கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
வெளிச்சக்கொடி - சிறுகதை சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில் திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும். கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில விஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில…
-
- 1 reply
- 1.5k views
-
-
உன்னை அறிவேன் மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்…
-
- 0 replies
- 680 views
-
-
அன்பின் நிழல் - சிறுகதை செந்தில் ஜெகன்நாதன் - ஓவியங்கள்: ஸ்யாம் மனம் மிகவும் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக மது குடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ இந்த ஐந்தாவது மாடியிலிருந்து அப்படியே குதித்துவிடலாமா என்றிருக்கிறது. சற்று முன்னர் சுவரில் மோதிக்கொண்டதால் தாங்க முடியாத தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. இதயத்துடிப்பு இப்போது என்ன வேகத்தில் இருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை. அது துடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை. ஏன் இப்படி மனக்கிலேசத்துடன் அல்லாடுகிறேன்? ஏன் இப்படிப் புலம்புகிறேன்? காரணம், என் அப்பாவை இப்போதுதான் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆம், என்னைப் பெற்ற தந்தையைத்தான்! அவரின்…
-
- 0 replies
- 4.4k views
-
-
ஒரு பேபரிற்காக எழுதியது மறந்த நாள் ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன். ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்ல…
-
- 14 replies
- 2.8k views
-
-
படித்ததில் பிடித்தது👌👌 ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். …
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
வசந்த கால கோலங்கள் ............. அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . ,காலை பொழுதினிலே ,பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறை வழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் .அதிபர் விடைபெறுவார் .உயர்வகுப்பில் தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும் ,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது . மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அ…
-
- 3 replies
- 1.9k views
-
-
மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன். ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால…
-
- 35 replies
- 6k views
-
-
அருட்பெருஞ் சோதி அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது. தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்…
-
- 0 replies
- 683 views
-
-
அவளது வீடு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பி…
-
- 2 replies
- 4k views
-
-
எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
(இது சிறுகதைதான் ஆனால் நீளமான சிறுகதை) வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம். அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது. அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்…
-
- 20 replies
- 1.8k views
-
-
ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்…
-
- 13 replies
- 2.2k views
-
-
இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழ…
-
- 303 replies
- 61.1k views
-
-
நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது எனது காணியில் பாதையை அடைத்துக்கொண்டு நின்ற மாமரத்தை தறிக்கவேண்டியிருந்தது. பெருமரங்கள் தறிப்பதற்கு முதல் விதானையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள்....அதனால் விதானையாரின் அலுவலகம்? சென்றேன். அவரது அலுவலகம் ஒரு பழையவீட்டின் முன் விறாந்தையில் ஒரு அறையுடன் ஒதுக்கப்பட்டிருந்தது....வீட்டுவிறாந்தையில் ஒரு மேசையும் அதன் முன் ஒரு வாங்கும் போடப்பட்டிருந்தது. அவர் ஒன்று விட்டு ஒருநாள் வேலைக்கு வருவார் என்று போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது....எனது நல்லகாலம் நான் போனபோது onduty யில் இருந்தார்....ஆனால் பெரும்பாலும் அவரை தேத்தண்ணி கடைகளில்தான் காணமுடியும் என்றார்கள்.....வேலை நேரத்திலும் அடிக்கடி வெளியேபோய் நினைத்த நேரத்திற்கு வருவாராம்.... நான் போனது ஒர…
-
- 12 replies
- 5k views
-
-
உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்த…
-
-
- 4 replies
- 844 views
- 1 follower
-
-
இங்கேயும் ஒரு அவலம்!! ஆக்கம் - களுவாஞ்சிக்குடி யோகன்!! கடிதம் வந்திருந்தது.நாட்டிலிருந்து தங்கை அனுப்பியது.பிரித்து சாதரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தாள்.வாசித்து முடிந்ததும் அழுதே விட்டாள் யாமினி.கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது. நிறைந்த கண்ணீரோடு மீண்டுமொருமுறை அதை வாசிக்கத் தொடங்கினாள்.அக்கா,நாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.அது தீர்ந்து மறுபடியும் சமாதானம் உருவாகுமென்ற நம்பிக்கையும் எம்மிடமிருந்து விட்டுப் போயிற்று.அப்படியான நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடக்கின்றன. செல் விழுந்து அப்பாவிற்கு ஒரு கால் ஊனமானது உனக்குத் தெரியும்,அன்று இராணுவத்தினர் திடீரென ஊருகுள் புகுந்து விட்டார்கள்.அயலில் யாரும் இல்லை.பக்க…
-
- 15 replies
- 3.2k views
-
-
தொடரும் ............ (மன்னிக்கவும் தவறுதலாக அழிபட்டு விட்டது )
-
- 0 replies
- 790 views
-
-
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய …
-
- 1 reply
- 343 views
-
-
ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு ‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ - ரம்யா அங்கலாய்க்க... ‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும் இப்பத்தானே கொட்டிக்கிட்டோம்! ச்சே...வடை போச்சே..!’’ என வடிவேலு குரலில் புலம்பிய சுமி, ‘‘ஹூம்... நம்ம கவுரிக்குதான் கொடுப்பினை! கூப்பிட்டு கொடுத்திடு’’ என்றாள். உடனே கவுரியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள் ரம்யா. ‘‘அடடா, இப்பதான் சாப்பிட்டேன்மா! வேணா நம்ம வாட்ச்மேனுக்கு கொடுத்திடலாம்மா’’ என கவுரி சொல்ல... ‘‘சர…
-
- 0 replies
- 355 views
-
-
ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார். பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு. ‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. …
-
- 1 reply
- 1.5k views
-
-
பெத்த மனசு ( சிறுகதை) செந்தமிழ்ச்செல்வி தம்பி மதியழகா... நான் உன் கிளி சின்னம்மா பேசுறன்பா.... உன் அம்மாவ ஒருதடவ வந்து பார்த்துட்டு போயிடப்பா... மருந்து மாத்திரை எதுவும் சரியாகல... எதுவும் சொல்லமுடியாதுப்பா.... என்று பேசிய கிளி சின்னம்மாவின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்தன் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது... சரிம்மா... நான் சீக்கிரமா வரன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு எனது அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் அப்பா எனக்கு ஆறு வயசிலயே விபத்தில இறந்திடாரு... அப்போ தங்கை றேனுவிற்கு மூனு வயசு. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அம்மாதான்... அம்மா படிகல ஆனா பக்குவமானவங்க.. நல்லது கெட்டது எல…
-
- 0 replies
- 12.9k views
-
-
இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…
-
- 0 replies
- 1.2k views
-
-
பறவைகள் கத்தின பார் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... க.சீ.சிவகுமார், ஓவியம்: டிராட்ஸ்கி மருது தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது. ''அண்ணன எரிச்சது இந்த இடத்துலதான்'' - கார், கணக்கன்பரப்பைக் கடக்கும்போது ராம…
-
- 0 replies
- 1.4k views
-