Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் (தடம் 7)

Featured Replies

நினைத்தாலும் மறக்க முடியாதவை

- அஜீவன்

path2.JPG

நடந்து வந்த பாதையை

பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை

நடந்து கொண்டிருப்பவனுக்கு

அது தேவையில்லை

ஆனால் நடக்க முடியாமல் போனாலோ

இல்லை

திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே

அது குறித்து சிந்திக்கிறோம்

புதிய ஒருவரை சந்திக்கும் போது

அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது

இல்லை

பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது

கடந்த காலத்தில் நடந்தவற்றை

நினைத்து சிரிக்கவோ அல்லது

அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது

நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது

தாக்கங்களும் வேதனைகளும் மட்டும்

மனித மனங்களின் போக்க முடியாத

கறையாகி அல்லது வடுவாகி

காயமாகி விடுகிறது

வயதாகும் போது

உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் தெரிகிறது

கண்களிலும்

அடி மனதிலும்

தொடர்ந்தும் அதே குணாம்சம் தொடர்கிறது........................................

திரும்பிப் பார்க்கப் போவதை உணர்கிறேன்

என் மனதை திறப்பதாய்

என்னை சிலுவையில் அறைந்து கொண்டு

திரும்பிப் பார்க்கப் போவதை உணர்கிறேன்...............

மறக்க முடியாதவை இங்கே தடமாகிறது.................

தடம் 1

தடம் 2

தடம் 3

தடம் 4

தடம் 5

தடம் 6

தடம் 7

நன்றி!

Edited by AJeevan

நல்ல ஆரம்பம்.

என் மனதை திறப்பதாய்

என்னை சிலுவையில் அறைந்து கொண்டு

திரும்பிப் பார்க்கப் போவதை உணர்கிறேன்..............

வேறு வழியில்லை. ஆனால் தொடருங்கள். அடுத்த தலைமுறையில் ஒருவன் சந்தோசமாக திரும்பி பார்க்க வழிகிடைக்கும்.

  • தொடங்கியவர்

நல்ல ஆரம்பம்.

வேறு வழியில்லை. ஆனால் தொடருங்கள்.

அடுத்த தலைமுறையில் ஒருவன் சந்தோசமாக திரும்பி பார்க்க வழிகிடைக்கும்.

அருமையாக

ஆரம்பித்து வைக்க வார்த்தைகளோடு

வழி செய்த உங்களுக்கு

முதல் பகுதி சமர்ப்பணம் சுகன்

இதோ......................

  • தொடங்கியவர்

தடம் 1

என்னை அறியாமலே...........9096565578.jpg

1990

unmade_bed_bw_lg.jpg

பெங்களூரை விட்டு வெளியேற வேண்டும் எனத் தோன்றுகிறது.

பல வருடங்கள் தொடர்ந்து பெற்ற வாய்ப்புகளை உதறித் தள்ள வேண்டும்

நண்பர்களை பிரிய வேண்டும்

எனக்கு மிகவும் பிடித்த கால நிலையை மறக்க வேண்டும்.............

இப்படி எத்தனையோ இழப்புகள்...........

இருந்தாலும்

முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகிறேன்.

இருப்பது ஆபத்தானது

தொடர்வது நெருடலானது

எனக்காக வாழ்ந்த காதல் கூட கருகிய நிலை

எல்லாமே பொய்

என்னை கைது செய்த

பெங்களூர் அப்பர்பெட் போலீஸ் அதிகாரி கதிரேயும் சார்ஜன்ட் சிறீனிவானும்

"கொஞ்ச நாள் ஊருக்கு போய் இருந்துட்டு திரும்பி வா"

என்கிறார்கள்.

"என்னால் எங்கும் போக முடியாது" என்கிறேன்.

"ஏன்?"

"அது அப்படித்தான்.................."

"நீ ஏதாவது தவறான முடிவு எடுத்திடாதே.

உன்னை தெரியாமல் கைது செய்திட்டோம்.

ஆனால் உனக்கு ஏதாவது நல்லது செய்யணும்.

என்ன வேணும் சொல்லு" என்கிறார் சீனிவாசன்

"எனக்கு இப்போ தனியா இருக்கணும்.

யோசிக்கணும்............"

"வாங்க

லாஜ்ஜில கொண்டு போய் விடுறேன்."

"வேண்டாம்.

நான் எப்படி இனி அங்கே போறது?"

"உங்க மேல யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.

கதிர் சார் உங்க லாஜ் பணத்தை கூட கட்ட சொன்னார்.

நான் இருக்கேன்."

நான் ஸ்டேசனை விட்டு நடக்கிறேன்.

என் பின்னே வந்த சீனிவாசன்

ஒரு ஆட்டோவை நிறுத்தி என்னோடு சிவில் உடையில் ஏறுகிறார்.

ஆட்டோ சிவாஜி நகர் லாஜ்ஜை நோக்கி நகர்கிறது.

நாங்கள் இறங்கியதும் ரூம் பையன்கள் ஓடிவருகிறார்கள்.

"என்ன சார் நடந்துச்சு"

நான் மெளனமாக சார்ஜன் சீனிவாசனை பார்க்கிறேன்.

"தப்பா அரட்ஸ் பண்ணிட்டோம்.

பிறகுதான் தெரியும் ஓஐசீ ஐயாவுக்கு தூரத்து உறவுக்காரர் ஜீவன் என்கிறது.

இனி அவர்தான் சார் பில்லெல்லாம் கட்டுவார்.

இவருக்கு என்ன வேணுமோ அதை கொடுங்க." என்கிறார் சீனிவாசன்

நான் பேசாமல் சீனிவாசன் சொல்லும் பொய்யை மறுதலிக்க முடியாமல் நடக்கிறேன்.

என் ரூமை திறந்து விட்ட ரூம் பையன்கள்

எங்களை கேட்காமலே டீ கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

ஒரு சில ரூபா டிப்ஸை விட

அவங்க கூட நாலு வார்த்தை

அன்பா பேசுறதில கிடைச்ச பாசம்தான் அது.

"வாடிப் போயிட்டிங்க சார்.

குளிங்க வென்னீர் கொண்டு வர்ரேன்

அப்புறமா ஜம்முண்ணு ஆகிடுவீங்க சார்."

என் அனுமதிக்குக் கூட காத்திராமல்

போய் வென்னீர் கொண்டு வந்து

வைக்கிறான் மணி.

"குளிச்சுட்டு தூங்குங்க.

சாயந்தரம் வர்றன்" என்று எழுந்த சீனிவாசன்

கொஞ்சம் பணத்தை எடுத்து மேசையில் வைத்து விட்டு கிளம்புகிறார்.

அவர் போவதை வாசலில் நின்று பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.

பணம் பறிக்கின்ற போலீஸ்காரரை பார்த்திருக்கேன்.

இப்படியும் உள்ளவர்களை பார்ப்பது அரிது.

மனதுக்குள் வியக்கிறேன்.

நான் உள்ளே போய் குளித்து விட்டு வரும் போது

மேசையில் யாரோ சாப்பாடு கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.

நான் கதவைத் திறந்த போது

ரூம் பையன் குமார் வெளியே

தயங்கியபடி நிற்கிறான்.

"சார்

எனக்கு கொண்டாந்த சாப்பாடுதான்.

மனசு கேக்கல்ல.

என்னால முடிஞ்சது இதுதான் சார்" என்கிறான்.

மனது இறுகிப் போகிறது.

ஒருத்தனது நல்ல மனசு

கோடியை விட பெறுமதி வாய்ந்தது என்பது

அந்த சில வார்த்தைகள்

சொல்லாமல் புரிய வைக்கிறது.

நான் சாப்பிடத் தொடங்கியதும்

குமார் என் பக்கத்திலே நின்று

என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சாப்பிட்டு முடிந்ததும் என் கையை குமாரே கழுவி விடுகிறான்.

"உங்க சிரிப்பை திரும்ப பார்க்கணும் சார்

முதல்ல தூங்குங்க................

சாயந்தரம் டீயோட வந்து எழுப்புறேன்" என்று

சொல்லி விட்டு போகும் போது

"கதவை சாத்திட்டு போ குமார்" என்கிறேன்.

"உள்ளாற சாத்துங்க சார்" என்கிறான்.

"எனக்கு ஒண்ணும் ஆவாவது

சாத்திட்டு போ" என்று சொல்லி விட்டு

படுக்கையில் சாய்ந்த போது

தலையனை என்னை அறியாமலே நனைகிறது....................

தொடர்ந்து வழியும்...............

Edited by AJeevan

நடந்து வந்த பாதையை

பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை

நடந்து கொண்டிருப்பவனுக்கு

அது தேவையில்லை

ஆனால் நடக்க முடியாமல் போனாலோ

இல்லை

திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே

அது குறித்து சிந்திக்கிறோம்

அருமையான ஆரம்பம் சோர்வில்லாத பயணம் தொடர்ந்து பயணத்தில் இணைத்து கொள்ள தூண்டுகிறது தொடர்ந்து உங்கள் பயணத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் வாழ்த்துகள்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா, நன்றாக இருக்கிறது தொடருங்கள். வந்த பாதையை திரும்பி பார்க்கும் போதுதான் எமது முன்னேற்றத்தின் வெகுமதி புரியும். பல சமயங்களில் பழைய கசப்பான அனுபவங்களே சில புதிய இலக்குகளை அடைய உந்து சக்தியாக அமையும். நானும்எனது பழைய பாதையை இரைமீட்டி பார்பதுண்டு. கசப்பான அனுவங்களை இரைமீட்டும் போது சிலரில் உள்ள கோவம்சில நேரங்களில் அதிகமாகும். ஆனாலும் அன்று அப்படி நடக்காவிட்டிரின் இன்று இப்படி இருந்திருக்க மாட்டேன் என்று எண்ணி என்னை நானே பெருமைபடுத்தி கொள்வேன்.

அஜீவன் அண்ணா நலமா? தடம் வாசிச்சன். மிச்சம் வாசிக்க ஆவல். கெரியா எழுதுங்கோ.

அஜீவன் அண்ணா உங்கள் தடம் சுவாரசியமாகவும், எமக்கு அறிய கிடைக்காத பருவத்து நிகழ்வுகளின் தொகுப்பாகவும் உள்ளது. தொடருங்கள்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அஜீவன் இருந்தாப் போல பழைய நினைவுகளில்.நன்றாகத் தான் இருக்கிறது.எழுதுங்கள்.

நிர்வாகத்தினரிடம் சொல்லி விமர்சனத்திற்கென ஒரு பகுதியை திறக்கலாமே.

  • தொடங்கியவர்

நன்றி

சுபேஸ்

சிநேகிதி

குலக்காடான்

ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்

தடம் 2

"கதவை சாத்திட்டு போ குமார்" என்றேன்.

"உள்ளாற சாத்துங்க சார்" என்றான்.

"எனக்கு ஒண்ணும் ஆவாவது

சாத்திட்டு போ" என்று சொல்லி விட்டு

படுக்கையில் சாய்ந்த போது

தலையனை என்னை அறியாமலே நனைவது தெரிந்தது....................

நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் (தடம் 2)

creepyshadow2.jpg

தலையனையை நனைத்துக் கொண்டு

கன்னத்தில் வழிந்த கண்ணீர்

போதும் என்பது போல காய்ந்திருந்தது.

எவர் எது பேசினாலும்

இறுகி நிற்கும் இதயம்

தனித்து இருக்கும் போது

புயலில் சிக்கிய வள்ளம் போல் தள்ளாடும்

பெரு மூச்சுகள் தொடரும்

அலை போல கண்ணீர் வழிந்தோடும்

நேரில் பார்ப்போருக்கு

அது புரியாது

மூன்று தினங்கள்

முறையான உறக்கம் இல்லை.

அந்த மூன்று நாளும்

உடம்போடு இருந்தது

ஒரே ஒரு உடைதான்

முகத்தை கழுவியதோடு சரி

தினசரி மாற்றிய உடை பழக்கம்

பல் துலக்கி விட்டு தூங்கும் மன ஒழுக்கம்

எல்லாமே தலை கீழாகி இருந்தது

நடந்ததை மீட்டிப் பார்க்கிறேன்...........

மாலையில் யோகாசன வகுப்புக்கு சென்று வந்து

ஒரு கப் பால் அருந்தி விட்டு

சற்று நேரம் அமைதியாக தியானத்தில் ஈடுபடுகிறேன்.

நாள் முழுவதும் உள்ள களைப்பு தீருவது போன்ற ஒரு உணர்வு

இருப்பினும் மனது சலனமாக இருக்கிறது

ஒரு போதும் இல்லாத பதட்டம்

இரவின் மடியில் வீழ்கிறேன்.

திடீரென

அறைக் கதவு தட்டப்படும் ஓசை

எழுந்து கதவருகே வருகிறேன்

பலர் குழுமி நிற்பது

வெளியிலிருந்து வரும் ஒளியில் தெரிகிறது.

யாரது? என்கிறேன்.

"போலீஸ் ,கதவைத் திற"

குரலில் கடுமை தெரிகிறது.

கதவைத் திறந்ததும்

உள்ளே புகுந்த போலீசார்

என்னை மடக்கி கட்டிலில் அழுத்துகிறார்கள்.

நான் முரண்டு பிடிக்காமல்

அவர்களுக்கு இடமளிக்கிறேன்.

ஆம்

எதிர்ப்பது முட்டாள்தனம்.

போலீசார்

அறை முழுவதும் எதையோ தேடுகிறார்கள்.

தேடியவர்கள்

ஒன்றுமில்லை என்கிறார்கள்.

சற்று என்னை தளர்த்தி விட்டு

கட்டிலில் அமரச் சொல்கிறார் இன்ஸ்பெக்டராக தெரிபவர்.

உட்காருங்கள் என்கிறேன்.

"உன் அறையில் குண்டுகள்

ஆயுதங்கள் இருக்கிறது என தகவல்.

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?"

நான் மெதுவாக சிரிக்கிறேன்.

"ஏன் சிரிக்கிறாய்?"

இருந்தால் எடுங்கள் என்கிறேன்.

ஒரு போலீஸ்காரர்

என் அறைச் சுவரை அலங்கரிக்கும்

என் காதலியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறார்.

"யார் இவர்?"

"என் காதலி..............."

அவர் கன்னடத்தில் இன்ஸ்பெக்டரிடம்

இவரும் , இவரது அம்மாவும்தான் புகார் கொடுத்தவர்கள் என்கிறார்.

எனக்கு பெரிதாக கன்னடம் தெரியாவிட்டாலும்

அதை புரிந்து கொள்ள முடிகிறது.

பேசாமல் கேட்கிறேன்.

மனது கனக்கிறது.......................

"இதற்கு என்ன சாட்சி.............. "சார்ஜன் சீனிவாசன் கேட்கிறார்.

"என்னை விடுங்கள்.

சில படங்களை காட்டுகிறேன்" என்கிறேன்.

என் போட்டோ அல்பத்தை எடுத்துக் கொடுக்கிறேன்.

அல்பத்தை

பார்த்த சார்ஜன் சீனிவாசனின் கண்கள் கோபத்தால் சிவக்கிறது.

இதையும் எடுத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகலாம் வாங்க என்கிறார்.

கன்னடத்தில் ஏதேதோ பேசுகிறார்கள்.

வேகமான பேச்சு

எனவே அரை குறையாக புரிகிறது.

அவர்கள் வந்த போது இருந்த வேகம்

இப்போது அவர்களிடம் இல்லை

அது சற்று தணிந்திருந்தது.

இப்படியே வரட்டுமா?

இல்லை.

உடுத்துக் கொண்டு வாங்க.

உடைகளை மாற்றிக் கொண்டு

அவர்களோடு நடக்கிறேன்.

வெளியே நிற்கும் ஜீப்பில் என்னை ஏறச் சொல்கிறார்கள்.

அது மெதுவாக நகர்கிறது.......................

Edited by AJeevan

அடடா.. திடீரென தடம் மடை திறந்து வருகிறது..

அட .. பரலோகத்தில வாழுற எந்தன் கடவுள்களே.. அஜீவனின் இந்த தொடராவது ஒழுங்காக, முழுமையாக வர உங்களிடம் மன்றாடுகிறேன்.. அரோ..கரா!! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா, என்ன மற்றவரின் கடந்த கால துன்பத்தை நையாண்டி பண்ணுவது போல இருக்கு... :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

சோழியன் அண்ணா, என்ன மற்றவரின் கடந்த கால துன்பத்தை நையாண்டி பண்ணுவது போல இருக்கு... :rolleyes::)

இல்ல சுபேஸ்

இடையில நின்று விடுமோ என்று

சோழியன் குடுமி ஆடுது :unsure:

பழசை நினைச்சீங்களா சோழியன்?

அரோகரா :D

சோழியன் அண்ணா, என்ன மற்றவரின் கடந்த கால துன்பத்தை நையாண்டி பண்ணுவது போல இருக்கு... :rolleyes::)

கடந்த கால துன்பம்தான்.. அதை எல்லாம் தாண்டி.. தற்போது நடப்பது இரைமீட்டல்.. கவலைகளை இரைமீட்பதிலும் ஒருவகைச் சந்தோசம் இருக்கிறது.. அந்த நிலையில்தான் அஜீவன் தனது உணர்வுகளை எங்களுடன் தடம் பதிக்கிறார் என நினைக்கிறேன்.

அஜீவனின் எழுத்து நடையை திரும்பத் திரும்ப பாராட்ட வேண்டியதில்லை. வாசிப்பவர்களை கட்டிப்போட்டு முழுமையாக வாசிக்கத் தூண்டும் வல்லமை அவரது எழுத்துகளுக்கு உண்டு.

'தடம்' அருமையான தலைப்பு. அவருக்கு நேரமும் பொறுமையும் இருந்தால், இதை ஒரு பெரிய தொடராக.. தனது அனுபவப் பகிர்வாக, பல தரப்பட்டவர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் ஆக்க முடியும்.. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கணும் சோழியன் அண்ணா. நான் தான் தப்பா விளங்கிவிட்டேன். விளக்கியதற்கு அஜீவன் அண்ணாக்கும் சோழியன் அண்ணாக்கும் நன்றி.

இப்பதான் தலைப்பில் தடம் 2 என இருப்பதை கவனித்தேன். அப்போ, தடம் 1 எங்கே? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

மன்னிக்கணும் சோழியன் அண்ணா. நான் தான் தப்பா விளங்கிவிட்டேன். விளக்கியதற்கு அஜீவன் அண்ணாக்கும் சோழியன் அண்ணாக்கும் நன்றி.

இப்பதான் தலைப்பில் தடம் 2 என இருப்பதை கவனித்தேன். அப்போ, தடம் 1 எங்கே? :wub::unsure:

சுபேஸ்

ஆரம்பத்தில் வரப் போகும் கதை குறித்து எழுதியிருந்தேன்.

பின்னர் தடம் 1

என்ற பெயரில் ஆரம்பத்திலே

முதலாவது பகுதியை எழுதினேன்.

அதன் பின்னர்

இரண்டாவது பகுதியை எழுதிவிட்டு

தலைப்பை

தடம் 2

என்று

முதல்பகுதி தலைப்பை மட்டும் எடிட் செய்தேன்.

இது படித்த பகுதி அல்ல

புதிய பகுதி என அறிவுறுத்தவே

அப்படிச் செய்தேன்.

ஆனால்

இரண்டாவது பகுதியை கீழேதான் எழுதினேன்

இதனால் சற்று குளறுபடி என நினைக்கிறேன்.

எனவே இப்போது முதல் பகுதியிலேயே

தடம் 1

தடம் 2

என்று அழுத்தி இலகுவில் பார்க்க வசதியாக்கியுள்ளேன்.

அது சற்று பிரச்சனைகளை தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.

அது குறித்த கருத்தை தயவு செய்து முன் வையுங்கள்.

முன்னர்

யாழ் களத்தில்

ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து சென்று

பார்க்க முடிந்தது.

இப்போது அப்படி இல்லை.

இறுதியாக எழுதியதை அல்லது

ஆரம்பத்தில் எழுதியதை மட்டுமே

உடனடியாக பார்க்க முடிகிறது.

ஏனையவற்றை

தேடித் தேடித்தான்

பார்க்்கலாம்.

முன்னைய முறை இலலகுவானது.

புதியவர்களுக்கும் எளிமையானது.

தற்போதைய முறை

சற்று சிக்கல்தான்.

பழகும் வரை.................

எனக்கு முந்திய முறைதான்

நல்லது எனப்படுகிறது.

எதுவும்

யாழ் நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

அஜீவன் அங்கிள் உங்கள் "தடம்" அதாவது கடந்தகால நினைவுகளை யாழ்களமூடாக நமக்காக மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.

மீண்டும் இன்னொரு தடம்3 வருமா?

என்னா பொலிஸ் ஜீப் மெதுவாக நகர்ந்து........................ என்ன நடந்தது அங்கே?

  • தொடங்கியவர்

நன்றி Poet

நன்றி வெண்ணிலா

வணக்கம் அஜீவன் அண்ணா,

நீண்ட நாட்களின் பின் யாழ்களத்தில் இணைகின்றேன்

உங்கள் "தடம்" தடங்காமல் தொடரவும்,

  • தொடங்கியவர்

நன்றி சிறீ

பிரச்சனைகள் உருவாகாத வரை தொடரும்.................

யாருக்குத் தெரியும்?

  • தொடங்கியவர்

பயணத்தின் தடம் 3

0ff45cf2.jpg

என்னை ஏற்றிக் கொண்டு

ஜீப் நகரும் போது

பல ஜீப்புகள் அப் பகுதியை சுற்றி வழைத்திருந்தது தெரிகிறது.

அவையும் எம்மை பின் தொடருகின்றன.

சே..............

இன்று மாலை சென்னை போக இருந்தேன்

அடுத்த நாள் போகலாம் என்று

தங்கியது தப்பாய் போனதே என நினைக்கிறேன்

இனி

அதை எண்ணி நடக்கப் போவது எதுவுமில்லை?

நடப்பதற்கு முகம் கொடுக்க வேண்டும்

சில சமயம் இதுவே வாழ்வின் அஸ்தமனமாகி விடவும் கூடும்.

அதுவே விதி என்றால் நடக்கட்டும்

மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன்.

ஜீப் சாதாரணமான வேகத்திலேயே நகர்கிறது.

வயர்லெஸ் வழி பேசிக் கொள்கிறார்கள்.

கன்னடம் சரியாக புரியாவிட்டாலும்

அரை குறை அறிவு

மற்றும்

ஊகங்களின் அடிப்படையில்

பேசுவது சற்று புரிகிறது

வாழும் ஒரு இடத்தில்

அந்த மொழி தெரியாமல் வாழ்வதின்

முட்டாள்தனம் எனக்குள் அப்போது உறைக்கிறது

மொழி என்பது நாம் நினைத்தவுடன்

கடையில் விலை கொடுத்து வாங்கக் கூடியதல்ல

அதற்காக நாம்தான் முயல வேண்டும்.

நாம் தேட வேண்டிவை அனைத்தும்

நம்மைத் தேடி வராது

நாமாகத் தேடிப் போனால் ஒழிய.............

என்னையே நான் நொந்து கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நாம் பேசலாம்

அது அவரவர் மொழி போல் வராது

அதை இன்னொருவர்

அவர் எண்ணத்தோடு மொழி பெயர்த்தாலோ

அல்லது

மொழி பெயர்ப்பவரது தொனி கடுமையானாலோ

நமது உணர்வுகளை விட

அவரது உணர்வுதான் வெளிப்படும்.

அதையே மாற்றி சொல்லி விவாகாரமாக்கி விட்டால்

சொல்லவே வேண்டாம்

அதுவே நமக்கு விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.

எனக்காக பேசியவளை

இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

இந்தியாவில்

அவளை தெரிந்த நாள் முதல்

நான் எங்கு சென்றாலும்

அவளைத்தான் அழைத்துச் செல்வேன்

இந்தியாவில் பேசப்படும்

7 மொழிகளை பேசக் கூடியவள் அவள்

அவள் பேசினால்

அதை யாரும் எதிர்த்து பேச மாட்டார்கள்

பேச்சில் அத்தனை நயணங்கள் இருக்கும்

அவளும் அப்படித்தான்.....................

அவள்

கொடுகு மலைக் காற்றின் சுவாசத்தில் பிறந்தவள்

இந்தியாவின் முதலாவது ஜெனரலின் உறவுக்காரி

அவள் பிறந்த காலத்தில்

வங்க தேச பிரிவுக்காய்

பாகிஸ்தானோடு இந்தியா போர் புரிந்த சமயம்

காஷ்மீரில் குடும்பத்தோடு வாழ்ந்தவள்

நிலமை மோசமாக இருக்கிறது

குடும்பத்தை அனுப்பிவிடுங்கள் என்று

நிலமைகளை அவதானிக்கச் சென்ற

அன்னை இந்திரா காந்தி

அவள் தந்தையான

கொமான்டர் அன்னைய்யாவிடம் சொன்ன போது

பக்கத்தில் நின்ற அவள் அன்னை

செத்தால் அவரோடு சாகிறோம்

வாழ்ந்தால் அவரோடு வாழ்கிறோம்

என்று பிடிவாதமாக நின்ற

அவள் தாயோடு இருந்தவள்.

எனவே

எனக்கான இடர்களின் போது

என்னை விட

எனக்கு உரமாய்

எனக்கு துணை புரிந்தவள்.

என்னில்

அவர்கள் குடும்பத்தினருக்கு

கொள்ளைப் பிரியம்.

அவர்களோடு அவள் ஊரான கர்னாடகத்தின்

அழகு ததும்பும் கொடகுக்கு போயிருக்கிறேன்

இந்தியாவில் அனுமதி இல்லாமல்

ஆயுதம் வைத்திருக்க முடியாது.

ஆனால் அப்பகுதி மக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு .

அவள் ஊரின்

அழகு ததும்பும் குடகு மலையை

அவளோடு சுற்றிய போது

மலையை விட அழகு மடுவான

அவள்தான் என்னோடு கைகோர்த்து நடந்தாள்

ஊரை எல்லாம்

என் கை பிடித்து

சுற்றிக் காட்டிக் கொண்டு போன போதெல்லாம்

அத்தனை இயற்கைகளையும் விட

அவள் குரலையும்

அவளையுமே ரசித்தேன்

"எதையோ நினைச்சுக்கிட்டு

மனசுக்குள்ள எல்லாத்துக்கும் சிரிங்க.................."

அவள் வாயில் அடிக்கடி

என்னை நோக்கி வெளி வரும் வார்த்தைகள் அது.

இப்பவும்

அவள் அன்பை நினைத்தால்

இந்தப் பாடலைத்தான் கேட்பேன்

இந்தப் பாடல்

அவளோடு வாழ்ந்த

இனிய நினைவுகளை என்னுள் மீட்டுச் செல்லும்

"குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

எதோ நினவுதான் தன் உன்னை சுத்தி பறக்குது

என்னோட மனது தான் கண்ட படி தவிக்குது

ஒத்த வழி என் வழி தானே மானே

மானே மயிலே மரகத குயிலே

தேனே நான் பாடும் தென்மாங்கே

-பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே

காதில் கேட்டயோ என் வாக்கே

உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்

தன்னம் தனியாக நிற்க்கும் தேர் போலா ஆனேன்"

என்னவள் அவர்கள் குடும்பத்தில் மூத்தவள்

டிராவல் கம்பனியில் மனேஜராக இருந்தாள்.

ஒரு தம்பி வீராட் கடற்படை கப்பலில் இருந்தான்

எனக்கும் அவளுக்கும்

சில தினங்களாக பிரச்சனை!

இக் கைது அவளால் இருக்காது?

...........

அதாக..........சே...........

ஆனாலும் அவள் என்னை வெறுப்பவள் அல்ல?

அவள் என்னை மாட்டி வைத்திருக்கமாட்டாள்?

ஆனாலும் அவள் குறித்து ஏன் பேசினார்கள்?

என் அறையில் இருந்த அவள் படத்தை பார்த்ததும்

என்னைக் கைது செய்ய வந்ததவர்களது

வேகம் குறைந்தது ஏன்?

நினைவுகளோடு

சிந்தனைகளும்

அச்ச உணர்வுகளும்

என்னை சுற்றி வந்து

ஆக்கிரமிப்பதை உணர்ந்தேன்

எல்லாமே

அவளாகி இருந்ததால்

அவளைத் தவிர யாரிடமும்

இதுவரை

எதுவும் எதிர்பார்த்ததில்லை.

என்னைப் பற்றிய பல தகவல்கள்

அவளுக்குத் தெரியும்!

அவளே என்னை கை விட்டால்

நான் யாரிடம் போவேன்?

புரியாத மொழி

புரியாத உணர்வுகள்

கிடைக்காதென்று தெரியும் உதவிகள்?

தேடாத சொந்தங்கள் கொண்ட ஓர் இடத்தில்

எனக்கு எது நடந்தாலும்

வெளியே தெரியப் போவதில்லை

அது எனக்குள் உறுத்தியது

இலங்கையில்

நான் வாழ்ந்த

கிராமத்தில் ஓடி விளையாடிய காலத்தில்

ஒரு புற்று இருந்த இடத்தை காட்டி

அங்கே ஓடித் திரியாதே என்று அம்மா கூறுவார்

அதற்கு காரணம்

அந்த புற்றிலிருந்து ஒரு நாகம் வெளியே வரும்

அதை பலர் நாகம்மா என்று அழைத்தார்கள்

சிலர் அந்த நாகம் குடிப்பதற்காக

முட்டை மற்றும் பால் வைப்பது வழக்கம்

என் கையில் முட்டை ஒன்று கிடைத்தால்

அதைக் கொண்டு போய் அங்கே வைத்து விட்டு

நாகம்மா வந்து முட்டையை குடிக்கும் வரை

சற்று தள்ளி உட்கார்ந்து காத்திருப்பேன்

ஒரு சில தினங்கள் மட்டுமே

அந்தக் காட்சியை எனக்கு காணக் கிடைத்திருக்கிறது

பல வேளைகளில்

நாகம்மாவுக்கு பதில்

என் அம்மா

பின்னால் வந்து போடும்

பூசை அடிதான் கிடைத்திருக்கிறது.

அந்தப் புற்றுக்கு அருகே

யாரோ ஒருவர் காளியம்மனின் படத்தை வைத்து விட்டுச் செல்ல

அது காளியம்மன் புற்றாகி

அதைக் காக்க யாரோ

தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசையை உருவாக்க

பின்னர் அதுவே குடிசைக் கோயிலாகியது.

(இன்று : அது புகழ் வாய்ந்த சக்தி கொடுக்கும் அம்மன் ஆலயமாகி இருக்கிறது)

நான் பாடசாலைக்கு போகும் போதெல்லாம்

ஒரு நிமிடம் மெளனமாக

அங்கே நின்று வணங்கி விட்டே போவேன்

எனது மனதில் ஏதாவது பாரம் என்றால்

அந்தக் குடிசைக் கோயிலை கும்பிடுவேன்

ஆனால் ஒரு தேவாரம் கூட எனக்கு சொல்லத் தெரியாது.

ஆனால்

என் மனதில் இருக்கும் பாரம் அனைத்தும் பட்டெனக் குறைந்து விடும்

சோதனைகள் வரும் போதெல்லாம்

அவளைத்தான்

ஆம்

அந்த அம்மனைத்தான்

மனதுக்குள் நினைப்பேன்.

இப்போது அது பெரிய கோயில்.

ஆனால்

எப்பவும்

அந்த பழைய குடிசையும்

அந்தப் புற்றையும் என் கண்ணுக்குள் கொண்டு வந்து வணங்குவேன்.

அந்த அம்மன் மேல்

என் அனைத்து பாரங்களையும் போட்டு விட்டு

எல்லாமே உன் கையில் என்று

இரு கைகளாலும் முகத்தை தழுவிக் கொண்ட போதுதான்

என் கைகள்

விலங்கிடப் படாமல் இருந்ததை உணர்ந்தேன்

ஜீப் போலீஸ் நிலையத்தின் முன்னால் வந்து நின்றது................

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமான சம்பவம். உங்கள் எழுத்தின் வீரியம் வாசிக்கும்போது படம் பார்பது போல காட்சிகள் கண்ணுக்கு தெரிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • தொடங்கியவர்

நன்றி சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.