Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'''அமெரிக்காவில் TROவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது"

Featured Replies

ஓகோ.. அப்ப இந்த துணிவிலதான் அமெரிக்கா சிறி லங்காவிற்கு ராடர் இலவசமாக கொடுத்ததோ? அங்கால இலவசமாக குடுத்துப்போட்டு இஞ்சால பலாத்காரமாக சுருட்டிக்கொள்ளவேண்டியது!!!

அன்பளிப்பு ஒண்டு இன்னொருவனுக்கு அமெரிக்கா குடுக்கிறது எல்லாம் இன்னொருவனிடம் அடித்து பறித்து திருடிய காசுபோல இருக்கு. நல்ல ஒரு பெருந்தன்மை!!

இதமாதிரி வேற எங்க எங்கெயெல்லாம் அமெரிக்கா காசுகளை வழிப்பறி செய்து உலகத்துக்கு தானம் செய்துகொண்டு இருக்கிதோ??

அமெரிக்காக்காரனுக்கு இருக்கிற புத்தி எங்களுக்கும் இருந்து இருந்தால் எங்களுக்கு எப்பவோ தமிழீழம் கிடைச்சு இருக்கும்.

  • தொடங்கியவர்

எமது இனத்துக்கு அளவுக்கு அதிகமான மனிதத்தன்மை..... எமது சாபமும் கூட!

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா பொதுச் செயலர் மனித உரிமைகளை இட்டு சிறீலங்காவைக் கண்டித்தும் அமெரிக்காவிடமிருந்து சிறீலங்காவுக்கு இராணுவ உதவி போய்ச் சேர்கிறது. ஆனால் அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையில் தமது தேசத்தின் விடுதலைக்காகப் போராடும் மக்களிற்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்யும் அமைப்புக்களின் மனிதாபிமானப் பணிகளை அமெரிக்கா தடுக்கிறது. விடுதலைப் புலிகள் கூட அமெரிக்காவுக்கோ அல்லது மேற்குலகுக்கோ அல்லது ஆசிய பிராந்திய நாடுகளுக்கோ அச்சுறுத்தல் வழங்கும் படி நகர்வுகளைச் செய்யேல்ல. தற்கொலைத் தாக்குதல் என்ற அமெரிக்காவால் சமாளிக்க முடியாத இராணுவ உக்திக்காக அமெரிக்கா விடுதலைப்புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் போட்டது என்பதே உலக யதார்த்தம்..! விடுதலைப்புலிகளுடன் நெருங்கி வந்து அவர்களுடன் அனுசரனைப் போக்கில் சென்றிருப்பின் தற்கொலைத் தாக்குதல்களை மட்டுமன்றி தமிழ் மக்களிடம் கொடிய தோற்றம் பெறுவதைக் கூட அமெரிக்க தவிர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு அமெரிக்கா தயாரில்லை..!

அமெரிக்காவின் விரோதியான ஈரானுடன் கூட்டுச் சேர்ந்து கடனும் ஆயுதமும் வாங்க சிறீலங்காவை தட்டிக் கொடுக்கும் அமெரிக்கா தமிழர்கள் விடயத்தில் மட்டும் என்றும் கராராகவே இருக்கிறது. அப்படி என்னதான் பிரச்சனையோ தமிழர்களுக்கும் அமெரிக்காவுக்கும். ஒருவேளை வன்னியில் எண்ணெய் வளமிருந்திருந்தால் அமெரிக்கா தமிழர்களை அரவணைக்க முனைந்திருக்ககுமோ என்னமோ..??! :(

தலைப்பில் சொத்துப் பறிமுதல் என்று போட்டிருக்கிறீர்கள். பறிமுதல் அல்ல. உறையவைத்தல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா தன்னாலான அனைத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ய தயாராகவிட்ட நிலையில்.. சிங்கள தேசத்தையும் அமெரிக்காவையும் ஒரே நிலையில் வைத்தே தமிழ் மக்கள் தமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும். அமெரிக்காவிடம் மடிப்பிச்சையை எதிர்பார்த்தால் எம்மை நாமே அழிச்சுக்க வேண்டியதுதான். அமெரிக்காவின் ஏகாதபத்திய சவாலை எதிர்கொள்வதை விட தமிழ் மக்களுக்கு வேறெதுவும் தேர்வாக இருக்க வாய்ப்பில்லை..! சிங்கள பேரினவாதமும் அமெரிக்க ஏகாதபத்தியமும் இந்திய பிராந்திய வல்லாதிக்கமும் ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தங்கத்தட்டில் வைத்துத் தரப் போவதில்லை என்பதை என்றோ உணர்ந்திவிட்ட போதும் அவர்களுக்கு மதிப்பளிச்சு தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை அவர்கள் தமிழ் மக்களை பலவீனப்படுத்த தமிழ் மக்களின் எதிரியைப் பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தினரே தவிர தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் கிஞ்சிதமும் அக்கறை செய்யவில்லை..! செய்யப் போவதும் இல்லை என்பதையே இந்த செயல் வழியுறுத்தி நிற்கிறது.

அமெரிக்கா இராணுவ பலத்தால் உரிமைக்காகப் போராடும் மக்களை அடக்கிவிடலாம் என்று சிங்கள தேசத்துக்கு இராணுவ உதவி செய்கிறது. சிங்கள தேசமோ பகிரங்கமாக அறிவித்து தமிழினப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலை ஏற்படக் கூடாது என்றுதான் புலிகளும் பொறுமை காத்தனர். ஆனால் அவர்களின் கைகளையும் மீறி எதிரியும் ஏகாதபத்திய சக்திகளும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் இராணுவ பலத்தை சிதைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தி தமது நிரந்தர அடிமைகளாக்கி சிங்கள தேசத்தை தனது பிராந்திய நலனுக்கு உபயோகிக்கலாம் என்று கனவு காண்கின்றனர். அதற்கேற்ப நகர்வுகளைச் செய்கிறனர்..!

அமெரிக்க கனவு ஒரு புறமிருக்கட்டும். அதன் சவாலையும் பிற சக்திகளையின் சவாலையும் பிராந்திய சக்திகளின் சவாலையும் இராஜதந்திர மற்றும் ஒற்றுமையான நகர்வுகள் மூலம் தமிழ் மக்கள் முறியடிப்பதன் மூலமே தமது தேச விடுதலையை உறுதிப்படுத்த முடியும்..! தமிழ் மக்களின் இராஜதந்திர நகர்வுகள் எதிரிக்கும் ஏகாதபக்திய சக்திகளுக்கும் பிராந்திய சக்திகளுக்கும் சவால் விடும் வகையில் அமையும் போது மட்டுமே இவர்கள் தமிழ் மக்கள் மீது கரிசணை காட்டுவர். இன்றேல் எல்லோரும் போட்டு மிதிப்பர் தமிழ்மக்களை..! இவர்களின் மனித உரிமை கூச்சல் என்பது ஆடு நனையுதே என்று ஓணாய் விடும் ஊளைக்கு சமனானது...! :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தலைப்பில் சொத்துப் பறிமுதல் என்று போட்டிருக்கிறீர்கள். பறிமுதல் அல்ல. உறையவைத்தல் செய்யப்பட்டுள்ளது.

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணே? :(

  • தொடங்கியவர்

சிங்களாவனை முட்டாள், மடையன் என்கிறோம்..... ஆணால் சிங்களவனோ ஒரே சமயத்தில் பல வல்லரசுகளை கையாள்கிறான்! அல்லது ஒரு வல்லரசு, மற்றய வல்லரசுக்களையும் சிங்களவனையும் எமக்கெதிராக கையாள்கிறதா? :(

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணே? :(

பறிமுதல் செய்தால் அது அரச சொத்துடமையாகும். உறையவைத்தால் அது அரசு சொத்துடமையாகாது. திரும்ப தடை நீக்கப்படுகின்ற போது சொத்துக்கள் குறித்த நிறுவனத்திடம் மீளளிக்கப்பட வேண்டும்..!

''......The United States continues to support a just, negotiated political settlement to the conflict in Sri Lanka that meets the aspirations of all communities, including Sri Lanka's Tamils. The U.S. will continue to vigorously support efforts to stop human rights violations against Tamils, including abductions and threats against Tamil journalists.........''

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளக் வெளியிட்ட அறிக்கைக்குள் நாம் கவனிக்கத் தவறிய பந்தியொன்றே மேலுள்ளது. சிங்கள பேரினவாத அரசு சார்த்து இந்திய, அமெரிக்க அரசுகளின் வெளியுறவு கொள்கைக் போக்கால் தமிழர் குழப்பிப்போக வேண்டிய தேவை இல்லை. எமது எதிரி பற்றி நாம் ஐயந்திரிபுற இருத்தல் கடந்த காலங்களை விட இன்று மிக மிக அதிகம் அவசியம்.

சமாதான வழிமுறைகளுக்கூடாக சிங்கள தேசத்தின் போர் முகம் சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட்டால் அன்றி இவ்வாறான புதிய உலக ஒழுங்கை எம்மால் கையாள முடியாமல் போய்விடும்.

மேலும், தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் நிதி வைப்புகள் நெடுக்காலபோவான் குறிப்பிட்டது போல் 'முடக்கப்பட்டுள்ளது' என்பது, தமிழர் தலைமை எடுக்கும் புதிய இராஜதந்திர நகர்வுகளால் மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில் மேற்குலகம் கோடிட்டுக்காட்டுகிறது.

Edited by Kaandam

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

http://www.bbc.co.uk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நடவடிக்கைகள் யாரையோ சீண்டுவது போல் தெரிகின்றது.நிச்சயமாக எங்களையில்லை??????????

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வியொன்று கேட்டீர்கள் நெடுக்காலை போவான் அவர்களே!

அமெரிக்காவின் விரோதியான ஈரானுடன் கூட்டுச் சேர்ந்து கடனும் ஆயுதமும் வாங்க சிறீலங்காவை தட்டிக் கொடுக்கும் அமெரிக்கா தமிழர்கள் விடயத்தில் மட்டும் என்றும் கராராகவே இருக்கிறது. அப்படி என்னதான் பிரச்சனையோ தமிழர்களுக்கும் அமெரிக்காவுக்கும். ஒருவேளை வன்னியில் எண்ணெய் வளமிருந்திருந்தால் அமெரிக்கா தமிழர்களை அரவணைக்க முனைந்திருக்ககுமோ என்னமோ..??!

அமெரிக்காவின் தமிழர்கள் தரப்புக்கு விரோதமான இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஜீரனிக்கமுடியாத ஒரு தன்மானப் பிரச்சினையோடு ஒத்ததாக ஒரு சம்பவம் பல வருடங்களிற்கு முன்பு இடம்பெற்றுள்ளது.

அதாவது அமெரிக்கா மற்றவர்களை ஏமாற்றுவதுதான் வழமை ஆனால் முதலும் கடைசியுமாக தமிழரிடம் மறக்கவே முடியாத அளவுக்கு ஏமாந்துள்ளனர்.

Edited by Valvai Mainthan

அமெரிக்காவின் தேவை இந்தியாவை தனது பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. இந்தியா பக்கத்திலிருந்கொண்டு தமக்குச் சார்பான நிலையெடுப்பதை இலங்கை விரும்புகிறது என்றாலும் இந்தியாவின் சறுக்கலான போக்கை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது. அண்மையில் இலங்கைக்கு அமெரிக்கா கொடுத்த ராடர்களினால் இந்தியா அச்சம் கொண்டுள்ளதான செய்தியில் இந்தியா தெரிவிக்கப் போகும் ஆட்சேபனைக்கு இலங்கை தலைசாய்க்காமலிருப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு நகர்வாகத்தான் இதனைப் பார்க்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது அமெரிக்கர்கள் பலர் தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தி

மேலும், தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் நிதி வைப்புகள் நெடுக்காலபோவான் குறிப்பிட்டது போல் 'முடக்கப்பட்டுள்ளது' என்பது, தமிழர் தலைமை எடுக்கும் புதிய இராஜதந்திர நகர்வுகளால் மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில் மேற்குலகம் கோடிட்டுக்காட்டுகிறது.

யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் இன்னும் இழுத்தடிக்க அமெரிக்கா செய்யும் கடைசி அழுத்தம் என நான் நினைகிறன்

இது சம்பந்தமான அமெரிக்க திறைசேரி( U.S. Department of the Treasury )யின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.treas.gov/press/releases/hp683.htm

Contact:

Office of Foreign Assets Control

U.S. Department of the Treasury

Treasury Annex

1500 Pennsylvania Avenue, NW

Washington, DC 20220

email: ofac_feedback@do.treas.gov

Submit comments on regulations:

Press release ID: hp683

http://www.treasury.gov/offices/enforcemen...c/comment.shtml

NB:

உங்கள் கருத்துக்களின் இரகசியம் பேணப்பட மாட்டாது. உங்கள் விமர்சனங்களின் பிரதிகள் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக மக்கள் பார்வைக்கு கிடைக்கப்பெறும்

All public comments on these regulations will be a matter of public record.Copies of the public record will be made available via OFAC's website

Edited by vettri-vel

பறிமுதல் செய்தால் அது அரச சொத்துடமையாகும். உறையவைத்தால் அது அரசு சொத்துடமையாகாது. திரும்ப தடை நீக்கப்படுகின்ற போது சொத்துக்கள் குறித்த நிறுவனத்திடம் மீளளிக்கப்பட வேண்டும்..!

நெடுக்காலபோவான், உறையவைக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்?

மேலும் உறையவைக்கும் சொத்துக்களினால் பெறப்படும் மாதவருமானங்களும் உறையவைக்கப்படுமா? இல்லையே? அது ஸ்டேட் கவர்மெண்டுக்கு போகும். கொஞ்ச காலத்தின் பின் அது அரசாங்க சொத்தாக்கப்படும்.

இதை டீ.ஆர்.ஓ வழக்கு போட்டு அப்பீல் செய்யலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 16-11-2007 07:32 மணி தமிழீழம் [செந்தமிழ்]

அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது - கஜேந்திரன்

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க திறைசேரி தீர்மானம் எடுத்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு..

செல்வராஜா கஜேந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர்

யாழ் தேர்தல் மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

16-11-2007

அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (த.பு.க) சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க திறைசேரி தீர்மானம் எடுத்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பு போர் நடவடிக்கையின்போது பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாற

அமெரிக்கா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கி உள்ளது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7097221.stm%20" target="_blank"> http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7097221.stm

இவர்கள் இப்படிதான் கமாஸ் அமைப்பின் பல நிதி நிலைகளை தடை செய்தார்கள். என்ன கமாஸ் சோர்ந்தா விட்டது? இப்போ தங்களது நில உரிமையை அவர்கள் தான் அரசாக நடத்துகிறார்கள்.

நாங்களும் வெட்ட வெட்ட தளைப்போம். சிங்களவன் எங்களை விட்டு அகலும் வரை தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது வெளிப்படையானது. அமெரிக்காவிற்கு தேவைப்படுகின்றவற்றுக்காகத் தான் அது நடந்து கொள்ளும்.

இலங்கையைப் பொறுத்தவரைக்கும், அதற்குக் கால் ஊன்ற ஒரு இடம் தேவை. அது புலிகளாக இருந்தால் என்ன? சிறிலங்கா அரசாக இருந்தால் என்ன என்பது எல்லாம் அதற்குப் பிரச்சனையில்லை.

புலிகளைப் பொறுத்தவரைக்கும் இந்திய உபகண்ட நலத்தை மையப்படுத்தியும்( இந்தியாவோடு பகையாக இருந்தாலும்), தமிழீழத்தின் தனியாளுமையை மையப்படுத்தியும் அமெரிக்கா கூடப் இடத்தை வழங்க முன்வரமாட்டார்கள் என அமெரிக்காவிற்குத் தெரியும்.

ஆனால் சிறிலங்கா அரசு ஏற்கனவே நிலத்தை வழங்கியுமுள்ளது. அதனால் புலிகள் பலமடைகின்ற சந்தர்ப்பங்களில் சமாதானத்தை வலியுறுத்தியும், பலவீனமடைகின்றபோது சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும் வழங்குவதன் மூலம் தனக்கு இலாபத்தைக் கணிக்கின்றது.

ஐயசிக்குறு காலத்தில் புலிகளின் பலம் குறைவு போலத் தென்பட்டவுடன், பாய்ந்தடித்து உதவி செய்தது. ஆனால் ஆனையிறவைப் புலிகள் கைப்ப்றறியவுடன் அமிழ்ந்து போனது. இப்போது கிழக்கில் புலிகள் இல்லை. புலிகள் பதில் தாக்குதலை (இவர்கள் எதிர்பார்த்த காலத்தில்) நடத்தவில்லை. எனவே சிறிலங்கா அரசு பலமான இருக்கின்றது என நம்பி காலை வைக்கின்றது. அதற்கு ஒத்து ஊதலாக கடற்படைக்கு உதவியது. தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை முடக்குகின்றது.

ஆனால் திரும்பவும் அதற்குப் பாடம் படிக்கின்ற நிலமை வருகின்றபோது சமாதானத்துக்காக கண்ணீர் வடிக்கும். அதன் மீது அனுதாபம் கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது - ஆய்வாளர் கருத்து

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.

தமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

- பிபிசி தமிழோசை

தமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளை பலவீனப் படுத்தினால் சிங்கள பேரினவாதிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்க மாட்டார்கள் என்பது அமெரிக்கா அறியாததல்ல.

புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப் படுத்த முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல.

அமெரிக்காவின் இராணுவ பொருளாதார இலாபம் மட்டுமே இதன் நோக்கமாக இருக்கும் என்பதை யாவரும் அறிந்தும் அறியாததுபோல் இருப்பதுதான் வேதனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.