பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
ஜகர்தா: இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர் அடுத்த ஆண்டுமுதல் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதி…
-
- 1 reply
- 1.4k views
-
-
எமது கடந்த காலத்திலிருந்த பாடம் கற்காவிட்டால், எமக்கு வருங்காலம் ஒன்று, வளமாக இருக்காது என்பது எமது கருத்து! இப்படியான துன்பியல் கதைகளை, நீங்கள் வாசிக்க நேர்ந்தால், இந்தத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந…
-
- 12 replies
- 13.5k views
-
-
பாலினம் கோபி சங்கர் “பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை. ஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை. இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை. இப்படி, ஒட்டுமொத்த…
-
- 4 replies
- 9.9k views
-
-
June 18, 2013 9:06 pm பதிந்தவர் admin சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம், பெண் கர்ப்பம் தரித்தாள் கணவன் – மனைவி என்று கருதப்பட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த நஜீமா (35)- இஸ்மாயில் (பெயர்கள் மாற்றம்) தம்பதிக்கு கடந்த 1994ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்க இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1999ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு இஸ்மாயில் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் இஸ்மாயில் இடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் நஜீமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், இஸ்மாயிலுக்கு குழந்தைகள்…
-
- 5 replies
- 3.2k views
-
-
திருமணம்.. திருமண நாள் நினைவுக் கொண்டாட்டம்.. 50ம் கலியாணம்.. 60ம் கலியாணம்.. போன்ற... நிகழ்வுகளுக்கு அப்பால்.. இப்போ புலம்பெயர் நாடுகளில் தம்பதி பூஜை என்று.. ஒரு கூத்து நம்மவரிடையே ஆரம்பமாகியுள்ளது. அண்மையில் ஜி ரி வி இலும் இது தொடர்பான விளம்பரங்கள் போகின்றன. லண்டனில் உள்ள ஒரு கோவிலில் இது நடத்தப்பட இருக்கிறதாம். அதுவும் சும்மா இல்ல 1000 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு பூஜையாம். வயசு போனவர்களும் தம்பதி சமேதரராய் எழுந்தருளி இருக்க கடவுள் அருள்பாலிக்கிறாராம். அத்தோடு இதற்கு கட்டணங்களும் அறவிடுகிறார்கள் போலவே தெரிகிறது..! நாங்கள் இப்போதுதான் இந்தத் தம்பதி பூஜை பற்றி கேள்விப்படுகிறோம். இது பற்றி கள உறவுகள் நீங்கள் உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் அறிந்த விடயங்களைப் பகிர்ந…
-
- 51 replies
- 8.5k views
-
-
இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால் எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube இல் இருந்த பட…
-
- 113 replies
- 15.5k views
-
-
வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும் இக்பால் செல்வன் மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, ம…
-
- 10 replies
- 2.3k views
-
-
முரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும். என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம்…
-
- 38 replies
- 6.8k views
-
-
ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்லலாகாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெவ்வேறு நாடுகள் அல்லது ஊர்களில் இருக்கும் கணவன்,மனைவி மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு தூரம் ஒரு இடைஞ்சலாக இருந்தது. இனிமேல் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் 'தொட்டே' ரொமான்ஸ் செய்யலாம். இதற்காக புதிய செல்போன் மென்பொருளும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலமாக நேரில் தொடுவதைப் போன்றே உணரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காண்டம் தயாரிக்கும் நிறுவனமான டுரெக்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது. இந்த புதிய முறைக்கு 'பண்டாவேர்'[Funderwear] என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நுட்பம் என்னவெனில், முதலில் பண்டாவேர் என்ற சென்சார் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை ஆண் மற்றும் பெண் அணிந்துகொண்டு இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் மென்பொருளுக்குள் நுழைந்து திரைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
தோலின் நிறத்தை வைத்து வெள்ளை, கறுப்பு , மஞ்சள், பிரவுண் (கபிலம் ) இப்படி மனிதர்களை பிரிப்பதும், அது சார்பாக ஒருவரை மேலானவர்/நல்லவர் அல்லது கிழானவர் / கேட்டவர் என ஒருவரின் நடை, உடை, பழக்க வழக்கம் , தொழில் பற்றி தெரியாமலே எம்முள் சிறுவயதில் இருந்து விதைக்கப்பட்ட எண்ணக்கருக்கள் வீறுகொண்டெழுந்து மனிதரை பற்றி முன் முடிவுகள் எடுப்பதிலும் முடிகிறது. இங்கும் யாழ் களத்திலும் மக்களின் நிறம் / தோற்றத்தை வைத்து ஒவ்வொரு இன குழுமத்தையும் தரங்குறைந்த பெயர்களால் சர்வ சாதரணமாக அழைப்பதை பார்த்திருக்கிறேன். ஊரில் முன்னர் அழகு சாதன பொருளகள் கிடைக்காத தன்மை/ அல்லது வசதியீனம் காரணமாக பெண்கள் பூசு மஞ்சளை முகம் முழுக்க பூசி, அழகு பார்ப்பது வழக்கம் (20- 25 வருடம் முன்) . இப்போது அது போய் , fa…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன??? இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது? சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்கள…
-
- 19 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவில் ஆண்(பெண்) உறை(condom) வாங்குவது எப்படி??
-
- 10 replies
- 7.5k views
-
-
பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும் போர்னோகிராபி மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற…
-
- 2 replies
- 4.5k views
-
-
கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
இதனைப் பார்க்க.... உங்களுக்கு, என்ன தோன்றுகின்றது. படம்: அஸ்ஸாஞ், தமிழ்நாடு ரோக்.
-
- 16 replies
- 2.1k views
-
-
ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ? எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, January 17, 2013 பொதுவாகவே வளர்ந்த நாடுகளில் இருப்போர் ஒழுக்கமற்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்து கீழை தேசத்தவர்கள் மத்தியில் உள்ளது. மேலைத் தேயத்தவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைகளை அறியாதவர்களே அத்தகைய கூற்றை வெளிப்படுத்துகின்றார்கள். சில தலைமுறைகளுக்கு முன் இங்கும் பழமைவாத வாழ்க்கை முறைகளே இருந்து வந்தன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி, மனித குலத்தின் நாகரிக எழுச்சி போன்றவை அனைத்தையும் மாற்றிப் போட்டுவிட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் புலம்பெயரும் கீழைத்தேயத்தவர்கள் இந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளோடு அறிந்தோ, அறியாதோ ஒன்றிவிட்ட போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே ! பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன். எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் த…
-
- 148 replies
- 14.4k views
-
-
அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே”என போகிறது சுலோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிப…
-
- 8 replies
- 24.1k views
-
-
குறிப்பு: இந்தப் பதிவு பேசாப்பொருள் பகுதில் பதியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்க. இங்கு பேசப்படும் விடயம், பலரிற்குப் பலத்த முரண்பாட்டையோ, கட்டுக்கடங்காத ஆத்திரத்தையோ, மன உழைச்லையோ உருவாக்கலாம். இதற்கு மேல் படிப்பது உங்கள் பொறுப்பு. இங்கு பேசப்படும் கருத்துக்கு விவாதபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்துக்களோடு ஒன்றில் விவாதிக்க அல்லது நான் பார்க்கத்தவறிய கோணங்களைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். ஒரு படத்தில் அம்மணமான அஞ்சலினா ஜோலி மீது அம்மணமான அன்ரோனியோ பன்டாறஸ் கட்டில் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது யாழ்களம் மனதில் தோன்றியது. அண்மையில், யாழ் களத்தில் திருமணத்தின் பின்னரான இதர உறவுகள் மற்றும் கவர்ச்சிகள் சார்ந்து கணிசமான கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அந்தப் பின…
-
- 53 replies
- 6k views
-
-
வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ் - இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகள…
-
- 8 replies
- 1.9k views
-
-
(படம் இணையத்தில் இருந்து) {இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!" "டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?" "என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா" "என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..." "ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?" "அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலம…
-
- 9 replies
- 1.6k views
-
-
-
பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....
-
- 28 replies
- 3.9k views
-