நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இது காரமும் இனிப்பும் கலந்த சிற்றுண்டி. பனங்கிழங்கு கிடைக்கும் காலங்களில் வீட்டில் செய்வார்கள். தேவையான பொருட்கள். 1. அவித்த பனங்கிழங்கு -- 4 2. செத்தல் மிளகாய் - 2 (நடுத்தரம்) 3. மிளகு - 8-10 4. தேங்காய் பூ - 1/2 கப் (125 மி. லி. அளவு கரண்டி) 5. உப்பு - சுவைக்கு ஏற்ப 6. சீனி/சர்க்கரை - 2 மேசை கரண்டி/ சுவைக்கு ஏற்ப. 7. உள்ளி - ஒரு பல்லு, (நடுத்தரம்) செய்முறை 1. அவித்த பனங்கிழங்கை குந்து எடுத்து/ வார்ந்து , சிறிய துண்டுகளாக முறித்து/ வெட்டி கொள்ளவும். சிறிய உரலில் இடிப்பதாயின் 2. செத்தல் மிளகாய், உப்பு, மிளகு என்பவற்றை உரலில் போட்டு நன்கு பொடியாக்கவும். 3. உள்ளியை சேர்த்து இடிக்கவும். 4. முறித்து வைத்த கிழங்கை பகுத…
-
- 23 replies
- 5.1k views
-
-
தேவையான பொருட்கள் கோதுமை – 1 கப் மெல்லிய ரவை – 1/2 கப் எண்ணெய் – 1/4 தேக்கரண்டி உப்பு – 1/2 தேக்கரண்டி மசாலா செய்வதற்கு உருளைக்கிழங்கு – 1/4 கிலோ வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 3 மேசைக்கரண்டி மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 தேக்கரண்டி இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி எண்ணெய் – பொரிப்பதற்கு உப்பு – தேவையான அளவு மைதா பசை செய்வதற்கு தண்ணீர் – 2 பங்கு மைதா – 3 பங்கு செய்முறை கோதுமை, ரவை, எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் ச…
-
- 23 replies
- 3.9k views
-
-
ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்! நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்! உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி! கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும். மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(க…
-
- 23 replies
- 25k views
-
-
-
- 22 replies
- 3.1k views
-
-
தேவையான பொருட்கள் உருண்டை செய்ய சிந்தாமணி கடலை - 1/2 கப் கடலை பருப்பு - 1 /4 கப் சிவப்பு வெங்காயம் - 1 /2 பெருஞ்சீரகம் - சிறிதளவு உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்க கறிக்கு சிவப்பு வெங்காயம் - 1 - 1 /2 பச்சை மிளகாய் - 2 தக்காளி பழம் - 1 சிறியது தேங்காய் பால் / 2 % பால் - 1 கப் கறி துள் - சுவைக்கு ஏற்ப கடுகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 நெட்டு உள்ளி - 1 - 2 பல்லு இஞ்சி - சிறிதளவு பழப்புளி - சுவைக்கு ஏற்ப உப்பு - சுவைக்கு ஏற்ப எண்ணெய் - தாளிக்க செய்முறை உருண்டை - சிந்தாமணி கடலை, கடலை பருப்பு இரண்டையும் 6 - 8 மணி நேரம் ஊற வைத்து கடலை வடைக்கு அ…
-
- 22 replies
- 5k views
-
-
மரக்கறி சூப் (Vegetable soup) தேவையானவை கரட்-500 கிராம் போஞ்சி-500 கிராம் உருளைக்கிழங்கு-500 கிராம் தக்காளி-500 கிராம் பீட்ரூட்-500 கிராம் கோவா-200 கிராம் வெங்காயம்-100 கிராம் பச்சைமிளகாய்-100 கிராம் பூண்டு-10 பல்லு இஞ்சி-1 சிறிய துண்டு மிளகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எண்ணையில் வதக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். பின் அதனை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் கலந்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும். இது எல்லோருக்கும் நல்லது. (குறிப்பாக நோ…
-
- 22 replies
- 10.7k views
-
-
கடந்த வாரம் சீன உணவகம் ஒன்றில் சாப்பிட்ட இவ் சாப்பாடு நன்றாக இருந்தமையால் அதனை வீட்டில் செய்து பார்த்தேன். செய்முறையின் அடிப்படையை இணையத்தில் வாசித்த பின் எனக்கேற்ற மாதிரி மாற்றியுள்ளேன் தேவையானவை: 1. கொஞ்சம் அளவில் பெரிய இறால் 1 இறாத்தல் 2. உள்ளி 5 பற்கள் 3. சோயா சோர்ஸ் (Soya sauce) 1.5 மேசைக் கரண்டி 4. உறைப்பு Chili Sauce 1.5 மே.க 5. சீன அரிசி வைன் (Chinese rice wine): 2 மே.க 6. சீன நல்லெண்ணெய் (Chinese sesame oil)- 1. மே.க 7. ஒலிவ் எண்ணெய் 1. மே.க 8. Non fat சோளம் எண்ணெய் 9. சீனி 1. மே.க செய்முறை: 1. இறாலை தோல் உரித்து, கழுவி வைத்துக் கொள்ளவும் 2. உள்ளியை இடிச்சு பசை மாவாக (Garlic Paste) ஆக்கவும் …
-
- 22 replies
- 4.6k views
-
-
-
- 22 replies
- 3.3k views
-
-
பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பின்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்துடன் ஆரம்பிக்கலாமே என நினைத்து கீரையுடன் ஆரம்பிக்கின்றேன். தேவையானவை: 1 பிடி கீரை 1/2 கப் நறுக்கிய வெங்காயம் 2-3 நறுக்கிய பச்சை மிளகாய் 1 தேக்கரண்டி பெரும்சீரகம் 4-5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் தேவைக்கேற்ப உப்பு செய்முறை: 1. கீரையை நன்றாக நீரில் அலசி, மண் இல்லாது எடுத்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். ( சோம்பல் காரணமாக சரியாக நீரில் அலசாமல் விட்டால், அன்று "மண் கீரை கடையல்" தான் கிடைக்கும். ) 2. ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி வேகை வையுங்கள். 3. அதில் பெரும்சீரகம், வெங்காய…
-
- 22 replies
- 8.5k views
-
-
கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம் முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம். தோல் நீக்கிய கோழி 500 கிராம் மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்) இஞ்சி : 1 பெரிய துண்டு மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் : 1 வெண்ணெய் : 100 கிராம் உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும் எலுமிச்சம…
-
- 22 replies
- 7.8k views
-
-
தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 2 கப்முட்டை - 3உப்பு - தேவையான அளவுவெங்காயம் - 1பூண்டு - 4 பல்எண்ணெய் - தேவையான அளவுகடுகு - சிறிதளவுஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டிகடலை பருப்பு - அரை தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 3செய்முறை:முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்தது வதக்கி பின் பூண்டு தட்டி போடவும். பின் அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கீரை நன்கு வெந்த நிலையில் தயாராக வைத்துள்ள முட்டையை ஊற்றி, மிதமான அனலில் வேகவிடவும். http://tamil.webdunia.com/article/vegetarian…
-
- 22 replies
- 7.2k views
-
-
. மொறு மொறுப்பான உழுந்து தோசை. தேவையான பொருட்கள். இரண்டு சுண்டு உழுந்து. இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி. இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம். இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம். ஆறு கெட்டு கருவேப்பிலை. வெண்ணெய் (Butter அல்லது Margarine) ஆறு செத்தல் மிளகாய் சிறிது உப்பு கொஞ்சம் மஞ்சள் தூள். அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட் செய்முறை. உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும். அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும். புளி…
-
- 22 replies
- 16.5k views
-
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-
-
பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…
-
- 22 replies
- 8.8k views
-
-
காரமான மசாலா மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் - 250 கிராம் (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 3 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 6 பற்கள் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பி…
-
- 22 replies
- 6k views
-
-
பொரி அரிசி மா பொரி அரிசி மா எண்டா பொதுவா எல்லாருக்கும் என்ன எண்டு தெரியும் என நினைக்கிறன். ஊரிலை இருக்கேக்கை பொரி அரிசி மா பொதுவா 4 மணி தேத்தண்ணியோட சாப்பிடுற சிற்றுண்டி. சில நேரம் வீட்டிலை பெரும்பாலான ஆக்கள் விரதம் பிடிக்கினம், எண்டால் விரதம் பிடிக்காத ஆக்களுக்கு காலை உணவாகவும் இதை சாப்பிடுவினம். சின்னனிலை எனக்கு பொரி அரிசி மா சாப்பிட நல்ல விருப்பம். புலம் பெயர்ந்தாப்பிறகு பொரி அரிசி மா சாப்பிடுறக்கு வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லாமல் போட்டிது எண்டே சொல்லலாம். எல்லா வகையான மாக்களையும் அரைச்சு விக்கிற தமிழ் வியாபார நிறுவனங்கள் ஏன் இன்னும் பொரி அரிசி மா பக்காம் போகேல்லை எண்டு தெரியேல்லை. புலம் பெயர்ந்த கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் எண்டு நி…
-
- 22 replies
- 6.4k views
-
-
மட்டி - 1/4 கிலோ வெங்காயம் - பாதி கத்தரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மசாலாதூள் - 3 தேகரண்டி மஞ்சள் தூள் - சிறிது கருவேப்பிலை - சிறிது கருவா - ஒரு துண்டு ஏலம் - 1 பூண்டு - 3பல் தோல் (உரிக்காதது) தேங்காய்பால் - 2 மேசைக்கரண்டி தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு முதலில் மட்டியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் தன்னாலயே வாய் பிளந்துவிடும் பின் அதன் உள்ளே இருக்கும் கறியை மட்டும் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வரட்டிவைக்கவும். வெங்காயம்(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்),கத்தரிக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும். பூண்டு,கருவா,ஏலம் இவற்றை சேர்த்த…
-
- 21 replies
- 8.7k views
-
-
https://youtu.be/VjSkWAEPVyI
-
- 21 replies
- 2.9k views
-
-
ஜ... மாம்பழம் அல்வா செய்து பாருங்கள் மாம்பழமே அதிக ருசியானதுதான். அதனை அல்வா செய்து சாப்பிட்டால்... என்ன சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுகிறதா... செய்து பாருங்கள். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை பழுத்த சுவையான மாம்பழம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏலக்காய் - 2 நெய் - 1 தேக்கரண்டி செய்யும் முறை மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும். ஏ…
-
- 21 replies
- 5k views
-
-
கொத்துரொட்டி கறி கொத்துரொட்டிக்கு வைக்கிற கறி வித்தியாசமாக இருக்குமே. அது எப்படி சமைப்பார்கள்??
-
- 21 replies
- 5.6k views
-
-
யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா? *** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
- 21 replies
- 14.5k views
-
-
-
-
- 21 replies
- 2.4k views
-
-
இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று. 12 பேருக்கு பரிமாற.... தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள் சமையல் நேரம்: 10 நிமிடங்கள் தேவையான பொருட்கள்.... தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள். 1/4 தேக்கரண்டித் தேன் 3 தேக்கரண்டி உருகிய பட்டர் 1 தேக்கரண்டி Hot pepper sauce சுவைக்கேற்றளவு உப்பு தயாரிக்கும் முறை.... அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். மறுநாட்காலை அதை எடுத்து Grill இல…
-
- 21 replies
- 5.2k views
-
-
கணவாய் மீன் வருவல் ‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம் ‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது. கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே …
-
- 21 replies
- 15.8k views
-