கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
இது யார் தப்பு?? சிட்னி முருகன் கோவில்! எம்மில் பலருக்கு வாழ்வோடு ஒன்றின போன ஒரு விடயம். பலருக்கு இது ஒரு ஒன்றுகூடி பேசுமிடம். பலருக்கு இது வாங்கிய புடவையையும், நகைகளையும் போட்டு மினுக்குமிடம். சிலருக்கு இது வியாபார ஸ்தாபனம். சிலருக்கு இது வருங்கால துணையை கண்டுபிடித்த இடம். நூற்றில் ஒருவருக்கு இது இறைவனை துதிக்கும் இடம். அந்த நூற்றில் ஒருவரின் கதை...ஒருத்தியின் கதை. இன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய மாணிக்கம், சகுந்தலா தம்பதியினரின் ஒரே மகள் சரண்யாவின் வாழ்க்கை கதை. 2002 ஆம் ஆண்டு சிட்னி முருகன் வருடாந்த தேர்த்திருவிழா. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய வந்த தமிழர்களுக்கு முதன் முதலில் ஒரு முழ…
-
- 44 replies
- 6.8k views
-
-
வணக்கம் வாசகர்களே!!! கள உறவுகளே !!!! ஓர் வித்தியாசமான கதையுடன் உங்களைத் தொடுகின்றேன் . இந்தக் கதை எழுதும்பொழுது பலத்த மனப் போராட்டங்களின் மத்தியிலேயே எழுதினேன் . உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ??? இந்தக்கதையை நான் யாரையும் மனம் புண்படுத்த எழுதவில்லை . மாறாக , இந்தக்கதை சொல்லவருகின்ற செய்தி ஒரு பொதுக்களத்தில் காய்த்தல் உவத்தல் இன்றி விவாதிக்கபடவேண்டிய அத்தியாவசியம் எங்கள் முன்னே இருக்கின்றது . வழமைபோல் உங்கள் எல்லோரது ஆதரவினையும் விமர்சனங்களையும் நாடி நிற்கின்றேன். நேசமுடன் கோமகன் ************************************************ சின்னாட்டி காலைக் கதிரவன் சோம்பல் முறித்தப…
-
- 78 replies
- 6.8k views
-
-
எதுவரைக்கும் எழுதுவது...:. குருணாகல் என்ற சிங்கள ஊரின் அழகு அற்புதமானது. பாறைகள் மலையாகவும், குளங்கள் ஓடைகள் போன்று நீண்டும், வயல்கள் பேராறு போன்று விரிந்தும் இருக்கும் அழகிய சிங்கள விவசாய பெரும் கிராமம். நகரம் என்று சொல்லப்பட்டாலும் கிராமியமே எங்கும் பரவி இருக்கும் ஒரு பிரதேசம் பெரும் பாறைகள் மலையாக எழுந்தும் 'வெவ' என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பெரும் குளங்கள் பல கொண்டும் இருக்கும் அந்த அழகிய சிங்கள அப்பாவி கிராமவாசிகளால் நிரம்பிய நகரத்தில் நான் குருணாகல் ஸகிரா பாடசாலை எனும் தமிழ் மொழியிலான முஸ்லிம் பாடசாலைக்கு போய்க்கொண்டு இருந்த 1983 இன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் என் அப்பா அவசரமாக தன் 'ரலி' சைக்கிளை உழக்கிக் கொண்டு மத்தியானத்துக்கு சற்று பிந்திய ஒரு ந…
-
- 58 replies
- 6.7k views
-
-
கடந்த ஞாயிறு பின்னேரம் 3 க்கு போய் இருபது டொலரை வீணாக்க வேண்டுமா என நான் யோசித்துகொண்டிருக்க, சன் டி வி பார்த்துக்கொண்டிருந்த மனைவி கூப்பிட்டார் “அப்பா இஞ்சை வந்து பாருங்கோ யார் டி வி யில் நிற்கின்றார் என்று “. நானும் எட்டிப்பார்த்தேன். சூர்யா,திரிஷா நடித்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது அதில் சூர்யா ஒரு இளைஞனை பேசிக்கொண்டிருந்தார் .”அட நம்ம கார்த்திக்.ஆள் அப்படியே இருக்கு,பாவம் இப்பவும் இரண்டு மூன்று நிமிட காட்சிகளுடன் தான் போல தான் கிடக்கு இவர் நடிப்பு ”. பத்துவருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு ஒருமாத கனவுப் பயணம் போனோம்.கன்னியாகுமாரி ,நாகர்கோவில் ,கேரளா படகு வீடு,கோவளம் கடற்கரை,மைசூர்,ஊட்டி,பின் சென்னையும் முக்கியமாக மனைவியின் சொப்பிங்.மூத்த அக்கா போன் பண்ணி சொன்னா “சால…
-
- 14 replies
- 6.7k views
-
-
நின்றறுத்த தெய்வம் இது ஒரு உண்மைக் கதை - சில பெயர்கள் மாறி உள்ளன. பப்பிலிருந்து வெளியே வந்தாள் சமந்தா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு. பரவாயில்லை, கருமியாய் இருப்பாள் என்று நினைத்தேன், ஜோ தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு நன்றாக பணத்தினை வீசி செலவு செய்தாள் என்று நினைத்துக் கொண்டாள், சமந்தா. 1983 ம் ஆண்டின் டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சமந்தா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள். 'ஏ..ஏய், சாம்... முட்டாள் தனமாயிராமல் காரை அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், சூசன் தனது ஆண் நண்பனுடன். …
-
- 57 replies
- 6.7k views
-
-
என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சம்பவம் 1: அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவரது வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா…
-
- 40 replies
- 6.7k views
-
-
பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம் நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது. எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன் பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான். நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை பொழிந்து அவளை வளர்த்தனர்.படிப்பிலும் அவள் சுட்டி. நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின . பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு…
-
- 17 replies
- 6.7k views
-
-
இன்னுமொரு வரலாற்று தொடர் இப்பிடியான தொடர்களுக்கு இங்கு ஆதரவு கிடைப்பது மிக குறைவு எனினும் நான் படிப்பதை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடன் இதனையும் இணைக்க தொடங்குகிறேன்....... எங்கே புதியதொடர் ஒன்றையும் காணலையே என அன்புடன் விசாரித்த ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் பழையதொடர்களுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிய புன்கையூரான் அண்ணா ஈஸன் அண்ணா தமிழ் சிறி அண்ணா ரதி அக்கா சுபேஷ் சுண்டல் துளசி.. ஆகியோருக்கு நன்றியுடனும்..................... ******************************************************************************************************* Becoming Che என்னும் நூலை எழுதிய கார்லோஸ் ‘கலிகா’ ஃபெரர் (Carlos ‘Calica’ Ferrer) முதல் முத…
-
- 34 replies
- 6.7k views
-
-
" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?" எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே . "வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ". கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் . "நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ". பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் . "பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்". "என்னகதை ?" "இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்க…
-
- 52 replies
- 6.6k views
-
-
அப்பா! - சிறுகதை விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள். “என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?” “அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.” அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை. எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது. “நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...” “எதுக்கு இப்…
-
- 0 replies
- 6.6k views
-
-
அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன். அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்ட…
-
- 13 replies
- 6.6k views
-
-
நான் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில படிச்சனான். பல்கலைக்கழ விதியின் படி முதல்,இறுதி வருட மாணவர்களுக்குத்தான் விடுதி தருவினம்.ஏனைய மாணவர்கள் வெளியில் உள்ள தனியார் விடுதிகளில தான் தங்குறவை. சமாதான காலத்தில 2003 என நினைக்கிறேன், தமிழ் மாணவர்கள் ஒரு 15 பேர் சேர்ந்து சிரேஷ்ட கனிஷ்ட மாணவர்களாக ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனாங்கள்..அந்த வீட்டிற்கு ''mini hostel'' என்று ஒரு செல்லப்பேரும் வைத்தனாங்கள்.... தமிழ் மாணவர்கள் என்றால் தெரியும் தானே.. தமிழ் பெற்றோர்..பெடியன் படிக்கிறான் என்றால்,தாங்கள் சாப்பிடுகினமோ இல்லையோ பிள்ளையள் படிப்புக்கு தேவையெண்டு கேட்டா தலயை அடமானம் வைத்தாவது வாங்கி குடுப்பினம்... இப்பிடி எங்கட வீட்டில 8 கணணிகள் இருந்தது எண்டு நினைக்கிறன்..இப்பிடி கடும் வசதியள…
-
- 23 replies
- 6.6k views
-
-
புரட்டாதி 30 எனது பிறந்தநாள். முதல் நாள் இரவு 10 மணியளவில் நானும் எனது இரண்டாவது மகனும் கடையைப்பூட்டிவிட்டு காரில் புறப்படுகின்றோம். அவர் தொலைபேசியில் குறும் செய்தி அனுப்பியபடி வருகின்றார். இடையில் அப்பா வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி என்னை இறக்கிவிடமுடியுமா என்று கேட்கின்றார். எதற்கு? அதுவும் இந்த நேரத்தில்?? இது நான். எனது நண்பர் ஒருவரை சந்திக்கணும் சில நிமிடங்கள் மட்டுமே. சரி கெதியாக வா என்ற படி பயணம் தொடர்கிறது. இடையில் யாரிடம் போறாய்? என்ற கேள்விக்கு தன்னுடன் படித்த பெண் வீட்டுக்கு என்று பெயரையும் சொல்கின்றார். அந்தப்பிள்ளை பற்றி முன்பும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வகுப்பில் எப்பொழுதும் முதலிடம். உயர் தரத்திலும் எல்லா பாடத்திலும் திறமைச்சித்தி பெற்றவர…
-
- 77 replies
- 6.6k views
-
-
தண்ணீரிலே தாமரைப் பூ (1) 'வசந்தங்கள் வாழ்த்துரைக்க வான்மேகம் பூத்தெழிக்க சொந்தங்கள் சூழ்ந்து நிற்க சொர்க்கமே அருகிருக்க மங்கள மேளமது சங்கமம் என ஒலிக்க தங்கமாய் வந்ததொரு தரமான வசந்தவிழா' விடிந்தால் திருமணம். வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்…
-
- 30 replies
- 6.6k views
-
-
"டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன். ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள். நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு . "ஏன்டா...! பள…
-
- 64 replies
- 6.4k views
-
-
வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…
-
- 0 replies
- 6.4k views
-
-
அந்தச் சிறுமி தன் தாயுடன் இரயில் நிலையம் வந்திருந்தாள். துறுதுறுவென்று அழகாயிருந்த முகத்தில் வறுமையின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களுடைய நிலையை முழுவதுமாய் உணர்த்தியது. அவள் தாய்க்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே தெரிந்தார். இப்பொழுது இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. சிறுமி ஜன்னலூடாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் கட்டடங்களும் மிக வேகமாக பின்னோக்கி ஓடுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக இருக்கையில் வந்து அமர்ந்த…
-
- 17 replies
- 6.4k views
-
-
April 23rd, 2011 நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று உரிமைகோரரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்…
-
- 60 replies
- 6.4k views
-
-
" ஹலோ, ஆர் யூ ரமிழ்?" பின்னால இருந்து வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தன். அதே தமிழ் ஆண்டி பொட்டு வைச்சு, நம்ம ஊரில் தலை பின்னுவது போல பின்னிக்கட்டி, கையில 2 உடுப்போட நிண்டா. " நே" எண்டு அவா இங்கிலீசில கேட்ட கேள்விக்கு டச்சில "இல்லை" எண்டு பொருத்தமில்லாம பதிலை சொல்லிட்டு சட்டெண்டு முன்னுக்கு திரும்பிட்டன். பொய் சொல்லேக்கையும் பொருத்தமா சொல்லணும் எண்டுவாங்க. அது பேசி வைச்ச பொய் அதைதான் பொருத்தமா சொல்லணும். இது திடீரெண்டு நினைச்சு வைக்காம சொன்ன பொய். சரி பொய் பொய் தானே இதில பிறகென்ன நியாயப்படுத்த வேண்டி இருக்கு எண்டு நெச்சன். திரும்பியே பாக்காமல் எனது நேரம் வர காசை குடுத்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு நண்பிகளோட அந்த ஆண்டி பக்கமே பாக்காம ஓடி வந்தன். என்னவோ மனசுக்க நெர…
-
- 37 replies
- 6.3k views
-
-
அன்பு அம்மா. வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல் கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும் நீங்கள் யார் என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா இவங்கள் எதுக்கு இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை ஆரோ தேடி வந்திருக்கினம் வந்து பாருங்கோ என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார் என்றதும…
-
- 28 replies
- 6.3k views
-
-
என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன். நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி…… புளியங்குளத்திலும் முகமாலையில…
-
- 27 replies
- 6.3k views
-
-
பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது. சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள். சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க, ஏக்கம் தணிப்பவளாய்…
-
- 46 replies
- 6.3k views
- 1 follower
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(உறக்கத்தை தொலைத்த காதல்)..ஜம்மு பேபியின் "மெளனித்த சந்திப்பு"..(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)..கவுஸ்புல
-
- 53 replies
- 6.3k views
- 1 follower
-
-
காட்சி 1 ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள். (முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது) மனைவி : அப்பா இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு. (தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்) எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல. நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு? மனைவி : …
-
- 62 replies
- 6.2k views
-
-
விடை கொடு விடை கொடு மண்ணே... வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை …
-
- 37 replies
- 6.2k views
-