Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நா.க.தஅ. மற்றும் GTV இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள்: தயாபரனுக்கு ஜெயசங்கர் முருகையா மடல்

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…..

tgte15012012ukmeeting07.jpg

முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருவதனை அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகவும் அதே சமயம், எங்கள் மக்களையும், எங்கள் தேசத்தையும் உண்மையாக நேசிப்பவர்களுள் ஒருவனாகவும் இருந்து கொண்டு, என்னால் இன்னமும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

ஆரம்பத்தில், கடந்த இரு வருடங்களின் முன்னராக, நாம் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம். அதனால், நண்பர்களாகவும் கூட ஆகி விட்டிருந்தோம். ஆனாலும், நாம் இருவரும் அதே அணியிலேயே இன்னமும் தொடர்ந்து இருந்தாலும் கூட, எங்கள் இருவரது பாதைகளும் இரு வேறாகப் பிரிந்து விட்டன. எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அந்த சிறிய இடைவெளி, கால ஓட்டத்தில், அதிகமாகிக் கொண்டே வந்து, இன்று கடந்த சுமார் அரை வருட காலமாக இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூட நிறுத்திக் கொள்ளுமளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. எங்களது இந்தப் பிரிவுக்குக் காரணம், எங்களது தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் பாதை பற்றிய கருத்துக்களிலும், செயற்பாடுகளிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகளே அன்றி, வேறெதுவுமில்லை என்பதனை நாம் இருவருமே நன்கு அறிவோம்.

உங்கள் கருத்துக்களுடனும், செயற்பாடுகளுடனும் நான் முற்றாக வேறுபட்டதனால், என்னை உங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காக நீங்கள் ஆரம்பத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டீர்கள், ஆனால், உங்கள் ஆசை நிறைவேறாது என்று நீங்கள் அறிந்தது முதல், என்னை முழுக்க முழுக்க ஓரம் கட்டுவதற்கு நீங்கள் தலைப்பட்டீர்கள். உங்கள் எண்ணம் அறிந்து, உங்கள் பாதையிலிருந்து என்னை நானாகவே விலக்கிக் கொண்டு, மௌனமாகத்தான் நான் இன்றுவரையில் இருந்து வந்தேன். ஆனால், இனியும் நான் தொடர்ந்து மௌனமாக இருந்தால், என் மனசாட்சியே என்னை இனி ஒரு போதுமே மன்னிக்காது, என்பதனை இன்று நான் ஆழமாக உணர்ந்து கொண்டதனால் இந்தத் திறந்த மடலினை உங்களுக்காக வரைவதற்கு நான் முடிவெடுத்தேன்.

எங்கள் அரசாங்கத்தினதும், எங்கள் விடுதலைப் போராட்டத்தினதும் நன்மைகள் பல கருதி, எங்கள் அரசாங்கத்தில் நீங்கள் அரங்கேற்றிவரும் உங்கள் திருவிளையாடல்கள் அனைத்தையும் நான் பொறுமையாகத்தான் இதுநாள் வரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். பொய்கள், புரட்டுக்கள், புளுகுகள் கூறுவதும் – ஒருவருக்கு எதிராக மற்றவரை “கோள்” மூட்டி அதில் “குளிர்” காய்வதும் – “நடுநிலைமை” என்ற போர்வையில் ஒரு சாராருக்கு “தலை” காட்டுவதும் மற்றவர்களுக்கு “வால்” காட்டுவதும், இவைதான் “அரசியல் இராஜதந்திரம்” என்று முழுக்க முழுக்க நம்பி, அதனைத் தவறாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திலும் கடைப்பிடித்து வரும் ஒரு மகா மேதையான உங்களை ஒரு அமைச்சராக, அதுவும் எங்கள் அரசாங்கத்தில் மிகவும் ஒரு முக்கியமான பொறுப்புமிக்க துறைக்கு அமைச்சராகப் பார்ப்பதற்கு எங்கள் மக்களும், எங்கள் பிரதமரும் என்ன “பாவம்” செய்தனரோ அதனை நான் இன்றுவரையில் அறியேன்.

gtv.jpg

ஆனால் இன்றோ, உங்கள் திருவிளையாடல்களை எங்கள் அரசாங்கத்தில் மட்டுமல்லாமல், ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய தமிழ்த்தேசிய ஊடகமான GTV’யிலும் அல்லவா நீங்கள் ஆரம்பித்து விட்டிருக்கின்றீர்கள்? கடந்த இருவருடங்களாக நீங்கள் எங்கள் மக்கள் மத்தியில் எங்கள் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியிருந்த அபகீர்த்தியும், அவப்பெயரும், அவமானமும் போதும். தயவு செய்து, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய ஊடகமான GTV’இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள். பல நம்பிக்கைத் துரோகிகளினால், ஏற்கனவே “இருட்டினில்” தத்தளித்துக் கொண்டிருக்கின்றது எங்கள் தமிழினம். தயவுசெய்து, எங்கள் தமிழினத்தை உங்களைப் போன்றவர்கள் மேலும் காரிருளுக்குள் இட்டுசென்று விடாதீர்கள், என்று உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்கள் மக்களை மீண்டும் உண்மையான “வெளிச்சத்திற்கு” கொண்டு வருவதற்கு நீங்கள் உண்மையில் விரும்பினால்.., தயவுசெய்து, நீங்கள் உடனடியாக GTV’யை விட்டு வெளியேற வேண்டும். இதனை நான் உங்களிடம் மிகவும் தாழ்மையுடனும், பணிவுடனும், உறுதியுடனும் வேண்டிக் கொள்கின்றேன். இது என் விருப்பம் மட்டுமல்ல அல்லது எங்கள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களின் விருப்பம் மட்டுமல்ல, இது எங்கள் மக்களின் விருப்பமும் ஆகும். இது நீங்கள் எங்கள் மக்களுக்கும், மண்ணுக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இன்றுவரையில் செய்துள்ள சேவைகளுள் மிகவும் மகத்தான சேவையாக இருக்கும் என்பதில், தனிப்பட்ட ரீதியில் எனக்கு எள்ளளவேனும் ஐயமில்லை.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

என்றும் உண்மையுள்ள,

ஜெயசங்கர் முருகையா.

http://meenakam.com/...-tayaparan.html

[size=5].. இச்செய்தி இன்று மதியம் இணைக்கப்பட்டிருந்தது ... அறிவிப்பு எதுவுமற்று அகற்றப்பட்டிருக்கிறது, ஏன்????????? ....[/size]

[size=5]... ஏன் உண்மைகள் வெளிவர யாழும் தடை போடுகின்றதா???????? ... [/size]

  • Replies 65
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

... யாழ்கள உறுப்பினரும், நாகதஅ இன் ஊடக தொடர்பாளருமான அகரன் இங்கு வந்து விளக்கம் அளித்தால் நன்று .. பலரது சந்தேகங்கள் தீரலாம்?

... பலவற்றை மறைத்துதான் நாம் முள்ளிவாய்க்காலில் முடங்கினோம்! தயவுசெய்து இனி உண்மைகளை வெளிவர அனுமதியுங்கள் ...

... இங்கு யாழிலும் பலர் பலமுறை இச்செய்தி தொடர்பாக முன்னமே பல கருத்துக்களை முன் வைத்தோம், அவைகள் நாகதஅ வை உடைக்கவல்ல ... உள்ளிருக்கும் நச்சுக்களை இனங்காட்ட ...

Edited by Nellaiyan

அடிப்படையில் கருத்துக்களம் என்பது ஒரு பொதுத்தளம்.

Edited by அகரன்

நெல்லையன்

100 வீதம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

உண்மைகள் உறங்குவதில்லை ...............ஆனால் அது தன் இமைகளை மட்டும் மூடிக்கொண்டிருக்கிறது. அதை உறக்கம் என நினைத்து பொய்கள் எல்லாம் தலை விரி கோலமாய் ஆடிக்கொண்டே இருக்கும்..........இது நியதி..... ஆனால் நேரம் பார்த்து,தருணம் பார்த்து,இமைகள் அகல விரியும் போது அனைத்தும் சுட்டெரிக்கப்படும். இது வரலாறு எமக்கு தந்த பாடம். யாரோ எங்கயோ நாம் வரலாற்றை திரும்பிப்பார்ப்பதில்லை ,என்று எழுதியிருந்தார்கள் .............ஆனால் நாம் வரலாற்றை திரும்பிப்பார்த்தபடியினால்தான் 40 வருடங்களுக்கு மேலாக எம் உரிமைப்போராட்டம் அதே குறிக்கோள் உடன் நகர்ந்துகொண்டிருக்கிறது.பொய்மையின் வேடமாய் தலைவிரித்தாடும் இவர்கள் எல்லாம் மாறப்போகும் வரலாற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள் என்பதே என் கவலை. ஏனனில் முடிந்து போன வரலாற்றில் பலர் துரோகிகள் பட்டம் பெற்று அழிந்துபோன நிலைமை எழுதப்போகும் வரலாற்றில் உருவாக்கக்கூடாது என்பதே என் விருப்பு...............ஏனனில் மீண்டும் நான் இங்கு அடித்துக்கூறுகிறேன் வரலாற்றை திரும்பிபார்த்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உணர்ந்துகொள்ளுங்கள் .மாறிக்கொள்ளுங்கள்.[மாற்றிக்கொள்ளுங்கள் ]

Edited by தமிழ்சூரியன்

ஜெய்சங்கர் முருகையா இப்பொழுதும் நாடு கடந்த அரசில் உறுப்பினராக இருக்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

[தாங்கள் மக்கள் பணியில் உள்ளவர்.

இந்த திரிக்கு நீங்கள் எழுதியுள்ளதைப்பார்த்து ஆவலாக ஓடி வந்தேன்.

ஏமாற்றி விட்டீர்கள்.... :( :( :( :(

Edited by விசுகு

  • தொடங்கியவர்

... இது நான் இங்கு இச்செய்தியை இணைக்கவுமில்லை, அவ்விணையத்துக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை! .உமக்கு சொல்லி உவை புரியவா போகின்றது!! சரி இங்குள்ள செய்திக்கு பதில் கூறும்!

.

... ...

... என்னை பொறுத்தவரை ஒருபுறம் கள்ளர்கள், இன்னொருபுறம் துரோகிகள் ... எடை போட்டு பார்க்கையில் கள்ளர்களோடு நிற்பதே மேல் என்று தோன்றியது .. நிற்கின்றேன் .. ஏனெனில் அவர்கள் திருந்தலாம், ஆனால் துரோகிகள் ...!!!!!!!!!!!!!!!????????

Edited by Nellaiyan

மிஸ்டர் நெல்லையன்

முதலில் உம்முடைய பிச்சைக்கார வேடத்தினைக் கலைந்து விட்டு அறத்துடன் வாரும்

நான் பதில் தர காத்திருக்கின்றேன்.

பிறர் மீது சேறு பூசுவதற்கு முன்னர் உம்முறைய அகத்தினை வெளிப்படுத்தும்.

இந்தப்பதில் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவரை மதிக்கத்தக்கும் வகையில் அமையவில்லை .........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொறுப்பானபணியில் உள்ளவரின் எழுத்தா இது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதம் ஆரம்பிச்சு, அரை மணித்தியாலத்துக்குள்.... எத்தனை,

நச்சுப் பாம்புகள்.

மோகன் அண்ணா சொல்லிய படி...

யாழ் களத்தைப் பூட்டுவதே... நல்லது.

  • தொடங்கியவர்

ஜெய்சங்கர் முருகையா இப்பொழுதும் நாடு கடந்த அரசில் உறுப்பினராக இருக்கின்றாரா?

.. நான் அறிந்த வரை, அவர் இன்றும் உறுப்பினர்தான்! அதை மேலேயும் சொல்லி இருக்கிறார்! உருத்திரகுமார் தலைமையிலான பிரிவின் அங்கத்தவர்!

... இது என்னத்தை போன்றதென்றால்.. சிலர் தங்களுக்குள்ளேயே அடிபட்டு .. உண்மைகள் ஊடகங்களுக்கு கசிய விட்டு, பின் நடுத்தெருவில் சட்டையை பிடித்துக் கொண்டிருக்க ... கேட்டவர்கள்/பார்த்தவர்கள் மேல் பழியை போட்டு பாய்வதைப் போலல்லவா இருக்கின்றது???????? ... மிரட்டலுகள் வேண்டாம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…..

tgte15012012ukmeeting07.jpg

முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருவதனை அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகவும் அதே சமயம், எங்கள் மக்களையும், எங்கள் தேசத்தையும் உண்மையாக நேசிப்பவர்களுள் ஒருவனாகவும் இருந்து கொண்டு, என்னால் இன்னமும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

ஆரம்பத்தில், கடந்த இரு வருடங்களின் முன்னராக, நாம் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம். அதனால், நண்பர்களாகவும் கூட ஆகி விட்டிருந்தோம். ஆனாலும், நாம் இருவரும் அதே அணியிலேயே இன்னமும் தொடர்ந்து இருந்தாலும் கூட, எங்கள் இருவரது பாதைகளும் இரு வேறாகப் பிரிந்து விட்டன. எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அந்த சிறிய இடைவெளி, கால ஓட்டத்தில், அதிகமாகிக் கொண்டே வந்து, இன்று கடந்த சுமார் அரை வருட காலமாக இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதைக் கூட நிறுத்திக் கொள்ளுமளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. எங்களது இந்தப் பிரிவுக்குக் காரணம், எங்களது தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் பாதை பற்றிய கருத்துக்களிலும், செயற்பாடுகளிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகளே அன்றி, வேறெதுவுமில்லை என்பதனை நாம் இருவருமே நன்கு அறிவோம்.

உங்கள் கருத்துக்களுடனும், செயற்பாடுகளுடனும் நான் முற்றாக வேறுபட்டதனால், என்னை உங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காக நீங்கள் ஆரம்பத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டீர்கள், ஆனால், உங்கள் ஆசை நிறைவேறாது என்று நீங்கள் அறிந்தது முதல், என்னை முழுக்க முழுக்க ஓரம் கட்டுவதற்கு நீங்கள் தலைப்பட்டீர்கள். உங்கள் எண்ணம் அறிந்து, உங்கள் பாதையிலிருந்து என்னை நானாகவே விலக்கிக் கொண்டு, மௌனமாகத்தான் நான் இன்றுவரையில் இருந்து வந்தேன். ஆனால், இனியும் நான் தொடர்ந்து மௌனமாக இருந்தால், என் மனசாட்சியே என்னை இனி ஒரு போதுமே மன்னிக்காது, என்பதனை இன்று நான் ஆழமாக உணர்ந்து கொண்டதனால் இந்தத் திறந்த மடலினை உங்களுக்காக வரைவதற்கு நான் முடிவெடுத்தேன்.

எங்கள் அரசாங்கத்தினதும், எங்கள் விடுதலைப் போராட்டத்தினதும் நன்மைகள் பல கருதி, எங்கள் அரசாங்கத்தில் நீங்கள் அரங்கேற்றிவரும் உங்கள் திருவிளையாடல்கள் அனைத்தையும் நான் பொறுமையாகத்தான் இதுநாள் வரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். பொய்கள், புரட்டுக்கள், புளுகுகள் கூறுவதும் – ஒருவருக்கு எதிராக மற்றவரை “கோள்” மூட்டி அதில் “குளிர்” காய்வதும் – “நடுநிலைமை” என்ற போர்வையில் ஒரு சாராருக்கு “தலை” காட்டுவதும் மற்றவர்களுக்கு “வால்” காட்டுவதும், இவைதான் “அரசியல் இராஜதந்திரம்” என்று முழுக்க முழுக்க நம்பி, அதனைத் தவறாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திலும் கடைப்பிடித்து வரும் ஒரு மகா மேதையான உங்களை ஒரு அமைச்சராக, அதுவும் எங்கள் அரசாங்கத்தில் மிகவும் ஒரு முக்கியமான பொறுப்புமிக்க துறைக்கு அமைச்சராகப் பார்ப்பதற்கு எங்கள் மக்களும், எங்கள் பிரதமரும் என்ன “பாவம்” செய்தனரோ அதனை நான் இன்றுவரையில் அறியேன்.

gtv.jpg

ஆனால் இன்றோ, உங்கள் திருவிளையாடல்களை எங்கள் அரசாங்கத்தில் மட்டுமல்லாமல், ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய தமிழ்த்தேசிய ஊடகமான GTV’யிலும் அல்லவா நீங்கள் ஆரம்பித்து விட்டிருக்கின்றீர்கள்? கடந்த இருவருடங்களாக நீங்கள் எங்கள் மக்கள் மத்தியில் எங்கள் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியிருந்த அபகீர்த்தியும், அவப்பெயரும், அவமானமும் போதும். தயவு செய்து, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய ஊடகமான GTV’இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள். பல நம்பிக்கைத் துரோகிகளினால், ஏற்கனவே “இருட்டினில்” தத்தளித்துக் கொண்டிருக்கின்றது எங்கள் தமிழினம். தயவுசெய்து, எங்கள் தமிழினத்தை உங்களைப் போன்றவர்கள் மேலும் காரிருளுக்குள் இட்டுசென்று விடாதீர்கள், என்று உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எங்கள் மக்களை மீண்டும் உண்மையான “வெளிச்சத்திற்கு” கொண்டு வருவதற்கு நீங்கள் உண்மையில் விரும்பினால்.., தயவுசெய்து, நீங்கள் உடனடியாக GTV’யை விட்டு வெளியேற வேண்டும். இதனை நான் உங்களிடம் மிகவும் தாழ்மையுடனும், பணிவுடனும், உறுதியுடனும் வேண்டிக் கொள்கின்றேன். இது என் விருப்பம் மட்டுமல்ல அல்லது எங்கள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களின் விருப்பம் மட்டுமல்ல, இது எங்கள் மக்களின் விருப்பமும் ஆகும். இது நீங்கள் எங்கள் மக்களுக்கும், மண்ணுக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இன்றுவரையில் செய்துள்ள சேவைகளுள் மிகவும் மகத்தான சேவையாக இருக்கும் என்பதில், தனிப்பட்ட ரீதியில் எனக்கு எள்ளளவேனும் ஐயமில்லை.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

என்றும் உண்மையுள்ள,

ஜெயசங்கர் முருகையா.

http://meenakam.com/...-tayaparan.html

[size=5].. இச்செய்தி இன்று மதியம் இணைக்கப்பட்டிருந்தது ... அறிவிப்பு எதுவுமற்று அகற்றப்பட்டிருக்கிறது, ஏன்????????? ....[/size]

[size=5]... ஏன் உண்மைகள் வெளிவர யாழும் தடை போடுகின்றதா???????? ... [/size]

  • [size=6]தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை[/size]
  • [size=6]சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.[/size]
  • [size=6]ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.[/size]

  • தொடங்கியவர்

  • [size=6]தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை[/size]
  • [size=6]சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.[/size]
  • [size=6]ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.[/size]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…..

.......

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

என்றும் உண்மையுள்ள,

ஜெயசங்கர் முருகையா.

http://meenakam.com/...-tayaparan.html

:icon_idea:

Edited by Nellaiyan

  • [size=6]தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை[/size]
  • [size=6]சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.[/size]
  • [size=6]ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.[/size]

[size=5]இந்தத் திரி இந்தக்கள விதிக்கு உட்பட்டுத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று யாழ் களம் நினைக்கிறதா?[/size]

மிஸ்டர் நெல்லையன்

முதலில் உம்முடைய பிச்சைக்கார வேடத்தினைக் கலைந்து விட்டு அறத்துடன் வாரும்

நான் பதில் தர காத்திருக்கின்றேன்.

பிறர் மீது சேறு பூசுவதற்கு முன்னர் உம்முறைய அகத்தினை வெளிப்படுத்தும்.

அண்ணே

நீங்கள் ஒரு பொறுப்பில் உள்ளவர். இப்படி உரையாடல் நாகரீகம் அறியாதவராக இருப்பது எமக்கே அவமானமாக உள்ளது. இவர்களையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்று.

நெல்லையனின் கேள்விக்கு உங்களிற்க்கு பதில் தர விப்பம் இல்லாவிடின் எழுதாமல் விட்டிருக்கலாம். அல்லது தனிமடலில் அவருடன் விவாதித்திருக்கலாம்.

உங்களின் சில கருத்துக்களை நான் ஏற்கனவே பார்த்து மனதிற்குள் நக்கல் சிரிப்பு சிரித்திருக்கின்றேன். உங்களை தேர்வு செய்யாதவர்கள் உங்களை விமர்சிக்கவோ கேள்விகள் கேட்கவோ முடியாது என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு கீழ்தரமான செயல். இன்று எமக்கு சம்மந்தமே இல்லாத எத்தனையோ இனங்கள் தான் எமக்காக குரல் கொடுத்து அதனால் வரும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து நிற்கிறார்கள். அவர்களை பார்த்து எங்கள் பிரச்சனையில் தலையிட நீங்கள் யார் என்று கேட்பீர்களா?

உண்மையை பேசுவதற்க்கு ஒருவனின் முகம் தேவையில்லை. முகம் தெரியாத எத்தனையோ உறவுகளின் வாக்குமூலம் தான் இன்று சிங்களவனிற்க்கு தலையிடியாக உள்ளது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். சனநாயகத்தில் ஓட்டுப்போட்டவனும் கேள்வி கேட்பான் போடாதவனும் கேள்வி கேட்பான். இந்த அடிப்படை நான் உங்களிற்க்கு சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றேன்.

தயவு செய்து எதிர்வரும் காலங்களில் நிதானமாக யோசித்து பதில்களை எழுதுங்கள்.

Edited by கருத்து கந்தசாமி

ஜெய்சங்கர் முருகையா இப்பொழுதும் நாடு கடந்த அரசில் உறுப்பினராக இருக்கின்றாரா?

உதே பிரச்னை ..........,உந்தப்பதவியே உங்களுக்கு பிரச்சனை ...............எவன், என்ன, ஏன் சொல்லுகிறான் என்பதை மட்டும் ஆய்வு செய்யுங்கள் ஆய்வாளரே ..........

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசு சார்பாக இருவர் பேச வந்துள்ளீர்கள்

தயவு செய்து யாழுடன் வம்பு கட்டுவதைவிடுத்து

செய்தி உண்மையா?

அல்லது பொய்யா? என்ற விளக்கம் தாருங்கள்.

அதையே மக்களாகிய நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

Edited by விசுகு

ஐயா கருத்துக் கந்தாசாமி

அகரன் வந்து எழுதலாமே என நெல்லையன் விடுத்த அழைப்புக்கு பொறுப்புள்ளமை என்ற அடிப்படையில்தான் நான் பதில் எழுதினேன்.

அடிப்படையில் கருத்துக்களம் என்பது ஒரு பொதுத்தளம்.

இந்த பொதுத்தளத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்னுள்ளமை அடிப்படை அறம்.

இந்த அறம் வெளிப்படைத்தன்மை என்ற நிலையில் இருந்தான் தோற்றம் பெறும்.

இங்கே நா.த.அரசாங்கத்தின் மீது சேறுபூசும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றவர்கள் புனைப்பெயர்களில்

கதைகள் புனைய முற்படக்கூடாது.

நெல்லையன் எப்போதுமே அதனைதான் செய்து கொண்டு இருக்கின்றார்.

இவர்கள் யாழ் கருத்துகளத்தினை ஒரு வாய்பாக பயன்படுத்தி நா.த.அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் கருத்தினை விதைப்பது நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வடிவம் கொடுப்பதாகவுள்ளது.

வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அனைவருக்கும் உள்ள பொறுப்பு :

ஆனால் அது வாக்களித்த மக்களுக்குதான் பதில் சொல்ல வேண்டுமே அன்றி வாக்களித்த மக்களை நன்கு திட்டமிட்டு குழப்புவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

அடிப்படையில் மக்களால் - மக்களுக்காக - மக்களுக்கென தேர்வு செய்யபட்டமை

நா.த.அரசாங்கமெனில் முதலில் மக்கள் தந்த ஆணையினை ஏற்று ஏகபோக நினைப்பில் இருப்பவர்கள் முதலில் மக்களை மதிக்க பழகட்டும்.

இங்கே நெல்லையன் போன்றவர்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்தோடு போராட்டம் மக்கள் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அதாவது ஏகபோக சாசனத்தின் இருப்பினை தக்கவைக்கவே நெல்லையன் போன்றவர்கள் மக்களால் தோற்றம் பெற்ற நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்குள் அறம் இருப்பின் மக்கள் முன் தோன்று விடுதலைக்கான தெளிவான நிகழ்ச்சி நிரலினை முன்வைக்கச் சொல்லுங்கள்.

நன்றி.

யாழ் கள உறவுகளுக்கு

வழமையாக நான் பொறுப்பற்று பதில் சொல்கின்ற பண்பினைக் கொண்டவன் அல்ல.

இருப்பினும் நெல்லையனின் தொடர்சியான சேறுபூசல்கள் கோபப்படுத்துகின்றது என்பதே உண்மை.

பொறுப்புள்ளவன் என்ற வகையில் அக்கறையோடு குறித்த விடயத்தில் கரிசனை கொண்டமைக்கு நன்றி.

மேலும் விடுதலைக்கான களப்பணியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள என் போன்றவர்களுக்கு உள்ள வலி சில நேரங்களில் நெல்லையன் போன்றவர்களை காணும் போது கோபம் எட்டிப் பார்க்க நினைக்கின்றது.

ஜெய்சங்கரின் கடிதம் தயாபரன் அப்படி என்ன செய்தார் என்பதை நேரயாகச் சொல்லவில்லை. கோள் மூட்டினார், குழப்பினார் போன்றவைகள் எல்லோராலும் எல்லோர் மீதும் சொல்லக் கூடியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு

வழமையாக நான் பொறுப்பற்று பதில் சொல்கின்ற பண்பினைக் கொண்டவன் அல்ல.

இருப்பினும் நெல்லையனின் தொடர்சியான சேறுபூசல்கள் கோபப்படுத்துகின்றது என்பதே உண்மை.

பொறுப்புள்ளவன் என்ற வகையில் அக்கறையோடு குறித்த விடயத்தில் கரிசனை கொண்டமைக்கு நன்றி.

மேலும் விடுதலைக்கான களப்பணியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள என் போன்றவர்களுக்கு உள்ள வலி சில நேரங்களில் நெல்லையன் போன்றவர்களை காணும் போது கோபம் எட்டிப் பார்க்க நினைக்கின்றது.

நன்றி

தங்களது கருத்தை மேற்கோள் காட்டியதை நானும் நீக்கியுள்ளேன்.

எமது குறிக்கோளுக்குகு எது தடையாக வரினும் அதை எல்லோரும்சேர்ந்துஉடைத்தெறிவோம்.

தொடரட்டும் தங்கள் பணி.

இது கருத்துக்களம் இங்கு கருத்துகள் தான் முக்கியமே தவிர முகம்கள் முக்கியமில்லை... முக்கிய பொறுப்பிலுள்ள நீங்கள் கருத்துகளை எழுத முன்னம் யோசித்து எழுதுங்கள் .. இது வரை நாடு கடந்த அரசு பற்றி நெல்லையன் கருத்து எழுதும் போதெல்லாம் பெரிசாகவே எடுப்பதில்லை வாசித்து சிரித்து விட்டு செல்லுவேன்

நீங்கள் எழுதிய கருத்துக்கு பிறகு இப்பிடியானவர்களா நாடுகடந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது..

ஐயா கருத்துக் கந்தாசாமி

அகரன் வந்து எழுதலாமே என நெல்லையன் விடுத்த அழைப்புக்கு பொறுப்புள்ளமை என்ற அடிப்படையில்தான் நான் பதில் எழுதினேன்.

அடிப்படையில் கருத்துக்களம் என்பது ஒரு பொதுத்தளம்.

இந்த பொதுத்தளத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்னுள்ளமை அடிப்படை அறம்.

இந்த அறம் வெளிப்படைத்தன்மை என்ற நிலையில் இருந்தான் தோற்றம் பெறும்.

இங்கே நா.த.அரசாங்கத்தின் மீது சேறுபூசும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றவர்கள் புனைப்பெயர்களில்

கதைகள் புனைய முற்படக்கூடாது.

நெல்லையன் எப்போதுமே அதனைதான் செய்து கொண்டு இருக்கின்றார்.

இவர்கள் யாழ் கருத்துகளத்தினை ஒரு வாய்பாக பயன்படுத்தி நா.த.அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் கருத்தினை விதைப்பது நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வடிவம் கொடுப்பதாகவுள்ளது.

வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அனைவருக்கும் உள்ள பொறுப்பு :

ஆனால் அது வாக்களித்த மக்களுக்குதான் பதில் சொல்ல வேண்டுமே அன்றி வாக்களித்த மக்களை நன்கு திட்டமிட்டு குழப்புவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

அடிப்படையில் மக்களால் - மக்களுக்காக - மக்களுக்கென தேர்வு செய்யபட்டமை

நா.த.அரசாங்கமெனில் முதலில் மக்கள் தந்த ஆணையினை ஏற்று ஏகபோக நினைப்பில் இருப்பவர்கள் முதலில் மக்களை மதிக்க பழகட்டும்.

இங்கே நெல்லையன் போன்றவர்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்தோடு போராட்டம் மக்கள் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அதாவது ஏகபோக சாசனத்தின் இருப்பினை தக்கவைக்கவே நெல்லையன் போன்றவர்கள் மக்களால் தோற்றம் பெற்ற நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்குள் அறம் இருப்பின் மக்கள் முன் தோன்று விடுதலைக்கான தெளிவான நிகழ்ச்சி நிரலினை முன்வைக்கச் சொல்லுங்கள்.

நன்றி.

ஐயா அகரன் அவர்களே அதைத்தான் நெல்லையன் உட்பட உங்களுக்கு வாக்குப்போட்ட தமிழர்களாகிய நாமும் திருப்பிக்கேட்கிறோம். இது புரியாமலா இவ்வளவு பொறுப்புடன் பதிலளிக்கிறீர்கள். முதலில் ஓர் நிர்வாகம் என்றால் என்ன என்பதைப்பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் .........சரி ஓர் பொறுப்புள்ள நிர்வாகி என்ற வகையில் அந்த நிர்வாகத்துக்கு ஏன் இந்த விமர்சனம் எல்லாம் வருகிறது என்று கொஞ்சம் ஆவது சிந்தித்து அவற்றை நிவர்த்தி செய்யும் திறன் உங்களிடம் எப்போது உருவாகிறதோ அப்போதுதான் உங்கள் இலக்கினை நீங்கள் அடையமுடியும் என்றெல்லாம் நீங்கள் சிந்திக்காமல் விட்டால் உங்களைப்பற்றி பெரிய எதிர் பார்ப்புடன் இருக்கும் எமக்கெல்லாம் ஏமாற்றமாகவே அமையும் என்பதயும் மிகத்தெளிவாக கூறவிரும்புகிறேன் .நன்றி ............[வீரத்தமிழ் அமைப்புக்கள் மேல் பற்றுகொண்ட தமிழ்சூரியன் எனப்படும் உங்கள் தமிழ் உறவு]

ஐயா கருத்துக் கந்தாசாமி

அகரன் வந்து எழுதலாமே என நெல்லையன் விடுத்த அழைப்புக்கு பொறுப்புள்ளமை என்ற அடிப்படையில்தான் நான் பதில் எழுதினேன்.

அடிப்படையில் கருத்துக்களம் என்பது ஒரு பொதுத்தளம்.

இந்த பொதுத்தளத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்னுள்ளமை அடிப்படை அறம்.

இந்த அறம் வெளிப்படைத்தன்மை என்ற நிலையில் இருந்தான் தோற்றம் பெறும்.

இங்கே நா.த.அரசாங்கத்தின் மீது சேறுபூசும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றவர்கள் புனைப்பெயர்களில்

கதைகள் புனைய முற்படக்கூடாது.

நெல்லையன் எப்போதுமே அதனைதான் செய்து கொண்டு இருக்கின்றார்.

இவர்கள் யாழ் கருத்துகளத்தினை ஒரு வாய்பாக பயன்படுத்தி நா.த.அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் கருத்தினை விதைப்பது நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வடிவம் கொடுப்பதாகவுள்ளது.

வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அனைவருக்கும் உள்ள பொறுப்பு :

ஆனால் அது வாக்களித்த மக்களுக்குதான் பதில் சொல்ல வேண்டுமே அன்றி வாக்களித்த மக்களை நன்கு திட்டமிட்டு குழப்புவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

அடிப்படையில் மக்களால் - மக்களுக்காக - மக்களுக்கென தேர்வு செய்யபட்டமை

நா.த.அரசாங்கமெனில் முதலில் மக்கள் தந்த ஆணையினை ஏற்று ஏகபோக நினைப்பில் இருப்பவர்கள் முதலில் மக்களை மதிக்க பழகட்டும்.

இங்கே நெல்லையன் போன்றவர்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்தோடு போராட்டம் மக்கள் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அதாவது ஏகபோக சாசனத்தின் இருப்பினை தக்கவைக்கவே நெல்லையன் போன்றவர்கள் மக்களால் தோற்றம் பெற்ற நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்குள் அறம் இருப்பின் மக்கள் முன் தோன்று விடுதலைக்கான தெளிவான நிகழ்ச்சி நிரலினை முன்வைக்கச் சொல்லுங்கள்.

நன்றி.

உண்மையில் இது நீங்கள் தானா என்று சந்தேகமாக உள்ளது. சிறுபிள்ளைத்தனமாக உள்ளது உங்கள் கருத்து.

நெல்லையன் உங்களை பதில் தரும்படி எழுதியிருந்தால் நீங்கள் நாகரீகமான முறையில் தந்திருக்கலாம். அல்லது எனக்கு தர விருப்பம் இல்லை என்று முடித்திருக்கலாம். அல்லது யாழ் நிர்வாகத்திற்க்கு எழுதி அந்த கருத்தை நீக்கும்படி கேட்டிருக்கலாம்.

ஒரு பொதுத்தளம் என்று நீங்களே எழுதிவிட்டு பொதுதளத்தில் எப்படி எழுதுவது என்பது பற்றி சிந்திப்பதில்லையா? பொதுமேடையிலும் இப்படி தான் செய்வீர்களா? செய்மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்த பொதுத்தளத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்னுள்ளமை அடிப்படை அறம்.

மன்னிக்கவும் இந்த விதிமுறை யாழ்கள நிர்வாகம் சம்மந்தப்பட்டது. புணைப்பெயரில் வரலாம் என்பது யாழ்களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் நீங்கள் தான் யாழ்கள விதிகளை தவறாக புரிந்து வைத்து இங்கே வந்துள்ளீர்கள்.

ஆனால் அது வாக்களித்த மக்களுக்குதான் பதில் சொல்ல வேண்டுமே அன்றி வாக்களித்த மக்களை நன்கு திட்டமிட்டு குழப்புவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

சனநாயகத்தை நான் உங்களிற்க்கு படிப்பிற்க்க வேண்டியுள்ளதை நினைத்து வெட்கப்படுகின்றேன். வாக்களிக்காதவன் வாக்களித்தவன் அனைவரிற்க்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நெல்லையன் ஒருவரின் கருத்தை பார்த்து உங்களிற்க்கு வாக்களித்த மக்கள் குழம்புவார்கள் என்று நீங்கள் சொல்வது உங்களிற்க்கு வாக்கழித்தவர்களை நீங்கள் முட்டாள் என்று நினைக்கிறீர்களா?

பொதுசேவைக்கு வந்த பின் மக்களிற்க்கு பதில் சொல்லவேண்டும். நீ எனக்கு வாக்களிக்கவில்லை நான் உனக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்பது நகைப்பாக உள்ளது.

இங்கே நெல்லையன் போன்றவர்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்தோடு போராட்டம் மக்கள் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அப்படி என்றால் நீங்கள் உண்மையை தெளிவுபடுத்தலாமே! நெல்லையன் கதை கட்டுகிறார் என்று எழுதிவிட்டு நீங்கள் நெல்லையணை தாக்குவதில் மட்டுமே குறியாக உள்ளீர்கள்.

உங்களிற்க்கு இதற்க்கு மேலும் நான் இந்த திரியில் பதிலெழுதி உங்களின் சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களை வெளியே கொண்டுவர விரும்பவில்லை.. இதுவே நான் உங்களிற்க்கு செய்யும் ஒரு உதவி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உலக தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார் மீது இன்னும் நம்பிக்கை உண்டு.. அவர் எதாவது செய்ய வேண்டும்.. கூட சுரேந்திரன் போன்றவர்களும் ஆக்க பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்..

:) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.