நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஜவ்வரிசி - கால் கப் / சவ்வரிசி பால் - 1 கப் - 1 1/2 கப் நீர் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தேவைக்கு பாதாம், பிஸ்தா (விரும்பினால்) நெய் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் ஏலக்காய் தூள் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும். இத்…
-
- 6 replies
- 5.6k views
-
-
இந்த வல்லாரை கீரை கண்டால் நான் கடைக்கு உள்ள போயு எல்லா கீரையும் வாங்கி விடுவன்.. ஏன் தெரியுமா உறவுகளே வல்லாரை வெள்ளி கிழமையில் மரக்கறியுடனோ இல்லை ஒரு சாம்பருடன் சாப்பிட்டால் நல்ல சுவையா இருக்கும்.. என்ன கொடுமை என்றால் நான் வல்லாரை கேட்டு வீட்டில் எல்லாரயும் தொல்லை பண்ணுவன்.. ஒரு நாள் என் அம்மா 5கட் வல்லாரை கொண்டு வந்து பண்ணி வைத்து விட்டு இதுதான் உனக்கு இன்று சாப்பாடு என்று சொல்லி விட்டார்கள்.. வல்லாரைக்கு தேவையானது சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு தேசிக்காய் புளி வல்லாரை நன்று கழுவி எவ்வளவு சின்னதான் கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதான் கட் பண்ணி அதே ஒரு பாத்திரத்தில் வயுங்கள் .. அது போலதான் சின்ன வெங…
-
- 5 replies
- 5.6k views
-
-
இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன. இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை பார்த்துவிடுவது என ஆரம்பித்தது, என்ன நடந்தது என்பதை பார்ப்போமா! தேவையான பொருட்கள்: கச்சான் - 1 கப் சீனி - 1 1/2 கப் பால் - 1 1/2 கப் தட்டிற்கு போடுவதற்கு கொஞ்சமா நெய் செய்முறை: 1. பச்சை கச்சானை வறுத்து தோலுறித்தி எடுத்து கொள்ளனும். 2. பாலில் கச்சானை 2 மணித்தியாலங்களுக்கு ஊற வைக்க வேணும். 3.…
-
- 11 replies
- 5.6k views
-
-
உருளைக் கிழங்கு – 1/2 கிலோ வெங்காயம் (பெரியது) – 4 பச்சைப் பட்டாணி – 100 கிராம் (விரும்பினால்) பச்சை மிளகாய் – 6 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 4 பல் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லித் தழை – சிறிது தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை: உருளைக் கிழங்கை வேகவைத்து, உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாகவும் பச்சை மிளகாயை குறுக்கே நீளவாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக, ஆனால் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கட…
-
- 1 reply
- 5.6k views
-
-
மட்டன் 1/2 கிலோ தனியா பொடி மிளகுப் பொடி மஞ்சள் பொடி தயிர் 1 கப் முந்திரி 150 கிராம் மல்லி இலை 1 கட்டு வெஙகாயம் 1 உப்பு இஞ்சி.பூண்டு விழுது ஜீரகப் பொடி மட்டன்,உப்பு,தயிர்,இஞ்சி.பூண்
-
- 16 replies
- 5.6k views
-
-
பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது: 3 முட்டை 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தே.க மிளகுத்தூள் 1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது உப்பு தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை] செய்ய வேண்டியது: 1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே ச…
-
- 27 replies
- 5.6k views
-
-
இதன் செய்முறையை இதற்கு முன் யாரும் இணைத்தார்களோ தெரியவில்லை...என்டாலும் எனது முறையில் ஆன மரக்கறி கட்லட் இதோ... செய்ய தேவையான பொருட்கள்; கரட் 2 வெங்காயம் 3 உருளைக்கிழ்ங்கு 2 கருவேப்பிலை தேவையான அளவு மிளகுத்தூள் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் கடலைப் பருப்பு 1/4 கீரைக்கட்டு 1 உப்பு தேவைக்கேற்ப பச்சை மிளகாய் 3 சோளமாவு கைப்பிடி அளவு மிளகாய்த்தூள் விரும்பினால் இனி செய்முறையைப் பார்ப்போம்; கடலைப் பருப்பையும்,மரக்கறியினையும் சிறுதளவு அளவான தண்ணீர் விட்டு அவிக்கவும்.[அதிகளவு தண்ணீரை விட்டு விட்டு தேவையில்லாமல் மிகுதி தண்ணீரை ஊற்றக் கூடாது சத்துப் போய் விடும்] மரக்கறியினை தோலை நீக்கி விட்டு சிறிதாக வெட்டிப் போட்டு அவித்தால் இலகு... மரக்கற…
-
- 10 replies
- 5.5k views
-
-
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சை அரிசி 1/2 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் 2 பச்சைமிளகாய் 4 இஞ்சி 1 துண்டு உப்பு, நல்லெண்ணை தேவையானது தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து செய்முறை: புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும். ---- குழிப்ப…
-
- 10 replies
- 5.5k views
-
-
முடக்கத்தான் இலை ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு 25 கிராம் முடக்கத்தான் இலை - கிள்ளியது 2 கைப்பிடி புளி அல்லது தேசிக்காய் - தேசிக்காய் - 1 (அல்லது) புளி கோலி உருண்டை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 டீஸ்பூன் தக்காளி- நாட்டு தக்காளி - 1 (பெங்களூர் தக்காளியாகின் 2) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். முடக்கத்தான் இலை எடுத்துத் தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பிறகு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளி எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், தக்காளி இவைகளைப் போட்டுத் தண்ணீர் விட…
-
- 6 replies
- 5.5k views
-
-
போர் காலத்தில் , பொருளாதார தடைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அனுபவம் இருக்கலாம். பொருளாதார தடைக்குள் உருளை கிழங்கு கிடைக்காத பொது, உள்ளூர் பயிர் செய்கையில் கிடைப்பதும் பங்குனி சித்திரையுடன் முடிந்துவிடும். ஏனைய காலத்தில் உருளை கிழங்கை பாவித்து செய்த ரோல்ஸ் , பற்றிஸ் போன்றவருக்கு மரவள்ளி கிழங்கு , வாழை காய் என்பவை பயன்படுத்த பட்டன. சில உணவகங்களில் கூட வாழை காய் ரோல்ஸ்களை சாப்பிட்டு இருக்கிறேன். யாருக்காவது அந்த அனுபவம் ? பொருளாதார தடை காலத்தில் எனது பிறந்த நாள் ஒன்றுக்கு என்னுடைய வீட்டில் மரவள்ளி கிழங்கில் பற்றிஸ் செய்து தந்தார்கள். கடந்த வாரம் இங்குள்ள தென் கிழக்காசிய கடை ஒன்றுக்கு வல்லாரை வங்க சென்ற பொது எங்களூர் வாழைக்காய் இருந்தது . வாங்கி வந்து வாழைக்காய் பற்றிஸ்…
-
- 9 replies
- 5.5k views
-
-
சிக்கன் ப்ரைடு ரைஸ் chicken fried rice தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி: ஒரு கப் நறுக்கிய கோழி இறைச்சி: அரை கப் கேரட்: 1 முட்டைகோஸ்: சிறிதளவு வெங்காயத்தாள்: சிறிதளவு இஞ்சி விழுது: ஒரு தேக்கரண்டி முட்டை: 1 குடை மிளகாய்: கால் கப் பெரிய வெங்காயம்: 1 பூண்டு விழுது: ஒரு தேக்கரண்டி சோயா சாஸ்: ஒரு தேக்கரண்டி சில்லி சாஸ்: ஒரு தேக்கரண்டி உப்பு: தேவையான அளவு செய்முறை: பாசுமதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். கோழி இறைச்சியை எலும்புகள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் …
-
- 12 replies
- 5.5k views
-
-
புளியோதரை என்ற புளிசோறு.. தேவையான பொருட்கள். புளி - இரண்டு கோலி உருண்டை பெருங்காயம் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி- தேவையான அளவு வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது) சீரகம் - 1 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் (தேவையானால் வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம்..) உளுந்தபருப்பு - 1 ஸ்பூன் எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: அன்றனறு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொஞ்சம் மீந்துவிடும் அல்லவா அதற்கான வழிமுறைகளை தொகுத்து தரலாம் என உத்தேசித்துள்ளேன் போக இந்த தோழர் சோத்துவத்தல் பற்றி தனியே பதிவு பதிவு செய்யபடும்.. இங்கிட்டு புளியோதரைக்கு வருவம்.. முதலி…
-
- 3 replies
- 5.4k views
-
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான். ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளி (பூண்டு) - 1 கப் (தோலுரித்தது) எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ…
-
- 9 replies
- 5.4k views
-
-
கரட் கேக் தேவையான பொருட்கள் துருவிய கரட் 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு 200 கிராம் சீனி 180 கிராம் மா 50 கிராம் அரை சின்ன கரண்டி பேக்கிங் பவுடர் 2 சின்ன கரண்டி கறுவா பவுடர் 3 பெரிய முட்டை ஐசிங்சுகர் அலங்கரிக்க செய்முறை முதலில் முட்டை சீனி இரண்டையும் கலக்கவும் பின்மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் பின் துருவிய கரட் பாதாம் பருப்பு கறுவா பவுடர் என்பவற்றை சேர்க்கவும். அதன் பின் 20 நிமிடம் வெதுப்பியில் வெதுப்பவும். ஆறியதும் ஐசிங் சுகர் தூவி பிமாறவும் மிக மிக சுவையான இனிப்புப் பண்டம் (இனிப்பான பண்டங்களை இடை இடை உண்டு எங்கள் வார்த்தைகளை இனிமையானவை ஆக்குவோம்!!!!!!) சர்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாய் சாப்பிடுங்கோ.....!!!!!
-
- 16 replies
- 5.4k views
-
-
வேப்பம் பூ வடகம் இதுவரை செய்து பார்க்கவில்லை, இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு கன்று வளர்த்துவிட்டேன். பூ பூக்க தொடங்கிவிட்டது, செய்முறை தேடி பார்த்தபோது கிடைத்த து, உங்களுக்கு பாவற்றகாய், ..இப்படி ஏதாவதில் செய்யும் முறை இருந்தால் தரவும் யாழ்ப்பாண மக்களின் உணவு வகைகளில் வேம்புக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவாக இலையுதிர் காலத்தில் வேம்பின் இலைகள் முற்றாக உதிர்ந்துவிடும். இலை தளிர் காலத்தில் சிறிய சிறிய புதிய வேப்பம் இலைகளோடு கொஞ்சம்.. கொஞ்சமாக வேம்பம் பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது வேப்ப மரங்களைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். வேப்பங் காற்று உடலுக்கும் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மருத்துவ ரீதியாக சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது என தற்கா…
-
- 11 replies
- 5.4k views
-
-
தோசை, வெங்காயச் சட்டினி,பருப்புக்கீரை செய்முறை காணொளியில்
-
- 11 replies
- 5.4k views
-
-
மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) தேவையான பொருட்கள்: செய்முறை: * சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும். * பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும். * அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி..) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும். * சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும். * சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும…
-
- 56 replies
- 5.4k views
-
-
வெஜிடபிள் புரோட்டா குருமா தேவையானப் பொருட்கள் காரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பச்சைப்பட்டாணி - 100 கிராம் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 பெரியது தக்காளி - ஒன்று நறுக்கியது கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - ஒரு மூடி கிராம்பு - 2 பட்டை - சிறிதளவு மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை * காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். * துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும். …
-
- 0 replies
- 5.4k views
-
-
குமுட்டில் அல்லது குமிட்டில் கீரை என்பது பொதுவாக பயிர்செய்கை மூலம் பெறப்படுவதில்லை. மாரி காலத்தில் வெற்று காணிகளில் தானே விதை பரப்பி முளைத்து வரும். காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து நிற்கும் கீரை செடிகளை தேடி தேடி பிடுங்க வேண்டும். விதைகளை சேர்த்து சேமித்து வைத்து பயிரிட்டால் மற்றைய கீரை போல் பயன் பெறலாம் என நினைக்கிறன். ஆனால் பெரிதாக விவசாயிகள் முயற்சிப்பதில்லை. எனக்கு கீரை சம்பல் வகைகள் என்றால் நல்ல விருப்பம். குமிட்டில் கீரையை இரண்டு முறைகளில் சமைக்கலாம். 1. பாரம்பரிய முறைப்படி அகப்பை மூலம் மசிப்பது 2. நவீன முறையில், கிரைண்டரில் போட்டு அரைப்பது. தேவையான் பொருட்கள் 1. குமிட்டில் கிரை பிடி --- …
-
- 15 replies
- 5.3k views
-
-
கிராமத்து மீன் குழம்பு கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - 1 (நறுக்க…
-
- 10 replies
- 5.3k views
-
-
-
பனீர் பட்டர் மசாலா தேவையான பொருட்கள்: பனீர் - கால் கிலோ பச்சை பட்டாணி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 2 விழுது பூண்டு - 2 விழுது சீரகம் - அரை தேக்கரண்டி மல்லித்தழை - கால் கட்டு வெண்ணெய் - 100 கிராம் எண்ணெய் - ஒரு குழி கரண்டி மல்லி தூள் - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 100 கிராம் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும…
-
- 11 replies
- 5.3k views
-
-
வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…
-
- 12 replies
- 5.3k views
-
-
முட்டை பொரியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான். :P
-
- 11 replies
- 5.3k views
-
-
வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.
-
- 9 replies
- 5.3k views
-