கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர தொடக்கம் அது . அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான். சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில கொஞ்சநேரம் குந்தியிருந்தன். முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது. பந்தலுக்கு அருகில முன்வேலி. தென்னை ஒலையால பின்னி வரிசைக்கீறாய் அடைக்கப்பட்டிருந்தது.முன்வேலியில கிழுவையும் சீமையும் பூவருசுகளும் இடையிடையே முள்முருக்கை மரங்களும் பலம் சேர்த்தன.வேலியில எங்கட குடும்ப உழைப்பு சேகரிக்கப்பட்டிருந்தது. சில காகங்கள…
-
- 14 replies
- 1.1k views
-
-
எங்கே அந்த சொர்க்கம்? வற்றாத கடல், வாகான பாலம், வாசல் திண்ணை, வளைந்து கொடுக்கும் அப்பா, வாஞ்சையே வடிவான அம்மா, எளிய வாழ்க்கை, எதிர் வீட்டு மனிதர், அமைதியான தெரு, ஆலய மதில்கள், அறிவு புகட்டும் கலைக்கூடங்கள,; அலை உரசும் கடற்கரை, படகுச் சவாரி காலையில் கலகலக்கும் ஊர்ச்சந்தை, சோழகத்தில் சுழன்றாடும் பனைமரங்கள், பூமணத்தைச் சுமந்து வரும் தென்றல், விடலைகள் துள்ளி விளையாடும் கடற்கரை, குமரிகளின் கும்மாளச் சிரிப்பொலி, என்றென்றும் மனதை விட்டகலா மண்ணின் மணம் இவையனைத்தும் இன்று போரின் வடு சுமந்து, புன்னகையின் பொலிவிழந்து, வீதிகளில் வெறுமை படர்ந்து, நீர் வற்றிப்போன குளங்களை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல எங்கள் ஊரின் எழில் குலைந்த பின் எச்சங்களாக மிச்சமிருக்கும் ஒரு சிலர். இன்னும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1 டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர் மீதமிருக்கும் காதல்கள் கல்பனா ஒரு பக்திமான். முருகன்தான் அவளுடைய இஷ்ட தெய்வம். அந்த ஊரின் பிரபல முருகன் கோயில்களில் இவள் ஒரு முக்கியப் புள்ளி. அவள் வீட்டு பூஜை அறையே ஒரு மினி முருகன் கோயில் மாதிரிதான் இருக்கும். ஆனால், திடீரென்று அவளுடைய 20 வயது மகன் அன்பு, அருள் வந்து சாமி ஆடியதைப் பார்த்து அவளுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. அன்பு, ஆ... ஊ... என்று கத்தினான். ஏ... என்று எகிறினான். சில நிமிடங்கள் சிலை மாதிரி இருந்தான். அப்புறம் ஓ... என்று அழுதான். உடனே ஈ... என்று பல்லைக் காட்டி ஓவராய் சிரித்தான். கல்பனாவுக்கு இவனுடைய நடத்தை பயத்தைக் கிளப்பியது. சத்தம் கேட்டு வந்த அண்டை அயலார்…
-
- 19 replies
- 7.2k views
-
-
ஒவ்வொரு வருடமும் வெய்யில் அடிக்க தொடங்க தோட்டம் ,பேஸ்மன்ட்,கராஜ் இந்த மூன்றிலும் எப்படியும் ஒருக்கா கை வைத்தே தீர வேண்டும்.குளிர்காலத்தில் வேண்டாதவற்றை அள்ளி கட்டி கராஜுக்குள் தள்ளிவிட்டு பின்னர் வெயில் வர அதை ஒருக்கா போய் கிளறி சுத்தம் செய்வதே ஒவ்வொரு வருடமும் பெரிய வேலையாகி விட்டது.கடந்த ஞாயிறு நல்ல வெய்யில் அடிக்க மனுசியிட்ட நல்ல பெயர் எடுக்க அதிகாலையே எழும்பி கராஜில் கை வைத்துவிட்டேன். புல்லு வெட்டுறதை,சம்மர் டயர்களை,பார்பிக்கியு மெசினை வெளியில் எடுத்து சினோ வழிககிற மெசினை உள்ளுக்க தள்ளிகொண்டு நிற்கும் பொது மேல் தட்டில் (பரண்) கட்டி வைத்து வருடக்கணக்காக கிடக்கும்பெட்டிகளை பார்க்கின்றேன் .எல்லா பெட்டிகளிலும் உள்ளுக்குள் என்ன இருக்கு என்று பெயர் எழுதி தள்ளிவைத்திருக்…
-
- 40 replies
- 5k views
-
-
நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்…
-
- 8 replies
- 1.5k views
-
-
புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: கடி "என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?" கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை " என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...." சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது.. " கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர். " அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன். …
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது. 'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதைகளும் இருக்கு. மரியாதைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிடித்தவர்களுக்கு மட்டும் **************************************************************** பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட…
-
- 0 replies
- 912 views
-
-
உணர்வுகள் உறவுகள் அம்மம்மா இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி. இவங்கள…
-
- 54 replies
- 6.9k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்.. புளொட்டின்.. பாசிசம்..! தொடர்ந்து வாசிக்க: http://kuruvikal1.we...3543/v_p_01.pdf [பக்கம் 10 தொடங்கி 12 வரை] நன்றி விடுதலைப்புலிகள் ஏடு.
-
- 2 replies
- 768 views
-
-
[21] அஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான். எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது. உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான். 'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்... "நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன். வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மா…
-
- 9 replies
- 2.8k views
-
-
அசங்கா அனோஜன் பாலகிருஷ்ணன் மிக உக்கிரமாக மழை பெய்யத்தொடங்கியிருந்தது. கார் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். மழைத்துளிகள் ஈயக்குமிழ்கள்போல் காரின்மேல் பட்டுச்சிதறின. காருக்குள் ஓரளவு சூட்டுடன் இருந்தாலும், குளிர் உடம்பின் தசைகளுக்குள் முட்டிமோதி நுழைவதினை உணரத்தொடங்கியிருந்தேன். தலைமுடிகளை கோதிக்கொண்டு காரின் வேகத்தினை குறைத்துக்கொண்டு முன்செல்லும் வாகனத்தின் நகர்தலுக்காகக் காத்திருந்தேன். மெல்லமெல்ல முன்னால் இருக்கும் நீண்ட தொடர்வாகனங்கள் புகையிரதப்பெட்டிகள்போல் பிரமாண்டமாக ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு மெல்ல அசைந்துகொண்டிருந்தன. மெதுவாக நகரும் நீண்ட ராட்சத அட்டையைப்போல் கற்பனைசெய்துபார்த்தேன். கார் இருக்கையில் சுதந்திரமாக சாய்ந்து விழிகளை இடப்புற கார் கண்ணாடி…
-
- 9 replies
- 2.2k views
-
-
[size=4]கடற்காற்று குளிராக வீசிக்கொண்டிருந்தது! கிடுகு வேய்ந்த, தனது தோணிக்குள், அரிக்கன் விளக்கைக் கொஞ்சம் தூண்டி எரியவிட்ட சிங்கன், தனது வலது காலின் விரல்களை மெதுவாக, நீவி வீட்ட படி, ஒரு பீடியைப் பத்த வைத்துக்கொண்டான்! சீ! இந்தக் கண்டறியாத 'சரளி வாதத்தாலை' ஒண்டும் ஒழுங்காச் செய்யேலாமல் கிடக்கு! தனக்குத் தானே புறு புறுத்துக் கொண்டான்! வேறெவரும் தோணிக்குள் இருக்கவில்லை! சிறிது முன்னர்தான், களங்கண்டித் தடிகள், ஊன்றும் வேலையில் பாதியை முடித்து விட்டிருந்த வேளையில், இந்தச் சரளிவாதம், அவனது கால்விரல்களை இழுத்து விட்டது! கொஞ்ச நேரம் செல்லச் சரிவரும், என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன், பீடிப் புகையை நன்றாக, இழுத்துவிட்ட வேளையில், அவனது நினைவுகள், கொஞ்சம் பின்னோக்…
-
- 19 replies
- 2.1k views
-
-
மந்திரத் தீவுக்கான படகுப் பயணம் மாதங்கள், வருடங்கள் என்று... நீண்டு கொண்டே போனது. பூசாரிக்கோ தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதில் அவரசம் மேலோங்க.. சீடர்களை அழைத்து.. எப்படியாவது மந்திரத் தீவை இந்த யூலைக்குள் அடைந்தே ஆக வேண்டும். ஏற்கனவே புயலில் சிக்கிய சிதைந்து போயுள்ள எங்கள் படகு இன்னும் நீண்ட காலம் கடலில் பயணிக்க முடியாது போலுள்ளது. ஆகவே படகை குறுக்கு வழியில் என்றாலும் செலுத்தி.. மந்திரத் தீவுக்கு என்னை விரைவாகக் கொண்டு சென்றுவிடுங்கள். அடுத்த முழு நிலவு தினத்தில் நான் மந்திரத் தீவில் இந்தக் குடுவையைத் திறந்தாக வேண்டும். இன்றேல் என்னால் இந்த அதிசயக் குடுவை தர இருக்கும் சக்தியைப் பெற முடியாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை எனக்கு வருமானால்.. உங்களை எல்லாம் வெட்டி இந்தக்…
-
- 22 replies
- 3.6k views
-
-
நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த செயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கை இது என்றேன்! -கங்கையில் விடுத்த ஓலை வணக்கம், இது மனித வாழ்க்கையிண்ட மறுபகுதி. பலர் சிந்திக்க விரும்பாத, அறிஞ்சுகொள்ள விரும்பாத பகுதி. மரணத்தின் பின்னர் இடுகாட்டுக்கு போவதுவரை என்ன நடக்கிது எண்டு கீழ் உள்ள விபரணச்சித்திரம் சொல்லிது. ஏழு பகுதிகள் இதில இருக்கிது. மொத்தமாக சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் நீளமான கதை இது. நேரம் கிடைக்கும்போது இவற்றை முழுமையாக பார்ப்பது எங்கட குடும்பங்களில, உறவினர்கள், நண்பர்களிற்கு... அகாலமான காலம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள, சரியான முறையில செயற்பட்டு இறுதிக்க…
-
- 4 replies
- 2.4k views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
Where are you from? - - வ.ந.கிரிதரன் - "டாக்ஸி கிடைக்குமா?" வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன். "Wher…
-
- 1 reply
- 450 views
-
-
உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம் தெரியாத பாதை தெளிவானபோது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கி…
-
- 189 replies
- 26.1k views
-
-
நாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன் வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்.... சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளைத்த மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டு…
-
- 1 reply
- 1.3k views
-
-
காணும் முகம் தோறும் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில் ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள். ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள் முழுக்கத் தேடியும…
-
- 0 replies
- 1.3k views
-
-
கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 999 views
-
-
காவல் நாய்... முருகனின் வீட்டைக் கடக்கும்போது டாம்போவின் இடிபோன்ற குரல் அந்த வீதியே அதிரும்படி கேட்டது.என்னடா சத்தம் பசிக்கிறதா என்று வீட்டுக்குள் இருந்து டாம்போவை அதட்டிக் கொண்டு முருகன் வேகமாக வெளியில் வந்தான். டாம்போ இபொழுது நன்றாக வளர்ந்து ஒரு பெரிய நாயாகி விட்டிருக்கிறது. டாம்போ முருகன் வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். முருகன் வீட்டுச் சாப்பாடோ இல்லை டாம்போவின் பரம்பரை ஜீனோ தெரியவில்லை ஒன்றரை வருடங்களுக்குள் அது புசு புசுவென்று வளர்ந்து அந்த ஏரியாவிலேயே பெரிய அடிக் கடியன் நாயாக நெடுத்திருந்தது. அதன் கரிய மூஞ்சையும் நெடிய கால்களும் பார்ப்பதற்கு ஊர் நாயொன்றிற்கு ஓநாய்க் கால்களும் மூஞ்சையும் முளைத்தது போலிருந்தது. முருகன் தகப்பன…
-
- 9 replies
- 4.6k views
-
-
இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைங்கோ.. அண்மையில விக்கிலீக்ஸில வந்த ஒரு கேபிள்தான் இந்தப் பகுதியை எழுத வைக்குது.. (தொடரும்..)
-
- 83 replies
- 11.4k views
-
-
சிவா நேற்று இரவு தனது மகன் சுரேஷ் சொன்ன வார்த்தையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாம குழம்பி போய் இருந்தான் 24 வயசு தான் சுரேசிற்கு, 22 வயசு தான் சுரேசின் தங்கைச்சியான சுதாவிற்கு.சுரேஷ் புலத்தில் பிறந்து ஏனைய தமிழ் பிள்ளைகளை போல் நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையும் கிடைத்தது ஒரு அழகான வீடும் வாங்கி விட்டான். இவா தான் என்னுடைய கேள் பிரண்ட் இவா தான் கல்யாணம் கட்ட போறேன் என்று தன்னுடைய கேள் பிரண்டை அறிமுகபடுத்தினான் தன் தகப்பனிற்கு,சிவாவும் மிச்சம் நல்லம் என்று புன்முறுவலுடன் கை கொடுத்தான்,சுரேஷின் காதலியை முதலே சிவாவிற்கு அறிமுகமானவள் தான்.ஆனால் சுரேசின் காதலி என்று அல்ல நண…
-
- 31 replies
- 5k views
-