கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மலரின் மலரும் கதைகள் வரிசையில் 2 வது கதை. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம் இது. பெற்றோரும், பேரர்களும் தொலைக்காட்சிகளின் முன்னே தொலைந்துவிட, செல்போன்களில் சிக்கிக்கொண்ட சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. இவ்வாறான நிலையில் புதியகதை சொல்லியாக வருகிறாள் மலர்.
-
- 0 replies
- 534 views
-
-
தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்.. இந்த கதைக்கு உரியவங்கள் இதை படித்தால்...என்னை மண்ணிக்கவும்...யாரயும் கவலை படுத்த வேணும் என்று எழுத வில்லை... இதை படித்தாவது எனி வரும் நம்ம பெண்கள் திரிந்தட்டும்... நான் எல்லராயும் சொல்ல வில்லை.. பூஜா அவளின் பெயர்...பெயர் எவ்வளவு அழாய் இருக்கு..அவளும் அழகனா பெண்தான்..பூஜா அப்பா உனக்கு மாப்பிளை பார்த்து இருக்குறார் லண்டனில்... போடோ அனுப்பி வக்குறாராம் உன்னை பார்த்து விட்டு முடிவை சொல்ல சொன்னார்.. போடோவும் வந்தது பூஜா எனக்கு புடித்து இருக்கு அம்மா என்றாள் ... இரண்டு வீடும் சம்மதம் சொல்லி கால்யாணம் இந்த தேதி என்று முடிவு பண்ணினார்கள். ரவி போன் பண்ணினான்..பூஜா உனக்கு உண்மையிலே புடித்து இருக்கா? …
-
- 21 replies
- 5.1k views
-
-
மூமின் - ஷோபாசக்தி இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிக…
-
- 5 replies
- 1.8k views
-
-
தேக வலை - சிறுகதை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்…
-
- 0 replies
- 2.9k views
-
-
பிறந்தநாள்: ஒரு நிமிடக் கதை இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
. யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3 கிரீங்..... கிரீங்...... கிரீங்....... வேலைக்கு செல்ல வைத்த அலார்ம் அடித்ததில்...... சினத்துடன் போர்வையை விலத்திக் கொண்டு வெளியே..... வந்தார் விசைக்கலைஞன். நேரே.... குளிர் சாதனப் பெட்டிக்கு சென்று பாலை ஒரு கப்பில் ஊத்தி...... மிக்ரோ ஓவனுக்குள் வைத்து விட்டு.... பல்லு விளக்கவில்லையே...... என்று யோசித்தவருக்கு..... பாலை குடிச்சிட்டு பல்லை விளக்கினாலும், பல்லை விளக்கி விட்டு பாலை குடிச்சாலும்...... ஒன்று தானே.... என்னும் தத்துவம் ஞாபகம் வந்து கை கொடுத்தது. பழையராஜாவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு, பல்லு விளக்கிவிட்டு.... நேரத்தை பார்த்த விசை..... பத்து நிமிசம் யாழ் களத்தை பார்ப்போ…
-
- 225 replies
- 21.5k views
-
-
பாண்டிபஜார் பீடா 'ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், …
-
- 1 reply
- 600 views
-
-
எனக்கு 'அகிலா'வைப் பிடிக்கும் ரிஷபன் திருவானைக்காவல்வாசியான எனக்கு 'அகிலா'வைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புதிதாய் டிரையினிங்கிற்கு வந்திருந்த நான்கு பெண்களில் அகிலாவும் ஒருத்தி. ரோஸ்மேரி, அகிலா, வனஜா, தமிழ்செல்வி நான்கு பேரும் எதிரில் நிற்க என்னை அறைக்குள் அழைத்த என் பாஸ் அகிலாவைக் காட்டினார். "யூ டேக் கேர் ஆஃப் ஹர்" என்றார். பார்த்த உடன் முதலில் பதிவான தகவல்கள் இரண்டு. அகிலா சற்று அமைதியான சுபாவம். பெரிய அகலமான ஆழமான கண்கள். "உங்களுக்கு ஏதாச்சும் நிக் நேம் உண்டா, ஸ்கூல் டேய்ஸ்ல " என் அறைக்கு வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி. மனசுக்குள் 'முட்டைக் கண்ணு' அகிலா கேள்வி புரியாமல் விழித்தபோது கண்கள் இன்னும் அழகாய்…
-
- 0 replies
- 630 views
-
-
வாசியுங்கள் பொறுமை இருந்தால், கதைதான் ஆனால் இது நிஐம் எல்லா இனத்தினரிடமும் (பல நாடுகள் & Office வேலை ல் செய்த அனுபவத்தால்). எங்கட ஆட்கள் எல்லாம் பேச்சில் எழுத்தில் வீரர் செயலில் ZERO. தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை ப…
-
- 13 replies
- 6k views
-
-
"மர்ம இரவுகள்" பொதுவாக என் வேலை மாலை மூன்றரை மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள் விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project work] ஓரளவு முடித்துவிட்டு போகவேண்டி இருந்தது. அப்பத்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும் குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை முடிய ஆறு மணி தாண்டிவிட்டது. கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுட…
-
- 2 replies
- 494 views
- 1 follower
-
-
கோமா சக்தி - சிறுகதை அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத்…
-
- 5 replies
- 1.5k views
-
-
இது யோ.கர்ணனின் வலைத்தளத்திலிருந்து பதிகிறேன். எழுத்து எண்ணம் யாவும் கர்ணன். யுத்தத்தின் பின் வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் முன்னாள்ப் போராளிகள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி பல்வேறு இடங்களிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே நான் புதிதாக எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் பற்றி, அவர்களது நிலைமை பற்றி இந்த உலகத்திற்கு குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆயினும் காக்கப்படும் கள்ள மௌனத்தின் அர்த்தம் மிகக் கேவலமானது. இதுபற்றி ஒருவர் குறிப்பிடும் போது எழுதியிருந்தார் – ‘அவர்கள் வெற்றிகளிற்கு மட்டுமே உரிமை கோருவார்கள்’ என. உண்மைதான் அதனைச் சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். வெற்றிபெற்றவர்களிற்கு மட்டுமே அவர்கள் உரிமை கோரு…
-
- 1 reply
- 898 views
-
-
அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்! மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. “கொட்டி (புலி)” என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது. இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் …
-
- 7 replies
- 1.3k views
-
-
நானும் பில்லாவும். சாத்திரி ஒரு பேப்பர். நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால் ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு வாற ஞாயிற்று கிழைமை படம் நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன் இந்தியாவ…
-
- 17 replies
- 2.8k views
-
-
அப்புசாமியும், சீதாப்பாட்டியும்..... குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த ஜ.ரா.சுந்தரேசன் என்னும் அற்புதமான நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தாம் அப்புசாமியும், சீதாப்பாட்டியும். இவர் எழுதிய ஒருசில கதைகளையாவது... நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். பாக்கியம் ராமசாமி எழுதும் கதைகளில்..... கதாநாயகனாக வரும், அப்புசாமி ஒரு பென்சன் எடுத்த முதியவர். அவரின் மனைவி சீதாப்பாட்டி, அவரை... ஒன்றுக்கும் உதவாதவர் என்னும்.... நினைப்புடன் தான்... வாழ்ந்து வருகின்றார். அவர்களுக்கிடையே... நடக்கும், சம்பவங்களைத் தான், பாக்கியம் ராமசாமி தனது நகைச்சுவை எழுத்து மூலம் வெளிபடுத்த…
-
- 23 replies
- 10.6k views
-
-
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு `அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ…
-
- 0 replies
- 949 views
-
-
ரங்கராட்டினம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: செந்தில் அந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக. எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப…
-
- 1 reply
- 2.5k views
-
-
வியாபாரத்தில் தர்மம் பார்க்கலாமா? http://www.muthukamalam.com/images/2021/vegetablesaleswomen.jpg தெருவொன்றில், ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு சென்றாள் . வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிட்டு, "ஒரு கட்டு கீரை என்ன விலை...?" என்று கேட்டாள். "ஐந்து ரூபாய்" என்றாள் கீரைக்காரி. “ஐந்து ரூபாயா...? மூன்று ரூபாய்தான் தருவேன்... மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டுப் போ" என்றாள் அந்தப் பெண்மணி. "இல்லம்மா... அந்த விலைக்கு வராதும்மா" என்றாள் கீரைக்காரப் பெண். “அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய்தான்...” பேரம் பேசினாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறித…
-
- 0 replies
- 437 views
-
-
அனைவருக்கும் வணக்கம். இது எனது கன்னி முயற்சி. அதனால் முழுவதுமாக எழுதவில்லை. தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும். ////////////////////////////////////////// எங்கும் ஒரே களோபரம். எல்லோரும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்கள். நேரத்துடன் நித்திரை விட்டெழுந்து குளித்து நல்ல உடை உடுத்திக்கொண்டு வளாகம் நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்தார்கள். அன்று புது மாணவர்கள் வரும் நாள். அது தான் இத்தனை சுறுசுறுப்பு. பொதுவாகவே பொறியியல் மாணவிகளை 'காய்ந்ததுகள்' என்று தான் சொல்லுவார்கள். கணக்கிலே மட்டுமே கவனம் செலுத்துவதனாலோ என்னவோ. அத்தி பூத்தால் போல சிலர் மட்டும் விதி விலக்காக வருவதுண்டு. அப்படி தான் ஒருத்தியும் இந்த முறை வருவதால் தான் இத்தனை ஆர்ப்பா…
-
- 11 replies
- 1.4k views
-
-
மாற வேண்டாம்! சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்... தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்... ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? …
-
- 1 reply
- 1.6k views
-
-
மண்ணை தொடாத மழைத்துளி! எல்லாம் முடிந்து விட்டது; கால்கள் துணியாய் துவள, அந்த பருத்த மரத்தின் மீது சாய்ந்து நின்றாள், மீனாட்சி. அனிச்சையாக விழிகள் நீரை சிந்தின. துடைக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லை. சில பார்மாலிட்டிகளை முடிக்க, வக்கீலுடன் அப்பா போய் விட, தனியே நின்றாள், மீனாட்சி. 'மிச்சமிருக்கிற வாழ்க்கை மொத்தமும் தனியாத்தான் நிற்கணுமா...' உள்ளே ஏதோ புரண்டு வந்தது. எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும், ஆற்றமாட்டாமல் அடிவயிறு குழைந்தது. ஆசை ஆசையாய், தொங்கத் தொ…
-
- 1 reply
- 626 views
-
-
கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. ‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான ப…
-
- 0 replies
- 732 views
-
-
12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்…
-
- 17 replies
- 4.3k views
- 1 follower
-
-
ஒரு நிமிடக் கதைகள் வல்லவன் வல்லவன் செ ல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி. “சார், சொல்லுங்க சார்!” “ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?” ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மன…
-
- 0 replies
- 1.5k views
-