அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது. தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது. சர்வதேச நாடுகள்…
-
- 11 replies
- 2.4k views
-
-
அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்... பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்து…
-
- 28 replies
- 2.4k views
-
-
தமிழ்மக்களின் முப்பது வருட போராட்டத்தில் நாம் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை. இயக்கங்களுக்குள் நடந்த படுகொலைகள், புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக இயக்கப் போராளிகள் மீதான படுகொலைகள், சாதியத்திற்கு எதிராக, பெண் அடக்கு முறைக்கு எதிராக, பிரதேசவாத்த்திற்கு எதிராக போராடுவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்காமை, முஸலிம் மக்கள் மீது நடாத்திய பாசிச தாக்குதல்கள், அப்பாவிச் சிங்கள மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், மாற்றுக் கருத்தாளரகள் மீதான வன்முறை, தனி மனித துதி பாடல், வேளாள ஆதிக்கம், மலையக மக்களை கருவேப்பிலை போன்று பாவித்து வீசி எறிந்தமை, முற்போக்கு அரசியலைப் புறந்தள்ளியமை என்று எமது தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன த…
-
- 23 replies
- 2.4k views
-
-
சமஷ்டி என்றால் என்ன என்று விலாவாரியாக அறிய இந்தத் தேடல் எனக்கு உதவியது. விரும்பியவர்கள் நேரம் எடுத்து வாசித்துத் தெளிவடையலாம் ஐந்து விரல்களாய்ப் பிரிந்து நில் அவசியமானால் இணைந்து கொள்! – சாமானிய நோக்கில் சமஷ்டி – - - சமகால சர்வதேச அரசியற் போக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதலாக, அனைத்துலக அரசியலில் இருவேறுபட்ட போக்குகள் இடம்பெறலாயின. நடைமுறையில் இருந்துவரும் அரசியற் கட்டமைப்புக்கள் குலைந்து, அதன் விளைவாகப் புதிய தேசிய அடையாளங்கள் முனைப்புப் பெற்று வருதல், ஒன்று. சோவியத் ஒன்றியத்தின் உடைவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற செக்கோஸ்லவாக்கியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் சிதைவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இதேவேளை சுதந்திர நாடுகள் பல…
-
- 0 replies
- 2.4k views
-
-
இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளால் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியாது எனத் திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மாற்றுச் சி…
-
- 13 replies
- 2.4k views
-
-
#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.…
-
- 1 reply
- 2.4k views
-
-
‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக,…
-
- 4 replies
- 2.4k views
- 1 follower
-
-
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்- வ.ஐ.ச.ஜெயபாலன்‘கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். . கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். . . கல்முனை வடக்கு பி…
-
- 16 replies
- 2.4k views
- 1 follower
-
-
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
- 24 replies
- 2.4k views
-
-
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாராளுமன்றமும் அதற்குள்ள அதிகாரமும் புதிய அரசியலமைப்பும் ஓர் ஆய்வு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரை மூன்று அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. 1948 ஆம் ஆண்டு முதல் சோல்பரி அரசியல் சட்டத்தின் கீழும் 1972ஆம் ஆண்டு முதல் முதலாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு முதல் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் ஆளப்பட்டு வந்தது. தற்போது அமுலில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அடுத்த பட்ஜெட் தொடருக்கிடையில் மாற்றப்படவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆகவே நாலாவது அரசியலமைப…
-
- 0 replies
- 2.4k views
-
-
இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா ‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வ…
-
- 3 replies
- 2.4k views
-
-
GTN இல் அதன் ஆசிரியர் குருபரன் எழுதிய இந்தக் கட்டுரையி முஸ்லிம்கள் ஏந்திய பதாதைகளைக் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதைக் கவனியுங்கள். முஸ்லிம் மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது தொடர்பான விடயங்களில் எல்லாம் தமிழ் தலைமைகளையும் முக்கியமாக புலிகளையும் குற்றம் சாட்டும் எமது தமிழ் புத்திசீவிகள் இது பற்றி என்ன சொல்லப் போகின்றனர்? சபேசன், ஜெயாபாலன் போன்றோரின் கருத்துகள் என்ன? சேரன் இனியும் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான விவாதங்களில் முஸ்லிம்களின் தமிழர் விரோதப் போக்கினைப் பற்றி வாய் திறப்பாரா? சிங்களவர்களுடன் கூட ஒற்றுமையாக வாழலாம், முஸ்லிம்களுடன் முடியாது என்று தமிழ் மக்கள் வீணே சொல்வது இல்லை குருபரன் ஜிரிஎன் இல் எழுதிய கட்டுரை கீழே நன்றி GTN -------------\ …
-
- 3 replies
- 2.4k views
-
-
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்.கே. அஷோக்பரன் twitter: @nkashokbharan ‘மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19 வயதுடைய இளைஞர்களை, முல்லைத்தீவு பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர். அவர்களை அழைத்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தவேளை, ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள்…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஈழமும் கலைஞரும்! ஷோபாசக்தி ‘`அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ - இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் இளைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தார். உணர்வு நரம்புகளை மீட்டிவிடும் க…
-
- 2 replies
- 2.3k views
-
-
அரசியலமைப்பின் பராமுகம் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் அதிருப்தியுடன் வாழ்வதற்கு அரசியலமைப்பும் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. சமகால அரசியலமைப்பும் கடந்தகால அரசியலமைப்பும் இதில் உள்ளடங்கும். பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் அரசியலமைப்பு என்பது பக்கச்சார்பு இல்லாததாக காணப்படுதல் வேண்டும். எனினும் இலங்கையின் அரசியலமைப்புகளில் இந்த நிலையை காண முடியவில்லை. ஒரு இனத்தை, ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்த அரசியலமைப்புகளினால் நாட்டின் ஐக்கியம், அபிவிருத்தி என்பன சீர்குலைந்துள்ளன. மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித…
-
- 0 replies
- 2.3k views
-
-
மாட்டிறைச்சியை முன்வைத்த பிணக்குகள் மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை, தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் முயற்சியொன்று கடந்த சில வருடங்களாக மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டிறைச்சியை முன்னிறுத்திய மத அடிப்படைவாதம், இந்தியா போன்று, இலங்கைக்கும் புதியதல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்காக பௌத்த அடிப்படைவாதிகளும், அதுசார் நிறுவனங்களும் மாட்டிறைச்சி விவகாரத்தை, தென் இலங்கையில் அவ்வப்போது, தூசி தட்டித் தூக்கிப் பிடிப்பதுண்டு. அவ்வாறானதொரு நிலையை, தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மத அடிப்படைவாதத்தை மேல் மட்டத்தில் பேணுவதற்காகச் சில தரப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. …
-
- 1 reply
- 2.3k views
-
-
நானும் ஒரு இந்தியனும் என்னுடன் கடந்த 6 வருடங்களாக ஒரு இந்தியர் வேலை செய்துவருகிறார். அவருக்கு சுமார் 55 வயதிருக்கலாம், திருமணமாகி ஒரு ஆண்பிள்ளையும் இருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் கூப்ளி எனும் நகரைச் சேர்ந்தவர். இதுவரை காலமும் என்னுடன் ஈழப்பிரச்சினை தொடர்பாக அவ்வளவாகப் பேசியது கிடையாது. பல வேளைகளில் நானும் வேறு சிலரும் எமது பிரச்சினை பற்றிப் பேசும்போது மெளனமாகக் கேட்டுக்கொண்டிருப்பார், ஏதும் சொல்வது கிடையாது. சென்றவாரம் அவருடன் நீண்டநேரம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல சுவாரசியமான விடயங்களை நான் அறிந்துகொண்டேன். இந்தியாபற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அவரது கேள்வியுடன் எமது சம்பாஷனை ஆரம்பமானது. எனக்குத் தெரிந்த இந்தியா பற்றி அவருக்கு…
-
- 17 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!! 987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. 'ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்| (Operation Blooming Tulip)என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்தப் படை நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் மிகவும் முக்கியமான ஒரு ரகசியத் தளத்தை நோக்கிததான் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிரு…
-
- 17 replies
- 2.3k views
-
-
இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம் – அகிலன் 6 Views இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் காலப் ப…
-
- 30 replies
- 2.3k views
-
-
-
- 24 replies
- 2.3k views
-
-
இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு 33 Views கடந்த 2019 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல் எல்லைக்குள் உள்ள ஒரு நாடாகக் காணப்படுகின்ற அதேவேளை, உலக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாடாகவும் கடந்த காலங்களிலிருந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தற்கால அரசியல் நகர்வை பின்வரும் ஐந்து அம்சங்களின் ஊடாக முன்வைக்கலாம். இந்த அடிப்படையில் விரிவாக நோக்குகின்ற பொழுது, இராணுவ ஆதிக்கவாதம் …
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
-
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழ் ஈழப்பிரச்சினை என்னவென்பதே இந்த தலைமுறையைச் சார்ந்த நிறைய நண்பர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.... தெரியாவிட்டாலும் பரவாயில்லை சில ஈழ எதிர்ப்பு ஊடகங்களைப் படித்துவிட்டு என்னவென்றே தெரியாத ஒரு பிரச்சினையில் கருத்துகளும் சொல்லி வருகிறார்கள்.... இந்த தெளிவின்மையை போக்க எனக்குத் தெரிந்த ஈழப்பிரச்சினையைப் பற்றிச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.... இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.... அக்காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வியாபித்து இருந்தார்கள்.... அங்கே இருக்கும் தமிழர்களில் இருவகை உண்டு.... ஒன்று மலையகத் தமிழர்கள்... இவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தமிழ்நாட்டிலிருந்து 200 - 250 ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலைத் தோட்டவேலைக்கு தமிழகத்தில் இருந்து …
-
- 11 replies
- 2.3k views
-