Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மூன்று ஆயுத கொள்கலன் வெடித்தது. 30 பொலிசார் உட்பட 60 பேர் பலி (வீடியோ)

Featured Replies

ஈழ நாதம் முதன்மை செய்தி

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஆயுத கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளின் களஞ்சியமே வெடித்ததாக ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். ஆனால் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சீன கம்பனிக்கு சொந்தமான வெடிமருந்து கொள்கலனே வெடித்ததாக இன்னொரு அறிக்கை கூறுகின்றது. மூன்று கொன்ரெஇனர்களில் வைக்கபப்ட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் 30 பொலிச்சர் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈழ நாதம்

இரண்டாம் செய்தி ஈழ நாதம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கபப்ட்டிருந்த ஆயுத கொள்கலன் ஒன்று வெடித்தது. இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொலப்பட்டனர். இதில் இரண்டி சீன பொறியியலாளர்களும் அடங்குவர். சீன கம்பனிக்கு சொந்தமான கொள்கலன் ஒன்றில் வெடி மருந்துகள் இருந்ததாகவும் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்தில் இருந்ததாகவும் படைத்தரப்பு கூறுகின்றது. ஆனால் இது படைத்தரப்பிற்குரிய ஆயுத கொள்கலன் என சிலர் கூறுகின்ரனர். இறந்தவர்களில் கூடுதலானோர் பொலிசார் என்றும் கூறப்படுகின்றது. மேலும் காயமுற்ற ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

ஈழ நாதம்

ஈழ நாதம் மூன்றாவது செய்தி

மட்டக்கலப்பு கரடியனாற்றில் வெடித்தது மூன்று கொன்ரைனர்கள். இவை சீன கம்பனிகளுக்கு சொந்தமானவை. பொலிஸ் நிலையத்தில் தரித்து நின்ற கொன்ரைனர்களில் இருந்து ட்ரக் வண்டியில் வெடி மருந்துகளை ஏற்றும் போதே அது வெடித்து சிதறியதாக கூரப்படுகின்றது. ஆண் பெண் பொலிசார் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

35 பொலிசாரும் பொது மக்களும் காயமுற்ற நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தூரம் பயணம் வந்த சீன வெடிமருந்து கூட, தமிழ் பகுதியில் வெடித்து 25 பேர் சாகவேண்டியதாய் கிடக்குது.

  • தொடங்கியவர்

இவ்வளவு தூரம் பயணம் வந்த சீன வெடிமருந்து கூட, தமிழ் பகுதியில் வெடித்து 25 பேர் சாகவேண்டியதாய் கிடக்குது.

பொலிசாரும் சீனர்களும் மற்றும் கட்டுமானப்பணியில் ஈடுபடவந்த தென்னிலங்கை வாசிகளும் என்றுதான் கூறப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பு செய்திகளை முழுமையாக சொல்லுகினம் இல்லை.

எங்கட இராணுவ ஆய்வாளர்களுக்கு தீனி கிடைத்த மாதிரி.

  • தொடங்கியவர்

எங்கட இராணுவ ஆய்வாளர்களுக்கு தீனி கிடைத்த மாதிரி.

Blast in Batticaloa 60 civilian killed including two chines worker.

http://www.eelanatham.info/?p=435

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட இராணுவ ஆய்வாளர்களுக்கு தீனி கிடைத்த மாதிரி.

சீனர்களின் தலையீட்டை விரும்பாத இந்தியாவின் சதி.

விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவை பணிய வைக்க இந்தியாவின் தந்திரம்.

சீனா, இந்தியாவிற்கு தனது பலத்தைக் காட்ட... தனது கொள்கலனுக்கு தானே.... வெடி வைத்தது.

.

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவன்.............

  • தொடங்கியவர்

வினை விதைத்தவன்.............

சிறி அண்ணா பகிடிக்கு தலைப்பை போட்டுக்கொடுக்க படுபாவி ஊஊஉ...ஊஊஊஉ டக வியலாலர்கள் ( தமிழ் இராணுவ ஆய்வாளர்கள்) ஆய்வு செய்யப்போறாங்கள்.

உண்மையில் இது சீன , சிறிலங்கா அரசின் அசமந்தப்போக்கு இதனை தமிழர்கள் கண்டிக்க வேண்டும், சீனா எப்போதும் தம் பணியாளர்களை பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே. அடுத்ததாக சிங்க|ளம் தமிழர்கலைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே இரண்டு நாடுகளும் தமிழர்கள் பகுதியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. எவ்வலவு பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை.

இந்தியாவிற்கும் இப்படி நடப்பது சந்தோசம் ஏனென்றால் புரளிகளை கிளப்பி விட நல்லது.

இறந்த பொது மக்களுக்கும் காயப்பட்டோர்களுக்கும் உடனடியாக உரிய நட்ட ஈட்டை சீனாவிடம் பெற்றுக்கொடுப்பதுடன் இனிவரும் காலப்பகுதியில் இப்படி நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

அதாவது மக்கள் வாழும் இடங்களில் இவ்வாறான களஞ்சியங்களை பேண கூடாது.

Edited by உமை

60 killed in accidental blast in SL police station

Colombo, Sept 17 :

At least 60 people, mostly policemen, were killed in an accidental blast inside a police station in Karadiyanaru in eastern Sri Lanka on Friday.

From : Indian news agency!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனையத்தளம் ஒன்றில் கொல்லப்பட்டவர்களில் இருவரைத்தவிர மற்ற அனைவரும் போலீஸ்காரர் என்று கூறியிருக்கிறார்கள். அந்த இருவரும் சீனாவில இருந்து மகிந்த அங்கிளுக்கு கல்லுடைக்க வந்த ஆக்களாம். பாவம் பொண்டர், மகிந்த அங்கிளோட்ட ஒண்டா ஒண்டுக்கிருப்பம் எண்டு பாத்துக்கொன்டிருந்தவர், இப்ப அவருக்கும் சரியான கவலையாயிருக்கும், நமோ நமோ பாடிக்கொண்டு கழுவிக்கொண்டிருந்தவர் ரெண்டுநாளைக்கு துக்க தினம் அநுட்டிக்கட்டும். !!!

:D கொல்லப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்டிருந்து கட்டாய அடிமைத்தன வேலைகளில் ஈடுபட்டிருந்த முன்னால் புலிப் போராளிகளும் இருந்ததாக தமிழ்நெட் கூறியிருக்கிறது.

Edited by ragunathan

உண்மை. இராணுவ முகாம்களில் மாத்திரமே வெடி மருந்து களஞ்சியங்கள் இருக்க வேண்டும். :D

Edited by thappili

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்படிருந்த வெடிபொருள் தாங்கி சீன நாட்டு நிறுவனமொன்றிற்குச் சொந்தமான கொள்கலன் ஒன்று வெடித்ததில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மூன்று கொள்கலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மூன்று கொள்கலன் தொடர்பிலும் பிரச்சினைகள் நிலவியதாகவும் இன்றைய தினம் அந்தப் பிரச்சினை முடிந்து குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்ல சீன நாட்டுப் பிரஜைகள் இருவர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு கெப் வாகனம் ஒன்றில் வருகைத் தந்துள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் கொள்கலனை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில் ஒரு கொள்கலன் வெடித்ததாகவும், அதன் பின்னர் மூன்று கொள்கலன்களும் வெடித்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

கரடியனாறு மலைகள் சார்ந்த பகுதியா?

  • தொடங்கியவர்

கரடியனாறு மலைகள் சார்ந்த பகுதியா?

latest video கருனாய் வினாயகமூர்த்தியும் நிற்குது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்படிருந்த வெடிபொருள் தாங்கி சீன நாட்டு நிறுவனமொன்றிற்குச் சொந்தமான கொள்கலன் ஒன்று வெடித்ததில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மூன்று கொள்கலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மூன்று கொள்கலன் தொடர்பிலும் பிரச்சினைகள் நிலவியதாகவும் இன்றைய தினம் அந்தப் பிரச்சினை முடிந்து குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்ல சீன நாட்டுப் பிரஜைகள் இருவர் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு கெப் வாகனம் ஒன்றில் வருகைத் தந்துள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் கொள்கலனை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில் ஒரு கொள்கலன் வெடித்ததாகவும், அதன் பின்னர் மூன்று கொள்கலன்களும் வெடித்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம் : இணையத்தள செய்தி

இங்கு **** கும்பல் இரு விதமாக பிரச்சாரத்தில் ... யார் பக்கம் மக்கள் எடுபட்டாலும், அவர்களுக்கு கொண்டாட்டம்!

1) அங்கெல்லாம் முடிந்து விட்டது!! நாம் இனி இணக்க அரசியலை செய்ய வேண்டும் என்ற "நம்பிக்கையே வாழ்க்கையானவர்களின்" பிரட்சாரம்!!!

2) அங்கு கேணல் ராம் பெரும்படையுடன் நிற்கிறார், நேரம் வரும்போது ..... காட்டப்போகிறார், என்ற பிரட்சாரம்!!

இந்த வெடிப்பை இவர்கள் இரண்டாவதாக காட்டப்போகிறார்கள்!!! இதைதானே சொல்ல வருகிறீர்கள் பாண்டர்????????????

கரடியனாறு மலைகள் சார்ந்த பகுதியா?

இல்லை. அயல் பிரதேசங்களில் சிறிய காடுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. அயல் பிரதேசங்களில் சிறிய காடுகள் உள்ளன.

மலைப்புறமான இடங்களில் தெரு அமைப்பதுக்குத்தான் வெடிப்பொருட்கள் தேவைப்படும். அதுக்குத்தான் கேட்டன்..! :D

இது கருணா அம்மான் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்? ... பிள்ளையானுக்கு இதோடை உலை விழுகிறதோ தெரியவில்லை? :D

மலைப்புறமான இடங்களில் தெரு அமைப்பதுக்குத்தான் வெடிப்பொருட்கள் தேவைப்படும். அதுக்குத்தான் கேட்டன்..! :D

அந்த நல்லெண்ணம் தான் இசை... கிழக்கின் வெடி வெள்ளி....

அதுசரி வெடிச் செய்தி என்றவுடன் இந்த செய்தியை நான் 4 தரம் வந்து பார்த்தன்......நீங்கள் என்ன மாதிரி.. :D ..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்லெண்ணம் தான் இசை... கிழக்கின் வெடி வெள்ளி....

அதுசரி வெடிச் செய்தி என்றவுடன் இந்த செய்தியை நான் 4 தரம் வந்து பார்த்தன்......நீங்கள் என்ன மாதிரி.. :D ..

நான் ரெண்டுமூண்டு கருத்து எழுதினதில இருந்து தெரியேல்ல??? :D கொஞ்சம் கிளுகிளுப்புதான்..! :D ஆனால் இதுக்குள்ள இந்தியனின்ர பெயர் மாட்டுப்படவேணும் என்கிறது என்னுடைய தணியாத அவா..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெண்டுமூண்டு கருத்து எழுதினதில இருந்து தெரியேல்ல??? :D கொஞ்சம் கிளுகிளுப்புதான்..! :D ஆனால் இதுக்குள்ள இந்தியனின்ர பெயர் மாட்டுப்படவேணும் என்கிறது என்னுடைய தணியாத அவா..! :D

கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழர் நிலை குறித்து டெல்லிக்கு அனுப்பிய கடிதத்துக்கும், கவிதைக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள்.

லேட்டானாலும் சூப்பராய் சீனாவுக்கு அடி கொடுத்துள்ளார்கள். இந்தியர்களின் சாணக்கியம் வியக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதுக்குள்ள இந்தியனின்ர பெயர் மாட்டுப்படவேணும் என்கிறது என்னுடைய தணியாத அவா..! :D

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடிக்கடி பிள்ளையானைச் சந்திப்பதை பொறுக்காத கருணாவின்

செயலாக இருக்கலாம். :D

அல்லது பீரிசை இந்தியாவிற்கு அழைத்த இந்திய உளவுத்துறையின்

இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்ற பட்டி மன்றத்திற்கான கருவாவும் இருக்கலாம் :D

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்

Colombo latest news ( Radio news)

Contrary to earlier figures a senior Defense Ministry official said that the total death toll of the Karadiyanaru blast is 19.

Amongst the dead are 10 police officers, 7 civilians and two Chinese nationals. 52 people are said to be injured while 4 critically injured persons have been air lifted to Colombo.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.