வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
390 topics in this forum
-
[size=5]பிரபாலினி பிரபாகரன்(TAMILWOMAN-Prabalini) இலங்கையில் பிறந்து சிறு வயதில் புலம்பெயர்ந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் பெண். பாடகிகள் கவிஞர்கள் என்று பல இலங்கை பெண்கள் அன்றும் இன்றும் நம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் இசையமைப்பாளர் இலங்கையில் இல்லாத குறையை தீர்த்து வைத்து நம் எல்லோருக்கும் பெருமை வாங்கி தரும் இவர் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு. இலங்கையின் முதல் தமிழ் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி இசைத்தட்டுவடிவில் வெழியிட்ட பெருமைக்குரியவர் [/size] [size=5] பழம் பெரும் கலைஞர் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ். இந்த பாடலை அன்று தனது காதலி மாலினி பரமேஷுக்காக வெழியிட்டார் M…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுவிஸ் வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்டிடுக்கும் இப் புதிய பாடல் Youtube இணையத்தளத்தில் பிரபலியம் அடைந்து வருகிறது.
-
- 1 reply
- 848 views
-
-
16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன் (சிலாபம் திண்ணனூரான்) “உங்களிடம் இருக்கும் சக்தியை முயற்சியின் ஊடாக செயல்படுத்தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்திக்கு அடிப்படையாக இருப்பது முயற்சியின் மூலக்கூறு. அதையே துணிவு என்கிறோம். துணிவு இருந்தாலே போதும். அதுவே இந்த உலகத்தை சிறிதாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்சத்துக்கு தளர்வு கொடுங்கள். அப்போது துணிவு பிறந்துவிடும்” என்கிறார் நாதஸ்வர கலைஞர் என். அரிஹரசுதன். ஒரு திருமண நிகழ்வின் சுதன் நாதஸ்வர இசைக்கருவியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்க…
-
- 1 reply
- 616 views
-
-
மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன்!… முதல் சந்திப்பு …. முருகபூபதி. யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதிவருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர் யார்..? என்பது பற்றி சொல்லியவாறே இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன். நான் வாசிக்கும் எவரதும் இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார். இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாட…
-
- 1 reply
- 765 views
-
-
-
நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை! கலாநிதி சர்வேந்திரா தாசிசியஸ் மாஸ்டர் தனது 75வது அகவையை இவ் ஆண்டில் (2016) நிறைவு செய்திருக்கிறார். இதனையொட்டி எதிர்வரும் 17.09.2016 அன்று இலண்டன் மாநகரில் பவளவிழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் சமகாலத்தில் கண்ட ஈழத் தமிழர் தேசத்தின் மிகப்பெரும் ஆளுமைகளில் தாசிசியஸ் மாஸ்டர் முக்கியமானதொருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது வாழ்க்கையே இதற்கான சாட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஒரு நாடகராக, ஊடகராக, ஏடகராக ஈழ தேசத்தின் வரலாற்றில் அவர் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். அவரது பல்பரிமாண ஆற்றலின் ஊடாக தமிழர் சமூகத்தின் பேராளுமைகளில் ஒன்றாக அவர் பரிமாணம் எடுத்துள்ளார். ஒரு சமூகத்…
-
- 1 reply
- 2k views
-
-
எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புலகம் by அரவின் குமார் நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. …
-
- 1 reply
- 671 views
-
-
கோவை: மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான "மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். மணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்!- சத்யராஜ் புகழாரம் இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது: பெரியார், மார்க்ஸ் ஆகியோர் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள். அவர்களது சிந்தனை வழியில் வாழ்ந்து மறைந்தவர் இயக்குநர் மணிவண்ணன். தனிமனித லட்சியங்களைத் தவிர்த்து சமுதாய மாற்றத்திற்கான லட்சியங்களுடன் வாழ்ந்த அவர், திரைப்பட இயக்குநர், திரைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் பாரதியார்! -தி.வரதராசன் செப்டம்பர் 11: மகாகவியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று! ஆயிரம் ஆண்டில் அதிசயமாக ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்புசொல்லச் சொல்லச் சுவைமிகும் பெயரைஎண்ண எண்ண இனித்திடும் பெயரை பிறந்தநாள் கண்டு நாம் பேசி மகிழ்கிறோம்…” கவியரசு கண்ணதாசன் மகாகவி பாரதியைப் போற்றி அவரது பிறந்த நாளின்போது தமது “கண்ணதாசன்” மாத இதழில் (செப்டம்பர் 1976) எழுதிய கவிதைவரிகள் இவை. பிறந்த நாள்-நினைவு நாள் என இரு நாட்களிலும் மகாகவியை மறக்காமல் மனதில் ஏந்துகிறது தமிழ்நாடு. “ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியிலும்சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்பண்ணை மடவார் பழகு…
-
- 1 reply
- 2.6k views
-
-
நேற்று அளவெட்டிஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இசை தொகுப்பு வெளியீடும் இசை நிகழ்ச்சியும் சில புகைப்படங்கள் 2நன்றி முகனூல்
-
- 1 reply
- 859 views
-
-
இவ்வார ஆனந்தவிகடனில் "உயிர்த்தெழும் சாட்சியங்கள்" என்ற தலைப்பில் ஈழத்து படைப்புகள் பற்றிய பார்வை (Facebook)
-
- 1 reply
- 955 views
-
-
பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்! மதரா சென்னை கவின் கலைக் கல்லூரியின் ஓவியத்துறை மாணவ, மாணவிகள் 10 பேர் இணைந்து லலித் கலா அகாடமியில் கடந்த வாரம் ‘அன் ஸ்போக்கன்’ (Un spoken) என்ற தலைப்பில் தங்களது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். சமூக நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக, உள் மனப் போராட்டங்களாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேல் வைக்கப்படும் கேள்விகளாக, உழைக்கும் மக்களின் மேல் உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவர்களது படைப்புகள் அமைந்திருந்தன. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் நூற்றாண்டு கடந்தும் அங்கே அதே நிலையிலே உள்ளனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப…
-
- 1 reply
- 3.5k views
-
-
ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம். "யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?” என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாட்டு, நடனத்தில் தங்கள் குழந்தைகள் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அந்தத் துறையில் எப்படி மோல்ட் செய்ய வேண்டும் என்ற தன் அனுபவத்தை ஆலோசனையாக சொல்கிறார் கர்நாட இசைப் பாடகி சுதா ரகுநாதன். "குழந்தைகளுக்கு இயல்பிலேயே இசை மீது விருப்பம் இருக்கும். அதன் காரணமாகவே ரேடியோ/ டி.வி/விழாவில் பாடல்கள் ஒலி, ஒளிபரப்பாகும்போது அதைக் கேட்டு தானாகவே பாடத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குள் பாடுகிற ரசனை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பாடுகிற பயிற்சியை குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதில் தரலாம். குழந்தைகள் ஆர்வத்தோடு பாடினாலும், ஒரே இடத்தில் சில மணி நேரங்கள் அமருவதற்கு பொறுமை வேண்டும். அப்போதுதான் அவர்கள் கவனமாக பயிற்சிப் பெற முடியும்" என்ற…
-
- 1 reply
- 716 views
-
-
இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன். வ.ஐ.ச.ஜெயபாலன்.ஈழத்து நவீன இலக்கியத்தில் முக்கியமானவரும் ஈழத்து பின்நவீனத்துவ இலக்கிய வடிவத்தை வளர்த்தெடுத்த செயல்பாட்டாளர்களுள் ஒருவருமான முஸ்லிம் கவிஞர் பொத்துவில் மஜீத் அவர்கள், கடந்த மார்ச் 27, 20019ல் காலமானார். இச்சேதியை சில வாரம் பொறுத்து தயக்கத்துடன் பதிவுசெய்கிறேன். ஏனெனில் அவன் மார்கண்டேயன். இறந்து போகிறவன் என்றால் என் தோழமைக் கவிஞன் மஜீத், இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பே இறந்து போயிருக்க வேண்டும். 1997ல் இருந்து 2019 வரை, இருபத்திரெண்டு வருடங்களாக கூடுகலைந்த குழவிகளாய் துரத்திய மரணம் சூழ்ந்து, கொட்டும் வலிகளைத் தாங்கியபடி, தன் அச்சுறுத்தபட்ட இருத்தலை சொல்லாடல்களாக வளர்த்து பூக்கவைத்து கவிதையாக தொடுத்து தந்துகொண்டிருந்தவன் அவன். …
-
- 1 reply
- 1.5k views
-
-
கி.ராஜநாராயணன் புதுச்சேரி 99-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் எழுத்தாளர் கி.ரா. கரோனா காலத்தில் தனது கையெழுத்தில் ’அண்டரெண்டப் பட்சி’ எழுதி முடித்து கைப்பிரதியாகவே வெளியிட்டுள்ளார். தொடர் எழுத்தில் மும்முரமாக உள்ளார். கி.ரா. என்றும் 'தாத்தா' எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப…
-
- 1 reply
- 908 views
-
-
தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்ற…
-
- 1 reply
- 252 views
-
-
efc439d418dd0dd2db7f7b8cf4310a3a காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார். https://scontent-ord.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11038472_359598487572200_4554499654009845864_n.jpg?oh=7b6f75b48ca7a174fe9b999f55a9bfc1&oe=55C71C28
-
- 1 reply
- 931 views
-
-
இன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது. தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது. இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன். யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன. அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது. இது ஒருவிதத்தில் தமிழ் இணையத்தளங்களை அணுகவும், ஆக்கங்கள், கருத்துக்களைப் பகிரவும் தடையாகவும் இருந்தது. இத்தகைய ஒரு காலப்பகுதியில் வெவ்வேறு…
-
- 1 reply
- 552 views
-
-
மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு. — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தர…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி 'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. கேஸ்டிங் உதவியாளர் சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத்து இசையமைப்பாளர் சுதாகரன் கணபதிப்பிள்ளை அவர்களின் செவ்வி TIME FM-ITR வானொலி காற்றலைகளின் பெட்டகம் நிகழ்ச்சியில்!! இலண்டனில் இருந்து வருகை தந்திருக்கும் !!இசையமைப்பாளர்,இந்தியத் திரையுலகில் சாதனை(80 களில்) படைத்த ஈழத்து இசையமைப்பாளர் SUTHAKARAN KANAPATHIPILLAI அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்!!
-
- 1 reply
- 1.2k views
-
-
கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர். வாழ்க்கைக் குறிப்பு இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார். மெல்லிசைப் பாடல்கள் இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிக…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேர்காணல்: போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள் - யோ. கர்ணன் ஞாயிறு தினக்குரலில் வெளியானது. நேர்கண்டவர் மல்லிகா. கேள்வி- எழுதத் தொடங்கிய ஆரம்பகாலம் பற்றிச் சொல்லுங்கள்? பதில்- நான் பிறந்ததும் வளர்ந்ததும் புத்தகங்களிற்கு மத்தியில்த்தான். எங்கள் வீட்டில் நிறைய இந்தியசஞ்சிகைகளின் சேமிப்பிருந்தது. பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதங்களில் வந்த தொடர்கதைகள் எல்லாம் தொகுத்து கட்டப்பட்டிருந்தன. வரலாற்று நாவல்கள் எல்லாம் இருந்தன. அதனால் சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. நிறைய வாசிப்பவர்கள் எல்லோரும் எழுதிப்பார்ப்பார்கள். அப்படித்தான் பாடசாலை நாட்களில் அம்புலிமாமா பாணிக்கதைகள் சில எழுதினேன். அவற்றை கொப்பியில் எழுதி சிறிய சிறிய புத்தகங்களாக தொகுத்தும் வைத்தேன். …
-
- 1 reply
- 935 views
-
-
ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்! ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே அன்பு! குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே இதயம்! குழந்தைகள் சொல்கின்றன: கடவுளுக்கு நன்றி கூறித் துதிப்போம்! குழந்தைகள் சொல்கின்றன: ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு. … நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் (ஒரே இதயம்தான்) தனது சொந்த நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள உலகையே காயப்படுத்திய நம்பிக்கையிழந்த பாவிக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா? … ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு ஆதியில் இருந்ததுபோலவே (ஒரே அன்புதான்!) இறுதியில் வருவதைப் போலவும்தான் (ஒரே இதயம்தான்!). சரிதானே! கடவுளுக்கு நன்றி…
-
- 1 reply
- 799 views
-