கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
காலத்தால் கைவிடப்பட்டவனை வரலாறு எங்கே வாழவைக்கப் போகிறது.....? 2வாரங்கள் முன்னொரு ஞாயிற்றுக்கிழமை விடிய அவனது தொலைபேசிதான் அவளை நித்திரையால் எழுப்பியது. அக்கா நான் *** கதைக்கிறன். ஏனக்கு ஒரு உதவி வேணும் அதான் எடுத்தனான்.....ஸ்கைப் வருவியளோ கதைக்க......? அத்தோடு தொடர்பறுந்தது. ஆசிய நாடுகளுக்குள்ளே ஐக்கியநாடுகள் சபையில் அகதி அந்தஸ்த்திற்கு பதிந்துவிட்டு சிறைகளில் இருக்கிற பலர் இப்படித்தான் வந்திருக்கிறார்கள். ஒன்றில் சிறையிருக்கும் நாடுகளில் தமக்கான உதவிகோரல் அல்லது இலங்கை போகிறோம் உதவியென்றே பல அழைப்புகள் வந்திருக்கிறது. அப்படியான ஒன்றாயே இவனது அழைப்பையும் நினைத்தாள். ஸ்கைப் போனாலும் ஓயாத தொடர்புகள் வந்து நிறைந்து விடுவதால் அவனை மறந்து போயிருந்தாள். நேற்று ஸ்கை…
-
- 15 replies
- 2.9k views
-
-
அனலுக்குமேல் - ஜெயமோகன் ஃப்ரேசரின் ஓவியம். [ 1 ] பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என அது எழுந்து நின்றது. அதைசூழ்ந்து கடல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நீராவி எழுந்து அதன்மேல் வெள்ளிமுடி போல நின்றிருந்தது. பின்னர் குளிர்ந்த லாவாவே அந்த பிளவை மூடியது. அந்தக் கண் மூடிக்கொண்டு துயிலில் ஆழ்ந்தது. அந்த கொப்பளித்த லாவாவின்மேல் நீராவி மழையெனப் பொழிந்து கொண்டே இருந்தது. குளிர்ந்து குளிர்ந்து அது கரியமண்ணாகியது. அதை நாடி பறவைகள் வந்தன. அவை விதைகளையும் சிற்றுயிர்களையும் அங்கே பரப்பின. காடு எழுந்தது. பூச்சிகளும் பறவைக…
-
- 1 reply
- 2.1k views
-
-
.கவலை இல்லாத மனிதன் ........... வாழ்கையிலே கவலை இல்லாத மனிதனை காட்ட அழைத்து செல்கிறேன். அவர் எண்பத்து மூன்று வயது வரை வாழ்ந்தது இது தான் காரணமோ ? வாசித்து பாருங்கள் . . .........இவர் ந்ம்ம பக்கத்து வீடு . அதனால் இன்னும் மறக்க முடியவில்லை ...........செல்லத்தம்பிக்கு வாய்த்த மனைவி குணமணி ........பெயருக்கேற்ற குணமான மணி தான் ,சரி ந்ம்ம கதைக்கு வருவோம் .செல்ல தம்பியர் தலை நகரிலே ஒரு வீதி கண்காணிப்பு கந்தொரிலெ வேலை பார்த்தார் மூன்று மாதமொரு முறை தன் வீடுக்கு வருவார். அழகிய அமைதியான சிறு ஊர் . .நாடு இரவில் யாழ் பட பஸ் மூலம் வீட்டு வாயில் கேற் கொழுவி சத்தம் கேட்டும் . நாய் குரைத்து பின் நட்பாக ஒலி எழுப்பும் , கிணற்றடியில் முகம் கழுவி காறித்துப்பி சத்தம்…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும்…
-
- 25 replies
- 2.4k views
-
-
பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார். தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ? சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏல…
-
- 12 replies
- 3.5k views
-
-
கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…
-
- 0 replies
- 2.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பால் ``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி! - நெய்வேலி தேன்ராஜா படிந்த பேரம் நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது! - அஜித் ஸ்டார்நைட் ``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்! - பெ.பாண்டியன் முள் ``கால்ல சின்னதா ஒரு முள்ளு கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
பெட்டை "லொள் லொள் லொள்'' அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்து, கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான். வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வை கறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..! சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து, அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும். சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வ…
-
- 0 replies
- 911 views
-
-
இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:- முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். முன்னுரை நான் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் 2006ம் ஆண்டு காயமடைந்து இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளி. எனது வயது25. 2009யுத்தம் முடிந்து நான் சரணடைந்து பல இன்னல்கள் நடுவில் இன்று உயிர்வாழ்கிறேன். தடுப்பிலிருந்து வெளி வந்த பின்னர் நான் தனிமைக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது பல நிஐங்களின் நினைவுகள் என்னுள் நிழலாடி என்னைத் துயரங்களால் சுற்றிக் கொண்டது. என்னை நான் அழிக்கும் நிலையிலும் இருந்தேன். எனக்காக அக்கறைப்பட்டு எனது சோகங்களைக் கேட்க யாருமில்லாத அந்த நாட்க…
-
- 142 replies
- 22.9k views
- 1 follower
-
-
கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்! ஜீ. உமாஜி pro Created: 27 November 2016 செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்ச…
-
- 0 replies
- 956 views
-
-
இந்நாவலின் வாசிப்பின்போத ு வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. தரவிறக்கம் செய்ய: http://books.sharedaa.com/2008/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-karuvachi-kaviyam.html நன்றி
-
- 0 replies
- 2.1k views
-
-
த.ஈ.வே.வெ.வெ........ இந்த வார ஒரு பேப்பரிற்காய் எனது அனுபவ தொடரின் ஒரு நினைவு என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு. எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வழைமையாக பூசை முடிந்ததும் பஞ்சாட்சரம் என்று ஒருவர்தான் சுண்டல் புக்கை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியபிரசாதங்களை கொடுப்பார் கோயில் பூசை முடிந்து அய்யர் விபூதி சந்தணம் கொடுத்து விட்டு பே…
-
- 12 replies
- 2.3k views
-
-
நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கரங்களிலிருந்து என்னை மீட்டு மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றவர். தன்னால் முடிந்தவரையில் எனக்கு உணவும், உறையுளும், கல்வியும் தந்தவர். அன்னைக்கு அடுத்த தானத்தில் இருப்பவர். என்மேல் உண்மையான அக்கறை கொண்டவர். ஆகவே, அவரது உடல்நிலை ஓரளவிற்கேனும் நல்லநிலையில் இருக்கும்போது பார்த்துவிட்டு வரலாம் என்கிற எண்ணத்தில், அதுவரை எனது 16 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்தைக் கலைந்து சென்று வந்தேன். அந்தப் பயணம் பற்றி அதிகம் கூற எதுவும் என்னிடத்தில் இல்லை. சித்தியை ஊர்காவற்றுறையில் இருந்து அவர் இருந்த…
-
-
- 82 replies
- 10.3k views
- 3 followers
-
-
"காலம் மாறும் கவலைகள் தீரும்?" 'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது! அவன் அப…
-
- 0 replies
- 429 views
-
-
வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப…
-
- 3 replies
- 938 views
-
-
குளித்து விட்டு வந்துநின்ற அஞ்சலியை ‘டச்’ பண்ண மறுப்பு நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் kanaga.raj132@gmail.com . வாழைப்பழமுனு சொன்னதுக்கு பிறகுதான் ஞாபகத்துக்கு வருது, நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நியூசிலாந்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஒக்லான்ட் மிருகக்சாட்சிசாலைக்கும் விஜயம் செய்வதற்கு மறந்துவிடவில்லை. பிரதமருக்கு முன்பாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். பிரதமர் தலைமையிலான குழுவினர் ஒரு வாயிலூடாகவும் நாங்கள் மற்றுமொரு வாயிலிலூடாகவும் செல்லவேண்டியதாயிற்று. குறுக்கு வழியில், நாங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தபோது, நான், ஒரங்குட்டானைக் கண்டேன். ஒரங்குட்டானை கண்டதும், ச…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…
-
- 0 replies
- 579 views
-
-
ஒரு நிமிடக் கதை: மன்னிப்பு “இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன். ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவற…
-
- 0 replies
- 2k views
-
-
அத்தை மகளே ...போய் வரவா ? மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............ கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கு…
-
- 12 replies
- 3.9k views
-
-
மலரும் நினைவுகள்.. கதை - இளங்கவி... பகுதி 1 சயிக்கிள் மணிச் சத்தத்தில் அட இவன் வந்திட்டான்.... என்று தனக்குள் பேசிக்கொண்டு அம்மாவுடன் எரிஞ்சு விழுந்தான் ரவி.....' உனக்கு நேற்றே சொன்னனான் இண்டைக்கு காசு வேனும் முதல் முதல் வகுப்பு அந்த மனுசன் காசில் சரியான கறார் என்று சொல்லுறாங்கள் நீ நேற்றெ வாங்கி வைத்திருக்கலாம் தானே... ஏன் செய்யவில்லையென்று தாயைப் பேசிவிட்டு...' சரி அடுத்த வகுப்புக்கு காசு இல்லாட்டி நான் போக மாட்டன் பிறகு இங்கிலீஸில் ஓ லெவெல் ஃபெயிலென்றால் என்னைப் பேசவேண்டாம் சரியா...'' என்று விட்டு போட்டுவாறன் அம்மா.... என்றுவிட்டு வாசலை நோக்கி ஓடினான் ரவி..... நேரம் போட்டுது கெதியென்று ஏறு என்ற ரவியின் சினேகிதன் சந்திரன் ஒரே சயிக்கிளில் ரவி பெடல் போட்ட…
-
- 4 replies
- 810 views
-
-
தேவிச்சித்ரா சொன்ன பதில்... தேவிச்சித்ரா தன் அறையில் ஆளுயரத்திற்கு இருந்த கண்ணாடி முன்பாக நின்று தன்னையே அதில் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். சென்ற வருடத்தைக் காட்டிலும் சோபை இழந்து விட்ட முகமாக தன் முகவடிவு மாறியிருப்பதைக் கண்டாள். ஐயம்பாளையம் கிராமத்தில் நூற்றி ஐம்பது வீடுகள் இருக்கின்றன. தேவிச்சித்ராவின் வீடு ஊரின் கிழக்குக் கடைசியில் காட்டுக்குள் நின்றிருந்தது. இவளின் சித்தப்பா ஊருக்குள் மெத்தை வீடு கட்டிக்கொண்டு போய் ஐந்தாறு வருடங்களாயிற்று. இங்கிருந்து அவர் அண்ணனோடு பாகம் பிரித்துக் கொண்டு சென்ற நாளில் இருந்தே அவர் குடும்பம் மகிழ்ச்சியாய் இருப்பதை ஊரே பேசிக்கொண்டு தானிருக்கிறது, இன்றுவரை. மெத்தை வீடு கட்டி குடி புகுந்த ராசியோ என்னவோ, அவரின் இரண்டு…
-
- 0 replies
- 863 views
-
-
ஊனம் விடைபெற வேண்டும்! ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை. மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு. வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் சாலையில், நிமிர்ந்தும், சரிந்தும் ஓடிக் கொண்டிருந்தது. அது, சிவகுமாருக்கு எரிச்சலாகவும், அவனது மனைவிக்கும், மகனுக்கும் புது அனுபவமாகவும் இருந்தது. பரந்து விரிந்து கிடந்த பொட்டல் க…
-
- 0 replies
- 972 views
-
-
ஃபர்ஸ்ட் ரேங்க்- சிறுகதை சிறுகதை: மாதவன் ஓவியங்கள்: செந்தில் விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் போன்தான் அழைத்தது. எடுத்தார். ``யாரு?’’ ``எப்போ?’’ ``சரி இந்தா வரேன்.’’ போன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்” என்று பெருமூச்சு விட்டார். ``ஐயோ! எப்போ?’’ பதறினாள் அம்மா. ``காலைல மூணு மணிக்காம். வேட்டியை எடு, கிளம்பணும்.’’ வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாதக் குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் ஐயர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-