வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா “இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நா…
-
- 3 replies
- 1.6k views
-
-
கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். நீ யாரையோ பார்த்து பிரமிக்கும் அதே வினாடியில் யாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள் என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு. உங்கள் அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன். விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன். பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்க…
-
- 4 replies
- 4.3k views
-
-
கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்! (01)… முருகபூபதி. June 17, 2018 ரயில் பயணங்களில் படைப்பு இலக்கியம் எழுதிய “அமிர்தகழியான்” செ. குணரத்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியவர் முருகபூபதி. எழுத்தாளர்கள் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் தேடுபவர்கள். விமானம், ரயில், பஸ் பயணங்களில் வாசிக்க முடியும். எழுதவும் முடியுமா? தற்காலத்தில் கணினி யுகத்தில் பயணித்துக்கொண்டே தம்வசமிருக்கும் மடிக்கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் எழுதமுடியும். இத்தகைய வசதிகள் இல்லாத அக்காலத்தில் நம்மத்தியில் ஒரு எழுத்தாளர் மட்டக்களப்பு – கொழும்பு இரயில் மார்க்கத்தில் பயணிக்கும் வேளைகளிலும் ரயிலிலிருந்தவாறே படைப்பிலக்கியம் படைத்திருக்கிறார் எனச்சொன்னால் நீங்கள்…
-
- 10 replies
- 3k views
-
-
சிறகிலிருந்து பிரிந்த இறகு... 'பிரமிள்'! இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் கண்ட மாமேதைகளான பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பின் தோன்றிய மிக முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு ஆளுமை தருமு சிவராம் பிரமிள். சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள் இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திரிகோணமலையில் ஏப்ரல் 20, 1939-ல் பிறந்தார். மிக இளமையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக விளங்கிய பிரமிள் கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், தத்துவம், மொழிபெயர்பு, ஓவியம், களிமண் சிற்பம், ஆன்மீகம், ஜோதிடம், எண் கணிதம் என சகல துறைகளிலும் மேதையாக விளங்கினார். சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறுபத்திரிகையான 'எழுத்து' பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத்தொடங்கிய பிரமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் November 26, 2021 — ஏ.பீர் முகம்மது — உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்பியல் வரலாற்றில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை பெரும் ஆளுமையாக இருந்தவர். சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல் திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். அவரளவில் இலக்கியத்தில் சாதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த பிறிதொரு எழுத்தாளர் நம்மிடையே இல்லை. யாழ். நல்லூரிலே பிறந்து மட்டக்களப்பு வாசியாகவே வாழ்ந்து சாதனைகள் தொட்ட இந்த எழுத்துலகச் செம்மலின் இறுதி மூச்சு அவுஸ்திரேலியாவிலே 2014 நவம்பர் 26இல் அடங்கி இன்றுடன் ஏழு வருடங்கள் முழ…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை 20.05.1938~21.09.2005 வாழ்க்கைக் குறிப்பு: ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார். காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
கண்ணதாசன் பிறந்த நாள் : ஜூன் 24 பதினைந்து ஆண்டுகள். இரண்டாயிரம் பாடல்கள். கோலிவுட்டின் சளைக்காத பாடலாசிரியர் நா.முத்துகுமார். கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்களை எழுதிவரும் கவிஞராகவும் தொடர் முத்திரையை பதித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றிருக்கும் இவர், இயக்குநர்கள் விரும்பும் எல்லா வகைப்பாடல்களையும் எழுதிக் குவிக்கிறார். என்றாலும் கண்ணதாசனைப் போலத் தத்துவப் பாடல்களில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பது இவரது முனைப்பு. கண்ணதாசனைப் பற்றிக் கேட்டதும் ஒரு நொடிகூட யோசிக்காமல் பேச ஆரம்பித்துவிட்டார்... கண்ணதாசன் பற்றி எந்த வயதில் அறிந்துகொண்டீர்கள்? பத்து வயதே நிரம்பிய பள்ளி நாட்களில் கண்ணதாசன் தெரிந்துவிட்டார். கவிதை மாத…
-
- 2 replies
- 4.7k views
-
-
தமிழ் இசை விழா இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தந்த அட்டகாசமான தமிழ் இசை விழா. நிகழ்ச்சிக்கு அனுசரணையினை நாம் தமிழர் கட்சியினர் வழங்கி இருந்தனர். தமிழக அரசும், கலைவாணர் அரங்கை கொடுத்து உதவியது. மெய்சிலிர்க்க வைக்கும் தமிழ் இசைவிழா: கேட்டுப்பாருங்கள்.
-
- 5 replies
- 1.4k views
-
-
ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது * மே 2012 தொறான்ரோ பயணத்தையொட்டி கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் செயல்பாட்டாளரான ரதன் என்னுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் பதிவு * கடந்த பல வருடங்களாக ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஒரு சக தமிழன் என்பதற்கு அப்பால் உங்களைத் தூண்டியவை என்ன? குழந்தைப் பருவத்திலிருந்தே எனது வாழ்க்கைப் பின்னணி என்பது பல்கலாச்சார-பல்மத-பல்சாதியச் சூழலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. எனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். எனது தாய் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. எனது தாய்தான் எமது குடும்பத்தின் ஆதாரம். ஒரு குடும்பமாக நாங்கள் தெருவுக்கு வராமல் இருந்ததற்கு அவரது கடுமையான உழைப்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/bizarre/4118447/MIAlife-of-the-girl-in-brthe-Super-Bowl-storm.html
-
- 0 replies
- 989 views
-
-
தமிழ்க்கவி சோபாசக்தி தீபச்செல்வன் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்க்கவி, சோபாசக்தி, தீபச்செல்வன் மூவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். இவர்களுள் தமிழ்க்கவியைத்தான் எனக்கு நெடுங்காலமாகத் தெரியும். அவரை இரண்டாவது வன்னி அரசு (தமிழ் ஈழ அரசு)க் காலக்கட்டத்தில் கிழிநொச்சியில் சந்தித்து நண்பரானேன். கிழிநொச்சியில் அந்தனிஜீவா தலைமையில் வந்த மலையக தமிழ் பிரதிநிதிகளுடனான ஒன்று கூடலில்தான் தமிழ்க் கவியை முதன் முதலாக சந்திததாக ஞாபகம். அந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கலைதுறையை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த கருணாகரன் விமர்சகர் நிலாந்தன் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். சந்திப்பின்போது பொறுப்பாளர்கள் மலையக தமிழ் அரசியல் ப…
-
- 23 replies
- 3.5k views
-
-
அந்த ஆவண படத்தை பார்த்து முடித்த போது மனம் இரண்டு விஷயங்களில் கனத்து போயிருந்தது. மனம் முதலில் கனத்து போனதற்கு காரணம் ஆவண படம் ஏற்படுத்திய தாக்கம். இரண்டாவது காரணம் அரங்கில் பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகள். ஆவண படம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியது இப்போது இருப்பவர்கள் இலக்கியத்தில் சினிமாத்தனத்தை காட்டும் நிலையில் சினிமாவில் இலக்கியத்தனத்தை காட்டிய மாபெரும் கவிஞர். எனது முதல்வர் நாற்காலியை தாங்கிப்படிக்கும் மற்ற மூன்று கால்கள் எது என்பது எனக்கு தெரியாது ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்காக எழுதிய பாடல்கள்தான் என்று எம்ஜிஆரால் பராட்டப்பெற்றவர். பாட்டாளி மக்களின் வேர்வையையும்,விவசாயகூலிகளின் வேதனையையும்,கிராமத்து ம…
-
- 0 replies
- 838 views
-
-
கனடிய தமிழ் பாடகியும் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ளவருமான ஐஸ்வர்யா சந்துருவுடனான ஒரு சந்திப்பு.
-
- 2 replies
- 1.1k views
-
-
'பி.பி.சி. தமிழோசை' ஆனந்தி அவர்களின் நேர்காணல் பி.பி.சி. தமிழோசை என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர் ஆனந்தி அக்கா என தமிழ் உறவுகளால் அன்போடு அழைக்கப் படும் திருமதி ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பி.பி.சி. தமிழோசையில் பணிபுரிந்த ஓர் ஊடகவியலாளர். அழகான தமிழ் உச்சரிப்பால் பல நேயர்களைக் கவர்ந்தவர். மிக நெருக்கடியான போர்ச் சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரைச் சந்தித்து அவரது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தற்போது ஓய்வு பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் திருமதி ஆனந்தி அவர்களை வஜ்ரம் எனும் இதழுக்காக நேர் காணும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ் இணையத் தள நண்பர்களுக்காக அதை இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் இந்த ஊடக…
-
- 12 replies
- 7.1k views
-
-
சென்னை, அக். 20- பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் வீடு மயிலாப்பூர் சாலித்தெருவில் உள்ளது. எம்.ஜி.ஆர்., பி.யூ. சின்னப்பா நடித்த அரிச்சந்திரா படத்தில் அறிமுகமான இவர் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடக்க முடியாத நிலையில் இருக்கும் லூஸ்மோகன் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கமிஷனரிடம் புகார் கொடுக்கவேண்டும் என்று கூறியதும் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நான்கு வரியில் எழுதப்பட்ட அந்த ப…
-
- 24 replies
- 3.6k views
-
-
நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை! வணக்கம் உறவுகளே !! மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் . இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன். வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது. அப்போது நான் பார்…
-
- 3 replies
- 930 views
-
-
ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது - அ.முத்துலிங்கம் -கடற்கரய் சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை. 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார். இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்க…
-
- 7 replies
- 3.2k views
-
-
ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன. அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர…
-
- 44 replies
- 7.4k views
-
-
"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை" நிலாந்தன் நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. 'பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் …
-
- 24 replies
- 3.4k views
-
-
MIA என அறியப்பட்ட மாயா அருள்பிரகாசம் அவர்களது Paper Planes
-
- 10 replies
- 4.2k views
-
-
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது. ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல (`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- ) கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்? பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள…
-
- 0 replies
- 2.2k views
-
-
மூடநம்பிக்கைகள் மூலம் எந்த மக்களையும் ஏமாற்றமுடியுமென்பதற்கு தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் குபேராசிலை ஒரு உதாரணமாக அமைகின்றது. சீனர்களின் தயாரிப்பான இந்த சிலை வீட்டில் இருந்தால் நீங்கள் வேலைசெய்யாமல் சும்மா இருந்தாலும் பணத்தை அள்ளிக்கொட்டுமாம். நீங்கள் பணத்தை வைக்குமிடத்தில் இந்த சிலையை வைத்தால் பிறகென்ன நீங்களும் குபேரர்கள்தான். அதிலும் மற்றவர்கள் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தால்தான் சிறப்பாக வேலை செய்யுமாம். நான் நினைக்கின்றேன் தற்சமயம் குபேராசிலை இல்லாத தமிழர்வீடுகள் ஐரோப்பாவில் அநேகமாக இருக்காது என்று. வியாபாரிகளிள் விளம்பர தந்திரத்தில் ஏமாறுகின்றவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகின்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
"இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன." - லெ.முருகபூபதி நேர்காணல் – கோமகன் ஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன் ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன. ‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கா…
-
- 5 replies
- 1.1k views
-