Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின். எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! …

  2. Started by கிருபன்,

    மச்சம் - லக்‌ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத்…

  3. Started by nunavilan,

    (a+b)2 = a2+b2+2ab கல்யாணமாகி ஒரு மாதம் - A கல்யாணமாகி 2 வருடம் - B ---------- ஆருயிர் நண்பன் ரமேஷ் - C கண்ணதாசன் பாடல் - D A "என்னங்க உங்களுக்‍கு ஹார்லிக்‍ஸ் வேணும்மா, பூஸ்ட் வேணும்மா" இங்கி, பிங்கி போட்டு பார்த்ததில் பூஸ்ட்தான் வந்தது. ஆனால் எனக்‍கு ஹார்லிக்‍ஸ்தான் பிடிக்‍கும். அதனால், "எனக்‍கு ஃபில்டர் காஃபிதான் வேணும்" B "எருமைமாடு அந்தப் பாலை குடிச்சாத்தான் என்ன? அதுல என்ன வெஷம்மா கலந்திருக்‍கு, அப்பனும், பிள்ளையும் ஒரே மாதிரி வந்து வாச்சிருக்‍கு பாரு. எனக்‍கு வேலை வைக்‍கணும்னே பிறந்து தொலைச்சிருக்‍கு" "ஏய்..... ஏண்டி பிள்ளைய திட்டுற" "ம்....... எனக்‍கு கிறுக்‍கு பிடிச்சிருக்‍கு அதான் திட்டுறேன்" "உனக்‍கு திமிறு அதிகம…

    • 3 replies
    • 1.2k views
  4. அழிந்துவரும் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர். இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இந்த ஆற்றுகையை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்பட…

  5. Started by nunavilan,

    வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன் ‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள். ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக்…

  6. [size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள். வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற…

    • 3 replies
    • 969 views
  7. அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து…

    • 3 replies
    • 2.3k views
  8. யாழ்பாணத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டுவளவுகளும் சோலையாக இருந்தது……..நிலம் கண்ட இடமெல்லாம் மரங்களும், பூமரங்களும் கண்டமேனிக்கு செழித்து வளர்ந்திருந்தன…….முன்பெல்லாம் ஒரு பூச்செடியை நட்டுவிட்டு அடிக்கடி தண்ணீர் ஊற்றி...ஊற்றி...அதிக கவனம் எடுத்து வளர்த்தாலும் வளராத பூமரங்கள்…….நன்றாக செழித்து வளர்ந்திருந்தன……...மல்லிகை, அடுக்கு மல்லி, முல்லை, பாரிஜாதம், மந்தாரை (இந்த பூவை இம்முறை தான் முதல் தடவை கண்ணால் பார்த்தேன்), மயிர் கொன்றை சிவப்பு,றோஸ் வர்ணங்களில், முசண்டாஸ், பாதிரிப்பு மஞ்சள், பிங்க், வெள்ளை...எக்சோறாவில்...சிகப்பு., றோஸ், மஞ்சள் நிறங்களில்…..நீலபூக்கொடி, கறுத்தபூக்கொடி (இது violet color), மஞ்சள், வெள்ளை நந்தியாவட்டை, திருவாத்தி…..(இதன் மஞ்சள்..வெள்ளை பூக்களை பார்த…

  9. திட்டம் ‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது. ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்…

  10. இறந்து விடுவது இயல்பு... அது முடிவானது . யாராலுமே தவிர்க்க முடியாதது. இது இயல்பாய் நடந்துவிட வேண்டுமா ? எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவது போல உங்களுக்கும். நீங்கள் யார் ? எல்லோரையும் போலசா..தா..ர..ண..மா..ன..வ..ர்..க..ளா ? நீங்கள் சாதாரணமாக இறந்து போகலாமா ? இறந்தும் வாழ வேண்டும் . இறப்பு அதன் பின்பே உன்னத வாழ்க்கை இறந்தும் நீங்கள் எல்லோரும் வாழ்வீர்கள் . திட்டுக்கிட்டு விழித்தான் அவன். அன்று தத்துவ உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்தும் அவன் நினைவுகளிலும் கண்களை மூட கனவுகளிலும் " இறத்தல் " பற்றி விளக்கமளித்து கொண்டிருந்தார். பக்கத்தில் அதனை அணைத்தபடி படுத்திருந்தான் இரண்டு நாள் நண்பன். அவனும் வெறித்த பார்வையுடன் இருந்தான். நேற்று இவனுக்கும் உரை நிகழ்த்தி இருப்பார்க…

  11. Started by நவீனன்,

    துறவு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார். காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று... பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார். பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார். வழியிலி…

  12. ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது. ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இ…

    • 3 replies
    • 1.5k views
  13. குளிர்சாதனப் பெட்டி அட்சரம் (இதழ் - 4) டிசம்பர் 2002-பிப்ரவரி 2003 ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற முழக்கத்தை முகப்பில் தாங்கிவரும் `அட்சரம்' என்ற சிற்றிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் முயற்சியில் வெளிவருகிறது. புனைக்கதைகளுள் புதிய வடிவங்களை புகுத்தும் பல கதைகளை இச்சிற்றிதழ் இந்த இதழில் வழங்கியுள்ளது. பின் நவீனத்தில் அல்லது கற்பனாதீத தொர்த்த வகையைச் சேர்ந்த எழுத்துக்கள் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே எப்படி வளர்ந்து வருகிறது என்பதை இந்த இதழின் "சிறப்புப்பகுதி" என்ற மொழிபெயர்ப்பு கதைகள் உணர்த்தும். இந்தப் பகுதியிலிருந்து இசபல் ஸாஜ்ஃபெர் எழுதிய "குளிர்சாதனப் பெட்டி" என்ற பிரஞ்சுக் கதையை வாசகர்களுக்குத் தருகிறோம்) குளி…

    • 3 replies
    • 1.9k views
  14. கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ண…

  15. வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என்…

  16. [size=4] சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை. ‘அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள்’ என்று மேதை லெனின் சொல்லி…

  17. நினைவுகள் நிஜமாகிறது அந்தத் தரிப்பிடத்தையும் கடந்து பஸ் சென்று கொண்டிருந்து வழக்கமாக இந்தப் பஸ்ஸில்தான் அந்தப்பெண்ணும் பயணம் செய்வாள். ஆனால் இன்று அவளைக் காணாதது சந்துருவின் மனதுக்குள் ஏதோ மாதிரியாக இருந்தது. அந்தப் பெண் இந்தப் பயணப்பொழுதுகளில் மிகவும் வாட்டசாட்டமாகவே காணப்பட்டாலும் அவளது உள்ளத்திலே ஏதோ ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை மட்டும் அவனால் ஊகித்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. தினமும் அவனுடன் பயணம் செய்யும் அப்பெண்ணோடு அவன் இதுவரை கதைத்ததில்லை. ஆனால் கண்கள் கதை பேசி உதடுகள் உண்மை சொல்ல மறுத்து புன்முறுகல் செய்த நாட்கள் பலவுண்டு. ஆயினும் எப்படியாவது அப்பெண்ணுடன் கதைக்கவேண்டும்.. போல் சந்துருவின் மனம் தவித்தது. இருப்பினும் முன்னுக்குப் ப…

    • 3 replies
    • 1.9k views
  18. அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று. அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது. குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது …

  19. இரண்டாம் கட்ட ஈழப்போரில் ஆரம்ப ஆண்டுகள் அவை.26.11.1992.பலாலித் தளத்தின் வளலாய்ப் பகுதி முன்னணிக் காவலரண் வரிசையைத் தாக்கி அழித்து அதன் பின்னாலுள்ள சில மினி முகாம்களையும் அழிப் பதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. முன்னரங்கக் காவல்நிலைகள் தாக்கப்படும் அதே நேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகள் தளத்தின் உட்புற இராணுவ மினி முகாம்களைத் தாக்கவேண்டு மென்பதே அன்றைய எமது திட்டம். பின்னணியில் அமைந்திருந்த மினி முகாம்களைத் தாக்கும் அணியாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஒரு பிரிவு நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோமீற்றர் தூரம் வரை அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது. கண்ணிவெடிகள், மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலி, நெ…

  20. Started by கிருபன்,

    விருந்தா – ஜி. விஜயபத்மா கைலாசத்திற்கு போகும் வழியெல்லாம் விஷ்ணுவுக்கு குழப்பமாகவே இருந்தது .. “என்றுமில்லாமல் எதற்க்காக பார்வதி தன்னை அழைக்கவேண்டும். :” என்ற சிந்தனையினூடே ,,எதுவோ தவறாக நடக்கப்போகிறது என்ற கலக்கம் அவருள் தோன்றியது . கைலாசத்தில் பார்வதி ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள் .. அவள் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள் என்பதை அவள் நிலை உணர்த்தியது . விஷ்ணுவைப் பார்த்ததும் கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள் . எனக்காக இதை செய்வியா என்ற கேள்வியும், கெஞ்சலும் அவள் முகத்தில் விரவி இருந்தது . அன்பு தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவள் எதை யாசிக்கிறாள் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது .அவர் மிக தயக்கத்துடன் பார்வதியை ஏறிட்டார் . அவர் பேச துவங்…

  21. அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெ…

  22. உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் ஏதோவொரு வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. சன்னலைத் திறந்து வெளியே வேடிக்கை பார்த்தேன். பலாமரத்தில் அணில்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறிய ஆசுவாசம் பரவியது. அவசர அவசரமாக என் பாடசாலை உடைகளைக் களைந்து, மாற்றுடை மாற்றிவிட்டு சாப்பாடு மேசைப்பக்கம் சென்றேன். ஏற்கெனவே போட்டு மூடிவைத்திருந்த மதியத்து சோறு, கறிகளுடன் ஆறிப்போய் இருந்தது. சுவரிலிருந்த மணிக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். இரண்டு நாற்பது. இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன வகுப்புத் தொடங்க. பாதிவரை சாப்பிட்டுவிட்டு, கொப்பிகளோடு லுமாலா சைக்கிளில் ஏறி மிதித்தேன். வெயில் முதுகில் ஊடுருவிச் சுட்டது. செம்மண் பாதை வளைந்து நெளிந்து சென்று தார் வீதியில் ஏறியது. இருப…

  23. என் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அ…

  24. ஊர் திரும்புதல் கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன. “தம்பி குகன்… வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்” மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா – திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புலம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன். நேரம் : காலை 9.20, திகதி :…

  25. சாயம் by தாட்சாயணி “இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?” உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்” “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?” “அதெல்லாம் வரேக்க இதை விட ‘கிராண்டா’ பாப்பம்” அடுக்கடுக்கான கட்டடங்களோடு மாநகரம் கொஞ்சம் திமிராக நின்றிருந்தது. அந்தத் திமிருக்கு ஈடு கொடுத்தபடி லக்ஷிதாவும் நடந்து கொண்டாற் போலிருந்தது. அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு லக்ஷிதா பாதசாரிக் கடவையால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.