கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
காலமும் கோலங்களும்............... [size=4]பாஸ்கரன் புலமைப்பரிசு பெற்று அமெரிக்காவுக்கு வந்த போது ....தனிமையை முதலாவதாக் உணர்ந்தான். முதலில் உணவு தேவை பெரும் சிரமமாக் இருந்தது. அத்துடன் இடமும் புதிது அங்கு மனிதர்களும் அன்னியமாக் தெரிந்தார்கள் . கடின் முயற்சிக்கு பின் சமைக்கவும் தன் தேவைகளை சரி செய்து கொள்ளவும் கற்று இருந்தான் காலம் உருண்டோடி மூன்று வருடங்கள் ஆனது மனைவியும் ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் நாட்டில் அவனுக்காய் காத்து இருந்தார்கள். அப்போதெலாம் அதிகம் தொலைபேசி வதியும் கணனியும் அதிகம் நடை முறையில் இலகுவாக இல்லாத காலம். அடிக் கடி தங்களை அழைத்து கொள்ளும்படி கடிதத்தின் மேல் கடிதம் வரும். வெளி நாடு சுவர்க்கம் என எண்ணி இருந்தார்கள் அவர்கள். இங்குள்…
-
- 7 replies
- 1.1k views
-
-
ராணி மஹால் - ஷோபாசக்தி அப்போது நேரம் அதிகாலை அய்ந்து மணியாகிவிட்டது. வசந்தகாலம் பிறந்திருந்தது என்றாலும், ‘செய்ன்’ நதியிலிருந்து எழுந்துவந்த ஈரலிப்பான காற்றில் குளிரிருந்தது. நதிக்கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் அன்னராணி நடந்துவந்தார். கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல், அவர் இந்தப் பாதையில் நடக்கிறார். அன்னராணி ஒற்றையடிப் பாதையின் முடிவிலிருந்த சிறிய தார் வீதியில் ஏறி, உயரமான முன் ‘கேட்’டைத் திறந்துகொண்டு சிறிய புல்வெளியைத் தாண்டி நடந்தார். புல்வெளியில் அலங்கார மின் விளக்குகள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவரின் எதிரே கம்பீரமாக ராணி மஹால் நின்றிருந்தது. ‘மந்த் லா ஜொலி’ என்ற இந்தச் சிற்றூர் புகழான வரலாற்றுப் பின்னணிகொண்டது. பிரஞ்சு அரசன் இரண்டாம் பில…
-
- 7 replies
- 1.3k views
-
-
முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து…
-
- 7 replies
- 1.8k views
-
-
இந்த வாரம் ஒரு பேப்பரில் யாழ் பிரிய சகி எழுதிய கதைஇது ஒரு தேர் நாள் இரவு 8 மணி போல மாமா டெலிபோன் அடிச்சார். " என்ன மாதிரி நாளைக்கு கோயில் வாற பிளான் ஏதும்?" எண்டு கேட்க நானும் உடனே " ஓமோம்..வாறம் வாறம்" எண்டு துள்ளினன். எங்க, எத்தினை மணிக்கு சந்திக்கிறதெண்டு கதைச்சு வைச்சதும் தான் எனக்கு கவலை வந்திச்சு. " இப்ப எந்த உடுப்பு போடுறது?" முதலே தெரிஞ்சிருந்தா 4,5 நாளுக்கு முதலே ரெடியா எடுத்து வைச்சிருக்கலாம் இப்ப என்னத்த போட எண்டு இரவிரவா ஒரே யோசனையில நித்திரையும் சரியா வரேல்ல. காலேல தான் அம்மா சொன்னதை எடுத்துப்போட்டுக்கொண்டு அண்ணரோட கிளம்பிட்டன். ஹை வே ஆல இறங்கினதுமே ட்ரஃபிக்! இந்த ட்ரஃபிக்கில விசேசம் என்னவெண்டால் எல்லாம் நம்ம தமிழ் ஆக்களோட வாகனங்கள் …
-
- 7 replies
- 2.2k views
-
-
கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம் செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள். பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள். இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள். ஒரு அதிகாலைப்பொழுதில் அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள். தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும் இயக்கத்திற்கு போனான்.கமலம்…
-
- 7 replies
- 879 views
-
-
முள்ளிவாய்க்காலின் மூச்சுக்காற்று… மனிதனால் வீசமுடியாத காட்டுமிராண்டிக் குண்டு வீச்சுக்கள்.. மானிடத்துக்கு விரோதமான படுகொலைகள்… நாகரிக உலகமே வெட்கித் தலைகுனிந்து வெந்து வெந்து சாகவேண்டியளவு பாலியல் வக்கிரங்கள்.. பிணங்களைப் புணர்ந்த பேய்கள்.. உலக சாஸ்திரங்கள் பிணம் தின்றன.. ஐ.நா சாத்திரங்கள் மலம் கொட்டி நாறின.. ஐயோ.. என்ற அலறலுடன்.. வாழ வேண்டிய குழந்தைகள் எல்லாம் செத்து சிதறி.. ஓ..ஓ.. சாவே தலைகுனிந்து நின்றது.. சமஸ்கிருதம்.. சிங்களம்… சீனம்… பாகிஸ்தான்… மொழிகளின் வெற்றிச் சத்தத்தைத் தவிர அங்கு வேறெதையும் கேட்க முடியவில்லை.. சொற்ப நேரத்தில் முள்ளிவாய்க்கால் உறைந்து போனது.. மறுநாள்… எஞ்சிய எலும்புகளை கூட்டி அள்ளி.. எரித்து.. பஸ்ப்ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர். இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச்…
-
- 7 replies
- 1k views
-
-
(1976ம் ஆண்டு 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து... வன்னி மாணவன் ஒருவனின் பார்வையினூடாக... வன்னி மண்ணின் வாழ்வும் மன வளமும்... பதிவுக்கு சற்று நீளமாக இருக்கலாம், எனினும்,.. இருநூறு மீற்றர் - சிறு கதை - "நாளைக்குப் பின்னேரம் வரதனுக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா?" "இல்லை ஐயா" "நாளைக்குப் பின்னேரம் என்னோடு வவுனியாவுக்கு வர வேண்டும், வசதியோ?" "ஓம்" " பாடசாலை விட்டதும் நாங்கள் வவுனியாவுக்குப் போவோம்.வீட்டில் அவ்வாறு சொல்லி வரவும்" "ஓம் ஐயா" "இப்பொழுது வீட்டுக்குப் போகலாம்" எனக்கெண்டாக் காத்திக பறக்கிறது போல.புது வாத்தியார் வந்தபிறகு பள்ளியும் நல்ல திருத்தம்.பிள்ளையள் விருப்பமாய் பள்ளிக்கு வருகினம்.போன தவணை பள்ளியில விளையா…
-
- 7 replies
- 1.1k views
-
-
பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது. மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அtவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தன…
-
- 7 replies
- 983 views
-
-
நாட்டுக்கட்டை நாக்கமுத்து கரும்பு ஜோரா விளைஞ்சதில கையில கொஞ்சம் காசுகிடக்குது. வீட்டுக்கு ஒரு பிரிஜ்சுப் பெட்டி வாங்கினால் காத்தாயி குளிர்ந்துவிடுவாள் என்ற ஆசையில நாக்கமுத்து ரங்குப்பெட்டியில மடிச்சு வச்சிருந்த கரை வேட்டியையும் தோள்ள தலைவர் எம்.ஜீ.ஆர் படம்போட்ட துண்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பட்டணத்துக்கு பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தார். அங்கை இங்கை தேடி ஒருவழியா பெரியதொரு எலக்றிக்கல் சாமான் விற்பனை செய்யும் கடையைக் கண்டுபிடித்து எம்மாம் பெரிய கடை என முணுமுணுத்தக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வெளியில சுட்டு எரிக்கிற வெய்யிலுக்குக் கடை ஜில்லென்று குளிரா இருக்கிறது. கடையையே இம்மாம் பெரிய பிரிஜ்ஜிற்கை வச்சிரு…
-
- 7 replies
- 3.5k views
-
-
இல்லாள்: ஜேகே சாவு வீடுகளில் பிரேதம் எடுக்கும்போது எழுகின்ற ஒப்பாரி ஒலியைப்போல மழை வீரிட்டுக் கொட்டிக்கொண்டிருந்தது. கிளிநொச்சி நிலையத்திலிருந்து ரயில் மறுபடியும் புறப்பட்டது. மிருதுளா தன் செல்பேசியிலிருந்த பயண வழிகாட்டியைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள். கொடிகாமம் கழிந்தால் அடுத்தது யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வந்து சேர்ந்துவிடும். அவள் தன் கைப்பையினுள் கடவுச்சீட்டு, கடனட்டை, இலங்கை ரூபாய்கள் எல்லாமே பத்திரமாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டாள். யாழ்ப்பாணத்தில் ரயில் எத்தனை நிமிடங்கள் தரித்து நிற்கும் என்பதை ஊகிக்கமுடியவில்லை. முதலில் அந்த நிலையத்தை அவள் தவறவிடாமலிருப்பது முக்கியம். இந்த மழையில் அதன் பெயர்ப்பலகை மறைந்துபோகலாம். ரயிலினுள்ளே…
-
- 7 replies
- 893 views
-
-
என்னடா முனிவர் இப்ப கதையில இறங்கிவிட்டார் என்று பார்க்கிறியளே நம்மட பொடியங்கள் செய்யுற வேலையை பார்க்க முடியல்ல அதுதான் இந்த கதை[வெளிநாட்டில ] வணக்கம் சாமித்தம்பி அண்ணே என்ன மகன் வெளிநாடு போக போறான் போல ஓம் சிவன் .நல்லாத்தான் படித்தான் ஆனால் இங்கு வேலை எடுக்கிற என்றால் சும்மாவா என்ன!! அதுவும் நம்மட தமிழ் சனங்களுக்கு வேலை கொடுக்கிறதென்றால் ஒரு வேண்டா வெறுப்பாத்தானே பார்க்கிறாங்கள் அதுதான் சும்மா இங்கு இருந்து என்ன செய்யிறது ஆளை வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று பார்க்கிறன் இங்க அவனுக்கு பயந்து இவனுக்கு பயந்து இருக்கிறத்தை விட அங்க போனால் கொஞ்சம் நம்ம நிம்மதியாக இருக்கலாம் தானே...அது சரி அவ்வளவு காசுக்கு எங்க போவியள் . என்ன செய்யுற சிவன் ஒரு வாய் சோறு தாற நிலத்தைத…
-
- 7 replies
- 3.1k views
-
-
"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..." சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய "ரேப் றெக்கோட"ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள் ஈடுபட்டிருந்தன. வீதியின் இருமருங்காலும் பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசமில்லாமல் மக்கள் தமது அன்றாட அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருந்தார்கள். "ட்ராம்" வண்டிகள் இரும்புப் பாதைகளின் மேலாக பாம்புகளாக நெளிந்துகொள்ள, அவற்றுடன் போட்டிபோட்டவாறு வாகனங்கள் நெரிசலாக ஊர்ந்துகொண்டிருந்தன. மஞ்சள் சி…
-
- 7 replies
- 3.3k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01 மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவ…
-
- 7 replies
- 1.4k views
-
-
வெளியீடு – ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை. தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒ…
-
- 6 replies
- 1.9k views
-
-
அர்த்தம் அற்ற பிழை அனோஜன் பாலகிருஷ்ணன் கயல்விழியை திருமணம் செய்து ஓராண்டுக்குள் அம்மாவாகிவிட்டாள். நண்பர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தார்கள். சந்தைக்கு செல்லும் போது உறவினர்கள் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தார்கள். அம்மாதான் பெண்பார்த்து செய்துவைத்தாள்.கயலை முதன்முதலில் கோயிலில் காட்டினார்கள். இவளா என் மனைவி? எத்தனையோ பெண்களை வேலைபார்க்கும் இடதிலும்,யுனிவேர்சிட்டிளும்,ஃபேஸ்புக்கிலும் பழகி சில்மிஷம் புரிந்திருந்தாலும் இவள்தான் உன் மனைவியாகப் போகின்றவள் என்று சொல்லி அவளைக் காட்டும்போது நிச்சயம் ஒரு ஆண் தடுமாறுவான். அது எனக்கும் நடத்து, அடிவயிற்றில் ஒருவினோத உணர்வு, நெஞ்சில் எதோ சுரப்பது போன்று ஒரு உணர்வு. முதன்முதலில் நானம் ஒரு ஆணின்கண்களி…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈரம். வவுனியா முகாமிலிருந்து விடுதலையான லட்ச்சுமி அத்தையையும் மகள் கவிதாவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் முருகனின் அம்மா. பிடிவாதமாக யாழ்ப்பாணத்திற்கு வரமறுத்து பாலியாத்திற்க்குப் பக்கத்தில் இருந்த அவர்கள் வீட்டிற்க்குப்போக இருந்தவர்களை முருகனின் அம்மாதான் மிகுந்த வாக்குவாதத்தின் பின்னர் மனதை மாற்றிக் கூட்டிவந்திருந்தார். முருகனின் அம்மாவின் ஆக்கினையால்தான் லட்ச்சுமி அத்தை அந்த ஊரிற்க்கே வருவதில்லை என்ற தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்தும் நம்பிக்கையை இழ…
-
- 6 replies
- 2.2k views
-
-
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன் ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு இருக்க முடியாமல் போய்விட்டது. சீனியர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கவனித…
-
- 6 replies
- 1.1k views
-
-
இனிய உறவுகளே !. இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள். அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன். பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்த…
-
- 6 replies
- 1.8k views
-
-
கடற்கன்னி ஒருநாள் முழுவதும் பிரகாசித்து அன்றைய நாளை முடிக்க தென் மேற்கு திசையை நோக்கி நகர ......, நாள் முழுவதும் பறந்து திரிந்து தமது குஞ்சு களுக்கு இரைதேடி கொண்டு தமது கூட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன ..... பறவைகள், இருள் மெல்ல ..... மெல்ல .... கவ்வ தொடங்கியது கடல் அலையின் ஓசையைவிட காகம் கத்தும் சத்தமே காதை கிழித்தது சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மோட்டர் சைக்கிளில் ராஜனும் ரஞ்சனுமாக முன்னே சென்றுகொண்டு இருக்கின்றனர் வோக்கியில் ரோமியோ ......ரோமியோ என கூப்பிடும் சத்தம் என்பக்கத்தில் நின்றவரின் வோக்கியில் கேட்டது அதக்கு ரகு ஓம் சொல்லுங்கோ ....... தங்கோ, என்ன வென்றால் இன்று நிலைமைகள் சரியாகவுள்ளது இன்றைக்கே அதை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்ன போது என்மனதில…
-
- 6 replies
- 2k views
-
-
முதுமையின் பிடிக்குள் இருக்கும் போதுதான் பழைய நினைவுகளை ஆறுதலாக அசை போட முடிகிறது. எனது மாமி அதாவது எனது மனைவியின் தாயார் (சிவா தியாகராஜா) 87வது வயதை நோக்கி இப்போ பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது வாழ்க்கையின் பெரும் நினைவுகளை அசை போடும்போது மனதில் தட்டுப் படுவதை அப்பப்போ எழுதி வைத்துவிடுவது அவரது வழக்கம். அப்படி அவர் எழுதிக் குவித்திருப்பது ஏகத்துக்கு இருக்கிறது. ஒருவர் எங்களை விட்டு மறைந்ததன் பின்னால் முப்பத்தியொரு நாளிலோ அல்லது ஓராண்டு நினைவிலோ அவரைப் பற்றி அஞ்சலிப் புத்தகம் அச்சடித்து ஊருக்குத் தந்துவிடுகிறோம். அதில் அவரைப் பெருமைப் படுத்துகிறோம் என்ற திருப்தி எங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஒருவர் மறைந்த பின்னால் பெருமைப் படுத்துவதை விட வாழும் போதே சிறப்பித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பாதிக் குழந்தை!… பித்தன். October 14, 2018 சிறப்புச் சிறுகதைகள் (15) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – காதர் மொகைதீன் மீரான் ஷா எழுதிய ‘பாதிக்குழந்தை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். “உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள். நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத…
-
- 6 replies
- 2.8k views
-
-
[size=2][size=4]ரயில் வண்டி கோப்பன்கேகன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது..[/size][/size] [size=2][size=4]ஐ.சி 4 வண்டி… பிரேக்கட்டையில் பழுதிருப்பதோ, நடு வழியில் எகிறிவிடுமென்றோ அந்த இருவருக்கும் தெரியாது… குடித்திருப்பார்கள் போலிருந்தது..[/size][/size] [size=2][size=4]” நாட்டின் பிரதமர் பெயர் தெரியுமோ உனக்கு..? ”[/size][/size] [size=2][size=4]” அவ்வளவுக்கு நான் முட்டாள் இல்லை கெல தொனிங் சிமித்..”[/size][/size] [size=2][size=4]” இப்ப அவ எங்கே…? ”[/size][/size] [size=2][size=4]” கோடை விடுமுறை… உல்லாசப் பயணத்தில இருக்கலாம்..”[/size][/size] [size=2][size=4]” வருசத்தில எத்தினை தடவை உல்லாசப் பயணம் போறா.. நாலு தடவைகள்..? ”[/size][/size] [size…
-
- 6 replies
- 797 views
-
-
ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்...... சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப…
-
- 6 replies
- 1.6k views
-
-
விமல் போத்தலை ஓப்பின் பண்ணச் சொன்னதும் சற்றுக் குனிந்து முன்னாலிருந்த 'ரெமி மார்ட்டின்' போத்தலை எடுத்துத் திறந்து இரண்டு கிளாஸிலும் பாதியளவுக்குக் கொஞ்சங் குறைவாக விஸ்கியை ஊற்றினான். "மச்சான் உனக்கு ஏற்ற மாதிரி கோக் மிக்ஸ் பண்ணடா" என விமலிடம் சொன்னவன்... தனது கிளாஸிற்குள் நாலைந்து ஐஸ்கட்டிகளை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டான். அப்படிக் குடிப்பதுதான் அவனது வழக்கமாயிருந்தது. தனது கிளாஸிற்குள் கோக்கைக் கலந்தபடியே... "அஞ்சலிக்கும் உனக்கும் என்ன மச்சான் நடந்தது...?" என அவனைப் பார்க்காமலேயே கொஞ்சம் தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான் விமல். அவன் அவ்வாறு கேட்டதும், வழக்கமான 'சியர்ஸ்' எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் தனது கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியபடியே வ…
-
- 6 replies
- 1.8k views
-