Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமத்திய வீடு கொண்டாடுவது அசிங்கமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் சில மேதவிகள் இருக்கின்றார்கள். வெள்ளையன் சிரிப்பான், அவனுக்கு முன்னால் நாகரீகம் காட்ட வேண்டும் என்று, தமிழரோடு கதைக்கின்றபோதும் அரைநுனி ஆங்கிலமோ, அல்லது தாங்கள் சார்ந்த நாட்டில் பேசப்படுகின்ற மொழியில் தான் உரையாடிக் கொள்வார்கள்.

சமாத்தியவீடு தொடர்பாகவும் ஏதோ விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் யூதர்களின் வாழ்க்கை முறையைத் தட்டிப் பார்த்தபோது அங்கும் சமாத்தியவீடுக்கு நிகரான நிகழ்வு கொண்டாடப்படுவது தெரியவருகின்றது. என்றைக்குமே தங்களை உயர்ந்த இனமாகவும், சிறிய சமுதாயமாக இருந்து கொண்டு உலகத்தை ஆட்டுவிக்கின்ற அளவுக்கு அவர்கள் வளர்ந்தாலும் அவர்கள் தங்களின் பண்பாட்டை விட்டு விலத்துவதில்லை.

அதனால் தான் உலகில் எங்கு சென்றாலும் உயர்வாகவும், ஒன்றாகவும் தங்களுடைய அடையாளங்களோடும் வாழ்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமாத்தியவீடு கொண்டாடுகின்றார்கள்.ஆண்கள் 13 வயதும், பெண்கள் 12 வயதும் அடைகின்றபோது அதற்கான சடங்கு செய்யப்படுவதோடு, விழிப்பூட்டல்களும் நடக்கின்றன.

இது பற்றிய இணைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. நெடுங்காலபோவான், அல்லது வெற்றிவேல், தயாண்ணா என்று யாராவது முடிந்தால் தமிழ்படுத்துங்கள். என்னால் மாவீர்ர நாள், பாலா அண்ணாவின் நினைவு தினங்கள் வரைக்கும் இதில் மினக்கெட்டு ஈடுபடமுடியாதுள்ளது.

--------------------

In Judaism, Bar Mitzvah (Hebrew: בר מצוה, "one (m.) to whom the commandments apply") and Bat Mitzvah (בת מצוה, "one (f.) to whom the commandments apply," or Bas Mitzvah in Ashkenazi pronunciation), are the terms to describe the coming of age of a Jewish boy or girl. According to Jewish law, when Jewish children reach the age of majority (generally thirteen years for boys and twelve for girls) they become responsible for their actions, and "become a Bar or Bat Mitzvah." This also coincides with physical puberty.[1] Prior to this, the child's parents are responsible for the child's adherence to Jewish law and tradition, and after this age, children bear their own responsibility for Jewish ritual law, tradition, and ethics and are privileged to participate in all areas of Jewish community life. [2]

In modern Jewish observance, the occasion of becoming a Bar Mitzvah or (in non-Orthodox congregations) a Bat Mitzvah is usually associated with the young man or woman being called to read the Torah and/or Haftorah portion at a Sabbath or other service, and may also involve them giving a d'var Torah including a discussion of that week's Torah portion. Precisely what the Bar/Bat Mitzvah may do during the service varies in Judaism's different denominations, and can also depend on the specific practices of various congregations. Regardless of the nature of the celebration, males become entirely culpable and responsible for following Jewish law once they reach the age of 13, and females once they reach the age of 12.

மேலும்: http://en.wikipedia.org/wiki/Bar_Mitzvah

  • Replies 52
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓ , கொண்டாடி விட்டாலும்.ஆக மற்றவர்களை விட ஒரு நல்ல வீடியோ வர வேண்டும்.ஒரு சிலைட் சோ வைப்பினம்.பின்னாலே போத்தில் போத்திலாக பாயும்.பிறகு பழைய சச்சரவுகள் தொடங்கும்.பிறகு பொலிஸ் வந்து யாருக்கு வெறியோ அவர் அந்த இரவை நாலு கம்பிக்குள் கழிப்பார்.

மிகுதி ,ஒவ்வொருவரின் கருத்தை தொடர்ந்து தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமே குடிக்கின்றது தப்பு என்று விவாதிக்கமாட்டீர்கள். ஏதோ இது கொண்டாடுவதால் தான் எங்கட சனம் குடிச்சுப் போட்டுச் சண்டை பிடிக்கின்ற மாதிரியல்லவோ கதை போகுது

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்துக்கு நன்றிகள். அதுதான் இரத்தினச் சுருக்கமா மொழி பெயர்ந்திட்டீங்களே.

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம். அவைதான் தாங்கள் ஊரில் செய்த தவறுகளை மறைக்க அவற்றை நாகரிகப் புரட்சிகளா சித்தரிக்கினம். அவை காணாததைக் கண்ட பேரதிர்சியில உதுகளைச் செய்யினமே தவிர.. சமூகவியல் நோக்கோடு அணுகிறதா எனக்குத் தெரியல்ல..! :D:D

பிறகு அந்த பெண் வாழ்க்கையில் என்னெல்லாம் கஸ்டப்பட போகிறாளோ?

இப்ப சந்தோசமா கொண்டாடிட்டுப் போகட்டுமே விடுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம்.

அது சரி அடிமட்டம் என்றால் என்ன ? எப்படியான அளவீடு உங்களது?? படிப்பறிவில்லாதவர்கள், வறுமையில் வாடுவோர்கள், சொத்து ஏதும் என்றி அன்றாடம் காச்சிகளாயுள்ளோர், தினக்கூலிகள்.. இதில் ஏதாவதா?

அடிமட்ட வாழ்வில் இருப்போர் ஊரில் சாமத்தியச் சடங்கு செய்வதில்லையோ???

சமூக அந்தஸ்த்து உள்ளோர் பெரிய அழைப்பிதழ் அடித்து வெகு விமர்சையாகக் கொண்டாடுபவர்களோ?

யூதர்கள் செய்வதையும் தமிழர்கள் செய்வதையும் முதலில் சரியாக ஒப்பிடுங்கள்.. இரண்டும் ஒரே நோக்கத்திற்காக அல்ல.

பெண்கள் "ருது"வானதைக் கொண்டாடவும், ஆண்கள் "கடு"க் கண்டதைக் கொண்டாடவும் தேவையான சமூகவியல் காரணங்களை தமிழர்களை முன்வைத்துச் சொல்லுங்கள்..

யூதர் செய்வதெல்லாம் நாமும் செய்ய வேண்டுமென்றால் முதலில் சிங்களைவர்களை ஒடுக்கி அவர்களை அகதி முகாம்களில் இருத்தவேண்டும்!

இதெல்லாம் விடுங்கோ இப்போ அதை எப்படி சொல்லினம் தெரியுமோ... Saree ceremonyம்...

எனக்குத்தெரிஞ்சு ஒரு மாமி.. ஒரு வெள்ளை மாமிக்கு சொன்னவ....

"This is very inportant event for a girl.. and we make that special.. when she wearing saree first time..we all get together and celebrate that and we call that saree ceremony"

நிஜமாவா?..

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அடிமட்டம் என்றால் என்ன ? எப்படியான அளவீடு உங்களது?? படிப்பறிவில்லாதவர்கள், வறுமையில் வாடுவோர்கள், சொத்து ஏதும் என்றி அன்றாடம் காச்சிகளாயுள்ளோர், தினக்கூலிகள்.. இதில் ஏதாவதா?

அடிமட்ட வாழ்வில் இருப்போர் ஊரில் சாமத்தியச் சடங்கு செய்வதில்லையோ???

சமூக அந்தஸ்த்து உள்ளோர் பெரிய அழைப்பிதழ் அடித்து வெகு விமர்சையாகக் கொண்டாடுபவர்களோ?

சமூக அக்கறை, சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..! :D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியவீடு கொண்டாடுவது அசிங்கம் என்ற மாதிரிக் கட்டுரை வரைபவர்களுக்குத் தான், இது அசிங்கமில்லை என குறிப்புணர்த்தவே இது தேவைப்பட்டது. தவிரவும் தமிழர்கள் எத்தனை பேர் உண்மையான விளக்கத்தோடு செய்கின்றார்கள் என்றால் அதைக் ஒன்றுமே செய்யமுடியாது.

சமீபத்தில் கனடாவில் தமிழ்செல்வன் அண்ணாவின் வீரவணக்க நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதற்குப் போய் வந்த, சிலர் வானொலியில் தொலைபேசி எடுத்துக் கதைக்கின்றபோது, அதை " இந்த விழாவிற்கு இத்தனை மக்கள் வந்தார்கள், பெருமையாக இருந்தது" என்று அதை ஒரு களியாட்ட நிகழ்வு போன்றே கதைத்தார்கள். ( நான் யாரையும் அழுது கொண்டு சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.) ஆனால் ஒருவருடைய வீரவணக்கத்தைக் கூட வேறுபடுத்த முடியாத நிலமையில் தான் எம்மவர்கள் சிலர் இருக்கின்றார்கள்.

சாமத்திய வீடும் ஏன் தேவை, அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புரியாத நிலமையில் மக்கள் சிலர் இருந்தால் அதற்கு ஒன்றுமே செய்யமுடியாது. அதனால் தான் என்னவோ, 10 வயதில் போடுகின்ற உடுப்பை 20 தாண்டியதும் போடுகின்றார்கள் போல. குறைந்த பட்சம் அதைப் புரிய வைப்பதற்காவது சாமத்தியவீடு தேவைப்படுகின்றது.

-------------------------------------

யூதர்கள் தன்னுடைய இனத்தை விட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்வதில்லை. அது இன அழிவுக்கு வழி செய்திடும் என அவர்கள் அவதானமாகவே இருக்கின்றார்கள்.

யாரு சொன்னது தமிழர்கள் மட்டுந்தான் சாமத்தியவீடு கொண்டாடுறதெண்டு???

எனக்குத்தெரிந்த வெனிசுலா நாட்டு நண்பருடன் ஒரு நாள் கலைகலாச்சாரம் பற்றி கதைக்கும்போது

சொன்னார்,அவர்களின் நாட்டில் மட்டுமல்லாது,பல தென் அமெரிக்க நாடுகளில் பெண்கள்

வயதுக்கு வந்தவுடன்,நம் ஊரில் உள்ள சாமத்தியவீடு கொண்டாடும் முறை போன்று,அவர்களும் கொண்டாடுவதாக !!

ஆக யாரென்றாலும்,மற்றைய இனங்களின் பழக்கவழக்கங்களை தெரிந்துகொண்டு கருத்தெழுதிறது நலம்

அத்துடன் நாம் எங்கிருந்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றுறது தப்பிலைதானே!!

ஆனால் அவர்கள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமாத்தியவீடு கொண்டாடுகின்றார்கள்.ஆண்கள் 13 வயதும், பெண்கள் 12 வயதும் அடைகின்றபோது அதற்கான சடங்கு செய்யப்படுவதோடு, விழிப்பூட்டல்களும் நடக்கின்றன.

இப்ப தான் நேக்கு பிரச்சினை விளங்கிச்சு யூதர்களிள் ஆண்களிற்கும் சாமர்த்திய சடங்கு செய்கிறார்கள் ஆனா இங்கே இல்லை அது தான் இவ்வளவு பிரச்சினை :D பேசாம இரண்டு பேருக்கும் வைத்து விட்டா ஒரு பிரச்சினையும் இல்லை என்று நினைகிறேன் :D ...............ஏனேன்றா எப்ப பார்த்தாலும் "சாமர்த்திய வீடு" பிரச்சினையை ஆண்கள் தான் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள் :D அது தான். சாமர்த்திய வீடு கொண்டாடினா நாலு பேரை சைட் அடிக்க ஏலும் அதற்காவது கொண்டாடுங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கொண்டாடுறவன் கொண்டாடட்டும் விடுறவன் விடட்டும் அதை பற்றி யாழில கருத்து எழுதுறவை தான் பாவம்" :(

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே குடிக்கின்றது தப்பு என்று விவாதிக்கமாட்டீர்கள். ஏதோ இது கொண்டாடுவதால் தான் எங்கட சனம் குடிச்சுப் போட்டுச் சண்டை பிடிக்கின்ற மாதிரியல்லவோ கதை போகுது

சாமத்திய வீட்டில் உண்மையில் நடந்த சம்பவங்களை தான் குறிப்பிட்டுள்ளேன்.ஏதோ நீங்கள் நினத்த மாதிரி விவாதம் போக வேண்டுமென நினத்த மாதிரி எழுதியுள்ளீர்கள். நான் யதார்த்தமாக நடந்ததை எழுதியுள்ளேன்.

எமது சமுதாயத்தின் போட்டி,பொறாமை ஊரில் இருந்து இங்கு வரை சுமந்து வரப்பட்டு அது அமுல் படுத்தப்படுகிறது.ஒரு சின்ன பெண் ருதுவானால் உள்ள பூங்கா முழுக்க கொண்டு திரிந்து ஏதோ சினிமா பாடல் காட்சி எடுப்பது போல் காட்டாயம் எடுக்க வேண்டுமா?.

இனி முஸ்லிம் சுண்ணத்து செய்கிறான்.தமிழ் ஆண்களும் இனி செய்ய வேண்டுமென்றவாறு உங்கள் கதை போகுது.ஆக யூதன் செய்தால் என்ன ,வெள்ளை செய்தால் என்ன நாங்கள் தமிழர் என்ற தனித்துவத்தை ஏன் இழக்க வேண்டும்?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நுணாவிலான்

தலைப்பின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கின்றேன். இங்கே சிலர் சாமத்தியவீடு என்பது அசிங்கம் என்ற மாதிரிக் கதைப்பவர்களுக்காகத் தான் இதை இணைக்கின்றேன் என்று. எனவே உங்களுக்கு திரும்பவும் விளங்கப்படுத்தத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

இப்போதைய சாமத்தியவீடு மட்டுமல்ல, கலியாணம் வீடும் கூட கமராமான், ஸ்டாட், அக்சன் சொன்னப்புறம் தான் மணமகளோ, மணமகனோ நடந்து மேடைக்கு வருகின்ற நிலமையுள்ளது. ஆனால் அதற்காக யாரும் கலியாணம் வேண்டாம் என்று சொன்னமாதிரிக் காணமுடியவில்லை.

யாரையும் பின்பற்றச் சொல்லிச் சொல்லவில்லை. அடுத்தவனுக்கு வெக்கப்பட்டுக் கொண்டு ஏன் கடைப்பிடிக்கின்ற மூடநம்பிக்கையற்ற செயற்பாடுகளை இடைநடுவில் கைவிட வேண்டும் என்பது தான் என் வினா!

சரியோ பிழையோ சம்பிர்தாயங்களும், கலைநிகழ்வுகளும், விழாக்களும் தான் நாம் தமிழர் என்ற அடையாளத்தைப் பேண வேண்டும் என்ற உயிர்ப்பைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதைத் தொலைக்கக் கூடாது என்றால் அவை எமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தில் அல்ல..

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம். அவைதான் தாங்கள் ஊரில் செய்த தவறுகளை மறைக்க அவற்றை நாகரிகப் புரட்சிகளா சித்தரிக்கினம். அவை காணாததைக் கண்ட பேரதிர்சியில உதுகளைச் செய்யினமே தவிர.. சமூகவியல் நோக்கோடு அணுகிறதா எனக்குத் தெரியல்ல.

சமூக அக்கறை, சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..!

சாமத்தியச்சடங்குள் பற்றி விமர்சிப்பவர்கள் யார் என்பதற்கு மேலே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சாமத்திய சடங்குகளை பற்றி விமர்சிப்பவர்கள் தமது தாயகத்தில் தவறுகள் விட்டவர்கள். அதாவது சாமத்திய சடங்குகளை விமர்சையாக செய்யாமல் தவறுகள் விட்டவர்கள்.

ஊரில் இருந்த வறிய மக்கள் புலம்பெயர் தேசத்தில் காணாததை கண்டவர்களாக பேரதிர்ச்சியில் இவ்வாறு விமர்சனம் செய்கின்றார்கள் ஏனையவர்கள் செல்வந்த மக்கள் ஊரிலே எல்லாவற்றையும் கண்டவர்களாதலால் அதிர்ச்சி இன்றி உள்ளனர்

சுட்டிக்காட்டப்படும் மக்கள் சமூக அக்கறையில் விமர்சனம் செய்யவில்லை.

அடுத்தது வறியமக்கள் தினக்கூலிகள் எல்லாம் மனிதவர்கத்துக்குள் அடங்காதவர் அவர்களுக்கு பிறக்கும் மழலைகள் பெற்றெடுக்கும் தாய் ஆடுமாடுகளுக்கு ஒப்பாக குட்டி போடும் இனம். அவைகளை குட்டி போட வைக்கும் கூட்டம்.

ஊரில் அடிமட்டம் என்று சொல்லப்படுவதில் வறுமையும் சாதியத்தில் தாழ்வையும் அதே நேரம் தான் அவ்வாறானவர் இல்லை என்ற திமிரும் முன்வைக்கப்படுகின்றது.

பெனிவிட்- அரசின் சலுகைகளை எடுப்பவர்கள் ஊரில் அடிமட்டத்தினர் என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது.

இவ்வாறுதான் மேலே சொல்லப்பட்ட கருத்து சாமத்திய சடங்கை வைத்து சமூக அக்கறை பேசுகின்றது. அதுவும் பாரதியை நினைவு படுத்தும் முண்டாசு கட்டிய உருவப்படத்துடன்.

சாமத்திய சடங்கின் விமர்சனம் என்பது இங்கு சிறு விசயம். மானுட உறவுகள் எவ்வளவு தூரம் ஈவிரக்கமற்ற சிந்தனையுடனும் வர்க்க மேலாதிக்க மனோபாவத்துடனும் அணுகப்படுகின்றது என்பதை பாருங்கள்.

சமூகவியல் அறிவியலுக்கு புரியாத ஒரு விசயம் இருக்கின்றது. உழைத்து வாழும் எவனும் எவனுக்கும் தாழ்ந்தவனோ அல்லது சமூக அக்கறை இல்லாதவனோ அல்ல. சமூக அக்கறை பற்றி பேசும் ஒருவன் வாழவேண்டுமானால் நாலுபேர் வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் வேர்வை சிந்தி உழைக்கின்றார்கள் என்று அர்த்தம். ஏர்பிடிக்காவிடில் முற்றிலும் துறந்த முனிவனும் உயிர்வாழ முடியாது. உழைப்பாழியின் தியாகத்தில் அவன் வியர்வை ரத்தத்தை உறிஞ்சித்தான் இந்த மானுடத்துக்கு விரோதமான இவ்வாறான திமிரை கூட பேச முடியும்.

சமூகவியல் சிந்தனை என்பதும் சமூகம் நிலைத்து நிற்கும் அத்திவாரம் என்பதும் அனைத்து தரப்பட்ட மக்களின் பிணைப்பினால் ஆனவை. ஒருவன் உக்காட்ர்நத இடத்தில் இருந்து உண்டி வளர்பான். என்னுமொருவன் அவன் உழைப்பில்லாமல் இருப்பதற்கும் சேர்த்து உழைப்பான். உழைப்பில்லாமல் இருப்பவனுக்கும் சேர்த்து உழைப்பதால் சிந்திக்கும் படிக்கும் நேரத்தை தியாகம் செய்திருப்பான். என்னுமொருவன் மலத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பான். என்னும் எத்தனையோ செயற்பாடுகள் சேர்ந்தது தான் சமூகம்.

இதில் வாய்ப்பேச்சால் வர்க்கத்தால் சாதியால் உயர்ந்து அந்தஸ்து சமூக சிந்தனை கலாச்சாரம் பண்பாடு என்றும் ஒரு தரப்பு கதைத்தாலும் செயற்பாடால் தியாகத்தல் உழைப்பால் என்னுமொரு தரப்பு சமூக கட்டுமானத்திற்கும் மறு தரப்பின் உயர்வுக்கும் செயல் வடிவமாக இருக்கும். சுரண்டி மூக்கு முட்ட உண்டுவிட்டு அவன் குட்டி போடுறான் நாங்கள் பிள்ளை பெறுகிறம் என்று அறிவியல் சமூக சிந்தனை பேசுகின்றீர்கள்? பேசுங்கள் நல்ல பேசுங்கள். இதற்கும் ஒரு குதர்க்கத்தை எடுத்து வருவீர்கள் என்று தெரியும் எதை எடுத்து வந்தாலும் இந்த பதிலே உங்களது மானுடத்தின் மேலான சிந்தனைக்கு போதுமான விளக்கமாக இருக்கும்.

மேலும் ஒரு குறிப்பு

தத்தமது சொந்த நாடுகளில் வாழமுடியாத சூழலில் மேற்கு நாடுகளுக்கு உரிய அகதிப்பதிவுடன் வரும் ஏனைய நாட்டு அகதிகள் போல் ஈழத்து அகதிகள் பெரும்பாலும் மேற்கு நாடுகளுக்கு வருபவர்கள் அல்ல. மேற்கு நாடு ஒன்றுக்கு போக வேண்டுமானால் ஏற்படும் செலவு ஆதரவு எவ்வளவு தூரம் வேண்டும் என்று யாவருக்கும் தெரியும்

மேற்கு நாடுகளுக்கு போக முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப உழைக்க செல்லும் மக்கள் ஏராளம்

இந்த வசதிகள் அற்ற நிலையில் ஈழத்திலும் தமிழகத்திலும் அகதிகளாக இருக்கும் மக்கள் ஏராளம்

இந்தியாவுக்கு அகதியாக போக கூட படகுக்கு செலுத்த பணமில்லாமல் தாயகத்தில் தங்கிவிட்ட மக்களும் இருக்கின்றார்கள்.

போரின் கொடுமைகள் எமது மக்கள் வாழ்வை எவ்வளவு சீரளித்ததுள்ளது என்பது யாவருக்கும் தெரியும். இந்த நிலையில் புலம் பெயர் தேசத்தில் சாமத்திய சடங்கை விமர்சிப்பவன் எந்த நிலையில் உள்ளான் என்று சிந்திக்க வேண்டும். அவனே குட்டி போடும் கூட்டம் என்றால் எனைய எம்மக்கள் எந்தக் கதி? எம்மை தமிழினம் என்று சொல்வோம்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சார்... நீங்கள், நான் குறிப்பிட்ட அடிமட்டம் தொடர்பில் விளங்கிக் கொண்டது உங்களின் எண்ணப்பாடே அன்றி எனதல்ல.

எனது கருத்தின் படி அடிமட்டமென்பது சமூக அக்கறை சமூகச் சிந்தனை வளர்ச்சி மற்றும் சமூகத்தின் தனித்துவக் காப்பு என்பவை தொடர்பான அக்கறைகள் ஏதுமின்றி வாழ்பவர்கள் அனைவரையும் எந்த வேறுபாடும் இன்றி வரையறுக்கிறது.

பெனிபிட் எடுக்கிறவங்க கூட ஒரு வகை சுரண்டல் பேர்வழிகள் தான். அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் அரசுகள் இவர்களுக்கு கொடுக்கின்றன.

விலங்குகள் தான் தனது சமுதாயம் அதன் தனித்துவம் என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் இயற்கைக்கு அமையப் பிறந்தது எப்படியோ அப்படியே வளர்ந்து தேடி ஓடி சாப்பிட்டு குட்டிபோட்டு.. பிறகு குட்டிக்கு குட்டி போடக் கற்றுக் கொடுத்து வாழ்கிறது. அப்படித்தான் கலாசாரம் பண்பாடு என்பன வற்றினூடு வரும் விழுமியமிக்க இனத்துவ தனித்துவங்களை காக்காத மனிதர்களும் நாகரிகம் என்பதை உணராத மனிதர்களும் ஏதோ பிறந்தமா வளர்ந்தமா குட்டி போட்டமா என்று வாழ்கின்றனர். இவர்கள் தான் அடிமட்ட மக்கள். இவர்களுக்குள் பொருளாதாரக் குறைவுள்ளோரும் அடங்கலாம் நிறைவுள்ளோரும் அடங்கலாம்.. படித்த மேதைகளும் அடங்கலாம் படிக்காத பாமரரும் அடங்கலாம்.

நான் தெளிவான எனது எண்ணக்கருவில் இருந்தே எனது கருத்தை வெளியிட்டேன். நீங்கள் உங்களின் எண்ணக்கருவின் படி அடிமட்டம் என்பதை சாதிய.. பொருளாதார வறுமை நிலை.. என்ற சாதாரண எண்ணக்கருக்களினூடு பெற முனைந்து அவற்றின் அடிப்படையில் உங்கள் கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். அது உங்களின் எண்ணக்கரு. அதுவல்ல நான் குறிப்பிட்ட அடிமட்டம் என்பது. வாசகர்களும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிருபன் அவர்களும் உங்களைப் போன்ற ஒரு எண்ணக்கருவோடு இருந்து கொண்டுதான் அதென்ன அடிமட்டம். அதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டார். நான் சுருக்கமாக அவருக்கு பதிலிறுத்திருக்கிறேன். அதுதான் உங்களுக்குமான பதில். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் வயசுக்கு வருவதைக் கொண்டாடுவதனால் சாமத்திய வீடு அசிங்கமில்லை என்று நிரூபித்தாயிற்று. எனவே சாமத்தியச் சடங்கைச் செய்வதனால் புலம் பெயர் நாடுகளில் வாழும் முன்னாள் அடிமட்டத்தினரும் மேல் மட்டத்திற்கு வந்துவிடலாம்.. ஆக நன்னாயிருக்கு...!

எப்படியோ காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களைப் புனிதப்படுத்தப் பலர் நம்மிடையே உள்ளனர்.. ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிடாய் மற்றும் துணைப்பால் வளர்ச்சி என்பது உயர் பிரைமேட்டுக்கள் அடங்கும் பிரிவு விலங்குகள் எல்லாவற்றும் பொதுவானது. அவையெல்லாம் சாமத்தியச் சடங்கு செய்யுதா..???! இல்லையே. அப்ப எப்படி காட்டுமிராண்டிக் கலாசாரம் என்பீர்கள். குரங்கும் தான் புணர்ந்து குட்டி போடுது. கலியாணம் என்று முடிக்குதா இல்லைத்தானே. பிறகேன் மனிதன் மட்டும் கலியாணம் என்று சடங்குகள் வைத்து வாழ்த்துச் சொல்லி.. சாப்பாடு போட்டு..மொய் எழுதி காட்டுமிராண்டித்தனத்தைச் செய்யுறான்.. குரங்கு போல வேளைக்கு வேள கண்டதோடும் புணர்ந்து குட்டியைப் போட்டிட்டு போயிட்டு இருக்கிறதுதானே. அதுதானே அதி உன்னத நாகரிகம். சுதந்திரமான செயல். ***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

:lol::rolleyes: ஐயோ உந்த சாமாத்திய வீட்டுப் பிரச்சினை இன்னும் முடியலையா???

சரி ஏன் தலைப்புக்கு பொருத்தமில்லாத விசயம் எல்லாம் கதைக்கிறியள்???

Edited by Rasikai

சிவலிங்கத்தை தடவித் தடவி பூசை அருச்சனை அபிஸேகம் செய்யிறமாம்...

சிவலிங்கம், சிவமகாலிங்கம், விஸ்ணுலிங்கம் என்று பெயர்கள் வேறை வைக்கிறமாம்.

அதோடு ஒப்பிடும் போது உதுகள் எல்லாம்? :lol:

சாமத்தியவீடு ஆம்பிளைகளூக்கு கொண்டாடினா சிலது அசிங்கமாக இருக்ககூடும். பெண்களுக்கு கொண்டாடினா அது அசிங்கமா எண்டு பெண்கள் தான் சொல்லவேணும்.

நான் சில பெண்களை கேட்டுப்பார்த்தேன். உங்களுக்கு உங்கள் சாமத்தியவீடு செய்யுறது விருப்பமா அல்லது இல்லையா எண்டு. சிலருக்கு விருப்பம். சிலருக்கு விருப்பம் இல்லை.

புலத்தில் உள்ள சிறுமிகள் இதை விரும்புகின்றார்கள் என நினைக்கின்றேன். எனது ஒரு பெறாமகள் தனது அப்பாவிடம் எனக்கு இப்படி எல்லாம் செய்வீங்கள் தானே எண்டு சாமத்தியவீடு ஒன்றுக்கும் போன இடத்தில் கேட்டாள். அவளுக்கு அப்போது ஆறு வயது.

இதுவரை சாமத்திய வீடு கண்ட யாழில் உள்ள பெண்கள் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் மேற்கொண்டு இந்த தலைப்பை என்ன செய்வது என்று நமது அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும். :lol:

கு.போ, உங்களுக்கு சின்னனில வீட்டில சாமத்திய வீடு செய்ய இல்லையா?

நல்லகாலம் செய்யவில்லை செய்திருந்தா வீட்டுகாறருக்கு தருணம் வரும்போது இறுதிக்கிரிகை செய்திருப்பன். அவையின்ரை நல்லகாலம் போல. :wub:

அப்ப நான் வரட்டா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியவீடு செய்திருந்தால் கொஞ்சமாவது அடக்கம், பண்பு இருந்திருக்கும்..... ம்.. என்ன செய்ய?

இறுதிக்கிரிகைகள் என்கின்றீர்கள். இந்துமுறைப்படியா அல்லது திராவிடமுறைப்படியா?

திராவிடமுறை என்று எனக்கு ஏதுமே தெரியவல்ல. வெள்ளையனைக் கொப்பி அடிச்சிருப்பினமோ?

பெண் பூப்படைவது என்பது பெண்ணினுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு.

தங்களுடைய மகள் எவ்வித பிரச்சனையும் இன்றி பூப்பெய்தி விட்டாள், பருவத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டாள் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

அந்த மகிழ்ச்சியை தமது உறவினர்களோடு கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனால் தற்பொழுது செய்வது போன்று ஊர் உலகத்திற்கு சொல்லி ஆர்ப்பட்டம் செய்வது சரியா என்பது என்னுடைய கேள்வி.

தான் பருவமெய்திய விடயம் உலகம் முழுவதும் பகிரங்கப்படுத்துவதை சம்பந்தப்பட்ட பெண் உண்மையிலேயே விரும்புவாளா?

அந்தச் சிறுமியின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படுகிறதா?

வேறொரு இனமும் கொண்டாடுகிறது என்ற காரணம் ஒரு சடங்கை நியாயப்படுத்த போதுமானது அல்ல.

இன்றைக்கு நடக்கின்ற சாமத்தியச்சடங்குகள் சம்பந்தப்பட் சிறுமிகளின் அந்தரங்க உரிமையை பறிப்பது போன்று நடப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.

புலம்பெயர் நாடுகளில் இந்தச் சடங்குகள் தேவையே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??> :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.