Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. [size=4]ஆக்கம்: பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தலைவர் - வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்[/size] [size=4]இலங்கையில் உள்ள மதங்களுள் இந்து மதத்திற்கு 3000 ஆண்டுகளுக்கு குறையாத தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. பௌத்த மதம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த முன்னரே இந்து மதம் வழிபாட்டுக்குரிய மதமாக இருந்ததற்கு உறுதியான தொல்லியல், இலக்கிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது, அங்கிருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. பேராசிரியர் செனரத் பரணவிதானா இவ்வாலயங்களில் ஒன்று சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் எனவும், மற்றையது பிராமணர்கள் மந்திரம் ஓதும…

  2. இது நேரடியாக எடுக்கப்படட போட்டோ. எனவே செய்திக்கான மூலம் இல்லை.

    • 0 replies
    • 457 views
  3. நல்லூர் முருகன் கோவிலுக்கு மோடி போகாதது ஏன்? இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் - நடராஜன் இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டபோது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்தியத் துணை தூதராக 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான ப…

  4. "நாம் கடவுள் நம்பிக்கையோடு உயிரைப் பணயம் வைத்து பயணிக்கிறோம். எண்டைக்காவது பேராபத்தை எதிர்நோக்குவோம் என்ற பயம் எங்கட மனசில நிலைகொண்டிருக்கிறதை மறுக்கிறதுக்கில்லை. ஒவ்வொரு முறையும் அலை எழும்பும்போது "முருகா முருகா' என நல்லைக் கந்தனை துணைக்கு அழைத்துக்கொள்ளுவம்" - நெடுந்தீவுக்கு படகில் செல்லும் சின்னத்துரை என்ற பயணியின் உள்ளக் குமுறல்கள் இவை. யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் கடல்வழிப் பயணம் மேற் கொள்கின்றனர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்தை சென்றடையும் வரை பெரும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். காரணம் நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கு சேவையில் ஈடுபடும் படகுகள் போதியளவு பாதுகாப்பானவையாக இல்லாமையாகும். …

  5. நள்ளிரவில் விழித்திருந்த கருணாநிதி… டிமிக்கி விட்ட புலிகள்: ஈழப்போராட்டத்தில் இதுவரை பதிவாகாத சம்பவம்! June 29, 2018 ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர், முன்னாள் எம்.பியாக இருந்த பஷீர் சேகுதாவூத் தனது முகநூலில் பதிவு செய்துள்ள விடயம் இது. அதை தமிழ் பக்க வாசகர்களிற்காக இணைத்துள்ளோம். பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.உதவியாளர்களால் வரவேற்கப்பட்டு முதலமைச்சரின் வீட்டு ஹோலில் கிடந்த கதிரைகள…

  6. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் கொத்துக்குண்டு ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். குறுகிய இடைவெளியில் மக்கள் மீது இன்று காலை 6:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்கள…

  7. சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு

    • 0 replies
    • 1.7k views
  8. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒர…

  9. ப.திருமாவேலன் தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவ…

  10. நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று! யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற…

  11. 1995 ம் ஆண்டு ஆடி 9 ம் திகதி புக்காரா விமானங்களால் போடப்பட்ட 11 குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 147 தமிழ் மக்களின் நினைவு நாள் இண்று... முன்னேறி பாய்தல் நடவடிக்கைக்காக முன்னேறி வந்து வட்டுக்கோட்டை சீரணி பகுதிகளில் நிலை கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இராணுவம் உலங்குவானூர்திகளில் வந்து தூவிய காகிதங்களை நம்பி தேவாலயத்தில் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து தங்கிய அப்பாவி மக்களை குண்டுவீசி அழித்த கொடுமை நடந்த நாள் இண்று... குண்டு வீசும் போது அருகில் இருந்ததால் மக்களில் அலறல் கேட்டு ஓடிப்போனவைகளில் நானும் ஒருவன்... அவ்வளவு கோரமான காட்ச்சியை அதுவரை நான் எப்போதும் பார்த்தது கிடையாது, அதன் பின்னரும் பார்த்தது இல்லை... இறந்த உடல்கள், காயப்பட்டவர்கள், உயிர் தப்பி உறவ…

  12. நவீன உலகின் காந்தி.. திலீபன் அண்ணாவின் நினைவாக... திலீபன் அண்ணாவின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும். அனுபவங்களைப் பகர்கின்றார் அவரின் நண்பர். காணொளி வடிவில் யாழிலும்... http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry347124

  13. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேர…

  14. நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 ப…

  15. யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 21ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர். விமானத…

  16. நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்! September 22, 2019 யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன…

  17. உலகை ஏமாற்ற .. தமிழர் பகுதிகளில் மிகப்பாரிய அளவில் அபிவிருத்திகள் நடைபெறுகிறது/கற்கை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பவற்றை காட்டும் முயற்சியில் .. அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் ஓர் நீச்சல் தடாகத்தை சிங்களம் ஒட்டுக்குழு ஆயுததாரி டக்லஸுடன் இணைந்து, நீச்சல் உடையணிந்த சிங்கள நங்கைகளின் குலுக்கல்களுடன் திறந்து வைத்து ஓர் நாடகத்தை நடாத்தியது. நாடகம் முடிந்த சில நாட்களிலேயே ஓர் மாணவர் அத்தடாகத்தில் நீச்சல் தெரியாது நீந்த சென்று காப்பாற்ற யாருமற்று இறந்தது வேறு செய்தி! இன்றைய தினம் யாழ் குடாவிலுள்ள போரின் போது சிங்களத்தினால் சிதைக்கப்பட்ட இன்னொரு பாடசாலையின் ... நாகர்கோவில் மகா வித்தியாலயம் ... தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன. யுத்தம் முடிவட…

    • 4 replies
    • 1.1k views
  18. நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மானவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா...? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் " புக்காரா " குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா...? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்…

    • 3 replies
    • 963 views
  19. நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே…. (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு மலருக்கு எழுதியது.) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செவ்வரத்தை தடியும்; பாகம் 1/6 அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பௌதிக வகுப்பு. பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம். வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செவ்வரத்தை தடி பிடிங்கி வர அனுப்பினார். அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும். மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ, ”ஜீவ…

    • 6 replies
    • 673 views
  20. http://www.sangam.org/2007/11/Send_Money.php?uid=2606

  21. போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில்.. பிச்சை போடுவது கணக்கா.. வெளியாரிடம் தங்கியிருக்கச் செய்யாதேங்கோ என்றும்.. கோழிக்குஞ்சு.. தையல் மிசின்.. ஜமுனாப் பாரி ஆடு.. என்று எல்லாரும் ஒன்றையே கொடுப்பதிலும்.. அவர்களுக்கு நீண்ட பயனளிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை நிரந்தரமாக கட்டி வளர்க்கக் கூடிய பொருண்மியம் ஈட்டித்தரக் கூடிய திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கோ என்று.. கெஞ்சாத குறையாக.. நேசக்கரம் உட்பட பலரிடம் சொன்னோம். இங்கு யாழிலும் கருத்துப் பகிர்ந்திருந்தோம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் பழிப்புக்கும் இழிப்புக்கும் காரணமானோம்..! போர் முடிந்து.. இப்போ 3 ஆண்டுகள் கழிந்த பின் வந்திருக்கும் இந்தச் செய்தியையும் படியுங்கள்.. அன்று நாம் சொன்னதை இன…

    • 25 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.