Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்! பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணச…

  2. மாவடி மாதனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் முருகேசு அவர்கள் 24-01-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகளும், செல்லப்பா முருகேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்வரத்தினம், மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானாம்பிகை, வைத்தியகலாநிதி விநாயகமூர்த்தி, இரங்கநாயகி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபாலகிருஷ்ணன், வைத்தியகலாநிதி புஸ்பம், நல்லையா, காங்கேசச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தயாவதி சுதாகர், குகச்செல்வம், துர்க்கா கமலதாசன், இந்துஜா, கிருஷ்ணராஜ், ஜனனி, க…

  3. கடந்த மாதம் 29ம் திகதி மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்களது முதலாவது நினைவு தினம். தமிழீழ மக்களது சுயநிர்ணய போராட்டத்திற்கு ஐயா சிவநாயகத்தின் அர்பணிப்பு, சேவை, பங்களிப்பு பற்றி எழுதுவதனால் பக்கங்கள் அல்லா பல புத்தகங்கள் எழுதக்கூடியவிதமாக இருக்கும் என்பதை இங்கு நான் எழுதித் தான் உலகத் தமிழர் அறிந்திருக்க வேண்டியது அல்லா. ஐயா சிவநாயகம் அவர்களின் எழுத்தாற்றல், இலங்கையில் ஆங்கில பத்திரிகைதுறையில் பிரபலிய பத்திரிகையாளரான – திரு தாசி வித்தாச்சி, றேயி மைக்கல், மேர்வின் டி சில்வா ஆகியோருக்கு நிகராகவும,; இவர்களது சகாவாவும் ஆங்கில பத்திரிகைதுறையில் ஐயா சிவநாயகம் ஒரே ஒரு தமிழனாக திகழ்ந்தார். ஐயா பற்றி மிக நீண்டகாலமாக அறிந்திருந்த பொழுதும், பிரான்சின் தலைநகரான…

  4. எனது ஜீவன் ஒன்றுதான்... மனைவி ஜீவாவுக்கு இளையராஜாவின் பாட்டு! இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜீவாவின் உடல் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜீவா மீது மிகுந்த பிரியம் கொண்ட ராஜா, பல பாடல்களை ஜீவாவை நினைத்துதான் மெட்டு அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதயக்கோயில் படத்தில் 'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ...' என்ற பாடலில் எனது 'ஜீவன்' நீயடி... என்றும் புதிது... என்ற வரிகளை என் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத் தான் எழுதினேன் என்று முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுள்ளார் இசையமைப்பாளர் இளையரா…

  5. யாழ் இணையக் கருத்தாளர் வசம்பு அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை. http://lankasrinotic...1015100783.html

    • 32 replies
    • 2.7k views
  6. ஆனந்தியக்காவின் கணவர் இயற்கையெய்தினார் முன்னை நாள் பி பி சி தமிழோசையின் செய்தி பணிப்பாளர் ஆனந்தி அக்கா அவர்களின் கணவர் சூரியப்பிரகாசம் அவர்கள் இறைவடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்திக்காக பிராத்திப்பதோடு ஆனந்தியக்காவின் குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்து கொள்கிறேன். இறுதி கிரியைகள் வரும் ஞாயிற்று கிழைமை நடைபெறவுள்ளது விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். திரு. சூரியப்பிரகாசம் அவர்களது இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல், கடந்த ஞாயிறன்று (ஒக்ரோபர் 2ம்திகதி) காலமான திரு. சிவசாமி சூரியப்பிரகாசம் அவர்களது இறுதிச் சடங்குகள் ஒக்ரோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்களை ஊடக நண்பர்களுக்கும், உறவினர…

  7. கள உறவு அரவிந்தனின் சகோதரியின் மகள் (7மாதக்குழந்தை) கனடாவில் சென்ற 4ம்திகதி மரணமடைந்துள்ளார். மருமகளின் இழப்பில் துயருற்றிருக்கும் அரவிந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கனநாள் அரவிந்தன் களத்தில் எழுதவில்லை. இன்று பேஸ்புக்கில் வந்திருந்த நேரம் உரையாடிய போது இத்துயரை பகிர்ந்து கொண்டார். அரவிந்தனின் சகோதரி பாமினி , கணவர் வரதண்ணா ஆகியோரின் துயரில் பங்கெடுப்பதோடு அவர்கள் ஆன்மபலம் பெற்று வரவும் வேண்டுகிறேன்.

  8. நமது கள உறவு சாத்திரிஅண்ணாவின் இரண்டாவது அண்ணா புற்று நோய் காரணமாக இன்று மரணமடைந்து விட்டார் என்று சாத்திரிஅண்ணா முக புத்தகத்தில் பகிர்ந்து இருந்தார் அவரின் இழப்பினால் துயருறும் சாத்திரி அண்ணாவுக்கும்அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்களை தெரிவித்து கொள்கிறேன்..

  9. மயிலந்தனைப் படுகொலை: இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டுகளின்முன் 1992ஆம் ஆண்டு ஆகசுடு 0...9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர். கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர். திராய்க்கேணி படுகொலை: 21 ஆண்டுகளின்முன் ஆகசுடு 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்க…

  10. பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தா…

  11. பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை அ.முத்துலிங்கம் எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்க…

  12. [Wednesday, 2011-07-06 21:51:16] பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

  13. தலைசிறந்த தமிழ் அறிஞரும், இலக்கிய விமர்சகரும், திறனாய்வாளருமான பேராசிரியர் கார்திகேசு விவத்தம்பி அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் வெளியி்ட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தழிழ் அறிஞரும், கடல் கடந்த நாடுகளிலும் கூட புகழ் பூத்தவருமான மறைந்த பேராசிரியர் சிவத்தம்பியை நான் நன்கறிவேன். அவரது எளிமையான, பணிவான தோற்றம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இலக்கிய ஆய்வரங்குகளில் அவர் கலந்து கொண்ட பல சந்தர்ப்பங்களில் குறுகிய நேரமே …

  14. எமது அன்புக்குரிய ஜீவாவுக்கு மற்றொரு இடி விழுந்துள்ளது. நேற்று நதியில் குளிக்கும்போது அவரது அண்ணன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். என்னாலேயே தாங்கமுடியவில்லை. எப்படி தாங்கிப்பானோ எம் தம்பி. என்னவென்று ஆறுதல் சொல்வது உறவுகளே................... (விசுகு அண்ணா எனது சின்ன அண்ணா றைன் நதியில் குளிக்க போகும் போது இறந்திட்டான் அண்ணா. இன்று பொலிஸ் வந்து உடல் கிடைச்சதாக சொல்லிவிட்டார்கள். என்னும் எங்களிடம் தரவில்லை. ஏன் அண்ணா எனக்கு மட்டும் இப்படி நடக்குது???? செத்திடலாம் போல இருக்குது..)

  15. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது. அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர். அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உ…

  16. தமிழீழத் தாயகத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் இந்திய மற்றும் சர்வதேசத்தின் உதவியோடு எம்மினத்தை குண்டுகளால் அழித்தொழித்த 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான இன்று.. அந்த இன அழிப்பில் தம் இன்னுயிர்களை மண்ணிற்காக தந்து.. மண்ணோடு மண்ணாகிப் போன மக்களுக்கும் மறவர்களுக்கும் வீர அஞ்சலிகளும்.. கண்ணீரஞ்சலிகளுக்கும் உரித்தாகப்படுகிறது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  17. இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . Friday, May 13, 2011, 5:31 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்ம…

  18. படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள். Friday, May 13, 2011, 5:23 மாவீரர்கள் 13.05.95 அன்று மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் நடைபெற்ற படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மேஜர் குகன் சற்குணராசா மட்டக்களப்பு . லெப்டினன் சபேசன் மட்டக்களப்பு . லெப்டினன் சபாபதி அம்பாறை மட்டக்களப்பு . லெப்டினன் நாதன் மட்டக்களப்பு . வீரவேங்கை சுப்பிமணியம் மட்டக்களப்பு . வீரவேங்கை நேசன் மட்டக்களப்பு . வீரவேங்கை லோகிதராசா மட்டக்களப்பு . வீரவேங்கை விக்கின…

  19. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது 13.05.2009 அன்று காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன் போது கந்தசாமி தருமகுலசிங்கம் எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்டார் .இவர் நாட்டுப்பற்றாளராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார் . நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணொளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது. http://meenakam.com/2011/05/13/24672.html அன்று நான் உங்களோடு இன்று நீங்கள் என்னோடு அழியாத நினைவாய் என் இதயத்தில் உங்கள் தியாகம் நிச்சயம் வென்று தரும் தமிழீழம்

  20. இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்மராசா முத்துக்குமார் – சிவகுரு வவ…

  21. எமது யாழ் கள உறவு ரதியின் அம்மா இயற்கை எய்தினார்...எனும் மிகவும் துக்கரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகிறேன்....எனக்கு ஈ மெயிலில் கிடைத்த செய்தி இது....

  22. பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

  23. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம் அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்

    • 11 replies
    • 1.9k views
  24. எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.