வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். இவ் வருடம் நோய் நொடியற்ற மகிழ்வான நல்ல மாற்றங்கள் வந்து ,மனித இனம் அன்போடு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…
-
- 0 replies
- 1.6k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட நாரதருக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டுகிறேன்.
-
- 21 replies
- 1.6k views
-
-
தமிழினத்தின் அடையாளம். எப்பவும்... எம் நெஞ்சங்களில், வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ❤️
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
என் தமிழ் உறவுகளுக்கு, பிறந்திருக்கும் 2008 ஆங்கிலப் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன். தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகள் இன்னல் களைந்து நிரந்தரமான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் இந்த ஆண்டு வழி சமைக்கவேண்டும் என்று ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். என்றும் அன்புடன் வசீகரன். www.vaseeharan.com New updates coming soon www.vnmusicdreams.com www.vaseeharan.blogspot.com www.myspace.com/vaseeharan
-
- 1 reply
- 1.6k views
-
-
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பு என்பது, காற்றைப் போல்.. ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2009) ஆகஸ்ட் 2ம் தேதி உலக நட்பு தினமாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கி…
-
- 2 replies
- 1.6k views
-
-
என் தேசம்.... பூக்கள் கொண்டுவந்தால் தலைவணங்கிடும் தேசம்! வாட்கள் கொண்டுவந்தால் தலைவாங்கிடும் தேசம்! என் தேசம் குறித்து நான் பெருமை கொள்ள இன்னுமொரு திருநாள்! இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!!! விரவில் சுதந்திரம் பெறப்போகும் ஈழத்தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நாளை எதிர்பார்க்கிறேன்.....
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்று கல்வி கண்தந்த ஆசிரியர் தினம்.. இக்கள தோழர்கள் யாராவது ஆசிரியர் பணி செய்தால்... அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... டிஸ்கி : டீச்சரம்மா சகோதரி நிலாமதி அவர்களுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பிறந்த நாள் நல் வாழத்து மடல் ஒன்று முடிந்தால் யாராவது அனுப்பவும்.
-
- 6 replies
- 1.6k views
-
-
அனைத்து உள்ளங்களிற்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். புதைந்து போனது 2009 மட்டுமல்ல ஈழ மண்ணில் எம்மவர் வாழ்வும் தான் என்றாலும் அதிலிருந்து 2010 இல் மீண்டெழுவோம் என உறுதி செய்வோம். உமை
-
- 18 replies
- 1.5k views
-
-
3,000 பதிவுகளை எட்டிய, புலவருக்கு வாழ்த்துக்கள். . களத்தில்.. மற்றவர்களை ஊக்குவித்து, தட்டிகொடுத்து, உற்சாகம் கொடுப்பதில்.... புலவரும் முக்கியமானவர். யாரும் எதிர் பாரத வகையில்.... காணக் கிடைக்காத, மிக முக்கியமான காணொளிகளை, இவர் இணைக்கும் போது.... ஆச்சரியமாக இருக்கும். மற்றவர்களுடன் சோலி, சுரட்டுக்குப் போகாமல்.... தான் வந்த அலுவலை பார்த்து விட்டு, அமைதியாகச் செல்லும் புலவர், தொடர்ந்து பல கருத்துக்களை, எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
- 20 replies
- 1.5k views
-
-
இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
-
-
- 30 replies
- 1.4k views
- 4 followers
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் 54வது பிறந்த நாள்!
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு பகிர்வு ஒரு மனதின் தேடல் ஒரு வாழ்த்து ஒரு எண்ணத்தின் வெளித்தோற்றம் ஒரு அறவுரை ஒரு அழகின் வெளிப்பாடு ஒரு இயற்கையின் ரசனை ஒரு கதைசொல்லி ஒரு இணைய நாட்குறிப்பு ஒரு தகவல் களஞ்சியம் ஒரு வீணையின் நாதம் ஒரு கருவூலம் ஒரு பொன்மொழி ஒரு இரக்கம் ஒரு அன்பியல் ஒரு குறட்பா ஒரு இரங்கல் ஒரு தெய்வீக உலா ஒரு பொழுது போக்கு ஒரு முன்னறிவிப்பு ஒரு பண்பட்ட மனதின் அனுபவம் இத்தனை அம்சங்கள்(குறைவு தான்) கொண்ட யாயினி அக்காவின் "யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.." பலரது பாராட்டுக்களுடனும் பல்லாயிரத்திற்க்கும் மேலான பார்வைகளுடனும் அந்த திரி ஐம்பது பக்கங்களை தொட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் வழங்கி வரும் யாயினி அக்காவிற்கு எனது வ…
-
- 23 replies
- 1.4k views
-
-
விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! இயல் இசையும் நாடகமும் எங்கள் தமிழ் மூச்சு அயலவர்கள் இனசனங்கள் எல்லாம் உறவாச்சு நெய்தலும் குறிஞ்சியும் மருதம் முல்லை பாலை சுயமாக சொந்த மண்ணில் செழித்திருக்கும் காலை புயல் அடித்த தேசமென்று பெயரும் வரலாச்சு அயலவர்கள் புலம் பெயர்ந்து வருடம் பலவாச்சு உயர் தலைவன் வழிநடத்தல் உலகில் முதலாச்சு வியந்து பார்க்கும் அனைவர்க்கும் மூக்கில் விரலாச்சு பயந்து வாழ்ந்த காலமெல்லாம் பறந்து பலநாளாச்சு வியப்புடனே வந்தபடை வெற்றி பலவாச்சு விய வருடம் வந்ததின்று வணங்கிடுவோம் நன்று வெற்றிதரும் புதுவருடம் வாகைசுூடும் வென்று.
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் 30 மார்ச் உடன் 14 ஆவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது பதிநாலாவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கும் எமது இனிய பல்சுவை தளமான யாழ் தளம் மேலும் வளர இனிய வாழ்த்துக்கள். உறவுகளை அவர்களின் திறமைகளை வளர்க்க அதற்கும் மேலாக தாயக மக்களின் விடுதலைக்காகவும் மாவீர்களின் கனவு பலிக்கவும் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் தமது நேரம், பணம் மற்றும் பாரிய மன உளைச்சல்கள், சவால்களை தாண்டி உழைக்கும் ஆரம்பகர்த்தாவுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. **** நாமார்க்கும் குடியல்லோம் ****
-
- 13 replies
- 1.4k views
-
-
இசையூடாக எம் நாடி நரம்புகளை உயிர்பெற வைத்த எம் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்லப்பா ஐயாவின் இந்த புதிய அகவையில் இதயம் கலந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .
-
- 2 replies
- 1.4k views
-
-
கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.
-
- 11 replies
- 1.4k views
-
-
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
-
-
- 22 replies
- 1.4k views
- 3 followers
-
-
யாழ் மாவட்ட.. குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் மதிப்புக்குரிய பெளதீகவியல் ஆசான் சோதிலிங்கம் (யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியில் சேவையாற்றியவர். யாழ் நகரில்..பல தனியார் நிறுவனங்களிலும் கல்வி கற்பித்தவர்.) அவர்கள் பாடசாலை கற்பித்தலில் இருந்து ஓய்வு பெற்றதாக அறியக் கிடைக்கிறது. இவர் ஓய்வு பெறும் போது யாழ் மத்திய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். அதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு மேல்.. யாழ் இந்துவில் சேவையாற்றி இருந்தார். மதிப்புக்குரிய நல்லாசான் சோதிலிங்கத்துக்கு இளைப்பாற்றின் போதான நல்வாழ்த்துக்கள். இயலுமான காலம் வரை.. தொடர்ந்தும் உங்கள் சேவையை மாணவர்களுக்கு வழங்கவும் வேண்டுகிறோம். http://www.jcc.lk/index.php/about-college-3/19-retirement-from-service-…
-
- 0 replies
- 1.4k views
-
-
எப்போதும்.. வானவில்லைப்போலவே இருக்க வாழ்த்துக்கள்...
-
- 0 replies
- 1.4k views
-
-
சுதந்திர இந்தியாவில் வசிக்கும் எம்கள உறவுகளுக்கும் எம் சகோதர சகோதரிகளுக்கும் 60வது சுதந்திரதின வாழ்த்துகளை சுதந்திரமடைய காத்திருக்கும் தேசத்தை சேர்ந்தவனாகிய நாம் தெரிவித்து கொள்கின்றோம்
-
- 0 replies
- 1.4k views
-
-
ஓய்வு பெற்றாலும் உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்று எங்கள் மதுரை மைந்தன் வன்னியருக்கு மேலும் ஒருவருடம் பதவி நீடிப்புச் செய்து வாழ்த்தி மகிழ்ந்துள்ளது அமீரகம். நாங்களும் வாழ்த்துவோம்.🙌
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் அதே நேரத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவும் உங்கள் சுவாசம் கலந்து கொண்டிருந்த ஊரில் அதே காற்றை நானும் சுவாசித்தேன் என்பதும் உங்கள் காலடி பட்ட சில இடங்களில் நானும் பயணித்தேன் என்பதுமே போதும் என் வாழ்வும் ஒரு பெரும் பேறு என நான் கொள்ள. பிரபாகரன் எங்களின் உயிரானான் என்பது வெற்று வாக்கியம் அல்ல, அது பெரும் வாழ்வு பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே பெரு மழை பொழியும் காலத்திலே மன்னவனாக வந்து உதித்து வீரனாக களமாடி மரணித்த எம் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு நாள் வரலாறு உங்களை விடுவிக்கும்!
-
- 16 replies
- 1.4k views
- 3 followers
-
-
சாத்திரியின் மகள் மீரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாத்திரி இன்று தனது மகளின் பிறந்தநாளன்று ஒரு குடும்பத்திற்கு 100€ உதவியினையும் வழங்கியுள்ளார்.
-
- 6 replies
- 1.3k views
-