Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் கூட அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை. அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை. எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்…

    • 13 replies
    • 1.4k views
  2. சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…

  3. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமானார். " நடா" என்று அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் 4 தசாப்தங்களாக பணியாற்றியதுடன் 1997 முதல் 2005 ஆம் ஆண்டுவரை முன்னாள் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7521

    • 6 replies
    • 894 views
  4. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4.1k views
  5. யாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார். நிழலி குடும்பத்தினரின் துயரில் நானும் பங்குகொள்வதோடு, நிழலியின் அன்பு மாமனாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

  6. சீறுநீரகங்கள் இரண்டும் பாதிப்புற்ற நிலமையில் நந்தனின் அக்காவின் கணவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். அத்தானின் இழப்பில் துயருற்றிருக்கும் நந்தனுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். இழப்பின் துயரிலிருந்து நந்தன் மீண்டு வர பிரார்த்திப்போம்.

  7. இன்று வசம்பு அண்ணாவின் பிறந்த நாள் என்று யாழ் பிறந்தநாள் பகுதியில் இருக்கு...... அரசியல் ரீதியில் வேறு கொள்கைகளை கொண்டாலும் நான் யாழ் களத்தில் இணைந்த நாட்களில் யாழ் களத்தின் அசைக்க முடியாத ஒரு கருத்தாளனாக ஒரு நகைச்சுவையாக எழுத கூடியவராக அனைவருடனும் அன்புடனும் பண்புடனும் பழக கூடியவராக யாழ் களத்தை கலகலப்பாக வைத்திருக்க கூடியவராக இருந்தார்..... இந்த உலகை விட்டு அவர் பிரிந்துவிட்டாலும் இன்றும் யாழ் களத்தில் அவர் நினைவு சொல்லும் கருத்துகளும் அவர் பேரும் இருப்பது ஆறுதல்....

    • 9 replies
    • 1.3k views
  8. பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழி…

    • 7 replies
    • 1.5k views
  9. வாலி - காலத்தை வென்றவன் எஸ். கோபாலகிருஷ்ணன் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்ட வாலி அண்மையில் இறந்துவிட்டார். அவரது உடலுக்கு வயது 82 ஆகியிருந்தது. ஆனால் மனதளவில் அவர் என்றும் மார்க்கண்டேயன்தான். அவரது திறமைகளையும் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனைகளையும் எழுதிக்கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு பாடலாசிரியராக புரட்சி, பாசம், காதல், காமம், இழப்பு, வலி, துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் பாடல் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார். அவரது பாடல்வரிகள் இலக்கிய ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கின்றன. பாடல் வரிகளில் நவீனத்தையும் ஆங்கிலக் கலப்பையும் புகுத்தி தற்காலிக கிளர்ச்சி விரும்பிகள…

  10. Date of birth 1952 Profession Mayor, Politician Date of death 11 September 1998 Pon Sivapalan (1952 – September 11, 1998) was a Sri Lankan politician. Sivapalan succeeded Sarojini Yogeswaran as mayor of Jaffna after she was assassinated in 1998 . வஞ்சகம் வென்றதோ நஞ்சர் குண்டுகள் உந்தன் நெஞ்சைத் துளைத்தனவோ அறிவிலிகள் துரோகிகள் பின்னிய சதி பட முன்னின்று உயிர் கொடுத்தாய் மறப்போம நாம் உன்னை பிரிந்தாலும் நீ என்றும் நிறைவாய் எம் நெஞ்சில் வாழ்வாய் உன் மண்ணில் .

  11. வாலி - ஒரு சகாப்தம்

    • 0 replies
    • 605 views
  12. உணர்ச்சிக் கவிஞர் காசியாணந்தன் அவரகளினால் இயற்றப்பட்டு, நேற்றைய தினம் காலமான உயர் திரு. ஜீவன் ஜோசப் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட பாடல் இது. 70களில் இலங்கை முழுவதும் மட்டக்களப்பின் பெருமையை பறைசாற்றி ஒலித்த பாடல் இது. காலமான ஜீவன் சேர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. மட்டக்களப்பின் ஒரு மிகப் பெரிய அடையாளத்தை நாம் இழந்துவிட்டுள்ளோம். நன்றி.நிராஜ் டேவிட்

  13. நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 94வது வயதில் மரணமடைந்துள்ளதாக செய்தியொன்று தெரிவித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெல்சன் மண்டேலா Nelson Mandela 2008 இல் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பிறப்பு 18 சூலை 1918 (அகவை 94) முவெசோ, தென்னாப்பிரிக்கா வாழ்க்கைத் துணை எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்…

  14. நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன் எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ, சிகரெட்டோ பற்றவைத்துக் கொண்ட மணிவண்ணன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் சிமென்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தினமணியும், ஜனசக்தியும் தாமரையும் படிக்க அங்கே வருவார். அப்படித…

  15. பாட்டும் நானே பாவமும் நானே உஷா வை Flamboyant என்கிற பதத்துக்கு ஆங்கில அகராதியில் இப்படி விளக்கம்: Adjective 1. (of a person or their behavior) Tending to attract attention because of their exuberance, confidence, and stylishness. (உணர்ச்சிப் பொங்கலாலும், தன்னம்பிக்கையாலும், தனக்குரிய பாணியாலும் கவனத்தைக் கவர்தல்) ஒரு கோணத்தில் இது தவிர்க்க வேண்டிய குணம் போலத் தோன்றக்கூடும். ஆனால் இது குறிக்கும் பகட்டையும், ஆடம்பரத்தையும் தாங்க ஒரு தனி ஆளுமை வேண்டும். larger than life personality என்பார்களே, அதுபோல . ஐந்தடிதான் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய நடத்தையாலும், பேச்சாலும், நடையுடை பாவனைகளாலும் ஏழடிபோல தோன்றும் ஒரு கம்பீரம். தான் கதாநாயகனாய் நடிக்கும் பாத்திர…

  16. எமது யாழ்க்கள உறவான தமிழ்சிறி அண்ணாவின் மாமியார் இங்கிலாந்தில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சிறி அண்ணாக்கும், அவர்தம் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  17. சென்னை பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இவர் தனது இசைப் பயணத்தை 12 வயதில் தொடங்கினார். தொடர்ந்து 68 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வந்தார். வயலின் வாசிப்பதில் மேதையான இவரிடம் சீடர்களாகச் சேர பலரும் போட்டி போடுவர். Thanks to thinathanthi

  18. சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தன். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளியோர்க்கு வழங்கியவர். கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்…

    • 4 replies
    • 1.1k views
  19. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் ரா.கிரிதரன் முதல் முறை பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பார்த்தபோது சட்டைப் பையில் அவர் வைத்திருந்த பலவிதமான வண்ணப் பேனாக்கள் முதலில் ஈர்த்தன. சென்னை உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் அவர் உட்கார்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மூன்று மேஜைகள் தாண்டி நான் உட்கார்ந்திருந்தேன். தூரத்திலிருந்து பார்த்ததும் அவர்தானோ என சந்தேகம் இருந்ததால் அவரைப் பார்த்தபடி காலியாக இருந்த சீட்டைத் தேடி உட்கார்ந்திருந்தேன். அப்போது அவர் அடிக்கடி அங்கே வருவார் என்பதோ, அடுத்தஇரண்டு வருடங்களில் பல முறை பார்க்கப்போகிறேன் என்பதோ உணராதிருந்தேன். ஒரு பிரபலத்தை திடீரெனப் பொது இடத்தில் சந்தித்தால் வரும் பதட்டம் இருந்தது. என்னுடன் வந்த வடக்கத்திய நண்பருக்கு சந்தேகமாகவே இருந…

  20. துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாதரசி பாலசுந்தரம் அவர்கள் 13.03.2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), விஜயகுமார்(துன்னாலை), சந்திரவதனி(வந்தாரமுள்ளைப் பல்கலைக்கழகம்), விஜயகுமாரி(கண்டி), கமலகுமாரி(துன்னாலை), நிர்மலா(ஜேர்மன்), மனோரஞ்சிதம்(ஜேர்மன்), சத்தியபாமா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரஞ்சிதா, யசிந்தா, காலஞ்சென்ற தேவதாசன், ராகவன், சரவணபவான், யோகலிங்கம், விஜயசங்கர், விமலராஜ் ஆகியோரின் அருமை மாமியாரும், மயூரன்(லபோஷி), …

  21. பழம் பெரும் நடிகை ராஜ சுலோசனா சென்னையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் குடும்பத்துடன் ராஜசுலோசனா வசித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த ராஜசுலோசனா 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 350 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நம்பியார் போன்றோருடன…

  22. Internet இல் புரட்சியை ஏற்படுத்திய RSS Feed தொழில் நுட்பத்தை தனது 14 வது வயதில் கண்டுபிடித்த 26 வயது இளைஞன் Aaron Swartz நேற்று அமெரிக்காவில் தற்கொலை செய்துள்ளார். பல சாதனைகள் செய்ய வேண்டிய இளைஞன் இளம் வயதில் மரணம் அடைந்தது உலகில் Internet பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. Aaron Swartz இட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    • 6 replies
    • 1.4k views
  23. சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். http://news.vikatan.com/?nid=12112#cmt241

  24. சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். குற்றம் சாட்டப்பட்ட ரிசானாவில் சிறுபிள்ளைத்தனமான,பக்குவம் இன்மையால் ஏற்பட்ட தவறாக கூட இருக்கலாம் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அந்த சகோதரி அறியாமல் செய்த அந்த தவறுக்காக உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவள் என்ற முடிவு தண்டணையானது நியாயமே இல்லை..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.