Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

  2. இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

  3. இரா.சம்பந்தனுக்கு இன்று அகவை 90 2023-02-05 10:30:02 By Nanthini இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் அகவை 90இல் காலடியெடுத்து வைக்கிறார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த சம்பந்தன் 1977ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வரும் அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதுடையவராகவும், தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். …

  4. கதிரவன் ஒளியில் உலவும் உலகில் கவலைகள் நீங்கிக் கதிர்முகம் கண்டு புதிதாய் பொங்கிடும் தமிழர் ஆண்டில் இயற்கைப் போற்றிடும் பண்பினாலே இனிதாய்த் தமிழர் உலகில் வாழ ஒன்றாய் கூடி உழைப்போம் உயர்வோம்! கள உறவுகளனைவருக்கும் தித்திக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக!

  5. கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.

  6. 🎁 யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள். 🎄

  7. அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.

  8. இன்று... புரட்சி, ஆண் பிள்ளைக்கு தந்தையாகி உள்ளார். 💐 அவரின் மகன்... சகல கலைகளும் கற்று... பெற்றோருக்கு, பெருமை சேர்க்க வாழ்த்துக்கள். 👏

  9. பேஸ்புக்கில் பூத்த காதல் - கவிஞர் தமிழ்மொழியை மணந்த ஈழ எழுத்தாளர் அனோஜன்! "பரஸ்பரம் புரிந்துகொண்டு, நம்பிக்கை வளர்த்து, ஒரே அலைவரிசையில் மனதால் இணைந்தோம். நிச்சயம் நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித்தருது." நா.கதிர்வேலன்05 Jun 2022 10 AM arts அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி "இதோ என் கணவர் அனோஜன்" எனத் தமிழ்மொழி அறிமுகப்படுத்தியபோது இருவரின் புன்னகையில் அவர்களின் தீராத நேசம் தெரிந்தது. தன் காதல் மனைவி தமிழ்மொழியின் கைப்பற்றியபடி பேசத் தொடங்குகிறார் அனோஜன். "யாழ்ப்பாணத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். போர்ச்சூழலில் கொஞ்சமும் நிம்மதியில்லாத, நிலையில்லா…

  10. என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....

  11. 600 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ்சிறிக்கு வாழ்த்துகள் இன்னும் பலாயிரம் தாண்ட வாழ்த்துகள்

  12. சாண்ட்ரிங்ஹாமில்... 96ஆவது, பிறந்தநாளைக் கொண்டாடும்... எலிசபெத் மகாராணி! எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வார். அவர் தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த தோட்டத்தில் ஒரு வீட்டில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகளுடன் ராணியைக் காட்டுவது மற்றும் குதிரைகள் மீதான அவரது வாழ்நாள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இது, ராணி…

  13. மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல…

  14. யாழ் களமே வாழ்க 23 அகவை கள் கடந்தது 24 இல் காலடிபதிக்கும் யாழ்களமே வாழ்க . காலையில் தினமும் கணணிக் கதவு திறந்து முதலில் உன்னிடம் உள்ள செய்திகள், வேடிக்கைகள் ,கருத்து மோதல்களை பார்ப்பது தான் என் முதல் வேலை . ஒரு பொழுதுபோக்குகளமாக இருந்தாலும் நியாயமாக கருத்துக்களை முன் வைப்போருக்கான களம் இது என்றால் மிகை இல்லை. கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும் தனிப்படட மோதல்களை தவிர்த்து இன்னும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள். நிர்வாகிக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் சக களஉறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன்.

  15. காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்... காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு.. நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம். கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிக…

  16. யாழ்களத்தில் ராசவன்னியர் என்று பெயர்கொண்ட தனசேகரன் தம்பதிகளே! நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் காதலும் என்றும் தொடர்ந்து வளரட்டும். உங்கள் 35வது திருமணநாளில் எங்கள் இதயங்களின் இனிய வாழ்த்துக்கள்...!! 🙌

  17. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து.

  18. யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும் இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும் பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு, " இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும் புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.

  19. நத்தார் தின வாழ்த்துக்கள். யாழ் கள உறவுகள், யஸ்டின் , தமிழினி கண்மணி அக்கா , மற்றும் ஏனையோருக்கும் கிறீஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்.

  20. ஓய்வு பெற்றாலும் உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்று எங்கள் மதுரை மைந்தன் வன்னியருக்கு மேலும் ஒருவருடம் பதவி நீடிப்புச் செய்து வாழ்த்தி மகிழ்ந்துள்ளது அமீரகம். நாங்களும் வாழ்த்துவோம்.🙌

  21. தமிழினத்தின் அடையாளம். எப்பவும்... எம் நெஞ்சங்களில், வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ❤️

  22. ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏 உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

  23. ஈழப்பிரியனின்... குடும்பத்தில், புரட்டாசி 13 இல் பிறந்த... நான்காவது பேரப் பிள்ளைக்கு, எமது உளம் கனிந்த... வாழ்த்துக்கள். ❤️

  24. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.🦁 எனவே யாழ்கள அப்பன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.🌻

    • 10 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.