Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரத்தை தொழிலாக்க இலங்கையில் கோரிக்கை

Featured Replies

[size=4]இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.[/size]

[size=4]இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[/size]

[size=4]தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக விபச்சாரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும் முன்னுதாரனமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[/size]

http://www.alaikal.com/news/?p=117454

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை.. :D :D :D

  • தொடங்கியவர்

[size=4]தமிழர் பகுதிகளிலும் " சிறார் துஸ்பிரயோகம் அதிகரிப்பு" "இளம் பெண்கள் ......" பற்றிய செய்திகள் அதிகரித்து காணப்படுவதற்கு அருகில் உள்ள சிங்கள தேசமும்,அங்கிருந்து வரும் அடக்குமுறை இராணுவமும் எமது மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும் ஒரு காரணம். [/size]

[size=1]

[size=4]இதில் இருந்து எமது மக்கள் தப்பிக்கவும் எமக்கு என்று அரசியல் தீர்வு முக்கியம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த கோடை விடுமுறைக்கு சனம் அள்ளுப்படப்போகுது.. :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்ண உணவிலை என்றிடும் போதினில்

பெண்மையிங் கேதுக்கடி - கொடு

உன்மத்தருள்ள வரையில் உனக்கு

உயர் விலை தேறுமடி

மண்ணினுட் சென்று மட்காகு முடலை

மடையர் ரசிக்கட்டுமே - அந்த

மன்மதக் குஞ்சுகளின் பணமுந்தன்

மடியை நிறைக்கட்டுமே

இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

இவங்களில் எத்தனை பேருக்கு சொந்த கருத்திருக்கு?..... தலைமை சொல்வதைவிட....

இதை ஒரு தொழில் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பட்சத்தில் , பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி என்பது ஆரோக்கியமான விசயம். இத் தொழில் எப்போதும் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதை தடுக்க நிறுத்த முடியாது. அரச அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் தொழிலில் ஈடுபடுவோர் வருமான வரி செலுத்தவேண்டும். உரிமம் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு உடல்நலத்தை துறைசார்ந்து அரசு கவனித்துக்கொள்ளமுடியும். பாலியலுக்கான வயது எல்லையை சரியாகக் கவனிக்கமுடியும். பலவிதத்தில் தொழிலில் ஈடுபடுவோர்க்கு நன்மையே.

தமிழர்தரப்புக் கண்ணோட்டத்தில் பாலியல் என்பதும் அதுசார்ந்த கண்ணோட்டமும் அறிவுக்கு அப்பாற்பட்டது. பரம்பரை பரம்பரையாக தேவதாசிகள் என்று கோயில்களில் கடவுள் பெயரில் விபச்சாரம் செய்துவந்த அதே நேரம் சாதியக் கலப்பை தடுப்பதற்காக பாலியலில் வக்கிரமான கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். பாலியல் சார்ந்த விடயங்களுக்கு மண்டையில் போடும் அளவுக்கு இதன் நீட்சி வக்கிரம் நிறைந்தது. அதே நேரம் வேலிபாய்வதில் உலகில் நம்பர் 1 ஆகவும் இருக்கின்றது. பாலியல் உறவில் தமிழர்தரப்பு சந்தோசம் திருப்தி அறிவு என்ற எதையும் எப்போதும் கொண்டிருந்ததில்லை. வக்கிரம் விகாரம் குழப்பம் முறைகேடு சந்தேகம் சாதியம் என்ற எல்லாவற்றையும் பாலியலுக்குள் நிறைந்த இனமாக இருக்கின்றது. அந்தவகையில் பாலியல் தொழில் குறித்த தமிழர்தரப்புப் பார்வை ஏனைய இனங்களில் இருந்து நிச்சயம் வேறுபடும்.

  • தொடங்கியவர்

[size=4]ஒரு காலத்தில் சிங்கப்பூர் பார்த்து வியந்த நாடு. இன்று தாய்லாந்தை இல்லை கம்போடியாவை போன்று வரவேண்டும் என்று கேட்டு நிற்கிறது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சட்டம் எதற்கு..? அவன் வீட்டு பொண்ணை இந்த தொழிலுக்கு 100% அனுப்ப போறது கிடையாது..

டிஸ்கி:

முன்னாள் பெண் போராளிகளின் நிலை மற்றும் அங்கிட்டு உள்ள தமிழீழ பெண்களின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது.. <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒரு தொழில் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பட்சத்தில் , பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி என்பது ஆரோக்கியமான விசயம். இத் தொழில் எப்போதும் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதை தடுக்க நிறுத்த முடியாது. அரச அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் தொழிலில் ஈடுபடுவோர் வருமான வரி செலுத்தவேண்டும். உரிமம் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு உடல்நலத்தை துறைசார்ந்து அரசு கவனித்துக்கொள்ளமுடியும். பாலியலுக்கான வயது எல்லையை சரியாகக் கவனிக்கமுடியும். பலவிதத்தில் தொழிலில் ஈடுபடுவோர்க்கு நன்மையே.

தமிழர்தரப்புக் கண்ணோட்டத்தில் பாலியல் என்பதும் அதுசார்ந்த கண்ணோட்டமும் அறிவுக்கு அப்பாற்பட்டது. பரம்பரை பரம்பரையாக தேவதாசிகள் என்று கோயில்களில் கடவுள் பெயரில் விபச்சாரம் செய்துவந்த அதே நேரம் சாதியக் கலப்பை தடுப்பதற்காக பாலியலில் வக்கிரமான கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். பாலியல் சார்ந்த விடயங்களுக்கு மண்டையில் போடும் அளவுக்கு இதன் நீட்சி வக்கிரம் நிறைந்தது. அதே நேரம் வேலிபாய்வதில் உலகில் நம்பர் 1 ஆகவும் இருக்கின்றது. பாலியல் உறவில் தமிழர்தரப்பு சந்தோசம் திருப்தி அறிவு என்ற எதையும் எப்போதும் கொண்டிருந்ததில்லை. வக்கிரம் விகாரம் குழப்பம் முறைகேடு சந்தேகம் சாதியம் என்ற எல்லாவற்றையும் பாலியலுக்குள் நிறைந்த இனமாக இருக்கின்றது. அந்தவகையில் பாலியல் தொழில் குறித்த தமிழர்தரப்புப் பார்வை ஏனைய இனங்களில் இருந்து நிச்சயம் வேறுபடும்.

நீங்கள் மண்டையில் போடுவது பற்றி எழுதியதால் இதில் மறைமுகமாக போராட்ட காலத்தை இழுத்துக் கொண்டிருப்பதால்.. உங்களிடம் ஒரு கேள்வி.

மண்டையில் சும்மா சும்மா எல்லாம் போடவில்லை. தகுந்த எச்சரிக்கைகள் வழங்கியும் திருந்த வழிகாட்டியும் திருந்தாத பட்சத்தில் ஒட்டுமொத்த சமூத்தின் தேவை கருதி மிகவும் வேதனையோடுதான் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. யாரும் எழுந்தமானத்திற்கு மண்டையில் போட்டு உயிர்களைப் பலியிட வேண்டும் என்ற வெறியில் அப்படிச் செய்யவில்லை என்பதை அந்த ஊரில் அதே காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் சொல்ல முடியும்.

மண்டையில் போட்ட காலத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்த எயிட்ஸ் மற்றும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை என்ன..???!

இன்று அதன் தாக்கம் என்ன..??!

பாலியலைத் தொழிலாக்குவது இலகு. அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை.. கடைப்பிடிக்கச் செய்வதில் எவ்வளவு சிக்கல். வளர்ந்த மேற்கு நாடுகளே ஆண்டுக்கு இதற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவிடும் போது ஒரு வறிய நாட்டில் இதன் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டா கருத்துச் சொல்கிறீர்கள்..??!

ஆபிரிக்க நாடான சியராலியோனில் 50% சனத்தொகை எயிட்ஸுடன் வாழ்கிறது. அப்படி ஒரு நிலை தமிழர்கள் மத்தியில் தோற்றிவிக்கப்பட்டால்.. அது தமிழின அழிப்பை சிங்களமே செய்ய வேண்டியதில்லை. தானே அது நிகழ்ந்து முடியும்.. இப்படியான நிலைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்..???!

இல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்து கொண்டு தான் கருத்துச் சொல்வதாயின் அதற்கான வழிமுறைகளையும் முன்மொழியுங்கள் பார்க்கலாம்..???!

Edited by nedukkalapoovan

அமைச்சர் 'அஜித் பிரசன்ன' தனது குடும்ப பெண் உறுப்பினர்களையும் அவர் அங்கீகரிக்கக் கோரும் தொழிலிற்கு அனுப்ப வேண்டும். வெற்றி கிட்டுமாயின், பலரின் கைத் தொழில் பாதிக்கப்பட்டாலும் இந்த கோரிக்கையை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.

அவங்கள் இதில் பெரிதாக தமிழரை நொக்கியதாக புலப்படவில்லை. பாதுகாப்பில்லாத தமிழரிட்டை தொழிலிக்கு வந்து போட்டு பணத்துக்கு கூரைமுகட்டை பார் என்று காட்டிவிட்டு போய்விடுவார்கள். புரட்சி சொன்ன மாதிரி இதற்கு சட்டம் இப்போது எதற்கு.

சட்டத்தால் அவர்கள் அடைய முயல்வது Imported Badu. அதற்காகத்தான் இந்த சட்டம். இதற்கு வரி பணமோ, AIDS வருதமோ காரணமல்ல. சாதரண சிங்களவ்னுக்காக இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டுவராது.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் ஒரு ஊரே சிங்களப் படையினருக்கு விபச்சாரம் செய்ய உள்ளது. அப்படி இருந்தும் சிங்களப் படையினர் தமிழ் பெண்கள் மீது பாலியலை ஆயுதமாகப் பாவிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதோடு.. தமிழ் பெண்களை தென்னிலங்கை சிங்கள உல்லாசப் பயணிகளும் இந்தத் தொழிலுக்காக பாவிக்க முற்படுகின்றனர். அதேபோல் கருணா.. பிள்ளையான்.. டக்கிளஸ் போன்ற துரோகிகளும் தமிழ் பெண்களை இவ்வாறான தொழிலுக்குள் தள்ளி பணம் பார்த்து வருகின்றனர். நெடுந்தீவில் விபச்சார மையங்களையே டக்கிளஸ் கொண்டு நடத்துவதாக மகேஸ்வரனின் மனைவி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறிய போதும் டக்கிளஸ் அதனை மறுக்கவில்லை..!

இந்த நிலையில்.. தமிழ் பெண்கள்.. மீதும் இது ஒரு வித இன சுத்திகரிப்புத் தேவையோடு திணிக்கப்படலாம். அதற்கான வாய்ப்புக்களையும் நாம் ஆராய்ந்து தடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனை வெறும் வெளிநாட்டு விபச்சாரிகளின் வரவு என்ற அடிப்படையில் மட்டும் வைத்து நோக்க முடியாது.

இன்று சிங்களப் படைகளுக்குள் தமிழ் பெண்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதேவேளை சிங்களப் பெண்களே அதன் படையில் இணைய ஒன்றிற்கு நாலு தடவை யோசிப்பார்கள். வறுமையில் இணைபவர்களைத் தவிர எந்த உயர் குடும்ப.. மத்திம குடும்ப சிங்களப் பெண்ணும் சிறீலங்கா படையில் இணையப் போகமாட்டாள். இது தான் அங்கு உள்ள நடைமுறை..! ஆனால் அந்த இடத்தை தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி நிரப்புவதன் நோக்கத்தை இலகுவாக எடுக்க முடியாது. அதன் அனைத்துவித பரிமானங்களையும் தமிழ் சமூகம் அக்கறையோடு நோக்கி தமிழ்ப் பெண்களை சரியாக வழிநடத்த வேண்டும். அவர்களை சிங்கள இராணுவத்தின் கோரக்கரங்களில் இருந்தும் காக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு தாயகத்தில் நடைமுறைக்கு வர வேண்டும்..! இதன் மூலமே சிங்கள இராணுவத்தில் எமது பெண்கள் பாலியல் ரீதியில் பலியிடப்படுவதில் இருந்து அவர்களையும் சமூகத்தையும் காக்க முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

அனுராதபுரத்தில் ஒரு ஊரே சிங்களப் படையினருக்கு விபச்சாரம் செய்ய உள்ளது.

அதில் உள்ளவர்கள் அதிகம் தமிழ்ப் பெண்கள்

சூப்பர் நல்ல விடயம் ...............அப்படியே , கொலை ,கொள்ளை , கஞ்சா கடத்தல், கஞ்சா அடித்தல் போன்ற விடயங்களையும் சட்டரீதியாக தொழிலாக்கினால் சிறிலங்கா எனப்படும் சுடுகாடு ......................பூஞ்சோலையாய் மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை .......................

பாலியல் என்பது இரு உள்ளங்களுக்குள் தானாக வரவேண்டிய ,உளம்,உணர்வு சார்ந்த விடயம் . மனித பலவீனங்களில் ஒன்று,,............ஆனால் அதை வியாபாரமாக்குபவர் ஆடையில்லாமல் அம்மணமாக திரிவதே .சாலச்சிறந்தது ....................................

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • தொடங்கியவர்

map3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் தவறு இந்தியாவிலும் பம்பாயில் ரெட்லைட் ஏரியா உள்ளது. அரசாங்கம் கண்டுளொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் தவறு இந்தியாவிலும் பம்பாயில் ரெட்லைட் ஏரியா உள்ளது. அரசாங்கம் கண்டுளொள்வதில்லை.

அதுதான் Restricted என்று போட்டிருக்கிறார்கள்..! சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்தால் illegal என்று இருந்திருக்கும்.

சூப்பர் நல்ல விடயம் ...............அப்படியே , கொலை ,கொள்ளை , கஞ்சா கடத்தல், கஞ்சா அடித்தல் போன்ற விடயங்களையும் சட்டரீதியாக தொழிலாக்கினால் சிறிலங்கா எனப்படும் சுடுகாடு ......................பூஞ்சோலையாய் மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை .......................

பாலியல் என்பது இரு உள்ளங்களுக்குள் தானாக வரவேண்டிய ,உளம்,உணர்வு சார்ந்த விடயம் . மனித பலவீனங்களில் ஒன்று,,............ஆனால் அதை வியாபாரமாக்குபவர் ஆடையில்லாமல் அம்மணமாக திரிவதே .சாலச்சிறந்தது ....................................

[size=1]நியானி: தணிக்கை[/size]

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

நல்ல கூட்டம்

நல்ல சிந்தனை.. :D :D :D

வணக்கம் இசை!

என்ன இப்படி கூறிவிட்டீர்கள்.இதை மேம்படுத்த தமிழ் பெண்கள் தான் இவர்களுக்கு தேவை,ஏனெனில் சிங்களப்பெண்களை மேம்படுத்தி வெளி நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.ஆதாரம் கீழுள்ள இணைப்பை அழுத்திப்பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=rOb3_ODW6iw&feature=relmfu

http://www.youtube.com/watch?v=LPwyFzW0ih4&feature=watch-vrec

http://www.youtube.com/watch?v=pnpx0PZPkyQ&feature=relmfu

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்

By Farhan

2012-11-21 11:57:25

நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,

இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது.

விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.

இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கருத்தைக் கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் வரிசையில் இவரும் ஆகிவிட துடிப்பதாகவே தெரிகிறது.

ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=1743

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்

முஸ்லீம்களின் கட்சியான... உலமா கட்சி,

மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டு, விபச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

[size=4]விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக [/size][size=4]இந்தியா[/size][size=4], தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.[/size]

நன்றி உலமா கட்சி தலைவர் மௌலவிக்கு

நீங்கள் மண்டையில் போடுவது பற்றி எழுதியதால் இதில் மறைமுகமாக போராட்ட காலத்தை இழுத்துக் கொண்டிருப்பதால்.. உங்களிடம் ஒரு கேள்வி.

மண்டையில் சும்மா சும்மா எல்லாம் போடவில்லை. தகுந்த எச்சரிக்கைகள் வழங்கியும் திருந்த வழிகாட்டியும் திருந்தாத பட்சத்தில் ஒட்டுமொத்த சமூத்தின் தேவை கருதி மிகவும் வேதனையோடுதான் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. யாரும் எழுந்தமானத்திற்கு மண்டையில் போட்டு உயிர்களைப் பலியிட வேண்டும் என்ற வெறியில் அப்படிச் செய்யவில்லை என்பதை அந்த ஊரில் அதே காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் சொல்ல முடியும்.

மண்டையில் போட்ட காலத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்த எயிட்ஸ் மற்றும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை என்ன..???!

இன்று அதன் தாக்கம் என்ன..??!

பாலியலைத் தொழிலாக்குவது இலகு. அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை.. கடைப்பிடிக்கச் செய்வதில் எவ்வளவு சிக்கல். வளர்ந்த மேற்கு நாடுகளே ஆண்டுக்கு இதற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவிடும் போது ஒரு வறிய நாட்டில் இதன் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டா கருத்துச் சொல்கிறீர்கள்..??!

ஆபிரிக்க நாடான சியராலியோனில் 50% சனத்தொகை எயிட்ஸுடன் வாழ்கிறது. அப்படி ஒரு நிலை தமிழர்கள் மத்தியில் தோற்றிவிக்கப்பட்டால்.. அது தமிழின அழிப்பை சிங்களமே செய்ய வேண்டியதில்லை. தானே அது நிகழ்ந்து முடியும்.. இப்படியான நிலைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்..???!

இல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்து கொண்டு தான் கருத்துச் சொல்வதாயின் அதற்கான வழிமுறைகளையும் முன்மொழியுங்கள் பார்க்கலாம்..???!

எயிட்சை கட்டுப்படுத்தத்தான் புலிகள் மண்டையில் போட்டார்களா? ரொம்ப அநியாயமா இருக்கு இந்தக் கருத்து.

நான் சொன்ன கருத்து பாலியல் விவாகாரத்தில் எமது சமுதாயத்தில் இருந்த முரண்பாட்டினதும் இறுக்கத்தினதும் நீட்சியே மண்டையில் போடும் நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையே.

பாலியல் தொழிலை சட்டமாக்காமல் விட்டால் போல் பாலியல் தொழில் நிற்கவோ குறையவோ போவதில்லை. சட்டமாக்கப்பட்டால் இந்தத் தொழிலை நிர்வகிக்க ஒரு பிரிவு அரச திணைக்களத்தில் அமைக்கலாம். அதனூடாக முறையான அனுமதி பாதுகாப்பான உறவுக்கான கல்வி அறிவை போதிக்கலாம். வயது எல்லையை வரயறுக்கலாம். உடல் நலத்தை பரிசோதிக்கலாம். இதற்கொல்லாம் யார் யார் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் எத்தனை பேர் இவற்றை ஒழுங்கமைத்து நடத்துகின்றார்கள் என்பது அரசுக்கு தெரியவரவேண்டும் .அதற்கு சட்டமே அவசியம். கண்டும் காணாமலும் இருக்கும் நிலையில் நடக்கும் இத் தொழிலை விட அதை ஒரு நிர்வாக அலகின் கீழ் கண்காணிப்பதே சிறந்தது.

உலகின் மிகப் பழமையான தொழில் என்று வர்ணிக்கப்படும் பாலியல்தொழிலை எவ் வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் மாற்றங்களை கொண்டுவரவேண்டுமானால் அது சட்டபூர்வமாக்கப்படுதல் அவசியம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் இதை பாலியல் தொழில் என்றே அழைக்கவேண்டும். விபச்சாரம் என்பது பொருந்தாது. ஒருவரின் உடல் அவருக்குச் சொந்தமானது அவர் அதை வைத்து தொழில் செய்வதற்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. கலாச்சாரக் காவடியை தூக்கிக்கொண்டு தனிமனித சுதந்திரத்தில் தலையிடமுடியாது.

ஒரு பெண் பல ஆண் நுகர்வேரை நம்பித்தான் இத்தொழிலை செய்ய முடியும். ஆணுக்கான தேவை இருக்கும் வரை இத்தொழிலுக்கான வாய்பும் இருக்கும். பாலியல் தொழில் என்பது ஆண் என்ற கம்பனியில் பெண்கள் வேலைபார்ப்பது. இங்கே ஆண்தான் பாஸ். சட்டத்தால் இந்தக் கம்பனியை இழுத்து மூட முடியாது. இதை தடுப்பதற்கு ஊளியர்களை தண்டிப்பது ஜனநாயக விரோதம். கம்பனியோடுதான் பேச்சுவார்த்தை நடத்தவேணும்.

Edited by சண்டமாருதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.