அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
நவம்பர் மாதம் இலங்கையில் மூவருக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை நாம் கவனித்திருக்க மாட்டோம். கெப்பட்டிபொல, சங்கர், விஜேவீர ஆகியோரின் நினைவு நாட்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது தற்செயல் தான். இவர்கள் மூவருக்கும் உள்ள பொதுமை விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் என்பது தான். கெப்பட்டிபொல சிங்கள தேசியத்துக்காவும், சங்கர் தமிழ் தேசியத்துக்காகவும், விஜேவீர “சர்வதேசியத்துக்காகவும் கொல்லப்பட்டவர்களாக மேலோட்டமாக கூறலாம். நவம்பர் மாதம் 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாள் வருடாவருடம் நினைவு கூறப்படுகிறது. சென்ற 2015ஆம் ஆண்டு இந்த தினத்தில் ஜனாதிபதி…
-
- 4 replies
- 6.1k views
-
-
பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை இலங்கையின் வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை கசப்பான நிகழ்வுகள் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள இனவாத சிந்தனைகள் நாட்டின் ஐக்கியத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. நல்லாட்சிக்கு சவாலாக விளங்குகின்ற இத்தகைய நிகழ்வுகளின் காரணமாக நாடு பதற்றமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இந்தநாட்டில் விதைக்கப்பட்ட இனவாதம் இப்போது விருட்சமாக வளர்ந்து பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவித்திருக்கின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரின் இருப்பு மற்றும் எதிர்காலம் என்பன தொடர்பில் இப்போது சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமையும் மேலெழுந்…
-
- 0 replies
- 6.1k views
-
-
யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன் ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகிவிட்டிருக்கிறது. தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவும் தான் பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அந்த நூலகம் அரசு கொடுத்தத்தல்ல. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கியது. பின்னர் தான…
-
- 79 replies
- 6k views
-
-
துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் மீராபாரதி தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழ்கின்றவர்கள் இன்று பல்வேறு தளங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருப்பதுடன் பின்தங்கிய நிலையிலும் உள்ளார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவர்களது வாழ் நிலை மற்றும் மனநிலை என்பன மிகவும் பாதிப்படைந்து கவலைக்கிடமாகவும் நம்பிக்கையிழந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச சமூகங்கள் மற்றும் இந்திய சிறிலங்கா அரசாங்கங்கள் இம் மனிதர்களுக்கு நம்பிக்கையளிக்களிக்கின்ற எந்தவிதமான செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் இம் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளும் புலம் பெ…
-
- 74 replies
- 5.9k views
-
-
http://torsun.canoe.ca/News/Columnists/Mar...779431-sun.html
-
- 14 replies
- 5.9k views
-
-
தீண்டா மலம் - தீண்டத்தகாத மனிதன் சி. இராஜாராம் ஒரு மனிதன் விடுதலை பெற்றுக் கடவுளை அடைய வேண்டுமானால் அவன் முங்கி இருக்கிற மலங்களிலிருந்து வெளிவர வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை. இந்த மலங்களை உதறி எழாத எந்த மானுடப்பிறவியும் கடவுளை அண்ட முடியாது. ஆனால் மலங்களை உதறவும் கடவுளின் புனிதப் பார்வை வேண்டும். இன்னொருபுறம் இடுப்புக்குக் கீழுள்ள எந்தப் பகுதியும் அசுத்தமானது. மலம் சார்ந்தது. அதனைக் கைகள் தொட்டுவிட்டால் கூட மீண்டும் சுத்தம் செய்யாமல் கடவுளை வணங்க முடியாது என்பவையும் வைதீகக் கோட்பாட்டின் மையமான பகுதியாகும். தமிழ் இலக்கணங்களில்கூட சமூகத்தில் சிலவற்றைப் பற்றியப் பேச்சு வரும்போது அவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்வது என்பன போன்றவ…
-
- 4 replies
- 5.9k views
-
-
தனது இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசிஜேர்மனியாக கருக்கொள்ள வைத்த வரலாற்றை மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் என்ற நூல் பதிவு செய்துள்ளது. அந்த புத்தகதில் இருந்து சில பக்கங்களை இங்கு இணைத்துள்ளேன். அன்றைய உலக மக்கள் தொகையில் 3 வீதத்தை பலிகொண்ட அதாவது ஏறத்தாள 85 மில்லியன் மக்களை பலிகொண்ட இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பப்புள்ளியின் ஒரு சில பக்கங்களை இப்பதிவு கூறுகிறது. முதல் உலகப்போர் முற்றுப்பெற்ற 1918 ம் ஆண்டு தொடங்கி 1921 வரையான காலகட்டத்தை உடன்படிக்கைக் காலகட்டம் என்று அழைக்க முடியும். ஜேர்மனி மட்டுமல்ல தோற்றுப்போன அத்தனை தேசங்களுடனும் தனித்தனியே ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளபட்டன. · செப்ரெம்பர் 10, 1919 ல் Treaty of Trianon – ஹங்கேரிய…
-
- 42 replies
- 5.9k views
-
-
[size=3]இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?[/size] மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள், ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள், தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என்பார்கள் ஈழத்தமிழனுக்கும் இன்று இதுதான் நிலை. ஆரம்பத்தில் இலங்கையை ஒரு கூட்டாட்சிக் குடியரசாக மாற்றி அதி;ல் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழரசை அமைக்க வேண்டுமென்ற கோட்பாட்டுடன் போராடினோம். கிழிக்கப்பட்டுப்போன பண்டாசெல்வா, டட்லிசெல்வா ஒப்பந்தங்களால்; பாடங்களைக் கற்றுக்கொண்டோம். மாகாண சபைகளோடு மாவட்ட சபைகளைக்;கூடத் தரமறுத்தார்கள். எதுவும் கிடைக்காத நிலையில் இன்னும் அதிகம் கேட்டாற்தான் ஓரளவாவது கிடைக்குமென்ற நப்பாசையில் பிரிந்து செல்லும் உரிமையுட்பட்ட சுயநிர்ணய உரிமையைத் தமிழ்…
-
- 72 replies
- 5.8k views
-
-
இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…
-
- 8 replies
- 5.7k views
-
-
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..! வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50…
-
- 10 replies
- 5.5k views
-
-
நீலமானின் மாயப்பொதிகள் நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு) எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான …
-
-
- 134 replies
- 5.5k views
- 2 followers
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்- அங்கம் 01 ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மேமாதத்தில் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என மக்களால் அடையாளம் காணப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். இன்றும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் இலட்சியத்திலிருந்து வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டுபவர்கள் பலர். எதிர்க்கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்கள…
-
- 22 replies
- 5.4k views
-
-
காத்தான்குடி படுகொலை நியாயமானதா? இன்று காத்தான்குடி பள்ளிவாசலில் அப்போதைய முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா, கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை வெட்டி கொலைசெய்தனர். ஆனால் அது ஜீரணிக்க முடியாத, மனிதநேயத்தை நேசிப்போர் ஏற்றுகொள்ள கூடியதல்ல. காலங்கள் கடந்தாலும் அதற்கு விடுதலைப்புலிகள் மன்னிப்பு கோரினர். ஆனால் கருணா, கரிகாலன் அவர்கள் அத்தகைய கொலைகளை செய்ய முடிவெடுத்தது ஏன் என இந்த கட்டுரையை #வாசியுங்கள். திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு…
-
- 5 replies
- 5.4k views
-
-
பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இஸ்ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருப்பதாக, பதுங்கு குழிகளில் இருந்து பலஸ்தீனிய நண்பர்கள், மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தகாலமாக நீடித்த அமைதி, முடிவுக்கு வந்துவிடுமோ என்று அரசியல் அவதானிகள் அஞ்சுகிறார்கள். சர்வதேச தலைவர்கள், இஸ்ரேலைத் தடவிக் கொடுத்தபடி கவலை வெளியிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்…
-
- 52 replies
- 5.4k views
-
-
உலகெங்கும் தம் விடுதலைக்காகப் போராடும் அடக்கப்பட்ட இனங்களுக்கெல்லாம் எழுச்சியின் அடையாளமாய்,விடுதலையின் குறியீடாய்,மனவலிமையைக் கொடுக்கும் மந்திரமாய் இருக்கும் சேகுவேராவின் பிறந்தநாள் இன்று... எங்கள் உன்னததலைவனின் உள்ளத்தில் என்றும் நீங்காது வீற்றிருப்பவன்,அந்ததலைவனுக்கு துயரங்களிலும்,துன்பங்களிலும்,தோல்விகளிலும்,துரோகங்களிலும் வலிமை கொடுக்கும் வரலாறாய் இருந்தவன் சே..அந்த உன்னத போராளிக்கு இன்று பிறந்தநாள்... 1928 ஜூன் 14 , ரொசாரியோ, சாண்டா பே பிராந்தியம், அர்ஜென்டினா – எர்னஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா தெல செர்னா என்ற உயர் நடுத்தர குடும்பத்தை சார்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தது… தங்கள் இருவர் பெயரையும் இனைத்து எர்னஸ்டோ குவேரா தெல செர்னா என பெயரிட்ட பெற்றோ…
-
- 10 replies
- 5.3k views
-
-
WHAT IS TO BE DONE? AN OPEN LATTER TO THE MUSLIM PARENTS - V.I.S.JAYAPALAN இனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . உண்மையில் 2013ல் இருந்தே அடிப்படை வாதத்தை முளையில் கிள்ளக்கூடிய தகவல்களை இலங்கை அரசு வைத்திருந்தது . எனினும் அடிப்படைவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு மக்களுக்களதும் சர்வதேச சமூகத்தினதும் கோபத்தை பெறட்டுக்கும் என அரசு காத்திருந்தது. ஆனால் அடிபடை வாதிகள் பற்றிய தகவல் எதிர் நடவடிக்கைகள் உத்திகள் தயாராக இருந்தது. இது ஒருகல்லில் இரண்டு மாங்காய் உத்திதான். முஸ்லிம் தலைமையையும் மக்களையும் பணியவைப்பது என்கிற தயாராகவே இருந்தது. பாய்ந்து அமுக்குவோம் என காத்திருந்தது. அ…
-
- 38 replies
- 5.3k views
-
-
ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இம்மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை என்பதால் உலக மக்கள் அனைவருக்கும் உன்னதமான தினமாகும். ஏனெனில் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் இன்னும் பல துறைகளில் மானுடம் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணமாயிருந்தது ஐக்கிய நாடு கள் சபையாகும். சில அரசியல் ஆய்வாளர்கள் ஐ.நா. சபையை உலக அரசாங்கம் என்று கூட வர்ணிக்கின்ற சூழலில் இக்கட்டுரையை ஐ.நா.வின் 72 ஆவது பிறந்த நாளையொட்டி சமர்ப்பிக்க விரும்புகிறேன். இன்று உலக…
-
- 0 replies
- 5k views
-
-
தந்தை செல்வாவின் சரித்திரம் உணர்த்தும் உண்மை! தந்தை செல்வா நினைவுதினம்!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள் ஆகப் போகின்றன. ஆனால் இப்போதுள்ள காலம் தந்தை செல்வாவின் காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களும் சூழல்களும் கொண்டதுபோன்ற காலம். ஒரு வகையில் தந்தை செல்வாவின் காலம் என்றே இதனைச் சொல்லலாம். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் ப…
-
- 0 replies
- 4.9k views
-
-
விஜயகாந்தின் அரசியல் திரைப்படங்களில் சாதிகளைச் சாதிச்சங்கங்களை எதிர்க்கும் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிவந்த விஜயகாந். இப்போது சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமென்று முத்தாக உதிர்க்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என நினைக்கும் இவர் மற்ற அரசியல்வாதிகளைக் கிண்டலடிப்பதுதான் நகைச்சுவை. தான் அரசியலுக்கு வந்தால் இலஞ்சத்தை ஒளிப்பேன் என்பவர் நாளை அரசியலுக்கு வந்தபின் அதற்கும் ஏதாவது சொல்லுவார். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
-
- 18 replies
- 4.8k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. …
-
-
- 74 replies
- 4.8k views
- 1 follower
-
-
கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ........... தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ . .புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் , உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள் நிலாமதி i
-
- 30 replies
- 4.8k views
-
-
சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1 17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர். கடந்த வருடம் பனித்துளி என்ற வலைப்பதிவில் சேகுவேரா பற்றி எழுத துவங்கினேன். வேறு பதிவுகளில் கவனம் செலுத்தியதால் வரலாற்றின் நாயகனை பற்றி எழுதுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சே வரலாறை ஆலமரத்தில் எழுதுவேன். இந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்…
-
- 7 replies
- 4.8k views
-
-
ஐ.நா. அமைதிப்படையின் பிரசன்னம் மேற்குலகின் இறுதி ஆயுதமாகுமா? -இதயச்சந்திரன்- 1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள எரித்திய விடுதலை முன்னணிப் போராளிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான பல தகவல்கள் அவர்களிடம் இருப்பது பற்றி அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன். இந்தியத் தலையீடு பற்றியும், ஈழ தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல போராளிக் குழுக்கள் அதிகம் இந்தியா சார்ந்து, இருப்பது பற்றியும் அவர்களிடம் சில காத்திரமான விமர்சனங்கள் இருந்தன. எதியோப்பியாவுடன் அவர்களுக்கும் ஏற்பட்ட போரியல் அனுபவங்களை மிக ஆழமாக விபரித்தனர். அவர்களுடனான கருத்தாடல் குறித்து நினைவு கூற வேண்டிய நம் காலத்தின் தேவை கருதி சிலவற்றை உரசிப்பார்க்கலாம…
-
- 31 replies
- 4.7k views
-
-
“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான் சந்திப்பு: தேவிபாரதி எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக…
-
- 38 replies
- 4.6k views
-
-
பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் திரும்பியர்களிலிருந்து துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்களுக்கும் கூட மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னொரு காலத்தில் மரணம் தெருக்களில் துப்பாக்கியோடு அலைந்த போது அதனை வழி நடத்தியவர்கள், இன்று எல்லாம் முடிந்து போனது என ‘இந்திய இறக்குமதிச் சரக்கான தலித்தியம் என்ற’ சாதி வாதத்தை வழி நடத்துவதை இன்னும் எந்த மத்தாளொடை வாசியும் கேள்விப்பட்டிருக்க மாட்டான். புலிகளின் அழிவிற்குப் பின்னர் இ…
-
- 30 replies
- 4.6k views
-