கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (1) 'அந்தமானில் எருமையா... என்ன ரீல் சுத்துறீங்க...' என்று அந்தமான் சுற்றுலாச் சென்று வந்தோர் நினைக்கலாம்; அந்த கதைக்கு வருவதற்கு முன், பயணத்தின் முன்கதைக்கு வருவோம்... ஒரு மனிதனுக்கு, குரு, மனைவி, மக்கள் மற்றும் மனை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறது, இந்து சாஸ்திரம். அவ்வகையில், நாம் பணிபுரியும் இடத்தையும் குறிப்பிடலாம். காரணம், சுயநலமான இந்த உலகில், எத்தனை நிறுவனங்களில், எவ்வளவு முதலாளிகள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தல இன்பங்களை, தங்கள் ஊழியர்களும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று கருதுகின்றனர்! ஆனால், எங்கள் பாஸ், தான் அனுபவித்து மகிழ…
-
- 3 replies
- 2.1k views
-
-
புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது…
-
- 3 replies
- 1.5k views
-
-
நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…
-
- 3 replies
- 3.8k views
-
-
"உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும். கதை என்கிற பெயரில் கற்பனைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிட்டு 'காசு' பார்க்க துடிக்கிறவர்கள் மத்தியில்... மனிதநேய வரலாற்றிலேயே மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடுமைக்குள்ளான ஈழத்துச் சொந்தங்களின் துயர வரலாற்றில் ஒரு துளியை, அதுவும் உண்மையில் நடந்ததை எடுத்துக்கொண்டுள்ளார். அதையே குடும்பப்பாங்கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
அந்த கிராம முன்னேற்ற சங்க முன்றலில் வசந்தி நிதானமாக நின்றிருந்தாள். தலைவர் சிவஞானசுந்தரம், அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிபர். செயலாளர் சுப்பிரமணியம், மாதர் சங்கத் தலைவி பிறேமா உட்பட பன்னிரண்டு பேர் ஊர்ப் பிரமுகர்கள் என்ற போர்வையில் வசந்தியைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். வசந்திக்கு எதிர்ப்புறமாக முறைப்பாட்டுக்காரனான இராகுலன் உட்கார்ந்திருக்கின்றான். கிட்டத்தட்ட எல்லோரும் கதைத்தாகிவிட்டது. வசந்தியின் பதிலைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அங்கு குழுமியிருக்கின்றவர்களின் கடமை முடிந்துவிடும். இந்த வாசிகசாலை, விசாரணை, முறைப்பாடு அவளுக்குப் புதிதல்ல. இந்த முறையுடன் மூன்று தடவைகள் இந்த நாடகம் அரங்கேறிவிட்டது. ஊருக்கும் உலகுக்காகவும் அவள் வாழவேண்டி நிர்ப்பந்திக்கப்…
-
- 3 replies
- 779 views
-
-
கம்பராமாயணம் படித்த கதை அல்லது புலம்பெயர் Fusion கதை சமர்ப்பணம்: 'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின் கதியினை நகுவன, அவர் நடை; கமலப் பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்.' எனக் கம்பன் கண்ட பெண்டிர்க்கு...! முன்னீடு சென்ற மாதம் 'மழைக்குள் காடு' நிகழ்வில் கவிதைகள் பற்றிய ஓர் உரையாடல் நடைபெற்றிருந்தது. எனக்குப் பிரியமான செல்வம் புதிதாய்க் கவிதை எழுத வருகின்றவர்கள் கட்டாயம் கம்ப இராமாயணத்தை வாசிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். கம்பராமாயணத்தில் இருக்கும் சனாதனக் கருத்துக்களை மறுத்துக்கொண்டே அதேசமயம் கம்பனில் ஊற்றாய்ப் பெருகும் அழகுத் தமிழுக்காய்த…
-
- 3 replies
- 3.1k views
-
-
கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது. ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு. ஆ…
-
- 3 replies
- 1.4k views
-
-
செக்கு மாடு (குறுநாவல் ) வ.ஐ.ச.ஜெயபாலன் தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த ந…
-
- 3 replies
- 2.2k views
-
-
கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,,,, அதிகாலை ஐந்து மணியிருக்கும் அலாரச்சத்தம் கேட்டு கோமதி எழுந்து தன் காலைக்கடன் முடித்து கோப்பி குடித்து ,இரவு பெட்டியில் போட்டு வைத்த் மதிய உணவையும் எடுத்து கொண்டு ,பஸ் தரிப்பு நோக்கி நடந்தாள் . கனடா தேசத்தின் மார்கழி குளிரில் தன்னை பாது காக்க காலுறை கையுறை, தடித்த அங்கி ,காதுகளை மூடிய "மபிலேர்" என்று தன்னை ஒரு துணி மூடை யாகவே ,போர்த்தியிருந்தாள் . பஸ் வண்டி வரவே ஏறி அமர்ந்தவளின் எண்ணம் தாயகம் நோக்கி சென்றது . அம்மாவும் அப்பாவும் தன் இரு தங்கைகளும் என்ன பாடோ ? நான் இந்த குளிரில் உழைத்து அனுப்பும் காசில் தான் அவர்கள் சீவியம் .அப்பாவுக்கும் வயதாகிறது இனி பாடசாலை ஆசிரியார் பதவியிலிருந்து அடுத்தவருடம…
-
- 3 replies
- 2.5k views
-
-
புரிதல்: ஒரு நிமிடக் கதை "பாலு! இந்தக் காலத்துல சாதி மதம் எல்லாம் ஏது? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சிருக்குது." - திவ்யாவின் பெரியப்பா முருகேசன் தம்பி பாலுவிடம் சொன்னார். "அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத்கிட்டே இருக்குது. நாம ஒத்துக்கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?" திவ்யாவின் சித்தப்பா பிரபாகரும் தன் பங்குக்கு சொன்னார். ‘பெரியப்பாவும் சித்தப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக்கிறார…
-
- 3 replies
- 1.8k views
-
-
வான்கா ஒன்பது வயதான வான்கா ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில் வேலைசெய்கிறான், அந்த வேலைக்கு வந்து மூன்றுமாதமாகிவிட்டது.அது கிறிஸ்துமஸ் தினம்.முதலாளி,அவர் மனைவி,கடையின் மற்றவேலைக்காரர் கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போவதற்காகக் காத்திருந்தான். அவர்கள் போனபிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மைபாட்டிலையும், துருப்பிடித்த முனையுடய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு எழுதஆரம்பித்தான்.தனது முதல்கடி தத்தை எழுதுவதற்கு முன்னால் கதவுகள்,ஜன்னல்கள் பரவியிருந்த ஷெல்பு கள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான்.பெஞ்சில் அந்தத்தாள் இருக்க மண்டியிட்டு உட்கார்ந்தான். “அன்புள்ள தாத்தா,கான்ஸ்…
-
- 3 replies
- 1.7k views
-
-
"-------" கள் தினம். காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது. வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் …
-
- 3 replies
- 908 views
-
-
காய் மார்க்ஸ்... கவ் ஆர் யூ.. ஐ அம் பைன் டானியல்.. எப்படிப் போய்க்கிட்டு இருக்கு ஆராய்ச்சி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.. அணுக் கருச்சேர்க்கை தொழில்நுட்பம்.. நடைமுறை சாத்தியம் ஆகிட்டா.. ஆபத்தான அணுக் கருப்பிளவு தொழில்நுட்பத்தை உலகம் கைவிடலாம் இல்லையா. என்னுடைய ஆராய்ச்சி அதுக்கு கொஞ்சம் என்றாலும் உதவினா.. நிச்சயம் மகிழ்வன்..! அதுக்காததான் கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கன். இதென்ன கையில.. சிலேட்டுக் கணணியோட..??! லைவ் அப்டேட் பார்த்திக்கிட்டு இருக்கேன் மார்க்ஸ்..! எங்க இருந்து வருகுது டானியல்.. கூடங்குளத்தில் இருந்து...! என்ன சொல்லுறீங்க அதைப் பற்றி... தமிழ்நாட்டை மிகப் பெரிய ஆபத்தில தள்ளிக்கிட்டிராங்க என்று நினைக்கிறன். ஏன் அ…
-
- 3 replies
- 947 views
-
-
http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-08.pdf
-
- 3 replies
- 1.5k views
-
-
நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள் (ஆண் எழுத்தாளர்களுக்கானது) 1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். -இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்பு…
-
- 3 replies
- 1k views
-
-
கம்பியூட்டர் மவுசை பிடிக்க தெரியாத ஒரு கால கட்டம் 2001 அல்லது 2002 ஆண்டு என்று நினைக்கிறேன் . தட்டி தடுமாறி கஸ்டப்பட்டு தடுமாறி இணைய பக்கங்களில் வலம் வந்த பொழுது யாழ் இணையம் அகப்பட்டது . அதில் அழகு தமிழில் விவாதம் செய்து கொண்டிருந்தனர் .அதை ரசித்து ஆச்சரிய படுவதுடன் எப்படி என்று ஆவல் மேலோங்கியது . முயன்று பார்க்க முடியாமா என்ற ஆதங்கமும் இயலாமாயுமே முதலில் ஏற்பட்டது . அவ்விணையத்தில் குழந்தை பிள்ளை கூட தமிழில் எழுத கூடிய மாதிரியான பொறிமுறையை அவர்கள் அமைத்து வைத்திருந்தமையால் வாழ் நிலை ஓட்டத்தில் இந்த கம்பியூட்டருடன் எதுவும் சம்பந்த படாத இதுவும் தமிழ் எழுதி பார்த்தது ..அவ் இணையத்தின் சக நண்பர்களுடன் கதைத்து பார்த்தது ..மெல்ல மெல்ல தயக்கத்துடன் விவாதித்து பார்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
எங்கள் வீட்டு தோட்டத்துக்கு எப்போது இவ்வளவு அணில்கள் வந்தது என்று சரியாக கணிக்க இயலவில்லை. முன்பெல்லாம் ஓரிரு அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டிருந்தேன். இப்போது பார்த்தால் இருபது முப்பது அணில்கள் தென்னைமரங்கள் மீது ஏறியும், இறங்கியும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தென்னைமரத்தின் மீது மட்டுமல்ல, அவ்வப்போது தரையிறங்கி தரைமார்க்கமாகவே போர்டிகோவுக்கு முன்னால் இருக்கும் கொய்யாமரத்துக்கும் வந்துவிடுவதுண்டு. ஏதேனும் ஒன்றிரண்டு கொய்யாப் பிஞ்சுகள் இருந்தாலும் கூட விட்டுவைப்பதில்லை. துவர்ப்பாக இருக்கும் கொய்யாப்பிஞ்சுகள் அணில்களுக்கு எப்படித்தான் பிடிக்கிறதோ? கொய்யாமரத்தின் எல்லாப் பிஞ்சுகளையும் கபளீகரம் செய்த அணில்கூட்டத்தின் பார்வை அடுத்தக்கட்டமாக செம்பருத்திச் செடியின…
-
- 3 replies
- 5.7k views
-
-
” அரோகரா “-அலெக்ஸ் பரந்தாமன் ” யாழ்ப்பாணம்… வாங்க…வாங்க… யாப்பனய…. என்ட … என்ட… என்ட…” கொழும்பு- கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனர் இருமொழிகளிலும் மாறிமாறிப் பயணிகளை அழைப்பது ஆரியசிங்கவுக்குத் தெரிந்தது. உடனே அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான். இரவு ஏழு மணியளவில் குறிப்பிட்டதொகைப் பயணிகளுடன் பேருந்து யாழ். நோக்கிப் புறப்படு கிறது. இடையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் புறப்பட்ட பேருந்து, அதிகாலை நான்கு முப்பது மணியளவில், கொடிகாமத்தை வந்தடை கிறது. ஆரியசிங்க பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று சந்தைநாளாகையால், வியாபாரிகளின் நடமாட்டமும் விற்பனைப்பொருள்களைக் கொண்டுவருவோர் எண்ணிக்கை அதிகமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான எண்ணத்துடனான தொடுகை நேரடியான பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியிலான கி;ண்டல் கதைகள் என்பனவாகவும் இன்னும் விரிவாகவும் சொல்லிச் செல்லலாம். மேலும் அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சமூகத்தால் பாலியற் தொழிலாளர்களாக்கப்படுவதும் கூட ஒரு வகையில் வன்முறைதான். பாலியல் ரீதியான பேச்சுக்கள் அச்சிறார்களின் மனதில் என்றும் நிலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அவை மனதைத் துன்புறுத்தி வெறுப்புணர்வுடன் தங்கிவிடுகின்றன. அவர்களைச் சுற்றியுள்ள உறவு நட்பு அயல் பாடசாலை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிலிருந்து இவை நிகழ்த்தப்படுகின்றன. பாதுகாக்க வேண்டியவர்களும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்குமானவர்களே அவற்றைச்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மஞ்சள் அழகி? சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்... நான் கீத்துவிடம் சொல்வேன்... "சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற மாதிரியே இருக்கும்.' அவள் என்தலையில் செல்லமாக அடித்து, "ஏய் உனக்கு கம்பேர் பண்ண வேற ஒண்ணும் கிடைக்கலையா?' என்றாள். சண்மூவிடமே சொல்லி இருக்கேன்... முறைத்துக் கொண்டு அடிக்க வருவாள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
செருக்கைத் துறந்த சுகர் நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே. பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது. இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி. தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான். அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன் நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது. சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்க…
-
- 3 replies
- 631 views
-
-
ஒரு நிமிடக் கதை: இழப்பு அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. “ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!” “ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். “எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே” என்றாள் வாணி. “நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் …
-
- 3 replies
- 971 views
-