கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும் டிசே தமிழன் பகுதி-01 1. பொலித்தீன் பையைத் தன்னுடல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் நண்பனைப் பற்றிய கனவு அவனைத் திடுக்குறச்செய்து விழிப்படையச் செய்தது. நேரம் என்னவாயிருக்குமென சிவப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த அலாரமைப் பார்த்தபோது 3.25 A.M என்றிருந்தது. இனி விடியும் வரைக்கும் நித்திரை வராது என்ற நினைப்பு அவனுக்கு இன்னும் எரிச்சலைக் கொணர்ந்தது . இப்போதுதான் முதற்தடவையாக நண்பன் எரிந்துகொண்டிருக்கும் கனவு வருகின்றது என்பதல்ல; முன்னரும் பலமுறை வந்திருக்கின்றதுதான். ஒவ்வொருமுறையும் அலறிக்கொண்டு அதலபாதாளத்திற்கு விழும் கணத்தோடு ஓர் உறைநிலை…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்து போன ஒரு கணத்தைப் போல இந்தக் கணம் இல்லை. அப்போது சுவாசித்த காற்று வேறு, இப்போது சுவாசிக்கும் காற்று வேறு. அப்போது உடலில் இருந்த அணுக்களின் எண்ணிக்கையல்ல இப்போது இருப்பது. கடந்த வினாடியை விட ஒரு வினாடி வயது அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தின் பிறப்பும் முந்தைய கணத்தின் இழப்பிலிருந்தே பிறப்பெடுக்கிறது. இழப்புகள் வலிமிகுந்தவை. அவை வார்த்தைகளுக்குள் அடங்காமல் திமிறிச் சிதறுகின்றன. மனதின் பரணில் அடைகாக்கும் நினைவுகள் கால்நூற்றாண்டுத் தூசிகளுடன் பத்திரமாய் இருக்கின்றன. உதறுகையில் எழும் தும்மலில் காலங்கள் கண்களுக்கு முன்னால் விரியும். ஒவ்வொரு முறை கிராமத்து வீட்டுக்குச் செல்லும் போதும் எனக்குள் எழும் கலவையான உணர்வுகளை இனம் காண முடிவதில்லை. அந்த ஓட்டு வீட்டின் முற்றம…
-
- 2 replies
- 891 views
-
-
பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............ அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை. பண்ணை வீட்டுக்கு போகும் பிரதான நீர் வழங்கல் குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை …
-
- 2 replies
- 3.5k views
-
-
பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான். சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் திரும்ப பேசும். "மச்சி இன்னைக்கு பவுர்ணமி. மகாபலிபுரம் போகணும். அப் அண்டு டவுன் 100 கி.மீ. பத்திரமா போயிட்டு வந்துரலாமா" என்று கேட்டால் "பட்டையக் கிளப்பிடலாம் மாமு" என்று பதில் சொல்லும். அஃறிணைகளோடு பேசும் பழக்கம் எனக்கு எப்போது வந்தது என்று நினைவில்லை. தினமும் வீட்டுக்குள் நுழையும்போது கழட்டி விடும் என் செருப்புக்கோ அல்லது ஷூவுக்கோ மனதுக…
-
- 2 replies
- 2.4k views
-
-
இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது... புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?! புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும். இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது.. சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது... சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்... கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??! சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது.. அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஸ்துதி - சயந்தன் ஓவியம்: ரமணன் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை. நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது. அன்றைக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ (Pearl Harbor) தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.[/size] [size=4]சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா…
-
- 2 replies
- 2.3k views
-
-
எல்லாம் நன்மைக்கே! லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார். அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார். ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அன…
-
- 2 replies
- 2.2k views
-
-
நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…
-
- 2 replies
- 760 views
-
-
வணக்கம் வணக்கம் வாங்கோ என்ன எதிர்க்கட்சியில் சேர சந்தாவும் கொண்டு வந்திருக்கிறீர்கள் போல.இப்போதைக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை.இப்ப சாமிமாரைப் பற்றி எழுதினால்த் தான் எல்லோரும் வேலையையும் விட்டு போட்டு அரக்க பரக்க ஓடி வருவினம்.அது தான் நானும் ஒரு சாமியைப் பற்றி எழுதலாம் என்று வந்தேன். எல்லோருக்கும் நடிகர் வக்கீல் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை தெரிந்திருக்கும்.இவரிடம் போய் என்ன ஐயா நீங்கள் யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் போட்டு விளாசித் தள்ளுகிறீர்களே அப்படியானால் நீங்கள் எந்தக் கட்சி என்று ஒருக்கா சொல்லுவீர்களோ? இதில பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது. கனடாவுக்கு வந்தநாள் தொடங்கி வந்த எத்தனையோ கடிதங்களை எல்லாம் கீழ்வீட்டுச் சிற்றம்பல வாத்தியாரிடம் காட்டி விபரம் கேட்பதற்காக நாய்போல அவர்கள் வீட்டு வாசலிலே காத்திருந்ததும் வாழ்க்கை இரகசியங்களை ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஒரே ஒரு காரணத்துக்காக அவர்களோடு பங்கு போட்டுக்கொள்ள நேர்ந்ததும் போன்ற அவலங்கள் இப்பொழுது சண்முகத்துக்கு இல்லை. சண்முகம் படித்தவன்;. கணக்கிலும் உலக அறிவிலும் அவனும் கெட்டிக்காரன் தான். ஆங்கிலம் மட்டும் தான் அவனுக்கு தெரியாது. ஆனால் கனடாவைப் பொறுத்தவரை அதுவே அவனுக்கு பெரிய தலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட் நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும். முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தக…
-
- 2 replies
- 3.5k views
-
-
அம்மா என்னும் தெய்வம் கஜன் எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு. கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென…
-
- 2 replies
- 2.7k views
-
-
சிப்பாயும் போராளியும் அ. முத்துலிங்கம் ஓவியங்கள்: மணிவண்ணன் ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான். துப்பாக்கி சுடாதபோது தலையை உயர்த்தி சிப்பாயைச் சினத்துடன் பார்த்தான். அவன் பார்வையில் ஏளனம் இருந்தது. ‘என்ன, மறுபடியும் உன் துப்பாக்கி வேலை செய்யவில்லையா? உன்னுடைய ராணுவ அதிகாரிகள் உடைந்துபோன துப்பாக்கிகளையா சிப்பாய்களுக்குக் கொடுப்பார்கள்? அல்லது உன்னைப்போல உதவாக்கரைகளுக்குப் பழுதான துப்பாக்கிகள் போதுமென்று நினைத்தார்களா?’ சிப்பாய்க்குக் கோபம் வந்தது. ‘உன்னுடைய புத்தி க…
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்.. புளொட்டின்.. பாசிசம்..! தொடர்ந்து வாசிக்க: http://kuruvikal1.we...3543/v_p_01.pdf [பக்கம் 10 தொடங்கி 12 வரை] நன்றி விடுதலைப்புலிகள் ஏடு.
-
- 2 replies
- 766 views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒருநிமிடக்கதை: நடிப்பு! ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார். செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும். “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..” வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
இசைவு இராசேந்திர சோழன் நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
குறிச்சி என்பது? நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்…
-
-
- 2 replies
- 1.4k views
-
-
மறுமுறை சொல் உடையார் குமார் கிளம்பிச் சென்றதும் வாசல் கதவைத் தாளிட்டாள். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் படர்ந்தது. காலில் சிக்கிய தலையணையை வெறிகொண்டு எத்தித் தள்ளினாள். சில்வர் செம்பொன்று நாற்காலியில் இருந்து தரையில் விழுந்து உருண்டது. விளக்கினைப்போட்டு கண்ணாடி முன்நின்று பார்த்தாள். தன்முகம் ஏன் இவ்வளவு கிழடு தட்டி விட்டது. முப்பத்தைந்து வயதிற்குள் எல்லாம் முடிந்து போனதனாலா? உதடுகளைக் குவித்து பரிசோதித்தாள். ஐந்து வருட இடைவெளிக்குள் தனக்குப் பத்து வயது கூடிவிட்டது போல் உணர்ந்தாள். தொப்புளைச்சுற்றிய பிள்ளைப் பேற்றுத் தழும்புகளை வலது கை விரல்கள் அன்னிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தன. ஒவ்வொருமுறையும் குமார் அறைக்குள் வந்து கதவைச்சாத்திய உடன் அவள் அ…
-
- 2 replies
- 784 views
-
-
என்னடி மாலா.. திரும்பவும் வீடு மாறப் போறியே. சமான் சக்கட்டை எல்லாம் கூட்டிக் கட்டி வைச்சிருக்கிறா என்ன சங்கதி. அதுவும் இப்ப கவுன்சில் வீடு எடுக்கிறதும் கஸ்டமான நேரத்தில..... வாங்கோ.. ரேவதி அக்கா. இப்பதான் வந்தனியளோ. ஓமடி. பிள்ளையளை சுவிமிங்கில விட்டிட்டு.. இஞ்சால வந்திட்டு போவம் என்று வந்தால்.. உன்ர வீடு இப்படியாக் கிடக்கு. என்ன வீட்டுக்காரனோட பிரச்சனையே..?! வீட்டுக்காரன்.. பறுவால்லை அக்கா. 1200 பவுன் வாடகை வாங்கிக் கொண்டு.. 200 பவுன் கையில வாங்கிறார். மற்றவை இதே வீட்டுக்கு 1300 பவுன் வாடகையும் கையில 300.. 400 பவுனும் கேக்கினம். அந்த வகையில இந்தாள் பறுவாயில்லை.... அப்ப என்ன தான் பிரச்சனை உனக்கு. அடிக்கடி வீடு மாறிறதே வேலையாப் போச்சு. என்ன மகளுக்கு கச்மெண்…
-
- 2 replies
- 2k views
-
-
நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பா…
-
- 2 replies
- 754 views
-
-
ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை) "என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள். இத்…
-
- 2 replies
- 1.2k views
-