்தந்துவிட்டிருப்பார். இதில் எங்கேயும் தமிழர்களிற்கான…
-
- 26 replies
- 2k views
-
-
வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த மொழி தமிழ் http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/404161_525419214140811_1428154598_n.jpg thanks-face book
-
- 26 replies
- 6k views
-
-
வவுனியாவில் இன்று மாசி22 2007 கொல்லப்பட்ட தமிழர்
-
- 26 replies
- 4.8k views
-
-
இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் 15 நவம்பர் 2012 இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவத்தில் சுமார் 100 தமிழ் பெண்கள் உள்ளீர்க்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இவ்வாறு பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இலங்கை மகளிர் இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவில் இந்தப் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட பயிற்சிகளின் பின்னர் குறித்த தமிழ் பெண்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் யுவதிகளே இவ்வாறு இராணுவத்தில் உள்ளீ…
-
- 26 replies
- 3.6k views
-
-
விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள…
-
- 26 replies
- 1.4k views
- 1 follower
-
-
நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.
-
- 26 replies
- 6.8k views
-
-
யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார் யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் …
-
- 26 replies
- 2.3k views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம்
-
- 26 replies
- 3.2k views
-
-
தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இரு தமிழர்கள் தேசியப்பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கருணா மற்றயவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொருளாளர் முத்து சிவலிங்கம். குறிப்பாக கருணாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாது எனத் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு குறிப்பாக 30 வருடகால யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு தனக்கு புரண உதிவியளித்தவர்களை …
-
- 26 replies
- 3.5k views
-
-
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்து…
-
- 25 replies
- 3.5k views
-
-
விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர வெள்ளி, 11 மார்ச் 2011 04:25 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தற்போது நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை வகித்துவருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள பயங்கரவாத ஆய்வு அமைப்பின் ஷானக ஜயசேகர ‘பொஸ்டன் நியூஸ்” இற்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இறப்பிற்கு பின்னர் நிதிகள் அனைத்தும் நெடியவனிடம் கைமாறியுள்ளது. மற்றும் ருத்திரகுமாரனுக்கு வெளிநாட்டில் சொற்ப அளவினரே ஆதரவு தெரிவிக்கின்றனர் என ஷானக ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் மற்றும் ருத்திரகுமாரனுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்…
-
- 25 replies
- 2.6k views
-