அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
வடக்குத் தேர்தல் அக்னிப் பரீட்சையா? புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013 -கே.சஞ்சயன் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஓர் அக்னிப் பரீட்சையாகவே அமையப்போகிறது என்பதை, இப்போதே உணரக் கூடியளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து போயுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதில் காணப்படும் இழுபறி நிலை இதனை ஒரு சர்வதேச விவகாரமாக்கியுள்ளது. அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும், இந்தியா போன்ற நாடுகளும் வடக்கு மாகாணசபைக்கு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தி, தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இந்தநிலையில், வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்…
-
- 3 replies
- 682 views
-
-
கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் …
-
- 3 replies
- 1.1k views
-
-
திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: நிலாந்தன்… February 29, 2020 மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல் அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது. அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பத…
-
- 3 replies
- 705 views
-
-
கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் August 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில் 97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமா…
-
- 3 replies
- 204 views
-
-
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன? மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் 27 டிசம்பர் 2012 மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில.... மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் வவுனியா பொது வைத்தியசாலை 2012–12–12 காலை 9.00 விடுதி இல 12, வவுனியா பொது வைத்தியசாலை. (மனநல மருத்துவர் எஸ். சிவதாஸின் இந்தக் கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது) (இதன் கீழ் உள்ள மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில... என்ற பகுதி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இப்போ இணைக்கப்பட்டுள்ளது.) வன்னியைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருத்தி மருத்துவவிடுதியிலிருந்து எனது கருத்திற்காக அனு…
-
- 3 replies
- 1.9k views
-
-
-
- 3 replies
- 937 views
-
-
அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா? நிலாந்தன்:- 21 ஜூன் 2015 ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 29 ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப் பேசியிருந்தார். வரும் செப்ரெம்பருக்குள் அவ்வாறான ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போலவே தமிழ்ப்பகுதிகளுக்கு வந்து போகும் மேற்கத்தேய தூதுவர்களும் இங்கு சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உள்ளாட்டுப் பொறிமுறையை ஆதரித்துக் கதைத்து வருகிறார்கள். அண்மையில் அ…
-
- 3 replies
- 800 views
-
-
தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்…? : எஸ். ஹமீத் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள் அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால்…
-
- 3 replies
- 948 views
-
-
ஜெனிவா களம்: தமிழ்த் தரப்பு வரலாற்றைக் கோட்டைவிட்டுள்ளதா? முத்துக்குமார் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவது நிச்சயமாகிவிட்டது. இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக்குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது, அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருடம் காலஅவகாசம் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன. இலங்கை, சீனா பக்கம் சரிந்துவிடும் என்ற அச்சம் தான் இந்த மென்மையான அணுகுமுறைக்குக் காரணம். அமெரிக்க இராஜதந்திரக் குழுவினர் தமக்கு நெருக்கமானவர்களிடம் இத் தகவலை நேரடியாகவே கூறியிருக்கின்றனர். போர்க்க…
-
- 3 replies
- 733 views
-
-
இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி சந்திர. பிரவீண்குமார் ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழுவார். இந்திய நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலை வடிவேலுவின் குமுறலை நினைவுபடுத்துகிறது. உள்ளூர் அரசியல் முதல் பாகிஸ்தான், இத்தாலி, சீனாவுடனான பிரச்சினைகள்வரை எல்லா மட்டங்களிலும் செமத்தியாக அடி வாங்கியும் அது பொறுத்துக்கொண்டு குமுறுகிறது. பெயரை எல்லாம் இழந்த பின்னும் 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா…
-
- 3 replies
- 1.7k views
-
-
நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்… August 10, 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம்.தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது. ஆனால் குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை ஒப்பீட்டளவில் வழமைக்கு திரும்பியது போல ஒரு தோற்றம் உண்டாக்கி…
-
- 3 replies
- 784 views
- 1 follower
-
-
"கோட்டா கோகம" சிங்களக் கூட்டு உளவியலை... முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த பொழுது அவர்கள் மத்தியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அந்த உரையில் நான் பார்க்கக் கிடைத்த ஒரு பகுதியில் அவர் பின்வரும் பொருள்பட பேசுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக பொருட்களை அனுப்பவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியபொழுது டுவிட்டரில் அச்செய்தியின் கீழ் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பெரும்பாலான தமிழர்கள் எங்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட எல்லா இனத்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று எழுதுவதை பார்க்கிறேன். இது ஒரு ம…
-
- 3 replies
- 682 views
-
-
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள் அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்? வ.திருநாவுக்கரசு சிறிலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவியில் நீடித்திருப்பதற…
-
- 3 replies
- 1.8k views
-
-
பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் தமிழ் நாட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் - யதீந்திரா விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே ம…
-
- 3 replies
- 780 views
-
-
20 MAY, 2025 | 12:46 PM டி.பி.எஸ். ஜெயராஜ் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்' என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்ற…
-
-
- 3 replies
- 857 views
- 1 follower
-
-
சுமந்திரனை எதிர்த்தல் எனும் போதை Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 10 வியாழக்கிழமை, மு.ப. 10:53 இலங்கை அரசியலை ஓரளவுக்குக் கவனித்து வருபவர்கள் அனைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வெறுக்கப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடைக்காத மீடிறனில், சுமந்திரன் மீதான எதிர்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த எதிர்ப்புகள், தேவையான நேரங்களில் கேலிகளாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரத்துப் பதினைந்தாம் (2015) ஆண்டு, இலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்பும், சுமந்திரன் இந்த எதிர்ப்பும் கேலி…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
எந்தவித முகாந்திரமுமின்றி சும்மா வாய்க்கு வந்தபடி நாம் தமிழர் கட்சியினை திட்டுபவர்கள் இதனை படிக்கவேண்டும்...ஆக்கபூர்வமான விமர்சனம்.. வலையுலக - பேஸ்புக் பிரபலமும் , எனது மண்டப எழுத்தாளார்களில் ஒருவருமான “கிளிமூக்கு டெர்ரரிஸ்ட்” எழுதிக் கொடுத்துள “நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து” - குட்டிக்கட்டுரை நாம் தமிழர் கட்சி - ஃபாசிசவாதிகள், கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை வகுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் என விமர்சிக்கப்படும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நன்மைகளையும், சிறப்புகளையும் பத்து பத்திகளில் கூடியமட்டும் எடுத்துரைக்கும் முயற்சியே இந்தக் குட்டிக் கட்டுரை! 1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 846 views
-
-
15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024) இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும்…
-
-
- 3 replies
- 612 views
-
-
பாராளுமன்றம் - வீடு, புலிகள் - செருப்பு தயாளன் கூட்டமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் உப்பில்லாமல் சமைத்துவிட்டு 'எனது சமையலை ருசிக்க வாருங்கள்' என்று அழைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வாறான அழைப்பைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விடுத்துள்ளது. 'புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம்' என்பதைத்தான் இக் கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது. நல்லது, அப்படியே 'புலிகளின் மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாக்குகள் எமக்குத் தேவையில்லை. அவர்கள் தாங்கள் விரும்பிய எவருக்கும் வாக்களிக்கலாம். ஏனையோர் எமக்கு வாக்களியுங்கள்' என்று தங்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவார்களாயின் இவர்களை நேர்மையா…
-
- 3 replies
- 456 views
-
-
வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய 62 Views “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பே, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுக்களின் போது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பின் போது, “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
விஜயகலாவின் பேச்சு 2009ற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் வெள்ளி நாக்குகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறந்த பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையெனலாம். இருப்பவர்களில் பரவாயில்லாமல் பேசக்கூடியவர்கள் அல்லது பேச்சைத் தயாரித்துப் பேசுகிறவர்கள் என்று மிகச் சிலரைத்தான் கூறலாம். குறிப்பாகக் கூட்டமைப்புக்குள் தான் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். தனது பேச்சில் ஏதோ ஓர் அரசியல் செய்தி இருக்க வேண்டும் என்று சிந்தித்து பேச்சை முன் கூட்டியே தயாரித்து எழுதிக் கொண்டு வந்து வாசிப்பவர் விக்னேஸ்வரன். ஆனாலும் அவர் மேடையைத் தனது குரலால் கட்டிப்போடும் ஒரு பேச்சாளர் அல்ல. அவரோடு ஒப்பிடுகையில் சம்பந்தன் அழுத்தமான ஒரு பேச்சாளர் எனலாம். தான் கூற வரும் கருத்துக்கேற்ப குர…
-
- 3 replies
- 880 views
-