Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளின் குழப்பங்களும், சிங்கள பயங்கரவாத அரசின் சதிகளும்

Featured Replies

[size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் ‌படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size]

http://rste.org/2012/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/

  • Replies 101
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=1]

[size=5]இந்தபேட்டியில் பலருக்கும் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்: [/size][/size]

[size=1]

[size=5]- பரிதி அண்ணாவின் படுகொலை பின்னணி ?[/size][/size]

[size=1]

[size=5]- எம்மை பிரிக்க சோரம்போகும் ஊடகங்கள்? [/size][/size]

[size=1]

[size=5]- சுய ஆய்வு செய்யவேண்டும்![/size][/size]

[size=1]

[size=5]- பணம் சேர்ந்த புலம்பெயர் செயல்பாட்டாளர்கள் பற்றி? [/size][/size]

மாவீரர் வாரங்களில் இது தொடர்பான விவாதங்களை முன்வைப்பது சரியாக இருக்காது. ஆனாலும் ஒரு வரியில் குறிப்பிடுவதென்றால் பரமேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தியாகங்களை வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் அணிகளில் ஒன்றின் பலியாடாகியிருக்கிறார்.

தம்பி பரமேஸ்வரன்,

இத்தனை நாளும் பயணித்த அதே வழியில் மீண்டும் பயணிக்க முடியாது. ஏற்கனவே பயணித்த வழி முள்ளிவாய்க்காலில் முடிந்து விட்டது. இனியும் அதே வழியில் பயணிக்க நாம் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு எங்களை கொண்டு போய் விட்டதில் பெரும் பங்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு. இங்கே புதிய சிந்தனைகள் வளரவிடாமலும், புதிய வழிகளில் அரசியல் போராட்டங்களை நடத்த விடாமலும் அடாவடி செய்து போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கியது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நிச்சயமாக ஒரு மாற்றீடு தேவை. இன்னும் ஒரு சக்தி வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

2009இற்கு பின்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தம்மை "புலிகள்" என்று காட்டிக் கொள்ள பயன்பட்டதில் முக்கியமானது இந்த மாவீரர் நாள் நிகழ்வுதான். யார் இப்பொழுது புலிகள் என்று கேட்கப்பட்ட பொழுது பல இடங்களில் சொல்லப்பட்ட பதில் "யார் இப்பொழுது மாவீரர் நாள் நடத்துகிறார்களோ, அவர்கள்தான்" என்பது.

மாவீரர் நாள் நிகழ்வை வைத்து புலம்பெயர் மக்களின் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற நினைக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கான எதிர்வினையாகவே இன்னொரு மாவீரர் நாளை நான் பார்க்கிறேன்.

இதை சிலர் வெறும் உணர்வு சார்ந்த விடயமாக சுருக்கி "இத்தனை நாளும் நடத்தியவர்களே நடத்தட்டும் என்கிறார்கள்".

ஆனால் புலம்பெயர் மக்களின் போராட்டம் பன்முகப்படுத்தப்பட வேண்டியதன் கால அவசியத்தை உணர்ந்த நாம் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளின் அவசியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

திரு பரமேஸ்வரன் ஒரு பக்கச் சார்பு ஊது குழலாகவே பேட்டி வழங்கியுள்ளார்.

வழமையானவர்கள்தான் மாவீரர் தினம் செய்ய வேண்டும் என்பவர் இந்த வழமையானவர்களுக்கு யார் பொறுப்பு என்பதை அவர் தெளிவாகக் கூறுவேண்டும். வழமையானவர்கள் ஏன் மாவீரர்தினத்தை தாங்கள்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்ககிறார்கள்? மாவீரர் தினத்தை செய்வதில் போராளிகளுக்கு இல்லாத பொறுப்பு இவர்களுக்கு எப்படி வந்தது? துப்பாக்கி சத்தம் கூடக் கேட்காதவர்கள் போராளிளை கொச்சைப்படுத்தி மாவீரர் தினத்தை செய்வதில் அர்த்தம் என்ன?

போராளிகள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு உள்ள சிறப்பு என்ன? என்பதைச் சரிவரத் தெரியாதவர்கள் எப்படி மாவீரர்தினம் செய்ய முடியும். போராளிகள் காயத்தைக்காட்டிப் பிச்சை எடுக்கலாம் என்ற கூட்டத்தில் இருந்துகொண்டு நீங்கள் ஏன் மாவீரரைக் காட்டிப் பிச்சை எடுக்கிறீர்கள்? வழமையானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்களுக்குத் தெரியும். வழமையானவர்கள் யாருடன் சேர்ந்து செயற்படுகிறர்கள். அவர்களின் பொறுப்பாளர் யார்? அரசாங்கப் பின்னணியுடன் தங்கள் நலனுக்காகச் செயற்படுபவர்கள். தாங்கள் என்றும் குட்டி ராசாக்களாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் . இவர்கள் நாடுகடந்த அரசாங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று தோற்றார்கள். பின்னர் தலைமைச் செவயலகத்தை அழிக்க நினைத்தார்கள். தமிழ தேசியம் பேசும் ஊடகங்களை அழிக்க நினைத்தார்கள். இப்போது அரச சாப்பான ஊடகங்களுடன் கை கோர்த்தார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாதென்பதை பரமேஸ்வரன் அவர்கள் உணர வேண்டும். இப்போது மக்கள் நாயக்கு எலும்பை எறிவதுபோல்தான் வழமையானவர்களுக்கு காசை எறிகிறார்கள் என்பதை பரமேஸ்வரன் அவர்கள் உணர வேண்டும். இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பூராயம், சபேசன் மற்றும் செம்பகனின் கருத்துக்கள், "வியாபாரத்தில் ஏகபோக உரிமை கூடாது. எங்களுக்கும் பங்கு வேண்டும்" என்று சொல்வதுபோல் இருக்கு. :D

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் இது வியாபார நோக்கில் நடத்தப்பட்டால் மக்கள் திரண்டு வரமாட்டார்கள். ஆனால் இருபது வருடங்களாக மக்கள் திரண்டவண்ணமே உள்ளார்கள்..! அதற்காக மக்களை முட்டாள்கள் என்று சொல்லிவிட வேண்டாம்..!! :D

பி.கு.: எனக்கு இதுநாள் வரையிலும் மாவீரர் தின நிகழ்வுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. நான் இருந்த ஊர் அப்படி. இந்தமுறை செல்கிறேன். சென்று பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பூராயம், சபேசன் மற்றும் செம்பகனின் கருத்துக்கள், "வியாபாரத்தில் ஏகபோக உரிமை கூடாது. எங்களுக்கும் பங்கு வேண்டும்" என்று சொல்வதுபோல் இருக்கு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் இது வியாபார நோக்கில் நடத்தப்பட்டால் மக்கள் திரண்டு வரமாட்டார்கள். ஆனால் இருபது வருடங்களாக மக்கள் திரண்டவண்ணமே உள்ளார்கள்..! அதற்காக மக்களை முட்டாள்கள் என்று சொல்லிவிட வேண்டாம்..!!

போன வருடம் நடந்த இரு மாவீரர் நிகழ்வுக்கும் சென்று

வழமையாக செய்தவர்களின் மக்கள் செல்வாக்கையும்

புதிதாக செய்தவர்களின் வெறுமையையும் பார்த்துவிட்டு இப்படி மாவீரர் செல்வங்களை அவமதிக்கவேண்டாம். அவர்கள் அதை செய்யட்டும். நீங்கள் ஆயிரம் வேலை இருக்கு அவர்களின் கனவை அடைய என இரந்து கேட்டுவிட்டு வந்தேன்.

வழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற போக்கு எதற்குமே உதவாது.

அவர்கள் ஐனநாயக வழியில் இலலை என்று சொல்லமுன் நாம்.........???

மாவீரர் வாரங்களில் இது தொடர்பான விவாதங்களை முன்வைப்பது சரியாக இருக்காது. ஆனாலும் ஒரு வரியில் குறிப்பிடுவதென்றால் பரமேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தியாகங்களை வைத்து வங்குரோத்து அரசியல் நடத்தும் அணிகளில் ஒன்றின் பலியாடாகியிருக்கிறார்.

மாவீரர் வாரங்களில் இது தொடர்பான விவாதங்களை முன்வைப்பது சரியாக இருக்காது. ஆனாலும் ஒரு வரியில் குறிப்பிடுவதென்றால்

காலத்தின் தேவையை உணர்ந்து சிந்தித்து சரியான செயல் வடிவம் கொடுத்து .........எம் போராட்டத்தின் நியாயத்தை இன்னொருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டி இன்றுவரை தனது கொள்கையில் உறுதியாய் நிற்கும் பரமேஸ்வரன் ...........சிந்திக்க தெரியாமல் மொக்குத்தனமாய்

தமிழர் அமைப்பு ஒன்றுக்குள் போய் பலிக்கடாவாகிவிட்டார் ...............ஆகவே பரமேஸ்வரன் படு முட்டாள் என்பதையே உங்கள் கருத்து கூறிநிற்கிறது ........... :icon_mrgreen: ..

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்பூராயம், சபேசன் மற்றும் செம்பகனின் கருத்துக்கள், "வியாபாரத்தில் ஏகபோக உரிமை கூடாது. எங்களுக்கும் பங்கு வேண்டும்" என்று சொல்வதுபோல் இருக்கு. :D

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் இது வியாபார நோக்கில் நடத்தப்பட்டால் மக்கள் திரண்டு வரமாட்டார்கள். ஆனால் இருபது வருடங்களாக மக்கள் திரண்டவண்ணமே உள்ளார்கள்..! அதற்காக மக்களை முட்டாள்கள் என்று சொல்லிவிட வேண்டாம்..!! :D

பி.கு.: எனக்கு இதுநாள் வரையிலும் மாவீரர் தின நிகழ்வுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. நான் இருந்த ஊர் அப்படி. இந்தமுறை செல்கிறேன். சென்று பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன். :rolleyes:

முதலில் நான் இந்த பேட்டியை பார்க்கவில்லை அத்தோடு அது பற்றி எழுத வர‌வில்லை.

இசைமாவீர‌ர் தினத்திற்கு போகின்றீர்கள் பார்த்து விட்டு வந்து உண்மை எழுதும் தைரியம் உங்களுக்கு இருக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் இந்த பேட்டியை பார்க்கவில்லை அத்தோடு அது பற்றி எழுத வர‌வில்லை.

இசைமாவீர‌ர் தினத்திற்கு போகின்றீர்கள் பார்த்து விட்டு வந்து உண்மை எழுதும் தைரியம் உங்களுக்கு இருக்குதா?

ஏன்.. எழுதுவதால் என்ன பிரச்சினை?

இதை சிலர் வெறும் உணர்வு சார்ந்த விடயமாக சுருக்கி "இத்தனை நாளும் நடத்தியவர்களே நடத்தட்டும் என்கிறார்கள்".

ஆனால் புலம்பெயர் மக்களின் போராட்டம் பன்முகப்படுத்தப்பட வேண்டியதன் கால அவசியத்தை உணர்ந்த நாம் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளின் அவசியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

உதவி செய்வதற்கு நானா நீயா அதிகளவில் உதவி செய்வது என்ற வகையில் போட்டி போட்டு உதவி செய்யலாம். :rolleyes: ஆனால் துக்கதினத்தை கொண்டாடுவதும் பிரிவுகளாக நடப்பது அவசியம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்வது வேடிக்கையாக உள்ளது. :wub:

என்னை பொறுத்தவரை இரு அமைப்பும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவதை தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் பிரிந்து நடத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை எதிரியாக நோக்காமல் கூடியவரை ஒன்று சேர்க்க முயல வேண்டும் என்றும் நினைக்கிறேன். :rolleyes:

இன்றைய சூழ்நிலையில் பல அமைப்புக்கள் உருவாகுவது காலத்தின் கட்டாயம். மாவீரர்கள் அனைவருக்கும் பொதுவானர்கள். ஒன்றாக இணைத்து நடத்த முடியாத சூழ்நிலையில் அனைத்து அமைப்புக்களுமே தனித்தனியாக மாவீரர் நாள் நிகழ்வை செய்யலாம்.

இதில் எந்தவித தவறும் இல்லை.

இதில் இருக்கின்ற நன்மை என்னவெனில், தகுதி அற்றவர்கள் ஏகபிரதிநித்துவக் கோட்பாட்டை கையில் எடுப்பதை இது தடுக்கும்.

2010இல் நடந்த ஒரு சம்பவத்தை பதிவு இங்கே செய்யலாம் என்று நினைக்கிறேன்.

நானும் கலந்து கொண்ட ஒரு சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ரிசிசியிடம் எமது நிகழ்ச்சி நிரல்களை சமர்ப்பித்து அனுமதி வாங்குவது பற்றி காரசாரமான விவாதம் நடந்தது. நான் இதைக் கடுமையாக எதிர்த்தேன். இந்தச் சங்கம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக இயங்க வேண்டும் என்றேன்.

சிலருக்கு வழமையை மாற்றுவது மிகக் கடினமாக இருந்தது.

இன்றைக்கு புலிகள் என்ற பெயரில் பல அமைப்புகள் இயங்குகின்ற சூழ்நிலையை நான் விளங்கப்படுத்த முயன்றேன். எந்தப் புலியிடம் அனுமதி வாங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதில் இருந்த ரிசிசி ஆதரவாளர் சொன்னார் "இன்றையக்கு யார் மாவீரர் நாள் நிகழ்வு செய்கிறார்களோ, அவர்கள்தான் தொடர்ந்தும் இங்கே இயக்கம்" என்றார்.

மாவீரர் நாளை வைத்து "புலியின்" பெயரை இவர்கள் உரிமை கோருவதை தடுப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது என்னுடைய மனதில் கருக் கொண்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சூழ்நிலையில் பல அமைப்புக்கள் உருவாகுவது காலத்தின் கட்டாயம். மாவீரர்கள் அனைவருக்கும் பொதுவானர்கள். ஒன்றாக இணைத்து நடத்த முடியாத சூழ்நிலையில் அனைத்து அமைப்புக்களுமே தனித்தனியாக மாவீரர் நாள் நிகழ்வை செய்யலாம்.

இதில் எந்தவித தவறும் இல்லை.

இதில் இருக்கின்ற நன்மை என்னவெனில், தகுதி அற்றவர்கள் ஏகபிரதிநித்துவக் கோட்பாட்டை கையில் எடுப்பதை இது தடுக்கும்.

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் .

மாவீரர் தினத்தை யாரும் கொண்டாடலாம், அதற்ட்கு யாரும் போகலாம் . இதில் ஏன் தெளிவு இல்லை?

[size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் ‌படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size]

http://rste.org/2012...-நாடுகளின்-குழ/

மக்கள் மீது திணிப்பதை தவிருங்கள்.

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

[size=4]முடிவை மக்கள் எல்லாத்தரப்பையும் கேட்டு எடுப்பார்கள்.[/size]

[size=4]கடந்த காலங்களிலும் பல குழப்ப எத்தனிப்புக்கள் நடந்தன. இறுதியில் மக்கள் தமது முடிவை தெரிவித்தனர்,[/size]

[size=1]

[size=4]மக்கள் முடிவை ஏற்போம். சிறப்படைவோம்.[/size][/size]

Edited by akootha

முடிவு எடுப்பது மக்கள் கையில்.

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்

[size=4]தேடல்கள் முக்கியம் என்கிறார் இந்த பேட்டியாளர். அது முற்றிலும் உண்மை. [/size]

[size=4]எமக்கு முன்னால் இந்த மாவீரர் தினம் பற்றி பல கருத்துக்கள், எனவே மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:[/size]

[size=4]- யார் இதை ஒழுங்குபடுத்துபவர்கள்?[/size]

[size=4]- இவர்கள் தாமாக செயல்படுபவர்களா ? இவர்களுக்கு பின்னால் யார் உள்ளனர்? [/size]

[size=4]- முள்ளிவாய்க்கால் இனவழிப்பு காலத்தின் முன் இவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தனர்? [/size]

[size=4]- கார்த்திகை மாதம் மாவீரர் நிகழ்வு காலம் தவிர இவர்களின் செயல்பாடுகள் என்ன?[/size]

[size=4]தேடல்கள் மூலம் மட்டுமே நாம் தெளிவடையலாம் ![/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழ்நிலையில் பல அமைப்புக்கள் உருவாகுவது காலத்தின் கட்டாயம். மாவீரர்கள் அனைவருக்கும் பொதுவானர்கள். ஒன்றாக இணைத்து நடத்த முடியாத சூழ்நிலையில் அனைத்து அமைப்புக்களுமே தனித்தனியாக மாவீரர் நாள் நிகழ்வை செய்யலாம்.

இதில் எந்தவித தவறும் இல்லை.

இதில் இருக்கின்ற நன்மை என்னவெனில், தகுதி அற்றவர்கள் ஏகபிரதிநித்துவக் கோட்பாட்டை கையில் எடுப்பதை இது தடுக்கும்.

உண்மை சபேசன் கடந்த வருடம் நானும் மாவீரர் தினம் பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காக பெரிய முயற்சிகள எடுத்திருந்தேன் பல கட்டுரைகளும் அது பற்றி எழுதியிருந்தேன் . ஆனால் மாவீரரரை கூட எங்கள் அனுமதியோடுதான் வணங்கலாம் என்கிற அனைத்துலகச் செயலகத்தின் எதேச்சாரமான போக்கு எல்லா சாமாதான முறைகளையும் எடுத்தெறிந்தது சவால் விட்டது என்பவற்றின் பின்னர். நானும் இந்த முடிவைதான் தற்சமயம் எடுத்துள்ளேன். கடவுளை எங்கள் கோயிலில் தான் அனைவரும் வந்து கும்பிட வேண்டும் என்கிற போக்கு நிறுத்தப்படவேண்டும். அதனால்தான் இந்த வருடம் பேப்பரில் எதுவுமே எழுதவில்லை. அதைவிட இலண்டனில் மூன்றாவது ஒரு அமைப்பும் புதிதாக மாவீரர் நாள் ஏற்பாடு செய்துள்ளது அவர்களையும் வரவேற்போம்.

Edited by sathiri

  • தொடங்கியவர்

உண்மை சபேசன் கடந்த வருடம் நானும் மாவீரர் தினம் பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காக பெரிய முயற்சிகள எடுத்திருந்தேன் பல கட்டுரைகளும் அது பற்றி எழுதியிருந்தேன் .

ஆனால் மாவீரரரை கூட எங்கள் அனுமதியோடுதான் வணங்கலாம் என்கிற அனைத்துலகச் செயலகத்தின் எதேச்சாரமான போக்கு எல்லா சாமாதான முறைகளையும் எடுத்தெறிந்தது சவால் விட்டது என்பவற்றின் பின்னர்.

நானும் இந்த முடிவைதான் தற்சமயம் எடுத்துள்ளேன்.

கடவுளை எங்கள் கோயிலில் தான் அனைவரும் வந்து கும்பிட வேண்டும் என்கிற போக்கு நிறுத்தப்படவேண்டும். அதனால்தான் இந்த வருடம் பேப்பரில் எதுவுமே எழுதவில்லை.

அதைவிட இலண்டனில் மூன்றாவது ஒரு அமைப்பும் புதிதாக மாவீரர் நாள் ஏற்பாடு செய்துள்ளது அவர்களையும் வரவேற்போம்.

[size=4] ஒரு கொள்கை இல்லை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது, அது சரியானது என்றால் எடுத்த கொள்கையை விட்டுத்தரக்கூடாது. [/size][size=1]

[size=4]இல்லையேல் பொதுவாக கொள்கை எடுப்பவர் மேல் எந்த நம்பிக்கையும் யாருக்கும் இருக்காது போய்விடும். [/size][/size]

மாவீரர்தினத்தை தேர்தல் கூட்டம்போல் கணிப்பிட்டுள்ளார் விசுகு. யார் மாவீரர்தினம் நடாத்தினாலும் மக்கள் அங்கு செல்வார்கள். எங்கு வசதியோ அங்கு சென்று விளக்கேற்றுவார்கள். நான் தொடர்ந்து மாவீரர்தினத்துக்குச் செல்பவன். மாவீரர்தினத்தை ஒரு களியாட்ட நிகழ்வாகவும் சந்தையாகவும் ஆக்கிவிட்டர்களே என்ற கவலையுடன்தான் திரும்பி வருவேன். நான் அங்கு போனதால் அவர்களின் செய்ற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாக இல்லை. இதனை விசுகு புரிந்து கொள்ளவேண்டும். மாவிரரர் எல்லோரும்கும் பொதுவானவர்கள். அதனால் மாவீரர்தினத்தை யார் வேண்டுமானாலும்; நடாத்தலாம். போட்டியாக அல்ல. மக்களுக்கு வசதியாக மாவீரருக்கு மதிப்பளனிப்பதாக அமைந்தால் சரி. அங்கே போகாதே.. அவர்கள் துரோகி. இங்கே வாருங்கள் நாங்கள் தியாகி என்பதை விடுங்கள் மக்களுக்கு எல்லாம் புரியும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு கொள்கை இல்லை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது, அது சரியானது என்றால் எடுத்த கொள்கையை விட்டுத்தரக்கூடாது. [/size]

[size=1][size=4]இல்லையேல் பொதுவாக கொள்கை எடுப்பவர் மேல் எந்த நம்பிக்கையும் யாருக்கும் இருக்காது போய்விடும். [/size][/size]

அப்படியா ?? அப்படியானால் புலிகள் அமைப்பில் நான் இணைந்தபோது முக்கியமான சத்தியப் பிரமாணம். எனது இலட்சியத்திற்கு இடையூறாக காதலிலோ திருமண பந்தத்திலேயோ இணையக்கூடாது என்பது முக்கியமானதாக இருந்தது அதனால் காதலை துாக்கி எறிந்து விட்டே இயக்கத்தில் இணைந்திருந்தேன்.அதனாலேயே நான் காதலித்தவளை திருமணம் செய்ய முடியாமல் போனது. எடுத்த கொள்கையை நிலைப்பாட்டை நான் விட்டுத்தரவில்லையென நினைக்கிறேன்.

Edited by sathiri

  • தொடங்கியவர்

அப்படியா ?? அப்படியானால் புலிகள் அமைப்பில் நான் இணைந்தபோது முக்கியமான சத்தியப் பிரமாணம். எனது இலட்சியத்திற்கு இடையூறாக காதலிலோ திருமண பந்தத்திலேயோ இணையக்கூடாது என்பது முக்கியமானதாக இருந்தது அதனால் காதலை துக்கி எறிந்து விட்டே இயக்கத்தில் இணைந்திருந்தேன்.அதனாலேயே நான் காதலித்தவளை திருமணம் செய்ய முடியாமல் போனது. எடுத்த கொள்கையை நிலைப்பாட்டை நான் விட்டுத்தரவில்லையென நினைக்கிறேன்.

[size=4]உங்கள் எழுத்தில் / பதிலில் என்ன நியாயம் உள்ளது என விளங்கவில்லை. [/size]

[size=1]

[size=4]நீங்கள் சபேசனின் கருத்திற்கு வைத்த பதில் இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்டது. அதில் உள்ள பதிகள் சம்பந்தமாக கருத்துக்களை நான் வைத்த பொழுது அதை முற்று முழுதாக விட்டு விட்டு வேறு ஒரு நேரடி தொடர்பில்லாத உதாரணத்தை முன்னெடுக்கின்றீர்கள் உங்களை நியாயப்படுத்த.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் எழுத்தில் / பதிலில் என்ன நியாயம் உள்ளது என விளங்கவில்லை. [/size]

[size=1][size=4]நீங்கள் சபேசனின் கருத்திற்கு வைத்த பதில் இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்டது. அதில் உள்ள பதிகள் சம்பந்தமாக கருத்துக்களை நான் வைத்த பொழுது அதை முற்று முழுதாக விட்டு விட்டு வேறு ஒரு நேரடி தொடர்பில்லாத உதாரணத்தை முன்னெடுக்கின்றீர்கள் உங்களை நியாயப்படுத்த.[/size][/size]

[size=4]ஒரு கொள்கை இல்லை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது, அது சரியானது என்றால் எடுத்த கொள்கையை விட்டுத்தரக்கூடாது. [/size]

[size=1][size=4]இல்லையேல் பொதுவாக கொள்கை எடுப்பவர் மேல் எந்த நம்பிக்கையும் யாருக்கும் இருக்காது போய்விடும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.