Jump to content

மக்கரல் மீன் குழம்பு

Recommended Posts

fishcurry1.jpg

தேவையான பொருட்கள்

பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்)

மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி

சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்)

பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்)

பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு)

உள்ளி - 1 பூண்டு

தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.)

தண்ணீர் - ஒரு கப்

தேசிக்காய் - 1

சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு

உப்பு / மஞ்சள் / கறிவேப்பிலை - தேவையான அளவு

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி உப்பு, தேசிப்புளி போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பு சூளையை (Oven -ஓவன்) சூடாக்கவும். சூடாகியவுடன் ஒரு தட்டில் ஈயத்தாளை விரித்து மீன் துண்டங்களை அதன் மேல் வைத்து அடுப்பு சூளைக்குள் வைக்கவும். 30 நிமிடங்களின் பின் சூளையை திறந்து பார்த்து மீன் பொரிந்து வந்துள்ளதா எனப் பார்த்து தேவையாயின் 5 -10 கூட நிமிடங்கள் கூட விட்டு உங்களுக்கு விருப்பமான பதம் வந்தவுடன் மீனை இறக்கவும். (மீனில் எண்ணெய் உள்ளதால் தனியே எண்ணெய் சேர்க்கத் தேவையில்லை. எண்ணெய் முற்றாக வற்றிப்போகும் முன்பு எடுத்தால் நல்ல சுவையாக இருக்கும்.)

ஒரு சட்டியில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள், உள்ளி,கறிவேப்பிலை,தண்ணீர் ஆகியவற்றை கலந்து அடுப்பில் தீ மூட்டி வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வைக்கவும். பின்பு பழப்புளி, தேங்காய்ப் பால், சின்ன சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றைப போட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து தீயை அணைக்கவும். . அதன் பின் மீன் துண்டங்களையும் ஈயத்தாளில் ஒட்டி உள்ள மீன் எண்ணெயையும் கறிக்குள் போட்டு வெந்தயம், கறிவேப்பிலை கலந்து விடவும்.

பொரித்து வைத்த மீன் குழம்பு மாதிரி சுவையாக இருக்கும். புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து உண்ணா சுவையாக இருக்கும். சூளையில் வைத்த மீன் துண்டங்களை பொரியல் மாதிரியும் சாப்பிடலாம்.

டிஸ்கி

இந்த மீனில் ஒமேகா-3 நிறைய உண்டு. இது கொலஸ்ரோலின் அளவைக் குறைக்கும்.

http://img441.imageshack.us/img441/2059/fishcurry.jpg

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீன் கறிக்கு என்ன (B)பிராண்ட் மிளகாய்த்தூள் போட்டனீங்கள்.

மீன் குழம்பு நல்ல சிவப்பாக உள்ளது. பார்க்க நன்றாக உள்ளது.

நாங்கள் முன்பு சூரியா மிளகாய்த்தூள் போடுவோம்.

கடந்த சில மாதங்களாக அதனை கடையில் காணக் கிடைக்கவில்லை.

இப்போ வாங்கும் மிளாகாய்த்தூளில் அவ்வளவு நிறம் வருகுதில்லை.

இணைப்புக்கு நன்றி தப்பிலி. :)

நன்றி சிறி.

நாங்களும் முன்பு சூரியாதான் பாவிப்போம். இப்ப Kings தூள்தான் பாவிக்கிறோம். இந்த மீன் குழம்பிற்கும் Kings தூள்தான் பாவித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தப்பிலி...வித்தியாசமான முறையில் சமைத்து உள்ளீர்கள்[நீங்களா,உங்கள் மனைவியா சமைத்தது :D ]...எனக்குப் பொதுவாய் மக்கிரல் பிடிக்காது ஆனால் இந்த முறையில் சமைத்துப் பார்க்க வேண்டும்.

நன்றி ரதி. இது மனைவிதான் சமைத்தது. எப்படிச் சமைப்பது என்று சொல்லிக் கொடுத்தது நான். :lol:

ஓவனுக்குள் மீன் வைக்கும் பொழுது 2 , 3 பிழிந்த தேசிக்காய் கோதுகளைப் போடுங்கள். மீன் மனம் குறைவாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் King brand தூள் நல்லது . நிறமும் அந்த மாதிரி ........நிறைய கறிவேப்பிலை ரம்பை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். நம்பி வாங்கி பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

வித்தியாசமான முறையில் மீன் கறி சமைக்கப்பட்டுள்ளது. செய்முறைக்கு நன்றி தப்பிலி.

Link to comment
Share on other sites

கனடாவில் King brand தூள் நல்லது . நிறமும் அந்த மாதிரி ........நிறைய கறிவேப்பிலை ரம்பை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். நம்பி வாங்கி பாவிக்கலாம்.

முன்பு மாற்றி மாற்றி பாவிப்பேன். இப்ப இதுதான் பாவிப்பது.

வித்தியாசமான முறையில் மீன் கறி சமைக்கப்பட்டுள்ளது. செய்முறைக்கு நன்றி தப்பிலி.

நன்றி நுனாவிலன். சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ஒரு கறி.

Link to comment
Share on other sites

இந்த சனிக் கிழைமை செய்து பார்த்து விட்டு சொல்றன்...வழக்கமாக நாங்கள் இந்த மீனை பொறித்து சாப்பிடுவதுண்டு

கனடாவில் King brand தூள் நல்லது . நிறமும் அந்த மாதிரி ........நிறைய கறிவேப்பிலை ரம்பை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். நம்பி வாங்கி பாவிக்கலாம்.

நாங்கள் RED Ruby தான் வாங்குவது...மீன் கறிக்கு என்று இறைசிக் கறிக்கு என்று மற்றக் கறிகளுக்கு என்று வகை வகையாக வரும்...சூப்பர் ஆக இருக்கும்

Link to comment
Share on other sites

இந்த சனிக் கிழைமை செய்து பார்த்து விட்டு சொல்றன்...வழக்கமாக நாங்கள் இந்த மீனை பொறித்து சாப்பிடுவதுண்டு

நிழலி

இந்த மீனில் எண்ணெய் உள்ளதால் ஓவனுக்குள வைத்தால் தானாகவே பொரித்து தரும்.

பொரித்துச் சாப்பிட நெத்தலி மீன், அறுக்குளா நன்றாக இருக்கும்.

நாங்கள் RED Ruby தான் வாங்குவது

ரெட் ரூபி - சிறிய வயதில் என்னோடு படித்தவளின் ஞாபகம்.

Link to comment
Share on other sites

இந்த சனிக் கிழைமை செய்து பார்த்து விட்டு சொல்றன்...வழக்கமாக நாங்கள் இந்த மீனை பொறித்து சாப்பிடுவதுண்டு

நிழலி

இந்த மீனில் எண்ணெய் உள்ளதால் ஓவனுக்குள் வைத்தால் தானாகவே பொரித்து தரும்.

பொரித்துச் சாப்பிட நெத்தலி மீன், அறுக்குளா நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

எண்ணெயே இல்லாமல் குழம்பு வைத்துள்ளீர்கள் :) இணைப்பிற்கு நன்றி தப்பிலி.

கருத்துக்கு நன்றி குட்டி.

அடுத்த முயற்சி மீனே இல்லாமல் மீன் குழம்பு வைக்கிறதுதான். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! பார்க்க ரொம்ப நல்லாஇருக்கு. அப்ப நல்ல ருசியாகத்தான் இருக்கும்!

நல்ல செய்முறை தப்பிலி! மீன் இல்லாமல் மீன் குழம்பு வைத்தால்தான் நான் சாப்பிடுவன்!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பராக இருக்கும் போல.இணைப்பிற்க்கு நனறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி இந்தப்பதிவை ஒரு நாலு வருசத்துக்கு முன்னம் போட்டிருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்..அப்பதான் வெளிநாடு வந்த புதிசு..இது நாள்வரயும் அம்மாவின் சிறகுகளுக்குள் இருந்ததது... ஒன்றும் தெரியாது..அம்மா சமைத்துதர மூன்று நேரமும் சாப்பிடுவதுதான் நான் வீட்டில் செய்யும் அதிகபட்ச்ச வேலை..இங்க வந்து முதல்முதல் தனிரூமில் இருக்கேக்கை மீன்கறிதான் நான் முதல் முதல் சமைத்தது...மீன் ரின்னின் விலை வெறும் 1.99 பென்ஸ்தான் ஆனால் அதை எப்படி சமைப்பது என்று ஊருக்கு கோல் எடுத்து அம்மாவுடன் கதைத்த காசு 5 பவுன்ஸ்..யப்பா சமைக்கத்தெரியாமல் சமைத்து உடுப்பு முழுக்க மீன்கறி மணம்..அந்த மணத்துடன் அருவருத்து நான் மீன்கறி சாப்பிடாமல் விட்டு நான்கு வருடங்கள் ஆகிறது..உங்களின் பதிவுமீன் கறி சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டுள்ளது... நாளை சமைக்க திட்டமிட்டுள்ளேன்..பார்ப்போம் எப்படி கறி வருகிறதென்று... :D

Link to comment
Share on other sites

ஆகா! பார்க்க ரொம்ப நல்லாஇருக்கு. அப்ப நல்ல ருசியாகத்தான் இருக்கும்!

நல்ல செய்முறை தப்பிலி! மீன் இல்லாமல் மீன் குழம்பு வைத்தால்தான் நான் சாப்பிடுவன்!!! :lol:

நன்றி சுவி. நீங்கள் மீன் சாப்பிடுவதில்லை போல. அடுத்த முறை மரக்கறி குழம்பு வைத்தால் உங்களுக்குத்தான் முதல் :D விருந்து.

சூப்பராக இருக்கும் போல.இணைப்பிற்க்கு நனறி.

நன்றி சஜீவன். வெள்ளரிப்பழம்(Water Melon ) சாப்பிட்டு மிச்ச நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள் நன்றாக இருக்கும். :lol:

தப்பிலி இந்தப்பதிவை ஒரு நாலு வருசத்துக்கு முன்னம் போட்டிருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்..அப்பதான் வெளிநாடு வந்த புதிசு..இது நாள்வரயும் அம்மாவின் சிறகுகளுக்குள் இருந்ததது... ஒன்றும் தெரியாது..அம்மா சமைத்துதர மூன்று நேரமும் சாப்பிடுவதுதான் நான் வீட்டில் செய்யும் அதிகபட்ச்ச வேலை..இங்க வந்து முதல்முதல் தனிரூமில் இருக்கேக்கை மீன்கறிதான் நான் முதல் முதல் சமைத்தது...மீன் ரின்னின் விலை வெறும் 1.99 பென்ஸ்தான் ஆனால் அதை எப்படி சமைப்பது என்று ஊருக்கு கோல் எடுத்து அம்மாவுடன் கதைத்த காசு 5 பவுன்ஸ்..யப்பா சமைக்கத்தெரியாமல் சமைத்து உடுப்பு முழுக்க மீன்கறி மணம்..அந்த மணத்துடன் அருவருத்து நான் மீன்கறி சாப்பிடாமல் விட்டு நான்கு வருடங்கள் ஆகிறது..உங்களின் பதிவுமீன் கறி சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டுள்ளது... நாளை சமைக்க திட்டமிட்டுள்ளேன்..பார்ப்போம் எப்படி கறி வருகிறதென்று... :D

நன்றி சுபேஷ். சுரைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்பது போல உங்கள் கதை உள்ளது. :lol:

நானும் உங்களைப் போலதான் புலம்பெயர்ந்தபின் தனியே சமைக்கத் தொடங்கியபின் பட்ட கஷ்டத்தை ஒரு அழுகுண்ணி சீரியலாகவே எடுக்கலாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெட் ரூபி - சிறிய வயதில் என்னோடு படித்தவளின் ஞாபகம்.

இது அவவின்ரை தூள் கொம்பனிதானோ ஆருக்குத்தெரியும்? :lol:

Link to comment
Share on other sites

இது அவவின்ரை தூள் கொம்பனிதானோ ஆருக்குத்தெரியும்? :lol:

இருக்கும் அண்ணை. ஆள் சரியான காரியகாரி.

சா பிழை விட்டிட்டன் அப்பவே ஒழுங்கா கரெக்ட் பண்ணியிருந்தா இப்ப நானும் ஒரு பிரபல தொழிலதிபரா இருந்திருக்கலாம். :(:lol:

Link to comment
Share on other sites

அட சொல்ல மறந்துட்டன்

போன ஞாயிறு இதனை செய்து பார்த்தேன்...நன்றாக வந்தது. எல்லாரும் விரும்பி சாபிட்டனர் (மனைவியின் துணை இல்லாம செய்ததால் அவாவுக்கு கொஞ்சம் பொறாமை)

மீனை 400F இல் 45 நிமடங்களுக்கு மேல வைத்த பின் தான் சரியாக bake ஆகி வந்தது

நீங்கள் செய்து பார்த்தது மிக்க மகிழ்ச்சி நிழலி.

மிளகாத்தூள் + உப்பு + தேசிப்புளி கலந்து bake பண்ணினால் தனியாக பொரியல் மாதிரி சாப்பிடலாம். பெரிய மீன் என்றால் (முற்றிய மீன்) எண்ணெய் அதிகம். மிக சுவையாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

நானும் செய்து பார்த்தேன் தப்பிலி, வித்தியாசமான (நல்ல) சுவையாகவே இருந்தது. 50 நிமிடங்கள் ஆகிய பின்பு தான் (gas mark 4) சரியாக வந்தது, இரண்டு துண்டுகளை மேலதிகமாக 25 நிமிடங்கள் விட்டு பொரிச்ச மீன் மாதிரி செய்து பார்த்தேன் நன்றாகவே வந்தது. உங்கள் இணைப்பிற்கு நன்றி. :) (இருந்த பசியில் போனதடவை படம் எடுக்க மறந்து விட்டேன் :D அடுத்தமுறை செய்யும் போது படத்துடன் இணைகிறேன்.)

கொழுப்பைக் குறைக்க வாரத்திற்கு இருமுறையாவது செய்து பார்க்கவேணும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற புதன் கிழமை நானும் செய்திருந்தேன் அசத்தலாக இருந்தது. மனைவி, பிள்ளைகள், அம்மா எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மீண்டும் நன்றி தப்பிலி! :D

சமைத்துப் பார்த்து கருத்துக்கூறியதற்கு நன்றி குட்டி. :)

கொழுப்பைக் குறைக்க வாரத்திற்கு இரு தடவையாவது 'ஒமேகா 3 ' அதிகம் உள்ள மீன்கள் (மக்கரல், சல்மான், Trout ) சாப்பிட வேண்டும்.

நான் இதனை நீளவாக்கில் (Fillet ) துண்டுகளாக வெட்டி அதனுடன் மரக்கறிகளையும் grill பண்ணி beaked beans , மிளகாய் சோஸ் கலந்து சாபிடுவதுண்டு.

Link to comment
Share on other sites

சென்ற புதன் கிழமை நானும் செய்திருந்தேன் அசத்தலாக இருந்தது. மனைவி, பிள்ளைகள், அம்மா எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மீண்டும் நன்றி தப்பிலி! :D

சமைத்துப் பார்த்து அதனை குடும்பத்துடன் பகிந்து கொண்டதற்கும், கருத்துக்கூறியதற்கும் நன்றி சுவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.