Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலி! (குறுங்கதை)

Featured Replies

கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்

அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள்.

இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள். ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.

அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும் கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும் அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.

இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.

கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி, அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும் அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தப் புது வகையான தாலி, இதுதான் இனி பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணத்தை சொன்னான்.

அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள் பார்த்தார்களாம்.

  • Replies 50
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுத் திரிபுக்குள்ளதான் கிபி கிமு புகுந்து விளையாடுதென்றால் 17ம் நூற்றாட்டுக் கதையைக் கூட 21ம் நூற்றாண்டில பார்த்துப் புனையிற அளவுக்கு அதை வாசிச்சு பெருமைப் படுற அளவுக்கு மக்கள் கதாரசனைக் கூட்டமாகிட்டினமா?

நிகழ்காலத்தைக் கூட சரிவரக் கதையில சொல்ல முடியாமல் தவிக்கும் எழுத்தாளர்களிடையே 17ம் நூற்றாண்டில் வாழ்ந்து மீண்டும் 21ம் நூற்றாண்டில் பிறப்பெடுத்து எழுதப்படும் கதையைப் பாராட்டாமல் இருக்க முடியாதுதான்...????!

  • தொடங்கியவர்

இந்தக் கற்பனைக் கதையில் என்ற தவறு கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

இந்த மாட்டுக்கு கயிறை சுமப்பதிலும் குதிரைக்காரன் மேல்..

எனச் சென்றுவிட்ட பெண் செய்ததில் தவறென்ன..

வீரன் வேலுத்தம்பி.. என்று நினைத்து மணம் முடித்தால்..

அவனோ..போரிட்டு மங்கையர் மானம் காக்க விளையாமல்..

மங்கையருக்கு..சுமை சேர்த்தால்...அவள் ஓடிப்போனதில்..தவறென்ன..

ஆண்டாண்டு காலங்களாய்..

சொன்னதைச் செய்ய வேண்டுமென்றும்..

சுகங்கள் தர மட்டும் தேவையென்றும்..

எதிர்பார்ப்பு வைத்திருக்கும்..

ஆண்மைக்கு..இப்போதல்ல...

அன்று தொட்டு இத்தகைய அவமானங்கள் நேர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

சபேசன் அண்ணா.... ஏறுதழுவுதல்..காளையடக்குதலுக்

சிந்தனையைத் தூண்டும் குறுங்க் கதை, தொடர்ந்தும் எழுதுங்கள்.பதினேழாம் நூற்றாண்டு என்றால் தாடிக்காரர் ஆங்கிலேயரா?இது இப்போது புலத்திற்கும் பொருந்தும் போல் உள்ளது. நூற்றாண்டுகள் ஆனாலும் நிலமை மாறவில்லை என்கிறீர்களா?

  • தொடங்கியவர்

ஆங்கிலேயர்களை நான் கருதவில்லை. ஆங்கேலயர்கள் வருவதற்கு முன்பு ஆண்டு கொண்டிருந்தவர்களை கருதியே எழுதினேன்.

  • தொடங்கியவர்

களையை அடக்குவதையே ஏறுதழுவதல் என்று சொன்னார்கள்.

  • தொடங்கியவர்

காளைளை என்பது தவறுதலாக களையை என்று பதிவாகிவிட்டது.

  • தொடங்கியவர்

அட, மீண்டும் தவறாக எழுதியுள்ளேன். காளையை.... காளையை...... காளையை....

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பது மஞ்சள் பொன் என்று இருக்கும் சிறிய பொருள். அதாவது சங்கிலியில் அணியும் பென்ரன் போல. அதைக் கயிற்றில் கட்டினால் அது தாலிக் கயிறு..தாலி யல்ல. நீங்கள் கதை பூராவும் தாலிக் கயிற்றைத் தாலி ஆக்கியிருக்கிறீர்கள். அதுதான் 17ம் நூற்றாண்டை இழுத்திருக்கிறிர்கள் போல.

ஏறுதலுவுதல் காளையை அடக்குதல் மல்யுத்தம் என்பதற்காக கிபி 17ம் நூற்றாண்டு என்ற உச்சரிப்பு எதற்கு..??!

மஞ்சள் கயிறில தாலியைக் கட்டுறது என்பது அதற்கு முன்னும் தான் நடந்திருக்கிறது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

17ம் நூற்றாண்டில் வெறும் தாலி மட்டுமல்ல மெட்டி கிட்டி என்று பலதும் போடுவார்கள். அவற்றை எல்லாம் சுட்டிக்காட்டாமல்.. வெறும் ஏறுதழுவுதல் இன்றும் தான் தமிழ்நாட்டில் ஸ்பெரினில் நடக்கின்றன. என்பதைச் சொல்ல 17ம் நூற்றாண்டு அவசியமா??! உண்மையான ஏறுதழுவுதல் காலம் என்பது என்ன? மல்யுத்தம் ஆரம்பித்த காலம் என்ன?

வெறுமனவே தாலியைப் பெண் மதிக்கவில்லை என்பதைக் காட்ட 17ம் நூற்றாட்டை உதாரணமாக்கியது ஏன்? அப்போதுதான் இது ஆரம்பித்ததா? அல்லது அப்போதே ஆரம்பித்துவிட்டது என்பதற்காகவோ?

ஏதோ ஒன்று புரிகிறது சில பெண்கள் தாலியை அணிந்து கொண்டும் தனி மனித ஒழுக்கத்தை விட்டுத் தொலைத்து அதிக காலம் என்று. அதுதான் இன்றும் தொடர்கதையாக இருக்கிறதே.

இங்கு களத்தில் கூட ஒரு பெண்ணியவாதி தாலிக்கெதிராக கூச்சல் போட்டார். ஆனால் அவரின் மகனின் திருமணத்தின் போது மணமகள் கழுத்தில் தாலி என்பது கட்டப்பட்டது. அவரை நேரில் சந்திக்கக் கிடைத்தால் நிச்சயம் இதற்கு என்ன விளக்கம் என்று கேட்க இருக்கிறது.

கதையின் முடிவில் காணாமல் போனவள் குதிரையில் தாடிக்காறனோடு போனதால்.. என்ன அவள் தாலி பறிபோய் விட்டதா? எதைக் குறிப்பிட விரும்புறீர்கள். அல்லது அவள் கழுத்தில் தாலிக் கயிறு கட்டிய அந்த நிகழ்வு மனதளவில் இருந்து அழிந்தே போயிட்டுதா?

என்ன நீங்களும் மனதைக் கொன்று மனிதர்களை வாழ வைக்கலாம் என்று நினைக்கிறீர்கள் போல.

அவள் எவர் கூட என்ன நோக்கத்துக்காகப் போயினும் கணவன் வந்த அடையாளப்பரிசின் நினைவென்பது தாலி அல்லது தாலிக் கயிறென்ற அந்த பொருளையும் தாட்டி மனதோடு நிலைக்கும் என்பதை பாவம் நீங்கள் புரியவில்லை.

மனித மனத்தைப் புரியாத போது இப்படியான கதைகள் என்னத்தைச் சொல்லும்? அதிலும் சிந்திக்க வேற தூண்டுமாம்?

என்ன.. தாலி வேலியில்ல அதையும் தாண்டி நாளுக்கு ஒன்று கட்டிக்கலாம் என்றா? ஏன் தனிமனித ஒழுக்கங்களை குலைப்பதற்கு சிந்தனை முற்போக்குவாதம் என்று பெயரிட்டு உங்களை கீழ்த்தரமான சிந்தனையின் போக்கிற்கு இட்டுச் செல்கிறீர்களோ?

இதற்காக எனி பெண்ணுக்கு ஏன் தாலி ஆணுக்கு ஏன் அவசியமில்லை என்று பார்பர்ணிய வாதம் பேசாதேங்கோ. அண்மையில் தமிழகத்தில் இளைஞர்களும் தாலி கட்டிக் கொண்டனராம். அவர்கள் சிந்திக்க மட்டுமில்ல செயற்படுத்த தகுதியுடையவர்கள். இது கலியாணம் கட்டி பிள்ளை குட்டியோட இருக்கிறவையெல்லாம் இப்பதான் சிந்திக்கினம் தாலி பற்றி... காலம். :idea:

  • தொடங்கியவர்

மொகலாயர்களின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியபொழுது, மொகலாயர்கள் பல அத்தமீறல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிய வருகிறது. இதை இன்னொரு மண்ணை ஆக்கிரமிக்கும் அனைவருமே செய்தார்கள், செய்கிறார்கள் என்பது வேறு விடயம்.

இப்படி மொகலாயர்கள் பெண்களை து}க்கிக்கொண்டு போனார்கள் என்றும் ஆனால் அவர்கள் திருமணமான பெண்களை தொடுவது இல்லை ஆதலால், தற்பொழுது உள்ளது போன்று மிக தடிமனான தாலியை அனைவருக்கும் தெரியும் வண்ணம் எந்நேரமும் அணிந்திருக்கும் வழக்கம் வந்தது என்றும் ஒரு கருத்து உண்டு.

இக் கருத்தை மறுப்போரும் உண்டு.

பெண்ணுக்குத்தாலிபோல ஆணுக்கு மெட்டி அல்லவா?

இப்போது மாற்றி விட்டார்கள்.....

இப்போது நாங்கள் மின்னி அணிய ஆரம்பித்துவிட்டோம் காலப்போக்கில் ஒட்டியானம் கட்டலாம் என்று தீர்மானித்துள்ளோம்.... சே எங்கு போனாலும் ஒரே சச்சரவா இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது.

சரி அப்படி இருந்தாலும் கூட அப்பெண் கணவன் வந்ததும் இப்படி மிகவும் மெல்லிய நூலில் அல்லவா தாலி என்று கேட்பதானது..குறித்த பெண்ணை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்துவிட்டீர்களா?

குழப்புறீங்களே? :idea:

  • தொடங்கியவர்

இப்பொழுது மெல்லிய நு}லிலா தாலி இருக்கிறது?

தாலி சிந்திக்க வைக்கும் சிறுகதை. இணப்புக்கு நன்றி.

முதலில் வந்த அந்த மூன்று பெண்மணிகளில் ஒருவர் கலியாணம் ஆனபடியால் தான் அவளை விட்டு மற்ற இருவரையும் தூக்கி சென்றார்கள்? அப்போ இலங்கை இராணுவத்தையும் விட கொஞ்சம் நல்லவர்களாகத்தான் உங்கள் காதபாத்திரங்களை படைத்து இருக்கின்றீர்கள். தாலி பெண்களுக்கு வேலி என்பதை கூற வந்து பின்னார் அவள் ஏன் மற்றவனுடன் ஒடிப்போனாள் என்றா காரணம் விளங்கவில்லை?

கற்பனைக்கதை நன்றாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

தாலி பெண்களுக்கு வேலி என்பதைக் கூற வரவில்லை.

விகடகவியின் கருத்தை படியுங்கள். அவர் சரியான முறையில் விளக்கி இருக்கிறார்.

தாலிக்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். ஏன் என்றால் அது மிகவும் ஆளமாக இருக்கிறது எங்கள் பழக்க வழக்கத்தில்.

விகடகவி போன்று தான் நான் விளங்கியுள்ளோன். வீரத்தை வெறும் போட்டிகளில் காட்டத்தான் முடிந்ததே தவிர நிஜ வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள பயன்படுத்த முடியவில்லை. தனது காதலன்-கணவன் போல் வீரனாக ஊரில் எல்லா ஆண்களும் இருந்தால் ஆக்கிரமிப்பாளர்களை அடித்து விரட்டி எல்லா பெண்களையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம் என்ற எண்ணியவளுக்கு தாலி கட்ட முனைந்தான் வீரன். அதுதான் அவள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சந்தோசமாக தாடிக்காரனோடு சென்றுவிட்டாள்?

தாலி வேலியாக எந்த காலத்தில் என்ன பின்னணிகளில் இருந்திருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

தாலி சிந்திக்க வைக்கும் சிறுகதை. இணப்புக்கு நன்றி.

இப்படி ஒருவரியில் பதில் எழுதாமல் இக்கதை உங்களை எந்தெந்த வழிகளில் எப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது என்றும் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் அதுவே கருத்துக் களத்துக்கான ஒரு உபயோகமான கருத்தாக இருக்கும்.

வெறுமனவே சிந்திக்க வைத்தது என்றால் அதில் கனதி இருக்காது. உங்களை சிந்தனையை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஏன் தயக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாலிக்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். ஏன் என்றால் அது மிகவும் ஆளமாக இருக்கிறது எங்கள் பழக்க வழக்கத்தில்.

விகடகவி போன்று தான் நான் விளங்கியுள்ளோன். வீரத்தை வெறும் போட்டிகளில் காட்டத்தான் முடிந்ததே தவிர நிஜ வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள பயன்படுத்த முடியவில்லை. தனது காதலன்-கணவன் போல் வீரனாக ஊரில் எல்லா ஆண்களும் இருந்தால் ஆக்கிரமிப்பாளர்களை அடித்து விரட்டி எல்லா பெண்களையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம் என்ற எண்ணியவளுக்கு தாலி கட்ட முனைந்தான் வீரன். அதுதான் அவள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சந்தோசமாக தாடிக்காரனோடு சென்றுவிட்டாள்?

தாலி வேலியாக எந்த காலத்தில் என்ன பின்னணிகளில் இருந்திருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது மெல்லிய நு}லிலா தாலி இருக்கிறது?

17ம் நூற்றாண்டில் மொத்தத் தாலியும் மிக மெல்லிய அதாவது சில மைக்குரோ மீற்றர்கள் தடிப்புள்ளனவாகவா இருந்தன. வியப்பாக இருக்கிறதே. நீங்கள் இதற்கான விடயத்தை எங்கு பெற்றீர்கள். பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும். உங்கள் கதைக்கு பலமாகவும் இருக்கும்.

  • தொடங்கியவர்

தாலி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பெரிதான குறிப்புக்கள் எதுவும். மற்றைய ஆபரணங்களைப் போல் ஒரு சாதரணமான ஆபரணமாகவே தாலியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் கூட தாலியைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. (இப்பொழுது சிலப்பதிகாரத்தை திரைப்படமாகவோ, தொடர் நாடகமாகவோ தயாரித்தால் அதில் தாலி எத்தனை முக்கியத்துவம் பெறும் என்று சிந்தித்துப் பாருங்கள்) கோவலன் கண்ணகி திருமணத்தை ஒரு அந்தணர் நடத்தி வைப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனால் தாலி பற்றி ஒரு பேச்சும் இல்லை.

பின்பு உருவான பக்தி இலக்கியங்கள் கூட தாலியைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அதே வேளை வடமொழி இலக்கியங்களில் தாலி ஓரளவு இடம்பிடிக்கிறது. உதாரணம்: அரிச்சந்திரன் நாடகம்

இன்று இருப்பது போல் தமிழர்கள் மத்தியில் தாலி எப்பொழுது முக்கியத்துவம் பெற்றது என்பது சரியாக சொல்ல முடியவில்லை.

பாரதத்தின் பெரும்பகுதிகளை 10ஆம் நு}ற்றாண்டில் இருந்து 17ஆம் நு}ற்றாண்டின் இறுதி வரை மொகலாயர்கள் ஆண்ட பொழுது தாலி முக்கியத்துவம் அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. மொகலாயர்களின் ஆட்சிக்காலம் தமிழகத்தில் சற்றுப் பிந்தியே ஆரம்பிக்கிறது.

நான் 17ஆம் நு}ற்றாண்டு என்று எழுதியதை 15ஆம் நு}ற்றாண்டு என்று கூட மாற்றலாம். காரணம் இந்த இன்றைய தாலி நடைமுறைக்கு வந்தது எப்பொழுது என்று சரியான ஆண்டுக் குறிப்பு எதுவும் இல்லை.

ஒரு வேளை மொகலாயர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகத்தான் எமது முதாதையர்கள் இந்த தாலியை நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், தாலி என்பது கையாலாகத்தனத்தின் ஒரு அடையாளம்தானே?

நெடுக்காலபோவான் வந்து "தாலி அன்பின் அடையாளம்" என்று சொல்வார். இருக்கலாம்.

இன்று தாலி சில இடங்களில் அடிமைச் சின்னமாகவும், அன்புச் சின்னமாகவும் இருக்கிறது.

குருவியாரே

17ஆம் நூற்றாண்டு என்பது ஒரு குத்துமதிப்பான கால கணிப்பு அதுவும் கதை என்று எழுதப்பட்ட ஒன்றிற்கு. இது ஒரு ஆராச்சிக் கட்டுரை அல்லவே. எனவே அதில் முட்டையில் முடி புடுங்குவது உமது வழமையான குறைபாடு.

தாலி என்பது வேலியாக யாருக்காக என்ன பின்னணியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் குருவியாரே என்று எங்களை விளித்திருப்பதை ஆட்சேபிக்கிறோம்.

உங்கள் கருத்து தாலி வேலியாக்கப்பட்டது பெண்களை எதிரியிடமிருந்து காக்க என்பதாக எழுகிறது.

எமக்கோ பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றத் தகுதியில்லாத நிலையில் ஆண்களாலும் அவர்களை பாதுகாக்கப்பட முடியாமல் போன இடத்தில் எதிரியிடமிருந்து பாதுகாக்க திருமணமான பெண்ணைத் தூக்கக் கூடாது என்ற எதிரியின் பெருந்தன்மையை வைத்து இச்சமூகம் கோழைத்தனமான வாழ்க்கை வாழ்ந்துள்ளது என்பதையே இக்கதை காட்டுகிறது.

அதுபோக இக்கதை எங்கு இன்றைய தமிழகத்துள் நடந்ததா அல்லது திராவிட உலகில் நடந்ததா..??!

ஏன் என்றால் தாலி கட்டுதல் என்பது வட இந்தியாவிலும் வழக்கத்தில் உள்ளது இன்றும்.

இதில் எது முற்போக்குத்தனம்...எது காழ்புணர்ச்சி என்று தெரிந்து கொள்ளலாமா?

ஏன் ஒருவரின் கருத்தோடு அதுவும் வரலாற்றுத் திரிபுகளோடு ஒத்துப் போகவிடின் அது காழ்புணர்ச்சி என்பதுதான் உங்களின் முற்போக்குத்தனமோ?

ஆனால் ஒன்று புரிகிறது உங்களுக்கு வேறு ஒருவரின் மீதுள்ள காழ்புணர்ச்சியில் அவரைப் போன்று எழுதுபவர்களை எல்லாம் காழ்புணர்ச்சியோடு நோக்க முடிகிறது என்பது.

நீங்கள் ஆட்களை விளிக்காமலே உங்கள் கருத்தை வைத்து அந்த உங்கள் காழ்புணர்ச்சிக்கான கருத்து வெளிப்பாட்டை தவிர்த்திருக்கலாம். ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் நீங்களே இப்போ காழ்புணர்ச்சியை நம்பிக் கருத்து எழுத வேண்டியது தவறான உதாரணமாகும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கதை நன்றாக உள்ளது. சபேசன் பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.