Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பர…

  2. அரிசி சோமசந்தரம் மாஸ்ரரின்ர இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்றால் கறுப்போ வெள்ளையோ துணியால முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஒராளைப் போட்டுத்தள்ள வேணும். இல்லையென்றால் இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்றால் கள்ளனுக்கு மரியாதையில்லை. இவன் கள்ளன் இல்லையென்றும் இல்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செலவுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட்டைக் கழற்றிப் போட்டிட்டு ஈசிச் சேரில படுத்து வயித்தைத் தடவிக் குடுத்துக் கொண்டிருப்பார். இவன் பொக்கற்றுக்குள்ளயிருந்து இருபதோ முப்பது ரூபா எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். இன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மா…

  3. ய்ய்யீஈஈஈ! - சிறுகதை ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி சிரித்துக்கொண்டிருந்த பாண்டியின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட அம்மா, கையிலிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தாள். வத்தலக்குண்டில் புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையிலிருந்து வந்திருந்த கடிதம் அது. பாண்டிக்குப் பொங்கலுக்கு டவுசர் சட்டை வாங்கிய போது ஒரு பரிசு கூப்பன் கொடுத்தார் கள். குலுக்கலில் தங்களது கூப்பனுக்கு கலர் டி.வி பரிசு விழுந்திருப்பதாகவும், வருகிற சனிக்கிழமை மாலை வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதில் எழுதியிருந்தது. அதற்குள் தெருவில் சேதி பரவியிருந்ததால், வந்து விசாரித்துப் போனார்கள். பரிசு விழுந்த கதையை வாய் ஓயாமல் எல்லோருக்கும் சொல்லிக் கொண் டிருந்தாள் மயிலத்தை. பாண்டி பிறந்தபோ…

  4. ரங்கராட்டினம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: செந்தில் அந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக. எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப…

    • 1 reply
    • 2.5k views
  5. Started by nedukkalapoovan,

    தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம். கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது. ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக... வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின …

  6. அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர…

    • 15 replies
    • 2.7k views
  7. முதலே சொல்லிட்டன் இது கதையில்லை. இதை எங்கை இணைப்பது என்று தெரியாதபடியால் கதைப்பகுதியில் இணைத்துள்ளேன். பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந…

  8. ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…

  9. Started by நவீனன்,

    ரத்னா! ''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா. ''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.'' ''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.'' ''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!'' உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியா…

    • 1 reply
    • 915 views
  10. இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள். அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா…

    • 16 replies
    • 3.6k views
  11. ரம்போ – ப.தெய்வீகன் EditorOctober 17, 2023 (1) தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம். ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவ…

  12. அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும் கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html

    • 6 replies
    • 2.1k views
  13. ரயிலில்… - ஜெயமோகன் ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று நிமிடம் மிச்சமிருக்கும். ஆனால் அத்தனை பேரும் பெட்டிகளும் மூட்டைகளும் வைத்திருப்பார்கள். சிலர் கைக்குழந்தைகள் இடுக்கியிருப்பார்கள் சின்னப்பிள்ளைகள் கிறீச்சிட்டு துள்ளிக்கொண்டிருக்கும். உள்ளிருந்து தேவையில்லாமல் இறங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட ஏறுபவர்களின் பதற்றமும், ஒவ்வொருவரும் முதலில் ஏறிவிடுவதற்காக முண்டியடிப்பதும் இரண்டு வாசல்களிலும் ஒரு சின்ன சுழிப்பை உருவாக்கும். மனிதர்களாலான ஒரு கார்க்கை வைத்து வாசலை அடைத்த…

  14. ராங் காலும் ரங்கமணியும் (டெலிபோன் மணி அடிக்கிறது) தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே… ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து) ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்) எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க (ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்) எதிர்முனை : நை நை தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்) தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உ…

  15. ராணி மஹால் - ஷோபாசக்தி அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. ‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பில…

    • 7 replies
    • 1.3k views
  16. Started by அபராஜிதன்,

    19th Sepதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள். சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்க…

  17. ராமசாமி .................வாரானா?................. அது ஒரு பள்ளிகூட பருவம் ....வீட்டிலிருந்து ....... ...பாடசாலை செல்ல மூன்று கிலோ மீட்டர் நடக்க வீண்டும் . நானும் எனது நண்பி கலைவாணி உம் சேர்ந்தே போவம் .. போகும் வழியில் ..வீதிகள் ...வீடுகளில் உள்ள மா மரத்தில் கண் போகும் ..ஒரு பணக்கார வீட்டில் ...நிறைய மா மரங்கள் வகைக்கு ஒன்றாக ..நட்டு ..காய்த்து... குலுங்கும் காலம் .. அவர்கள் வீட்டுக்கு ... காவலாக ஒரு வேலைக்காரன் .....ராமசாமி .. .சில சமயம் ..அவனை கண்டு கேட்டால் ..ஆளுக்கு ஒன்று பிடுங்கி தருவான். ..மத்தபடி ..கள்ள மாங்காய் ..தான் . ஒரு நாள் என் நண்பி துணிந்து மதிலால் பாய்ந்து ...நிலம் முட்ட ..இருந்த காய்களில் சிலதை பிடுங்கி கொண்டு இருக்கு…

    • 1 reply
    • 1.1k views
  18. ராமசாமி ஒருநாள் பல்வலி தாங்காமல் பல்லை பிடுங்க பல் டாக்டர்கிட்ட போனாரு... டாக்டர் சார் என் பல்லைப் பிடுங்கணும்னா எவ்வளவு ஆகும்" டாக்டர்: 1200 ரூபாய் ஆகும்.. ராமசாமி கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு பல் டாக்டர்கிட்ட "சார் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?" டாக்டரும் "ஒரே ஒரு வழி இருக்கு... மயக்க மருந்து இல்லாம வேணும்னா செய்யலாம். அதற்கு நீங்க 500 ரூபாய் கொடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும் பரவாயில்லையா?" " பரவாயில்லை டாக்டர் மயக்க மருந்து இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்று ராமசாமி சோகமாக கூற... பல் மருத்துவரும் அவரோட பல்லை பிடுங்கிய போது அவர் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் …

  19. கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றை மறுநாளே செய்ய வேண்டிய கட்டாயம். அந்த அறுவை சிகிச்சை சிக்கலானதும்கூட. தாயார்மீது பாசம் மிக்க அந்த சகோதரர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகிய முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீருடன் அறுவை சிகிக்சைக்கு அனுப்பினார்கள். அறுவை சிகிக்சைக் கூடத்துக்குள் ஸ்ட்ரெச்சர் நுழையும்போதே, பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனில், ரிங்டோன் ஒலித்தது…. “சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்கிற கந்த ச…

  20. ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…

  21. தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’ சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கி…

    • 1 reply
    • 1.4k views
  22. ருசி - சிறுகதை ஷங்கர்பாபு, ஓவியங்கள்: ஸ்யாம் “செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... அது உண்மையா?” என்றாள் மாலினி. இப்படிக் கேட்கும்போது அவள் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. வெட்கமோ தயக்கமோ கொண்டிருந்தாலும் அதைத் தப்பாகக் கருத இடமில்லை. காரணம், அவளுக்கு 43 வயது ஆகியிருந்தது; கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தன. மேலும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பெண்கள்... குறிப்பாக, செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்துவைத்துள்ளது என்று பொதுவாக நம்பப்படுவதாலும், அச்சம், மடம், பயிர்ப்பு வகையறாக்களுக்குள்தான் அவள் புழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாலும், அவள் வெட்கப்பட்டிருந்தால் அது சரியான காரணமாகவே கருதப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும்விட, கணவ…

  23. இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்ப…

  24. மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்! ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான். சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்ட…

  25. அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து…

    • 3 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.